Friday, November 26, 2010

அஞ்சாம் கோவிலாம், இந்தக்கோவில்

வாங்க. ஜென்மபூமி கோவிலுக்குப் போகலாம். போய்ச்சேருமுன் தலவரலாற்றைப் பார்க்கலாம். கொஞ்சமாவது ஹோம் ஒர்க் செஞ்சுக்கிட்டுத்தான் சரித்திர டூர் போகணும்,ஆமாம்.

ஸ்ரீகிருஷ்ணரின் மறைவுக்குப்பின் அவர் மகன் ப்ரத்யும்னன், அவருக்குப்பிறகு பேரன் அநிருத்தன், அவருக்கும்பின் கொள்ளுப்பேரன் வஜ்ரநாபன்ன்னு வரிசையா நடந்த ஆட்சியில் இந்த கொள்ளுப்பேரந்தான் கொள்ளுத் தாத்தாவுக்காக அவர் பிறந்த இடத்தில் ஒரு கோவிலை நிர்மாணிச்சார். இதுதான் முதல் கோவில். அப்படி ஒரு ப்ரமாண்டமான கோவிலாக இருந்துச்சாம்.

காலப்போக்கில் அது அழிஞ்சுபோயிருக்குபோல. அதானே துவாபரயுகத்தில் கட்டுனது இன்னுமா உக்கார்ந்துருக்கும்? குப்தர்கள் சாம்ராஜ்ய காலத்தில் சந்திரகுப்த விக்ரமாதித்யர் இடிந்தகோவிலை கிபி 400வது ஆண்டு புதுப்பித்து வழிபாடுகள் நடத்தி இருக்கார். 600 வருஷங்கள் கோவில் ரொம்ப நல்லா கொண்டாடப்பட்டு ஓஹோன்னு இருந்துருக்கு. 1017 இல் முகலாயர்கள் படையெடுப்பு காலத்தில் (Mahmud Ghaznavi) மஹமத் கஸ்நாவி என்றவரால் கோவில் இடிக்கப்பட்டது.

மனிதன் கட்டுன கோவிலாக இது இருக்கமுடியாது. தேவர்கள் கட்டிய கோவிலாக இருக்கணுமுன்னு அந்தக் காலக்கட்டத்தில் Mir Munshi Al Utvi, என்றவர் எழுதிவச்ச குறிப்புகள் சொல்லுது . இதைக்கேள்விப்பட்ட அப்போ இருந்த சுல்தான் மஹமத் வந்து இந்தக் கோவிலைப் பார்த்துட்டு, இது போல ஒரு கோவிலை யாராவது கட்டணுமுன்னு நினைச்சாலே,அது முடியாத காரியம். பத்துகோடி தினார் காசும், சிறப்பா வேலை செய்யும் கட்டிடக் கலைஞர்கள் பலநூறு பேர் சேர்ந்து செய்தாலும் கட்டி முடிக்க இருநூறு வருஷங்கள் ஆகுமுன்னு சொன்னாராம்.

(அடப்பாவி....தெரியுதுல்லே எம்மாம் கஷ்டமுன்னு..... அப்ப எப்படி இடிக்க மனசு வந்துச்சு? )


1150 ஆண்டு மதுராவை ஆண்டுவந்த மகாராஜா விஜயபால் தேவா இந்த இடத்துலே ஒரு கோவில் கட்டி இருக்கார். இது மூணாம்தடவை! அந்தக் காலக்கட்டத்துலேதான் ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபு இங்கே வந்து கண்ணனை வழிபட்டுக் கொண்டாடி இருக்கார்.

16 ஆம் நூற்றாண்டில் சிக்கந்தர் லோடியால் இந்தக் கோவில் மீண்டும் தரைமட்டமாச்சு:(

ஜஹாங்கீர் ஆட்சிகாலத்தில் மதுராவை ஆண்ட ராஜா வீர்சிங் தேவா 33 லட்சரூபாய் செலவில் 250 அடி கோபுரத்துடன் மீண்டும் கோவிலைக் கட்டி எழுப்பி இருக்கார். இது நாலாவது முறையாக அந்த இடத்துலே கட்டப்பட்ட கோவில். கோபுரத்துக்குத் தங்கக்கவசம் போட்டுருந்தாங்களாம்.

ஷாஜஹான் ஆட்சி நடக்கும்போது (1649) மதுராவுக்கு வந்த ப்ரெஞ்சுக்காரர் Tavernier (இவர்தான் இந்தியாவோடு வியாபாரத் தொடர்பு வச்சுக்க வந்த ஐரோப்பியர்களின் முன்னோடி. விலை உயர்ந்த வைரம் வைடூரியம் பிசினஸ்) இந்தக் கோவிலை வந்து பார்த்துருக்கார், தன் பயணக்குறிப்பில் வியந்து எழுதி இருக்கார்.

இத்தாலி நாட்டுலே இருந்தவந்த இன்னொரு பயணப்பதிவர் மனூச்சி(Manuchi)
ஆக்ரா நகரில் இருந்து பார்த்தாலே இந்தத் தங்கக்கோபுரம் மின்னுவது தெரியும். தீபாவளி சமயத்துலே விளக்குகளால் ஜொலிக்கும் இந்தக் கோபுரத்தைப் பார்த்தேன்'னு எழுதி இருக்கார். ரொம்பநாள் இந்தியாவிலே தங்கி இருந்தாராம். கோவிலுக்குப் பலமுறை போய் வந்ததா எழுதி வச்சுருக்கார்.

அப்போ பொல்யூஷன் இல்லாத காலம். சுத்தமான வெளியில் தொலைதூரக் காட்சிகள் அருமையாத் தெரிஞ்சுதான் இருக்கணும்.
அவுரங்கஸேப் ஆட்சிக்கு வந்ததும் இந்தக் கோவிலின் பெருமையைப் பொறுக்க முடியாமல் அதை (1669 வது வருசம்)இடிச்சுத் தள்ளினார். இங்கே இருந்த பளிங்குக்கற்களையெல்லாம் கொண்டுபோய் கோவில் இருந்த நிலப்பகுதியிலேயே ஒரு Idgah ( இஸ்லாமியர்களின் வழிபாட்டுக்கூடம்) ஒன்னு கட்டிவிட்டாராம். . இந்த வழிபாட்டுக்கூடத்தின் சுவர்கள் இன்னும் அப்படியே இருக்குன்னு சொன்னாங்க) கோவிலை இடிச்சதும் பக்தர்கள் மனம் நொந்து போயிட்டாங்க. ஆனாலும் அரசனை எதிர்த்து ஒன்னும் செய்ய முடியலை:(

1803 வருசம் மதுரா நகர், ப்ரிட்டிஷ் ஆட்சியின்கீழ் வந்தது. 1815 வது வருசம் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தக் கோவில் இருந்த இடத்தை ஏலத்துக்கு விட்டுச்சு. காசிப் பட்டண ராஜா பட்னிமல் இந்த இடத்தை ஏலத்தில் வாங்கினார். மீண்டும் கோவிலை இங்கே கட்டிடணுமுன்னு அவருக்கு மனதில் இருந்த ஆசை...அவர் வாழ்நாளில் நிறைவேறலை:( ஆனால் இந்த இடம் மட்டும் அவுங்க வாரிசுகளின் பொறுப்பிலேயே இருந்துவந்துச்சு.

மதுராவில் இருந்த இஸ்லாமியர்கள் இந்த இடத்துக்குச் சொந்தம் கொண்டாடி வழக்குப் போட்டாங்க. ராஜா கிருஷ்ணதாஸ் தான் (காசிப்பட்டண ராஜா) உண்மையான உரிமையாளர்ன்னு அலஹாபாத் நீதி மன்றம் தீர்ப்பு சொல்லுச்சு. ரெண்டாம் முறையும் அப்பீல் செஞ்சாங்க. அதிலும் இதே தீர்ப்புதான்.

1944 வது வருசம் நம்ம பண்டிட் மதன்மோகன் மாளவியா அவர்கள் முயற்சியைத் தொடங்குனார். எல்லாத்துக்கும் முதலில் பணம் வேணுமே! அப்போ ஜீவிச்சு இருந்த சேட் ஜுகல் கிஷோர்ஜி பிர்லா உதவிக்கரம் நீட்டினார். வெறும் பதிமூணாயிரம் ரூபாய்க்கு கோவில் இருந்த இடத்தை, ராஜா க்ருஷ்ணதாஸ் அவர்களிடம் இருந்து வாங்குனாங்க. இந்த இடத்துக்கு விலை மதிப்பே இல்லைன்னாலும் கோவில் வரட்டுமே என்ற ஆதங்கத்தில் ஒரு பெயருக்கு இந்தத் தொகையை வாங்கிக்கிட்டு இடத்தை ஒப்படைச்சார் ராஜா. இது நடந்தது ஃபிப்ரவரி 7, 1944.

மதுராவைச்சேர்ந்த மதன்மோகன் சதுர்வேதி கோவிலை மீண்டும் உருவாக்க முழுமுயற்சியோடு பாடுபட்டார். இதுக்கிடையில் தன் கனவு நிறைவேறாமலே மாளவியா காலமாயிட்டார். அவருடைய கடைசி ஆசையும்கூட கோவிலைப் பற்றித் தானாம்.

1951 வது வருசம் ஃபிப்ரவரி 21 ஆம் தேதி பிர்லா அவர்கள் 'ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி ட்ரஸ்ட்'ன்னு ஒரு அமைப்பை உருவாக்கினார். கொஞ்சநாளில் 'ஸ்ரீ கிருஷ்ண ஜென்மஸ்தான் சேவா சன்ஸ்தான்' என்ற பெயரில் சொஸைட்டியாப் பதிவு செஞ்சாங்க.

இந்த ட்ரஸ்ட்டின் முதல் சேர்மனா பாராளுமன்ற அங்கத்தினர்(லோக் சபா) ஸ்ரீ கணேஷ் வாசுதேவ் மாவலங்கார் பொறுப்பேற்று நடத்துனார். இவருடைய மறைவுக்குப்பின் பாராளுமன்ற அங்கத்தினரும், பீஹாரின் கவர்னருமா இருந்த அனந்தசயனம் ஐயங்கார் சேர்மனா பொறுப்பு ஏற்று கோவில் வேலைகளைக் கவனிச்சுவந்துருக்கார்.

இவருக்குப்பிறகு ஸ்வாமி அகந்தானந்தா சரஸ்வதி, ஷிரோன்மணி பரமஹன்ஸ ஸ்வாமி வாம்தேஜி மஹராஜ்ன்னு பொறுப்புகள் கை மாறி இப்போதைக்கு மஹான் நித்ய கோபால் தாஸ்ஜி மஹராஜ், இந்த சொசைட்டிக்குத் தலைமையா இருக்கார்.

கோவிலைப்பற்றிய கனவுகளுடன் இருந்த டால்மியா குடும்பத்தைச்சேர்ந்த ஜெய்தயாள்ஜி டால்மியா வசம் பொறுப்பை ஒப்படைத்தார் பிர்லா.

முழுமூச்சா இந்த வேலையில் இறங்கினார் ஜெய்தயாள்ஜி டால்மியா. இவுங்க கம்பெனி நல்லா வளர்ந்து சக்கைப்போடு போட்டுக்கிட்டு இருந்துச்சு அப்ப. தாரள மனசோடு செலவளிச்சுக் கோட்டை கொத்தளம் ஸ்டைலில் கோவில், கருவறை, பகவத் பவன் என்னும் முன்புறக் கட்டிடம் எல்லாம் விஸ்தாரமா உருவாக்கத் திட்டம் தயாரானது..
ஸ்வாமி ஸ்ரீ அகந்தானந்த சரஸ்வதி என்ற சாமியார் இந்த ஜென்மபூமி ட்ரஸ்டில் வைஸ் பிரசிடண்ட்டா இருந்தார். அவருடையை வைஸான ஐடியாவா தன்னார்வலர்களைக் கொண்டு 'சிரமதான்' என்ற திட்டத்தில் உடலுழைப்பை தானமாக் கொடுக்க ஆர்வம் மிக்க இளைஞர்கள் முன்வந்து அக்டோபர் 15, 1953 இல் பரபரன்னு வேலையை ஆரம்பிச்சு முதல் காரியமா இடிபாடுகளை அகற்றி, இடிஞ்ச பள்ளங்களைத் தூர்த்துச் சுத்தம் செஞ்சு இடத்தை சமன்படுத்தினாங்க. பலவருசங்களாத் தொடர்ந்து வேலை நடந்துக்கிட்டே இருந்துச்சு. இந்தக் காலக்கட்டத்தில் பாபுலால் பஜாஜ், பூல்சந்த் கண்டேல்வால் பொறுப்பேத்து, இவர்களுடைய மேற்பார்வையில் சேவைகள் தொடர்ந்துச்சு.

ஜெய்தயாள்ஜி டால்மியாவுக்குப்பிறகு அவர் மகர் விஷ்ணுஹரி டால்மியா பொறுப்பேற்றுத் திட்டத்தைத் தொடர்ந்தார். இப்போ அவர்கள் வம்சத்துலே அனுராக்ஜி டால்மியா இந்த ஜென்மஸ்தான் சேவா ட்ரஸ்ட்டுக்கு ஜாய்ண்ட் மேனேஜிங் டைரக்ட்டராப் பொறுப்பேத்து கோவில் நிர்வாகம் நல்லபடியா நடக்க தன் கடமையைச் செஞ்சுக்கிட்டு இருக்கார்.

1982 ஃபிப்ரவரி மாசம் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த ஜெயில் கட்டிடம், ஸ்ரீகிருஷ்ணா ஜென்மஸ்தான் காம்ப்ளெக்ஸ் வேலைகள் எல்லாம் உருவாகி முடிஞ்சது. இன்றையக் கணக்குக்கு 28 வருசம். இந்தக் கோவிலைத்தான் இப்போ பார்க்கப்போறோம். வாங்க...வண்டியை நிறுத்திட்டுக் கோவிலுக்குள்ளே போகலாம்.
PINகுறிப்பு: அந்தக் காலப்படங்கள் ஒன்னும் கிடைக்கலை. அடுத்த பகுதிக்கான படங்கள் சிலதை இங்கே போட்டுருக்கேன். பார்த்து வச்சுக்குங்க:-)

தொடரும்...............:-)

21 comments:

said...

அஹரம் மதுரம் வதனம் மதுரம்...

நல்ல பயண விவரிப்பு

said...

மதுராதிபதே அஹிலம் மதுரம்!!!!

வாங்க ஸ்வாமிஜி.

உங்க வருகை எங்கள் பாக்கியம்.

said...

டல்சி மேடம், சாரி, துளசி மேடம், பயண குறிப்பை - நிறைய தகவல்களுடன் நல்லா தொகுத்து இருக்கீங்க. பகிர்வுக்கு நன்றி. :-)

said...

வாங்க சித்ரா.

பேர் பட்ட பாடு & ஸர் நேம் பட்ட பாடுன்னு பெரிய பதிவே எழுதிடலாம்:-)

பயணம் படிக்கப்பிடிக்குமுன்னா நம்ம பயணங்கள் தொகுப்புகளை நேரம் இருந்தால் பாருங்க.

குஜராத், மங்களூர் உடுபி, தமிழ்நாட்டு நவகிரகக்கோவில் நவதிருப்பதி, அம்ரித்ஸர்ன்னு ஏகப்பட்டது இருக்கு.

said...

அஞ்சாம் கோவில் ஹ்ம்..

நீளமான வரலாறு தான்.

said...

பயணம் செய்யப்பிடிப்பவர்களுக்கு உங்கள் பதிவு மிகவும் உபயோகமான தகவல்கள் தருகின்றன. நன்றி. கூடவே நிரைய விஷயங்களையும் தெரிந்துகொள்ள முடிகிறது.

said...

sHallo Tulasi akka,
I'm reading your blog for more than a year. your "akka" stories are awesome. Thanks. -thenikari.

said...

பயணம் செய்யப்பிடித்தவர்களுக்கு உங்கள்பதிவு மிகவும் உபயோகமானதாக இருக்கும்.

said...

ஆகா நல்ல சரித்தரம் சொல்லியிருக்கீங்க.கோவிலைப் பார்க்க ஆர்வமாக உள்ளோம். நன்றி டீச்சர்.

said...

வணக்கம் டீச்சர்
எப்படி தான் உங்களால மட்டும் எவ்ளோ நாபகம் வசுக முடியுதோ?
அப்புறம் ஒரு விஷயம்
ஹிஸ்ட்ரி சேனல காட்டினாங்க பழைய த்வாரகை தண்ணீருக்கு அடில இருகுருத.dwaragai இருப்பது unmaina கிருஷ்ணர் இருந்ததும் உண்மை தான் முடிச்சாங்க. நேரம் கெடைச்சா youtube ல "ancient aliens இன் ஹிஸ்ட்ரி சேனல்"நு இருக்கு பாருங்க.

said...

வாங்க கயலு.

மூணுநாளா ஊரில் இல்லை. தாமதமான பதிலுக்கு மாப்ஸ் ப்ளீஸ்.

ஆனா அந்த நாட்களில் உங்களை நினைச்சது என்னவோ உண்மை!!!

இதுவே ரொம்பவே 'சுருக்'க்குன வரலாறுதான்:-)

said...

வாங்க கோமு.

நம்ம பதிவுகளில் இருந்து தெரிஞ்சுக்க விவரம் சிலது இருக்குன்றது மகிழ்ச்சியா இருக்குப்பா:-)))))

said...

வாங்க தேனிக்காரி ( சரியா? )

ஓசைப்படாமல் படிக்கும் ஆளா நீங்க!!!!!

ச்சும்மா படிச்சால் போதாது. ஒரு பதிவும் ஆரம்பிச்சு உங்கூர் சமாச்சாரங்களையும் உங்கள் எண்ணங்களையும் எழுதுங்க.

நானும் ஒரு பதிவரை
'ஊக்கு' விச்சேன்னு இருக்கட்டும்:-))))

said...

வாங்க பித்தனின் வாக்கு.

கோவில் உள்ளெ பதிவு இன்னிக்குப் போட்டுருக்கேன். பார்த்துட்டுச் சொல்லுங்க.

ஆமாம்...நீங்க மலைக்கு மாலை போட்டாச்சா?

said...

வாங்க விஜி.

சுட்டிக்கு நன்றி.

நம்ம குஜராத் தொடரில் த்வார்க்கா பதிவு பார்த்தீங்களா?

said...

அஞ்சாம் கோவில் சுற்றிப் பார்க்கிறேன்...

said...

வாங்க மாதேவி.

சுத்திப்பார்க்கலாம். ஆனால் படம் எடுக்ககூடாது!!!

said...

விவரமான வர்ணனை.........

said...

very well explanation.thanks a lotttttttttttttt......

said...

வாங்க வழிப்போக்கன் - யோகேஷ்.

போறபோக்கில் வந்தீங்களா? :-)))))

வருகைக்கு நன்றி.

said...

வாங்க பாண்டியன்.

மிகவும் நன்றி.

அடிக்கடி வந்து போகணும்.