எனக்கு மனசே சரியில்லை. நியூஸியின் தெற்குத்தீவுலே இருக்கும் க்ரேமௌத் என்னும் ஊரின் அருகே இருக்கும் நிலக்கரி சுரங்க விபத்தில் அநியாயமா 29 உயிரிழப்பு நடந்து போச்சு:(
ஆறு நாளைக்கு முன்னே சுரங்கத்தில் வேலைக்கு ஆட்கள் உள்ளே போன கொஞ்ச நேரத்தில் உள்ளே ஏற்பட்ட வாயு அழுத்தத்தால் உட்புறச்சுவர்கள் வெடித்துச்சிதறி வெளியே வரும் வழி முழுசுமாய் அடைபட்டுப்போச்சு. எப்படியாவது எதாவது செஞ்சு ஆட்களை வெளியே கொண்டுவந்துருவாங்கன்னு தினம் தினம் பதைபதைப்போடு காத்துருந்தோம்.
எடுத்த முயற்சிகள் எல்லாம் வீணாச்சு. நேற்று காலை இன்னொரு முறை ஏற்பட்ட முந்தியதைவிடப் பெரிய second explosion காரணம் இனி அவர்கள் யாரும் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு வந்துருக்கு அரசு. ரெண்டுமுறை ரோபோக்களை அனுப்பிப் பரிசோதிச்சதில் உள்ளே இருக்கும் காற்று அபாயகரமான நிலை. அதை சுவாசிச்ச மனுஷர் உயிரோடு இருக்கவே முடியாது என்ற அளவுக்கு மாசு நிறைஞ்சதாம்.
விபத்தில் உயிரிழந்த 29 பேரில் மிக இளைய வயதுடைய பதினேழே வயதான பாலகனுக்கு வேலை கிடைச்ச முதல்நாள், அந்த விபத்து நேரிட்ட நாள்.
மற்றவர்களில் மூத்தவர் 62 வயதானவர். இத்தனை சிறிய நாடான நியூஸியில் 29 பேர் ஒரே விபத்தில் உயிரிழந்தது ஒரு கொடுமையான சம்பவம். அரசு இன்று துக்கநாளாக அறிவித்துள்ளது. நாடு முழுவதும் இந்த துக்கத்தில் பங்கேற்கின்றோம். எல்லா இடங்களிலும் கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிடப்படும்.
சொந்தங்களை இழந்து தவிக்கும் அந்த 29 குடும்பத்தினருக்கும் நம் அன்பையும் பரிவையும் தரும் இந்நேரத்தில் உயிரிழந்த மக்களுக்குக்காக நம் பிரார்த்தனைகளைச் சமர்ப்பிக்கின்றோம்.
இப்பக்கூட எதாவது அதிசயம் நடந்து ஒரு சிலராவது உயிர்பிழைத்து வெளியே வரமாட்டாங்களான்னு மனசு தவிக்குது.
Thursday, November 25, 2010
இழப்பு 29 உயிர்கள் :(
Posted by துளசி கோபால் at 11/25/2010 02:52:00 AM
Labels: பதிவர் வட்டம் new Zealand
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
இப்ப தான் யாஹுவில் படிச்சுமுடிச்சேன்.
கொடுமை! என்ன நடந்தது என்று யாருக்குமே தெரியாது.இத்தொழிலில் பலர் இன்னும் ஈடுபட்டுக்கொண்டிருப்பது இன்னும் கவலை அளிக்கிறது.
துள்சிங்க,
எப்பொழுதெல்லாம் சுரங்க விபத்து நடைபெறுகிறதோ அப்பொழுதெல்லாம் என் மனம் அவர்களின்பால் ஈர்த்து இழுக்கப்படும் காரணம் அது போன்றதொரு வேலையை நினைத்து பார்த்தாலே, கொலை நடுங்குகிறது.
என்னுடைய ஆழ்ந்த வருத்தங்கள் மற்றும் இரங்கல்கள்!!
பிரார்த்தனையில் இணைகிறோம்.
Oh MY!!! May their souls rest in peace. Praying for the families' comfort and strength.
படித்தேன் டீச்சர். சுரங்க விபத்துகள் அதிகம் ஆகிக் கொண்டே போகின்றன
really a sorrowful day! May God give strength to their kith and kin.
ரொம்ப வருத்தமா இருக்கு துளசி. உங்க ஊரில பாதுகாப்பு ஜாஸ்தினு நினைச்சேனே. பாவங்கள்.
வருந்தக்கூடிய நிகழ்வு டீச்சர்:(
எங்கள் துயரத்தில் பங்கேற்ற அனைத்து நண்பர்களுக்கும் நியூஸி நாட்டின் சார்பாக நன்றி.
விபத்தைப் பற்றிய விரிவான விளக்கங்கள் இந்தச் சுட்டியில் இருக்கு.
உயிரிழந்த மக்களின் படங்களுடன்.
http://www.bbc.co.uk/news/world-asia-pacific-11835565
மீண்டும் எங்கள் நன்றி.
ஆமாம்மா செய்தியில் பார்த்தப்ப ரொம்ப க்ஷ்டமா இருந்தது.:(
கம்போடியாவிலும் கூட 378 உயிர்கள் பலி..:(
வாங்க சாந்தி.
இப்படிக் கொத்துக்கொத்தா உயிர்கள் பறிக்கப்படும்போது மனசுக்குக் கஷ்டமாப்போயிருதுப்பா:(
அனுதாபங்கள்.:(
வாங்க மாதேவி.
நன்றிப்பா.
போனவாரம் நடந்த மெமோரியல் கூட்டத்தில் பதினோராயிரம் பேர் கலந்துக்கிட்டாங்க.
நியூஸியில் இவ்வளவு கூட்டம் வந்தது இதுவே முதல்முறை.
இன்னும் உடல்களை வெளியே எடுக்கலை:(
Post a Comment