Monday, November 15, 2010

படிச்சவனா நீயி...................ச்சே ச்சே....:(

போன பதிவிலே PIN குறிப்பைப் போட்டுட்டுப் போனவ , ஊரெல்லாம் சுத்திட்டு இப்பதான் திரும்பி வந்தேன். அந்த ஆலாபனை அப்புறம் வச்சுக்கலாம். இப்போ Pin க்கு மங்களம் பாடிக்கறேன்.

இன்னும் ரெண்டு இடத்துலே மேளா நடக்குதுன்னு சொன்னேன் பாருங்க. அதுலே ஒன்னு குழந்தைகளுக்கான ஸ்பெஷல். என்னதான் இருக்குன்னு எட்டிப் பார்த்துக்கலாமுன்னு போய்ச் சேர்ந்தோம். டெல்லியில் இண்டியா கேட் மாதிரி நுழைவு வாசல் வச்சுருக்காங்க. தினசரியில் இருந்த மேளா அறிவிப்பைக் கையோடு கொண்டு போனால் நுழைவுக் கட்டணம் கிடையாது என்பது முக்கியமான பாய்ண்ட்:-) ஒரு 'கட்டிங்' லே பேர் போகலாம்!
வழக்கமான பொருட்காட்சிக் கடைகள் தான். நக்லி நகைகள், குழந்தைகளுக்கான பொம்மைகள், வீட்டு அடுக்களைச் சாதனங்கள், அச்சார் (ஊறுகாய்) வகைகள், சீன வாஸ்து சாமான்கள், பொம்மைக் கடைகள், துணிமணி, செருப்பு, ஜூஸ் இப்படி ஏராளமா இருந்துச்சு. குழந்தைகளுக்கான துணிகள் ஏற்கெனவே பயன்படுத்துனமாதிரி இருக்கேன்னு பார்த்தால்............. நினைச்சது சரியாப் போச்சு. இது பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான கடை(யாம்)
பெரிய பெரிய பூச்சாடிகள் விற்பனைக்கு இருக்கு. அழகுதான். சிலது மரத்தண்டை அப்படியே குடைஞ்சு செஞ்சதும் கூட. முகம், பிள்ளையார்ன்னு செதுக்கல் வேற வெளிப்புறத்தில். தூக்கிப் பார்த்தால் காத்தாட்டம் லேசு!
சப்பாத்தி மேக்கர் வச்சு தோசை சுட்டுக் காமிச்சாங்க ஒரு கடையில். சப்பாத்தி மாவு உருண்டையை வச்சு மேல் மூடியை அழுத்துனா அருமையா வட்டச் சப்பாத்தி திரட்டி சுட்டும் தருது. 'உன்னீஸ் சௌ' வாம்.
நம்மாள் உடனே 'அஸ்து' போட்டார்:(
புதுவிதமான கொலுசு ஒன்னு ஹைதராபாத் சமாச்சாரம். என் சிலம்பில் முத்தும் கற்களும் உள்ள பரல் !!!!!
பான் ஸ்டால் ஒன்னு. பரத்தி வச்ச வெத்தலையில், வரிசை கட்டி நிற்கும் கிண்ணங்களில் வகைவகையா இருப்பதையெல்லாம் துளித்துளி எடுத்துப்போட்டு மடிச்சுத் தர்றாங்க.
க்ரவுண்டின் பின்பக்கம் ராட்டினங்கள் சிலவகை ஓடுது. பெரியவங்களுக்கான ஆடைகளை காஷ்மீர் அரசு பெரிய ஷெட் போட்டு விக்குது. இப்பதான் துணிமணிகளை அங்கே அடுக்கி வச்சுக்கிட்டு இருக்காங்க. சண்டைக்கு நடுவில் துணி நெய்ய நேரம் கிடைச்சதோ!!!

புத்தகங்களுக்கு ஒரு ஸ்டால். அழகுக் குறிப்புகளுக்கான புத்தகங்கள் கொட்டிக் கிடக்குது. எல்லாம் ஹிந்தி மொழியில். பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்காகக் கொஞ்சம் புத்தகங்கள் இருக்கேன்னு பார்த்தால் கட்டுரைகள், கடிதங்கள் இருக்கு. ப்ரைமரி லெவலில் இருந்து ஹை ஸ்கூல் வரை. கட்டுரை எழுதச் சொன்னால் 'யோசிச்சு' எழுத வேணாம். மனப்பாடம் செஞ்சு (பேப்பரில்) வாந்தி எடுத்தால் போதும். ச்சும்மாப் புரட்டிப் பார்த்தால் 'யானை' கண்ணில் பட்டது. வாழைப்பழத்தை உரிச்சு வாயில் திணிக்கும் கல்வி முறை.... மனசுக்கு வருத்தமா இருக்கு.
வெளியேறும் வாசலுக்கு வந்துருந்தோம். வெளியே நிறைய வண்ணவண்ண பொம்மைகள். டெர்ரகோட்டா பொம்மைகளைச் சுட்டு எடுத்து வண்ணம் பூசறாங்க. ஜெய்ப்பூர் ஆளுங்களாம். சின்னதா நாலு பொம்மைகளை வாங்கிக்கிட்டு, பெயிண்ட் செய்யும் ஆட்களைப் பார்க்கும் சமயம், திடீருன்னு உரத்த குரலில் ' அடிக்காதே. நான் உன் மனைவி. உன் வீட்டு வேலைக்காரி இல்லை...'ன்னு!


சத்தம் கேட்டுத் திரும்பிப்பார்த்தால் வெளியே வரும் கேட்டில் அருமையா உடை உடுத்திய ஒரு இளம் தம்பதிகள். கூட ஒரு நாலு வயசு பையன். அந்த ஆள் குழந்தையின் ஒரு கையைப் பிடிச்சு இழுத்துக்கிட்டு இருக்கார். மறுகையை அம்மா பிடிச்சுக்கிட்டு இருக்காங்க. 'என் குழந்தையைக் கூட்டிக்கிட்டுப் போறேன்'னு அப்பா கத்த, 'கபர்தார். குழந்தை மேலே கையை வச்சேன்னா....பார். அவன் என் குழந்தை.' ரெண்டு பேருக்கு நடுவில் குழந்தை மாட்டிக்கிட்டு திருதிருன்னு முழிக்கிறான். முகத்தில் பயமும் அழுகையும் பொங்கி வருது.

உரையாடல்கள் கத்தல்கள் வாதங்கள் எல்லாம் சுத்தமான ஆங்கிலத்தில்.....
நல்லாப் படிச்சவங்கதான் ரெண்டு பேருமே!!!


என்னதான் ஆச்சுன்னு கோபாலைக் கேட்டா..... அந்த ஆள் மனைவியை (பொது இடத்தில்) அடிச்சுட்டாராம். கண்காட்சி பார்த்துட்டு வெளிவரும் சமயம் எதுக்கோ சண்டை வந்துருக்கு. அதுக்காக...பப்ளிக் ப்ளேஸில் (வீட்டுலே கதவைச் சாத்திக்கிட்டு அடிச்சாலும் தப்பு தப்புதான்) மனைவியைக் கைநீட்டி அடிக்கலாமா? இது தப்புன்னு அந்தக் கணவனுக்குத் தோணலையா? பேச்சு, பேச்சா இருக்கணும். அது என்ன கை நீட்டும் பழக்கம்?

இந்தமாதிரிப் புருசனுக்காக மூணு நாள் முன்னே அந்த மனைவி கருவாச் சவுத் விரதமெல்லாம் இருந்து சல்லடையில் முகம் பார்த்திருக்காங்க. கையில் போட்டுக்கிட்ட மருதாணி கொஞ்சம்கூட மங்காமல் பளிச்சுன்னு இருக்கு.

ஒன்னும் செய்யத்தோணாத நிலையில் நான் வண்டியில் ஏறிக் கிளம்பும் சமயம் திரும்பிப் பார்த்தால்.....குழந்தையின் அருகிலே மண்டி போட்டுக்கிட்டு அந்த ஆள் என்னமோ சொல்லி கெஞ்சிக்கிட்டு இருக்கார். அந்தம்மா.... முகத்தை வேற பக்கம் திருப்பி வச்சுருக்காங்க. கண்ணுலே தண்ணீர் தளும்பி வழியா யாருக்கும் தெரியாம(?) லேசாத் துடைச்சுக்கறாங்க. ச்சே.....பாவம். எவ்வளோ அவமானமா இருக்கும்? ப்ச்......:(

ஏய்யா............பார்த்தாப் படிச்சவனாட்டம் இருக்கே. மனைவியை அடிப்பது தப்புன்னு உனக்குத் தெரியவே தெரியாதா......... இது மட்டும் எங்கூரா இருந்தால் அம்புட்டுதான்.......... அந்த நபர் ஜெயிலில் 'போரிட்ஜ்' தின்னுக்கிட்டு இருப்பார், இந்நேரம்.

இன்னொரு இடத்தில், அதான் ராம்லீலாவில் ராவணனை எரிச்சாங்க பாருங்க அந்தப் பெரிய மைதானத்தில் ஹோம்ஷோ மேளா நடக்குது. இங்கே சண்டிகரில் நான் பார்த்தவரையில் பாராட்டப்பட வேண்டிய அம்சமா ரெண்டு விஷயம் இருக்குது. இப்படிக் கூட்டங்கள், விழாக்கள் நடக்கும் சமயம் புல்தரையா இருந்தாலும் முழுசுக்கும் ஒரு தரைவிரிப்பு பச்சை, நீலம், சிகப்புன்னு போட்டு வச்சுடறாங்க. சிகப்பு விரிப்பா இருந்தா இருந்தா...........அட! ரெட் கார்பெட் வரவேற்பு ன்னு (என்னைப்போல )அல்பமா சந்தோஷப்பட்டுக்கலாம்:-)))) குப்பைகூளங்கள் அட்லீஸ்ட் கண்மறைவாப் போவதால் முகம் சுளிக்காம வலம் வரமுடியுது.
ரெண்டாவது விஷயம், அரைவட்ட வடிவில் ஷெட் போட்டு வச்சுடறாங்க. உள்ளே நுழைஞ்சதும் 'ப' வடிவில் வரிசையா ஸ்டால்கள். அப்படியே போய் பார்த்துக்கிட்டே வெளியில் வந்து அடுத்த ஷெட்டில் நுழைஞ்சுறலாம். பரபரன்னு இரும்புக்கம்பி ஃப்ரேம்கள் வச்சு மேலே ஷேடுக்கு, ஷீட்ஸ் போட்டு வைக்கிறாங்க. பார்க்கவும் நீட்டா இருக்கு. இதுமாதிரி தமிழ்நாட்டுலே இருக்கா? பார்த்த நினைவு இல்லை. ஐலண்ட் க்ரவுண்டில் பொங்கல் சமயம் கண்காட்சிக்குப் போனப்ப............ யக்:(

இதை ஒரு பிஸினெஸ்ஸா எடுத்து நடத்தலாம். அழகா நீட்டா இருந்தா மக்கள் விரும்பமாட்டாங்களா என்ன?

பத்து ரூபாய் கட்டணம். உள்ளே போனோம். எள் போட்டால் எண்ணெய் எடுத்துருக்கலாம்! ஹைதராபாத் கம்பெனி ஒன்னு செருப்பு ஷூ ஸ்டேண்ட் விக்குது. மூணு , நாலு, அஞ்சுன்னு அடுக்குகள். அப்படியே மூடி வச்சுரலாம். சுவரில் மாட்டி வைக்கும் விதம், இடமும் அடைக்காது.
வாஸ்து சமாச்சாரங்கள், புத்தர் காலடிகள்ன்னு கொஞ்சம். அடுக்களை சாதனங்கள், மைக்ரோவேவ், ஃப்ரிட்ஜ், ஹீட் பம்ப்ஸ், ஏர் கண்டிஷனர், டிவி, கம்ப்யூட்டர்ன்னு பொருட்கள் குமிஞ்சுகிடக்கு. பாத்ரூம் டிஸைன்ஸ், பாத் டப், ஃபர்னிச்சர்ஸ் இப்படி ஒரு பக்கம். காஃபி மெஷீன்கள் எக்கச்சக்கமா விற்பனைக்கு இருக்கு. வட இந்தியாவில் டீ புழக்கம்தான் கூடுதல் அவுங்களை காஃபி பிரியரா மாத்தப்போறாங்க போல!

பாதாம் ,பிஸ்தா, முந்திரி, உலர்ந்த பழங்கள் இவைகளை மெல்லிசா நமக்குத் தேவையான அளவில் ஸ்லைஸ் செஞ்சுக்க ஒரு சின்ன காட்ஜெட் ஒன்னு வாங்கினேன். சமைத்த உணவுகளை அலங்கரிக்க நல்லா இருக்கும். நம்ம தென்னிந்த உணவுகளில் சுவை அருமையா இருந்தாலும் அதை விளம்பும்போது ப்ரசண்டேஷன் பற்றி நாம் ஒரு கவனமும் எடுத்துக்கறதில்லை என்பது கொஞ்சம் விசனம்தான்:( இனிமே பாருங்க நம்ம வீட்டில் ஒரே சீவல்தானாக்கும்:-)))))))

கள்ள நோட்டுகளை அச்சடிக்கும் ஆட்கள் கில்லாடிகளா மாறி இருப்பதால் ரூபாய் நோட்டு அசலா இல்லை போலியான்னு கண்டு பிடிக்க ஒரு சின்ன மெஷீன் விற்பனைக்கு இருக்கு. பேட்டரியில் வேலை செய்யுது. ஆனா ஒவ்வொரு நோட்டா வச்சுப் பரிசோதிக்கணும். கூடவே சுமந்துக்கிட்டுக் கடைகண்ணிக்குப் போகமுடியுமான்னு தெரியலை!

நாட்டின் வெவ்வேற மாநிலங்களில் இருந்து வந்து கடை போட்டுருக்காங்க. தமிழ்நாடு மட்டும் மிஸ்ஸிங்:( அண்டை நாடுகள் ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்ளாதேஷ் கடைகள் கூட இருக்கு. எதிரி நாட்டுலே(???) செஞ்ச பளிங்குப் பழங்கள் ஒரு சின்ன ட்ரே வாங்கிக்கிட்டேன். மொழுமொழுன்னு அட்டகாஸம்! கடைக்காரப் பையர், நான் சென்னை சீமாட்டின்னதும், க்ரிக்கெட் பற்றிப் பேச ஆரம்பிச்சு உங்க ஊர் 'கேங்கூலி' எனக்குத் தெரியுமுன்னு சொன்னார்! வங்கமும் தமிழும் ஒன்னா இருக்கட்டும். நமக்கென்ன யாதும் ஊரேதானேன்னு தலையாட்டிட்டு வந்துட்டேன்:-)
National Bank for Agricuture and Rural Development (NABARD) மகளிர் வேலை வாய்ப்புத் திட்டத்தில் பொம்மைகள் செஞ்சு வச்சுருந்தாங்க. என்னவோ மாதிரி இருக்கேன்னு விசாரிச்சேன். பழந்துணியில் செஞ்சு களிமண் பூசி அதுக்கு மேலே சாணி போட்டு மெழுகிவச்ச ' கையால் செய்யப்பட்ட சிற்பங்கள்'. புதுமைதான்! லேடீஸ் ஒன்லி ஸ்பெஷல்ஸ்!! குருஷேத்ரத்தில் முழு மகாபாரதக் கதையையும் இப்படிப் பொம்மைகளாலே செஞ்சு வைக்கும் ப்ராஜக்ட் ஒன்னு நடந்துக்கிட்டு இருக்காம். இன்னும் ரெண்டு வருசத்துலே வேலை முடிஞ்சு பொதுமக்களுக்காக திறந்து வைக்கப் போறாங்களாம்!
மறுநாளும் இன்னொரு இடத்தில் காஷ்மீரத்துக் கம்பளி ஆடைகள் கண்காட்சியை மந்திரி வந்து திறந்து வச்சார். வேணாம் வேணாமுன்னு நான் சொன்னாலும் அங்கே ஒரு 'அசல்' காஷ்மீர் ஷால் வாங்கிக் கொடுத்தார் கோபால். வீட்டுக்குப் போகும் வழியில் அந்தத் துறை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரியான நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்துச்சு. அந்த அசல் இங்கே லூதியானாவில் நெய்யப்பட்டதாம். 'காஷ்மீர் இருக்கும் கதியில் இதெல்லாம் எங்கே?' ன்னார்!!!!

ரெண்டு மூணு நாளா அடிச்சவரையும் அடி வாங்குனவங்களையும் பற்றியே நினைவு ஓடுச்சு. சமாதானம் ஆகி இருக்குமா? குழந்தை எப்படி, எங்கே இருப்பான்?

அப்புறம்? காலம்............. மறக்கடிச்சதுலே இதுவும் ஒன்னா ஆகி இருக்கு.

PIN குறிப்பு: அடுத்த பதிவுகள் பயணத்தொடரா ஆரம்பிக்கும். கபர்தார்:-)))))))

24 comments:

said...

நாங்க தயாரா இருக்கம்.. நாங்க பார்த்ததையும் பாக்காததையும் உங்க பார்வையில் பார்க்க :)

அப்பறம் நேத்து நான் கூட ஒரு ஜோடியப்பாத்தேன்.. மெட்ரோல செம சண்டை ..நீ எப்படி அப்படி சொல்லலாம்ன்னு பொண்ணு பையனைகேட்டுசு..அவன் தண்ணிய குடிச்சி குடிச்சி சாரி சொன்னான்.. ஆனா எங்க வீட்டுல சொல்ற ‘ ஓகே ஒகே” மாதிரியோ என்னவோ அந்த பொன்ணுக்கு கோவம் அடங்கவே இல்ல.. அது எப்படி நீ ஹர்ட் செய்யலாம்..உனக்கென்ன உரிமை.. உன் சாரி யாருக்கு வேணும்ன்னு .. ஹ்ம்..

said...

அதென்ன அர்த்தம் கபர்தார். ரஜினி கூட அமிதாப் செல்றமாதிரி பேசினாரு?

said...

//பார்த்தாப் படிச்சவனாட்டம் இருக்கே. மனைவியை அடிப்பது தப்புன்னு உனக்குத் தெரியவே தெரியாதா.//

படிச்சவன் நாசூக்கா ஆங்கிலத்துல திட்டுவான். படிக்காதவன் அவனுக்கு தெரிஞ்ச பாஷையில திட்டுவான். இந்த விஷயத்தில் படிச்சவன், படிக்காதவன் பாரபட்சமே இந்தியாவைப்பொறுத்தவரைக்கும் கிடையாது :-(((.

ஃப்ரூட் சாலட், மில்க் ஷேக் செய்யும்போது ட்ரைஃப்ரூட் ஸ்லைசர் ரொம்பவே உதவியா இருக்கு.அப்புறம் ரோட்டி மேக்கர் எல்லா இடங்களிலும் கிடைக்குதுன்னாலும்,மின்சாரம் இல்லைன்னா தன் கையே தனக்குதவின்னுதான் இருக்கணும். செம பேஜார்...

said...

இன்னிக்கு என்ன ஒரே பெண்கள் விஷயமா படிக்கறேனே!!
நீங்க வேற துளசி, படிச்சவனுக்கு அகங்காரம் வராதா. படிக்காதவனுக்குப் பொறுமை போதாது. ஆகக் கூடிக் கண்களைக் கசக்கறது பெண்கள். பாவம். மரப் பொம்மைகளைப் பார்த்தால் ரொம்ப அழகா இருக்கு.இவர் பார்த்தால் சந்தோஷப்படுவார். லூதியானா லேருந்து வந்த காஷ்மீர் ஷால் போட்டோவும் போட்டு இருக்கலாம்:)

said...

பவளப் பரல்கள், முத்துக்கள், யானை, வண்ணப் பொம்மைகள் என பாண்டியநாட்டுத் தெருக்களை மகிழ்ச்சியாய் சுற்றிவந்தோம்.

said...

சப்பாத்தி மேக்கர் வச்சு தோசை சுட்டுக் காமிச்சாங்க ஒரு கடையில். சப்பாத்தி மாவு உருண்டையை வச்சு மேல் மூடியை அழுத்துனா அருமையா வட்டச் சப்பாத்தி திரட்டி சுட்டும் தருது. //

இது இல்லாத ஒரு காட்சியும் நடக்காது போல!!! :)))

'உன்னீஸ் சௌ' வாம்.///

அது சரி!!.:))

said...

கண்காட்சி பார்க்க அழகாக இருக்கு டீச்சர்,மரசிற்பம்,ப்ளிங்கினால ஆன பழங்கள், செருப்பு வைக்குமிடம் எல்லாம் நல்லா இருக்கு டீச்சர்.

said...

படங்களும் நடுவுல ஒரு டிவி சீரியல் கதையும் சூப்பரு...;)

said...

வாங்க கயலு.


சண்டையில் பேச்சு பேச்சா இருக்கணும். கைநீட்டுவது குற்றம் இல்லையா?

இந்தப் பேச்சுக்குமே எங்கூரா இருந்தால் 'வெர்பல் அப்யூஸ்'ன்னு உள்ளே தள்ளி இருப்பாங்க.

said...

வாங்க ஜோதிஜி.

'எச்சரிக்கை' தான் அது. வரப்போகுது. சூதானமா நடந்துக்கணும்:-)

said...

வாங்க அமைதிச்சாரல்.

ஒரு பக்கம் அம்பாள், சக்தி, இப்படிப் பென் உருவில் கடவுள்களைக் கும்பிட்டுக்கிட்டு, ஆந்தான் உசத்தி என்ற மாயையில் இருந்து விடுபடலை நம் மக்கள்ஸ்:(

மின்சாரம் இல்லைன்னாலும் அட்லீஸ்ட் திரட்டியாச்சும் எடுத்துக்கலாமேப்பா.

said...

வாங்க வல்லி.


படிச்சவனுக்குப் பொறுமை இருக்கணுமே தவிர அகங்காரம் வருதுன்னா....அது உண்மைக் கல்வியா இருக்காது.
வெறும் ஏட்டுப்படிப்பு:(

said...

வாங்க மாதேவி.

அடுக்களையைவிட்டு வெளியில் வந்துட்டீங்களா:-)))))

கூட வருவதற்கு நன்றிப்பா.

said...

வாங்க ஷங்கர்.

அப்ப இது இந்தியாவில் கண்காட்சி ரெகுலரா?

ஆஹா...... தெரியாமப்போச்சே. இப்பதான் முதல்முதலாப் பார்த்தேன்.

ஒன்னு வாங்கித்தான் ஆகணும் நியூஸி திரும்புமுன்.

உன்னீஸ் சௌ....ஜானே தோ யார்.

said...

வாங்க சுமதி.

கண்காட்சிகளை வருசம் முழுசும் பரவலா வைக்காம எல்லாமே தீபாவளி வாரத்துலே 'அடுக்கி' வச்சா நல்லாவா இருக்கு?

எதுக்குப் போக எதை விட்டுவைக்க?

said...

வாங்க கோபி.

டிவி சீரியல்... சரியாத்தான் சொன்னீங்க? எதுக்கெடுத்தாலும் கன்னத்துலே அறையும் ஸீன்கள் ஏராளமோ!!!!

said...

I am very happy to see that you are back!

said...

//ஒரு 'கட்டிங்' லே ௪ பேர் போகலாம்!//

!!!!!!!!!!!!!

said...

பூச்சாடிகள் அழகோ அழகு. அப்பிடியே மொத்தமா வேண்டி வந்தா எப்பிடி இருக்கும்?
அன்புடன் மங்கை

said...

வாங்க சந்தியா.

வராம இருக்க முடியலைப்பா! அதான் வந்துட்டேன்:-)))))

said...

வாங்க தருமி.

ஆஹா...... தமிழ் எண்களைத்தான் இனி பயன்படுத்தணுமுன்னு சட்டம் வரப்போகுதாம்!!!!!!

அது............நாலு:-)

said...

வாங்க அன்புடன் மங்கை.

எப்படி இருக்குமுன்னு கோபாலைக் கேக்கணும்.

பர்ஸ் பழுத்துருக்குமே!!!!!

said...

முதல்ல பாராட்டுகள்..கலர் கலரா பதிவு மா..ரொம்ப நல்லாருக்கு

//இது மட்டும் எங்கூரா இருந்தால் அம்புட்டுதான்.......... அந்த நபர் ஜெயிலில் 'போரிட்ஜ்' தின்னுக்கிட்டு இருப்பார், இந்நேரம்.//

மேல் நாட்டு கலாச்சாரம்னு பயப்படுறாங்களே .. அங்கேதான் பாதுகாப்பும் பெண்ணுக்கு குழந்தைக்கு அதிகம்..

said...

வாங்க சாந்தி.

சம்பவம் நடந்தபிறகு சிலநாட்கள் அந்தப் பொண்ணைப்பற்றியே நினைவு சுத்திவந்ததுப்பா. என்ன ஆச்சோ?