Thursday, November 04, 2010

நல்லவேளை...தமிழ்நாட்டில் பிறந்தீங்க...........

இல்லேன்னா ஆறு புடவை, ஆறு சல்வார்செட்ன்னு புதுத் துணிகள் அதுக்கேற்ற ஆக்சஸரீஸ்ன்னு பர்ஸ் பழுத்துருக்கும். இங்கே சண்டிகரில் உள்ளூர் தினசரியை கையிலே எடுத்தாவே..... முதல் பக்கம் ஒரே ஒரு விளம்பரம். அது மட்டும்தான். ஒரு முழுப்பக்கத்துக்கு ஒரே ஒரு விளம்பரம். வெயிட்டான சமாச்சாரம். கழுத்து, காது, கைன்னு பெரிய பெரிய நகைகள் . பூராவும் வைரமோ வைரம். பத்திரிகையை உள்ளே திறந்தாலும் முழுசு முழுசா இதுபோல ஒரு நாலைஞ்சு நகைக்கடை விளம்பரம். தந்தேரஸ் வருது வருது வந்துக்கிட்டு இருக்கு.....வாங்குங்க வாங்குங்க வாங்கிக்கிட்டே........ இருங்க.


இந்தப் பக்கத்துலே தீபாவளிப் பண்டிகை ஆறுநாள் விழா(வாம்). ஐப்பசி மாசம் கிருஷ்ண பட்சத்துலே சரியாப் பனிரெண்டாம் நாள் துவாதசி வருது பாருங்க. அன்னிக்குத்தான் விழா ஆரம்பம். முதல்நாள் முதலில் கோ பூஜை. அன்னிக்கு சொந்தமா வீட்டு மாடு இல்லாதவங்க கூட அட்லீஸ்ட் தெருவில் மேயும் பசுமாட்டுக்கு ஒரு பழமாவது ஊட்டிவிடுறாங்க. கோவில் பக்கம் சுத்திக்கிட்டு இருக்கும் பசுக்களும் கன்னுகளும் இதைத் தெரிஞ்சு வச்சுக்கிட்டு அங்கேயே அன்னிக்குப் பூராவும் வட்டம் போடுதுங்க.

ஆஹா..... இதுதானே நம்ம பக்கத்து மாட்டுப்பொங்கல்!

மறுநாள் திரயோதசிதான் இந்த தன் தேரஸ். Dhan = தனம். தனத்துக்கு அதிபதியான மஹாலக்ஷ்மியைக் கும்பிட்டு நம்மைவிட ஏழ்மையில் இருக்கும் மக்களுக்கு நம்மால் ஆன பொருளுதவியைச் செய்யணுமுன்னு சமூக நோக்கோட ஆரம்பிச்ச பண்டிகை. இன்னிக்கு அது வைர நெக்லேஸில் வந்து நிக்குது. வீட்டிலிருக்கும் ஏழைத் தங்க்ஸுக்கு வாங்கித் தந்தே ஆகணும் இந்த ரங்ஸுகள்.

இது நம்மூர் அக்ஷ்யத் திருதியைதானே?

திருப்பாற்கடலை தேவர்களும் அசுரர்களுமா சேர்ந்து கடைஞ்சப்ப அதில் தோன்றிய பதினான்கு செல்வங்களில் Dhan Dhanன்னு தன்வந்திரி என்ற தேவலோக டாக்குட்டர் தோன்றினார். நம்ம மகாலக்ஷ்மியும் பாற்கடல் கடைஞ்சப்பப் தோன்றினவங்கதான். நம்ம அமைதிச்சாரல் அழகா கதையோடு பதிவு ஒன்னு போட்டிருக்காங்க. இங்கே பாருங்க.


மூணாம் நாளான சதுர்த்தசிக்கு மூணு வகையான முக்கியத்துவம். ராமர் காலத்துலே வனவாசம் முடிஞ்சு நாட்டுக்குத் திரும்பின நாள். அதான் அவருக்கு வழி காட்டணுமேன்னு தீபங்களை வரிசையா வச்சு ஒளி ஏற்படுத்தினாங்களாம்.

கிருஷ்ணர் காலத்துலே இந்த நாளில் நடந்தது நரகாசுர வதம். இங்கேயும் அவன் செத்தநாளைத்தான் கொண்டாடுறாங்க.

ஆக ரெண்டு யுகங்களுக்கும் இந்த நாள் பொது.

அமுதம் வேண்டி திருப்பாற்கடலைக் கடைஞ்சபோது தன்வந்த்ரி பகவான் தோன்றிய நாளும் இதுதான்.

இது இல்லாம சமணர்களின் தீர்த்தங்கரர் மஹாவீரர் நிர்வாணம் என்ற மோக்ஷத்தை அடைஞ்ச நாளும் இந்த சதுர்த்தசி தினம்தான்.

சீக்கியர்களுக்கும் இது அவுங்க மதம் சம்பந்திச்ச விசேஷமான நாள். அவுங்க ஆறாவது குரு ஹர்கோபிந்த் ஜியை முகலாய மன்னர் ஜஹாங்கீர் குவாலியர் கோட்டை ஜெயிலில் அடைச்சு வச்சுருந்தார். அங்கே கைதிகளா பல்வேறு சமஸ்தானத்தைச் சேர்ந்த 52 இந்து இளவரசர்களும் இருந்துருக்காங்க. குருவை வெளியிலே விடணுமுன்னு மக்கள் எல்லோரும் விண்ணப்பிக்க மன்னர் ஜஹாங்கீர் சரின்னுட்டார். அப்ப குரு ஜி, அந்த இளவரசர்களையும் வெளியில் விடணுமுன்னு கேட்டுக்கிட்டார். கொஞ்சம் யோசனை செஞ்ச மன்னர், உங்க அங்கி முனையைப் பிடிச்சுக்கிட்டு இருக்கும் இளவரசனை விட்டுடறேன்னார். நம்ம குரு ஜி என்ன செஞ்சாருன்னா........ அவருடைய அங்கியில் 52 குஞ்சலங்களைத் தைச்சு ஒவ்வொன்னையும் ஒருத்தர் பிடிச்சுக்கச்சொல்லி எல்லோரையும் தன்கூடவே வெளியில் கொண்டு வந்துட்டார்.

அந்த நாள் இந்த நாளாம்! இது நடந்து 319 வருசம் ஆச்சு.
அதனால் அம்ரித்ஸர் பொற்கோவிலில் ஏராளமான தீபங்களை ஏற்றி இந்த நாளைக் கொண்டாடுறாங்க. Bandi Chorr Devas என்று பெயர். சம்பவம் நடந்தது 1619 லே.

இதே பொற்கோவில் சம்பந்தப்பட்ட இன்னொரு சம்பவம் Bhai Mani Singh ஜி 1708 முதல் பொற்கோவிலில் குருகிரந்த் சாஹிப் ஓதும் சேவையில் இருந்தார். 1737 வது வருசம் மொகலாயர்களின் பிரதிநிதியாக பஞ்சாப் மாநில கவர்னராக இருந்த ஸகரியா கான் இந்த பந்தி ச்சோட் திவஸ் கொண்டாட பொற்கோவிலில் கூடும் கூட்டத்துக்கு வரியாக அஞ்சாயிரம் ரூபாய் வரி அடைக்கணுமுன்னு சொல்லிட்டார். அந்தக் காலத்துலே அது பெரிய தொகை. ஏராளமான சீக்கியர்கள் கலந்துக்கறதால் வரப்போகும் காணிக்கையில் இதை அடைச்சுடலாமுன்னு மணி சிங் ஜி சரின்னு சம்மதிச்சுட்டார். அப்புறம்தான் தெரியுது இந்த கவர்னரின் வஞ்சக எண்ணம். சீக்கியர்கள் கூட்டத்தை அப்படியே 'மேலே' அனுப்பும் திட்டம் வச்சுருக்கார் கவர்னர். உடனே எல்லோருக்கும் 'கூட்டத்துக்கு வராதீங்க'ன்னு எச்சரிக்கை செய்யும் ரகசிய சேதி அனுப்பிட்டார் மணி சிங் ஜி. யாரும் வரலை. வசூலும் இல்லை. வரி கட்ட முடியலை. இதையே சாக்காகவச்சு மணிசிங்ஜியைக் கைது செஞ்சு லஹோருக்குக் கொண்டுபோய் மரணதண்டனை கொடுத்துட்டார் அந்த கவர்னர் ஸக்கரியா கான். வீரமரணம் அடைஞ்ச பாய் மணி சிங் ஜியை நினைச்சுக்கும் தினமும் இதுவாக இருக்கு.

நாலாம் நாள் அமாவாசை. இன்னிக்கு லக்ஷ்மி பூஜை செய்யறாங்க. வீட்டில் எல்லா மங்களமும் நிறைஞ்சுருக்கணுமே!

அஞ்சாம்நாள் கோவர்தன(கிரி) பூஜை. கோகுலத்தில் பேய் மழை பெய்தபோது, கோவர்தனகிரி என்ற குன்றைக் குடையாய் பிடித்து சகல ஜீவராசிகளையும் காப்பாத்துன கண்ணனை நினைச்சு இந்த பூஜை!

ஆறாம்நாள் பாய் தூஜ் Bhaiduj சகோதரர்கள் தங்கள் சகோதரிகளைச் சந்திச்சுப்பேசி பரிசுகள் வழங்கும் நாள். ரக்ஷாபந்தன்னு சில மாசங்களுக்கு முன்னேதானே சகோதரிகள், சகோதரன்களுக்கு ராக்கி கட்டி பரிசு வாங்கிக்கிட்டாங்க. போகட்டும் வருசத்துக்கு ரெண்டு பரிசு கேரண்டீ:-)))

நம்ம பக்கம் கனுப் பொங்கலுக்கு உடன்பிறந்தானுக்காக கனுப்பிடி வைக்கறோமே. அதுக்கு ஒரு பத்து ரூபா மணியார்டர் வருமேன்னு நினைவு ஓடுது.

யமன் தன்னுடைய சகோதரி யமியைப் பார்க்க அவளுடைய வீட்டுக்குப் போனபோது யமி ஆரத்தி எடுத்து அண்ணனை வரவேற்றாளாம். இந்த யமிதான் யமுனை நதியாக ஓடிக்கிட்டு இருக்காளாம்(வேளுக்குடி சொன்னார்)YAM DWITIYA ன்னு சொல்றாங்க.

நாட்டின் மற்ற மாநிலங்களில் (கேரளா தவிர) வெவ்வேற காரணங்களுக்கு இந்தப் பண்டிகையைக் கொண்டாடுறாங்க. அதை இன்னொரு சமயம் பார்க்கலாம். அடுத்த தீபாவளி ஓடியாப் போகப்போகுது?இப்படி ஆறுநாளா இங்கே கொண்டாட்டமோ கொண்டாட்டம்தான். தமிழ்நாட்டுலே மட்டும் இப்படி ஆறு நாள் விழா இருந்துருந்தால் ..... 'ஆ........... இப்பவே செலவு கண்ணைக் கட்டுதே'ன்னு இருக்கும் உங்களுக்கெல்லாம் எப்படி இருக்கும்?

பொங்கலுக்கு நாலு, தீவுளிக்கு ஆறுன்னு பத்து நாளில் நொந்து நூடுல்ஸ் ஆகி இருப்பீங்க.

கடவுள் உங்களையெல்லாம் தமிழ்நாட்டுலே பொறக்கவச்சுக் காப்பாத்திட்டான் இல்லே:-))))))

தந்தேரஸ் ஷாப்பிங் கிளம்பிப்போய் ஒரு கிலோ உப்பும், மூணு கம்பி மத்தாப்பு பொட்டியும் வாங்கி வந்தாச்சு. தெருவில் அங்கங்கே பேண்டு வாத்தியத்தோடு ஊர்வலம் போய்க்கிட்டு இருக்கு. மஹாலக்ஷ்மி படம் வச்ச அலங்கார வண்டி ஊர்வலமாப் போகுது. சீக்கியர்களும் அலங்கார வண்டியில் க்ரந்த் ஓதிக்கிட்டே போறாங்க. கேமெரா கொண்டு போகலை:(
தாற்காலிக ஷாமியானா பந்தல் போட்டு ட்ரை ஃப்ரூட்ஸ், நட்ஸ் விற்பனை ஒரு பக்கமும் பட்டாஸ் ஒரு பக்கமுமா அமர்க்களமா இருக்கு நகரம்.


அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாளுக்கான வாழ்த்து(க்)கள்.


PIN குறிப்பு: இந்த தீபாவளிக்கு பள்ளிக்கூடம் பத்து நாளுக்கு லீவு எல்லோரும் நல்லா மகிழ்ச்சியா இருங்க. எனக்குச் சின்னதா ஒரு பயணம் வாய்ச்சுருக்கு.

43 comments:

said...

WISH YOU A VERY HAPPY DEEPAVAL

said...

முதலில் வர ENGLISH! தீபாவளி வாழ்த்துக்கள்!!!! பத்மாசூரி.

said...

உங்களுக்கும் கோபால் அவர்களுக்கும் , குடும்ப உறுப்பினர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

said...

உப்பு வாங்கினா, அந்த லஷ்மியே வீட்டுக்கு வந்ததா அர்த்தமாம். அதனால,நானும் தந்தேரஸ் ஷாப்பிங்கை உப்பும், ஒருகிலோ பால்அல்வாவுமா முடிச்சுட்டேன் :-)))))).

said...

இதையெல்லாம் எடுத்துச்சொல்லவும் ஆள் வேணுமே.. பாருங்க ஒரே ஒரு ட்ரஸ் எடுத்து நாம முடிச்சிக்கிட்டோம்ன்னு.. பாயிண்ட் தேடி என்னமாதிரி உண்டான்னும் சொல்லனும்..

said...

நான் ஆடிக்கழிவு விற்பனையாகும் போதே தீபாவளிக்கும் சேர்த்து வாங்கி விடுவேன்.
உங்களுக்கு என் தீபாவளி வாழ்த்துக்கள்
சகாதேவன்

said...

ஆஹா, எனக்கென்னவோ அங்க பிறந்திருக்கலாம்னு தோணுதே :)

தீபாவளியும்,பயணமும் மகிழ்ச்சியாகவும் மனநிறைவுமாகவும் அமைய வாழ்த்துக்கள்!

said...

தீபாவளி வாழ்த்துக்கள்

said...

புது, புது விஷயங்களைத்தெரிஞ்சுக்க முடியுது

said...

அன்பு துளசி, ஆறு ட்ரஸ் எடுத்திருக்கலாம் இல்ல.
மனம் நிறைந்த தீபாவளி நல் வாழ்த்துகள்.
தன் தேரஸ் கொடுத்தாலும் பொங்கும் என்று நான் நினைத்தேன் அதனால முடிஞ்சதைக் கொடுத்துக் கிட்டுவரேன். வரவும் உண்டும்.கபாலீஸ்வர கோவில் பக்கம் ஒருத்தர் உங்களை ரொம்ப விசாரிச்சார். அவர் டிவில கூட வராராமே:)

said...

அவருடைய அங்கியில் 52 குஞ்சலங்களைத் தைச்சு ஒவ்வொன்னையும் ஒருத்தர் பிடிச்சுக்கச்சொல்லி எல்லோரையும் தன்கூடவே வெளியில் கொண்டு வந்துட்டார்.

//

புது புது தகவல் சொல்றீங்கம்மா..

பொறாமையால்ல இருக்கு.?

எத்தனை ஆர்வமும் ஈடுபாடும் இருந்தா இப்படியெல்லாம் செய்ய முடியும்?.

அருமை..

said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் டீச்சர் ;)

said...

தீபாவளி வாழ்த்துக்கள் டீச்சர் உங்களுக்கும்,சாருக்கும்.

said...

Wish you and you family HAPPY DIWALI! Wish you a safe Journey!

said...

தீப ஒளி திரு நாள் வாழ்த்துகள்.

said...

அடேங்கப்பா...! இதுக்குள்ள இவ்ளோ சமாச்சாரம் இருக்கா?

ஒரே ஒரு புடவைதான் எடுக்கனுமின்னு யார் கையைப் புடிச்சா...ஹூம்?

நான் ஆறு!!

குருஜியின் யோசனை நல்லாருக்கு. அவர் புடவை கட்டியிருந்தால், அதன் முந்தியில் முடிஞ்சு எத்தனை பேரை அழைத்து வந்திருப்பார்!!
தகவல்கள் எல்லாம் கேள்விப்படாதவை!!!

கோபாலுக்கும் உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!!!

said...

Deepavali

THIS IS THE HAPPIEST DAY
TO CONVEY MY BEST WISHES
CLEAN OUT SINS WITH HONESTLY
MAKE YOUR CONCIOUS IN NOBIITY
FIRE CRACKERS WITH JOYFULLY
WEAR NEW CLOTHS IN TRADITIONALLY
GET ALL PROSPERITY IN THE DIWALI

SIVASHANMUGAM

said...

நிறைந்த கொண்டாட்டங்கள் அறிந்துகொண்டோம்.

தீபாவளி நல்வாழ்த்துகள் திரு + திருமதி துளசிகோபால்.

பயணம் இனிதாய் அமைய வாழ்த்துகள்.எங்களுக்கும் இனிக்கும் செய்தி :) காத்திருக்கின்றோம்.

said...

வாங்க பத்மாசூரி

Thanks, நன்றின்னு நானும் ரெண்டுதபா சொல்லிக்கிறேன்:-)

said...

வாங்க ராம்ஜி_யாஹூ.

நன்றி நன்றி.

உங்களுக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்..

முதல்முறையாத் தமிழில் இங்கே பின்னூட்டி இருக்கீங்க!!

அதுக்கும் ஒரு நன்றி.

said...

வாங்க அமைதிச்சாரல்.

அது உண்மைதான். கடலில் இருந்து தோன்றியவைதானே இந்த ரெண்டும்.

ஒன்னு தண்ணி ஒன்னு பால்:-)

said...

வாங்க கயல்.

அப்பப்போ நம் பெருமையை நாமேதான் இப்படி மறைமுகமாச் சொல்லிக்கணும். வேற வழி?

ரங்க்ஸ்கள் ...கவனிச்சுட்டாலும்........

said...

வாங்க சகாதேவன்.

ஆம்பளைக்கு ஆடிக்கழிவுலே வாங்கிடலாம், பிரச்சனை இல்லை. ஆனால்... பெண்களுக்கு அந்தந்த தீவுளிக்கு என்ன புது ஃபேஷன் வருதோன்னு எதிர்பார்ப்பு இருக்குமே!

இந்த ஆர் எம் கேவி, போத்தீஸ், சென்னை ஸில்க் எல்லாம் அசராம அடிச்சு ஆடுனா....... நாங்க என்ன செய்வது? நீங்களே சொல்லுங்க!

நன்றி நன்றி.

உங்களுக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்..

said...

வாங்க சுந்தரா.

கரெக்ட். இங்கே பிறக்காம என் மாதிரி ச்சும்மா வசிச்சால் இதோட உண்மையான விஷயம் தெரியாமல் கோட்டை விடவேண்டியதுதான்:-))))


வாழ்த்துகளுக்கு நன்றிப்பா. உள்நாட்டுப் பயணம்தான்.


உங்களுக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்..

said...

வாங்க வழிப்போக்கன் - யோகேஷ்.


நன்றி நன்றி.

உங்களுக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்..

said...

வாங்க கோமு.

முதல் வருகையா?

வணக்கம். ஆதரவுக்கு நன்றி.

சரித்திர டீச்சர் என்ற முறையில் ஒரு சின்ன சரித்திரக் குறிப்பாவது நம்ம பதிவுகளில் இருக்கணும் என்று ஒரு எண்ணம்.

said...

வாங்க வல்லி.

கொடுக்கும் பண்டிகைதான்ப்பா அது. நம்ம வாழ்க்கையே 'அவன்' கொடுத்தது தானே?

விசாரிச்சவரை நானும் இன்னிக்கு விசேஷமா நினைச்சுக்கிட்டேன். அவர் 'கொடுத்த' யானை (புடவை)தான் இன்றைய ஸ்பெஷல்:-)))

said...

வாங்க சாந்தி.

பயனுள்ள பதிவாக் கொடுத்துட்டேன்னு ஒரு சமாதானம் எனக்கு வேணாமா:-)))))

டீச்சரும் ஹோம் ஒர்க் செய்யணுமேப்பா!!!!

said...

வாங்க கோபி.

நன்றி நன்றி.

உங்களுக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்..

said...

வாங்க சுமதி.


நன்றி நன்றி.

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்..

said...

வாங்க சந்தியா.

நன்றிப்பா. போகுமிடம் வெகுதூரமில்லை:-)

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்..

said...

வாங்க ஜோதிஜி.

நன்றி நன்றி.

உங்களுக்கும் தேவியர் நால்வருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்..

said...

வாங்க நானானி.


நானும் பஞ்சாபிக் கூட்டத்துலே சேர்ந்துக்கிட்ட மாதிரி கனவு கண்டு 7 சல்வார் கமீஸ் செட் துணிகள் வாங்கிக்கிட்டேன். தைக்கலை. இங்கே நமக்குச் சரியான டெய்லர் கிடைக்கலைப்பா. இதுக்கே ஒரு விஸிட் சென்னைக்கு வரணும் நான்.

குருஜி ரொம்ப சாமர்த்தியசாலி. முந்தாணை இல்லாமலேயே முடிஞ்சுக்கிட்டார் பாருங்களேன்!


நன்றி நன்றி.

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்..

said...

வாங்க சிவஷண்முகம்.

நன்றி நன்றி.

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்..

said...

வாங்க மாதேவி.

நன்றிப்பா.

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

பயணம் முடிஞ்சதும் வரப்போகும் பகுதிகள் எல்லாம் தேர்வுக்கு வரும் பகுதின்னு அறிவிச்சுடலாமா? :-))))

said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் உங்கள் வலைப்பதிவு படிக்கும் அத்தனை
பேருக்கும் சுப்பு ரத்தினத்தின் அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்.

சுப்பு ரத்தினம்.

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

உங்களுக்கும் மீனாட்சி அக்காவுக்கும் குடும்ப அங்கம் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்து(க்)கள்.

said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் டீச்சர்.
இனிய தந்தேரஸ் வாழ்த்துகள்

இங்க பெங்களூர் பேப்பர்கள்ள ஹேப்பி தீபாவளி, தந்தேரஸ் நாள் வாழ்த்துகள்னு விளம்பரங்கள்ள போட்டிருந்தாங்க.

என்னதிது தந்தேரஸ்னு ஒன்னும் புரியாம இருந்தேன். இப்பப் புரிஞ்சது தந்தேரஸ்னா என்னன்னு. :)

said...

Belated Diwali wishes teacher.

said...

பகிர்வு அருமை.

said...

வாங்க ஆசியா.

வருகைக்கு நன்றி.

பக்ரீத் பண்டிகைக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க ராகவன்.

புரிஞ்சுக்கிட்டுச் சும்மா இருக்கப்பிடாது. அடுத்த தன் தேரஸ்க்கு இப்போதிருந்தே சேமிக்கணும். இனிமே எல்லாமே ப்ளாட்டினமும் வைரமும்தானாம்.

said...

வாங்க சிந்து.


நன்றிப்பா.