Friday, October 29, 2010

அட! எவ்வளோ நாளாச்சு.......... கண்ணிலே பார்த்து.....

புதனுக்குப் புதன் 'சிங்ளா' கடைக்கு ஓடும் வழக்கம் கோபாலுக்கு இருக்கு. கூடவே ஒட்டிக்கிட்டு நானும் போவேன், வேண்டாததை எடுக்கும்போது கையை வெட்டத்தான்.....

இந்திய வாசத்துலே, பழைய பழக்கத்தைப் புதுப்பிச்சுக்கிட்டார். சென்னையில் இருக்கும்போது குமு(த்)தம் மாத்திரம் வாங்கிப்பார். இங்கே தமிழ்நாட்டை விட்டு வந்ததும் பிரிவாற்றாமையோ என்னவோ கண்ணில் பட்டதையெல்லாம் வாங்கும் குணம் வந்துருக்கு. குமுதம், ஆவி, குங்குமம், மங்கையர் மலர், கல்கி இப்படி....வாரிக்கிட்டு வந்துடறார். அதுவும் ரெண்டு வாரப் 'புதுசு':(

சி.செ.வில் இருந்து நடந்து வருதோ!!!!!


கல்கி ஆஃபீஸில் வேலை செய்யும் ஒருத்தர், நமக்குத் தெரிஞ்சவர். (கொசுவத்தி சமாச்சாரம். அம்மம்மா வீட்டு காலம்) அங்கே வேலை செய்யும் ஊழியர்களுக்கு கல்கி தீபாவளி மலர் இனாமாக் கிடைக்கும். அதை நேராக் கொண்டுவந்து நம்ம வீட்டுலே கொடுத்துருவார், அம்பது சதம் டிஸ்கவுண்டு ப்ரைஸ்லிலே! ஆ.வி.யில் வேலை செய்யும் நபர் யாரும் நமக்குத் தெரியாததால் அதை முழுக்காசு கொடுத்து வாங்குவோம். கல்கியும் சரி ஆ,வி.யும் சரி சின்னத் தலைகாணி சைஸுலே குண்டா இருக்கும். அட்டையில் கல்கியில் எப்பவும் சாமிப் படம். ஆ.வி.யில் அட்டையிலேயே ஒரு ஜோக் இருக்கும் என்ற நினைவு. குமுதம் தீபாவளிக்குன்னு தனியா ஸ்பெஷல்ஸ் போடுவதில்லை. தீபாவளி வாரத்துலே வரும் குமுதம், குனேகா வாசனையோடு வழக்கத்தைவிட தடிமனா, மொத்தமா இருக்கும்.

எப்படியோ இடைப்பட்ட காலத்தில் தீபாவளி மலர்கள் வாங்கும் வழக்கம் காணாமப் போயிருந்துச்சு நம்ம வீட்டில். போனவருசம் சென்னையில் இருந்தும்கூட இதெல்லாம் கண்ணில் படவே இல்லை. மறந்தும் போச்சு.

முந்தாநாள் ஆ.வி. தீ.ம. கண்ணில் பட்டுருச்சு. கோபாலின் கண்களில்தான்.
வேணாம் விடுங்கன்னா.....கேக்கலை. 'எவ்வளோ நாளாச்சு...... பரவாயில்லை ஒன்னு வாங்கிக்கோ'ன்னார். நகைக்கடையில், புடவைக்கடையில் மட்டும் இந்த டயலாக் வரவே வராது:(

பழைய தடிமன் இல்லை. அதுலே பாதியா இளைச்ச தோற்றம். அட்டையில் ஜோக் இல்லை. சூர்யாதான் இப்பத்து ஜோக்கா என்ன? வெளிப்புறம் மடிச்ச அட்டைக்குள்ளே போத்தீஸின் சாமுத்ரிகா பட்டு உடுத்துன ட்ரிஷா.
விளம்பரதாரருக்கு மேலட்டையிலேயே இருக்கணுமுன்னு என்ன ஒரு ஒரு பிடிவாதம்! இனிவரும் காலத்தில் பல 'மடிப்பு'கள் வருமுன்னு எதிர்பார்க்கலாம்.

திறந்தால்(புத்தகத்தை) அட்டவணையெல்லாம் போட்டு ஜமாய்ச்சுருக்காங்க. ரெண்டு பக்கம் பூராவும் சங்கதிகள். ஒரு பக்கம் பூராவும் விளம்பரங்கள். பாதிக்குப்பாதி! அதிலும் முன்னுரிமை விளம்பரதாரர்களுக்கே!

புள்ளையார் சுழிக்காக ஒரு 'ஹேரம்ப' கணபதி. ஆன்மீகத்துக்கு ஸ்ருங்கேரி சாரதா மடம். வம்பு வேணாமுன்னு காமகோடியை விட்டுட்டாங்க போல!

மஞ்சள் இடிச்சால் மணமாலையாம். துணைவனோ, துணைவியோ வேணும் என்று 'தவம்' செய்பவர்கள் 'ஹிரே மகளூர்' கோவிலில் போய் இடிச்சுட்டு வாங்க.

சங்கதிகளுக்குத் தலைப்புகள் போட்டு அழகா வகைப்படுத்தி வச்சுருக்காங்க.

ஆன்மீகம் என்ற தலைப்பில் ஏழு கட்டுரைகள். அதுலே ரெண்டு துளசிதளத்தில் வந்த ரெண்டு இடங்கள்

சுற்றுலா ஏழில் ரெண்டு, நம்ம து.தவில் அனுபவிச்சது! நமக்காக ஒரு யானைக்கூட்டத்தின் படம் கூட இருக்கு:-)

சந்திப்பு நாலில் நமக்கெல்லாம் நல்லாவே தெரிஞ்ச பாலகுமாரன்

கலையில் நாலு, கவிதையில் அஞ்சு, ஷாப்பிங் மூணு, சிறுகதைகளில் ஆறு, கலைஞர்கள் அஞ்சு, அனுபவம் நாலு, இதில் நம்ம எஸ்.ரா, இருக்கார். (அறு)சுவையில் ஏழு, வாழ்க்கையில் நாலு, கலாட்டாவில் மூணு, மற்றவையில் அஞ்சுமா இருப்பதைச் சும்மாப் புரட்டிப் பார்த்தேன்.


இங்கே இந்தியாவில் நான் கவனிச்சது வகைவகையான விளம்பரங்கள்தான். மார்கெட்டிங்கில் அதிவேக வளர்ச்சி. அது தொ(ல்)லைக் காட்சிக்கானாலும் சரி, அச்சு ஊடகமானாலும் சரி. சக்கைப்போடு போடுது. இதுகளை மட்டும் கவனிச்சால்......வறுமை, ஏழ்மை என்ற சொற்கள்கூட நாட்டைவிட்டு ஒழிஞ்சுபோய் எங்கும் எதிலும் வளமை மட்டுமே விரவி இருக்குன்ற எண்ணம் தோணிரும்.

எட்டு துணிக்கடை விளம்பரங்கள், அதுலே நைட்டிக்கும் ஒன்னு! நகைநட்டுக்குன்னு பார்த்தால் நாலே நாலுதான். அத்தனையும் வைரமோ வைரம். மக்களின் வாழ்க்கைத்தரம் ரொம்பவே உயர்ந்து வாங்கும் திறம் கூடிப்போயிருக்கு!

எட்டு வங்கிகள், வா வான்னு கூப்புடறாங்க. வங்கிகளைப் பத்தித் தனியா ஒரு நாள் புலம்பலை வச்சுக்கணும். நம்ம காசையும் கொடுத்துட்டு அதுக்கு அக்கவுண்டுஃபீஸ் ன்னு ஒன்னு மாசாமாசம் அழணும். நண்பர் ஒருவரின் சோகக் கதையை 'அப்புறம் ' வச்சுக்கலாம்.

அஞ்சு ஆஸ்பத்திரிகள், மூணு மருந்துக்கம்பெனி. 'ஸைபால்' விளம்பரம் ஒன்னு பார்த்து ஆச்சரியமாப்போச்சு. இன்னும் இருக்கா?

பெருங்காயம், பல்கலைகழகம், நம்மகிட்டே இருக்கும் ஒன்னுரெண்டு காசைக் குறிபார்த்து அடிக்கும் மணி மேனேஜர்கள், (இன்வெஸ்ட்மெண்ட் செஞ்சு பெருக்கிருவாங்களாம்) வீட்டுச்சாமான் விற்கும் வஸந்த் அண்ட் கோன்னு இன்னும் சில.

99 ரூபாய்க்கு பரவாயில்லையா இல்லை விலை அதிகமான்னு தெரியலை.

தீபாவளி மலர் பார்த்த மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்துக்கிட்டே எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்து(க்)களை ஆறு நாளுக்கு முன்னேயே 'தமிழில்' சொல்லிக்கறேன்.

ஹேப்பி தீபாவளி!!!!!



55 comments:

said...

AV Deepavali malarai, nella pirchu menjuteenga teacher...

Ungallukkumm Saarukkum, Iniya Deepawali Vazthukkal....

- Sri :)

said...

கலையில் நாலு, கவிதையில் அஞ்சு, ஷாப்பிங் மூணு, சிறுகதைகளில் ஆறு, கலைஞர்கள் அஞ்சு, அனுபவம் நாலு, இதில் நம்ம எஸ்.ரா, இருக்கார். (அறு)சுவையில் ஏழு, வாழ்க்கையில் நாலு, கலாட்டாவில் மூணு, மற்றவையில் அஞ்சுமா இருப்பதைச் சும்மாப் புரட்டிப் பார்த்தேன்.
எட்டு துணிக்கடை விளம்பரங்கள், அதுலே நைட்டிக்கும் ஒன்னு! நகைநட்டுக்குன்னு பார்த்தால் நாலே நாலுதான்
அஞ்சு ஆஸ்பத்திரிகள், மூணு மருந்துக்கம்பெனி. 'ஸைபால்' விளம்பரம் ஒன்னு பார்த்து ஆச்சரியமாப்போச்சு

அம்........மாமாமாமா.......... டி என்ன ஸ்டாடிஸ்டிக்ஸ் !மலர் தயாரிச்சவங்க கூட இவ்வளவு தெரிஞ்சி வச்சிருப்பாங்களான்னு தெரியல .தீபாவளி வாழ்த்துகள்

said...

சூர்யாதான் இப்பத்து ஜோக்கா என்ன?///

ஜோதிகா சண்டைக்கு வரப்போறாங்க.

said...

{{{கூடவே ஒட்டிக்கிட்டு நானும் போவேன், வேண்டாததை எடுக்கும்போது கையை வெட்டத்தான்.....}}}

ஸாருக்கு ராவணன் மாதிரி நிறையக்கை தேவைப்படும் போலிருக்கே.
தீபாவளி மலரைப் பிரிச்சு மேஞ்சிட்டீங்க என்று எழுதுவதற்குள் திரு சீனிவாசனும் அதையே தெரிவித்துவிட்டார்.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

said...

அப்போது "பார்த்த மல்ர் இப்போது இல்லை! வாசனைஉம் இல்லை"! என் அன்பு கலந்த தீபாவளீ வாழ்த்துக்கள்--------பத்மாசூரி

said...

தலைவனுக்கும் தலைவிக்கும் மகிழ்ச்சியான தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்.

said...

அக்கு வேறு ஆணி வேறுன்னு பிரிச்சி மேஞ்சிட்டீங்க ..

தீபாவளி நல் வாழ்த்து(க்)கள்.

said...

இந்த தீபாவளி மலர் எனக்கு இன்னும் கிடைக்கலை டீச்சர்..புக் கடைக்காரர் பக்கத்து வீடு தான் ஆனா புக் மட்டும் கைக்கு வந்தபாடில்லை.

said...

99ரூபாயா!!!!
5ரூபாய்க்கு அழகான படங்களுடனும், கொத்தமங்கலம் சுப்பு சாரின் கவிதைகள், அகிலன் கதை,.....இதெல்லாம் நாற்பது வருடங்களுக்கும் முன்னால். ஒரு மலர் பூரவும் படித்து முடிக்க நாட்கள் பிடிக்கும். இப்போதோ ஒரே பதிவில் அடங்கிவிட்டது. பேப்பர் பஞ்சமோ, என்னவோ:(

said...

ஆ.வி தீபாவளி மலர் இந்தியாவில் இருந்தவரை வாங்கியது டீச்சர்,உங்களுக்கும், சாருக்கும் தீபாவளி வாழ்த்து டீச்சர்:))))

said...

ஆ வி தீபாவளி மலர் வரவர இளைச்சுத்தான் போச்சு . துளசி நீங்க டில்லி போனால் தமிழ் சங்கம் நூலகத்துக்குப் போங்கள். அங்கு1936 வருடத்திலிருந்து ஆ வி , கல்கி, கலைமகள் & அமுதசுரபி மலர்கள் கலக்க்ஷன் இருக்கு.
அதில் உள்ள படங்கள், ஜோக்ஸ் , கதைகள் எல்லாம் இப்போ தவமிருந்தாலும் கிடைக்காது
எல்லாமே பொக்கிஷம்தான்
ஷோபா

said...

\\செஞ்சு பெருக்கிருவாங்களாம்)\\

ஆமாமா. சுத்தமா பெறுக்கிருவாங்க;)

said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

said...

நல்ல அலசல்.. நானும் தமிழ்லயே வாழ்த்திக்கிறேன்.. "ஹேப்பி திவாலி" :-)))))

said...

//
நகைக்கடையில், புடவைக்கடையில் மட்டும் இந்த டயலாக் வரவே வராது:
//


அங்க போனா இந்த dialog சொல்லிருப்பீங்க???
//
வேண்டாததை எடுக்கும்போது கையை வெட்டத்தான்.....
//

said...

துளசி நீங்கள் சொன்னது போல் மக்களின் வாழ்ககை தரம் உயர்ந்து தான் இருக்கு.


உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

said...

டீச்சருக்கும் அண்ணாவுக்கும் டீச்சரின் அனைத்து வாசகர்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள். :-)

டீச்சர், அது ட்ரிஷா இல்லை..த்ரிஷா..
(ரசிகர்கள் மனசு புண்'பட்டு'ப் போயிடாதா என்ன? :-) )

said...

வாங்க ஸ்ரீநிவாஸன்..

ஜஸ்ட் பிரிச்சேன், இன்னும் முழுசா மேயலை:-)

said...

வாங்க பூங்குழலி.


கேப்டன் கட்சியில் சேரலாமான்னு .... அதான் புள்ளி விவரத்தைச் சொல்லிப் பார்த்தேன்:-)

said...

வாங்க தமிழ் உதயம்.

ரெண்டு சின்னப்புள்ளைகளோடு அவுங்க ரொம்பவே பிஸி. இதுக்கெல்லாம் நேரம் இருக்குமா?

said...

வாங்க பிரகாசம்.

அறுவாள் ரெண்டு பேர்கிட்டேயும் இருக்கு. மாத்தி மாத்தி 'வெட்டிக்கணும்' :-)

said...

வாங்க பத்மா சூரி.

எல்லாம் மணமில்லா மலர்கள்தான்.

காகித மலருக்கு வாசம் ஏது??????

said...

வாங்க ஜோதிஜி.

ரொம்ப நன்றி. உங்களுக்கும் அதே அதே!

said...

வாங்க தருமி.

அக்குதான் ஆகி இருக்கு. ஆணிகள் மிச்சம் வச்சுருக்கேன்.

said...

வாங்க சிந்து.

இன்னும் சிலநாள் இருக்கேப்பா. அதுக்குள்ளே வந்துரும்.

இங்கே வார இதழ்கள் எல்லாம் ரெண்டு வாரம் லேட்டாத்தான் கிடைக்குது. வழக்கமா வாங்குறவன் ரெண்டு வாரம் என்ன ரெண்டு மாசமுன்னாலும் காத்திருப்பான் இல்லே?

ஆனால் தீபாவளி மலர் மட்டும் ரெண்டு வாரம் முன்னாலேயே!!!!

சுடச்சுடக் காசு பார்க்கக் கத்துக்கிட்டாங்க!

said...

வாங்க வல்லி.

வீங்கிப் போயிருக்கு ரொம்ப. பணத்தை சொல்றேன். அப்போதைய அஞ்சு இப்போதைய நூறு. போனாப்போகட்டுமுன்னு ஒரு ரூ டிஸ்கவுண்டு கொடுத்துட்டாங்க.

said...

வாங்க சுமதி.

தற்போது இந்தியாவில் இருப்பதாலும் முக்கியமா தமிழ்நாட்டைவிட்டு அகலே இருப்பதாலும் இதுக்கு 'மவுஸ்' கூடிப்போச்சு.

said...

வாங்க ஷோபா.

பொக்கிஷம் என்பது உண்மை. ஆனால் உங்க டெல்லி ட்ராஃபிக் ஆளை அடிச்சுப் போட்டுருதேப்பா.

சண்டிகரில் இருந்து குர்காவ் அஞ்சு மணி நேரமுன்னா..... அங்கிருந்து சிட்டிக்குள்ளே போக நாலு மணி நேரம் 'நகர' வேண்டியதா இருக்கே:(

எங்கேன்னு தமிழ்ச்சங்கம் போக?

said...

வாங்க வித்யா.

முதல்லே அவுங்க சம்பளத்தை இல்லை கமிஷனை எடுத்துக்கிட்டுப் பெருக்குறாங்கப்பா.

கழுதை தேய்ஞ்சு கட்டெறும்பாவதைப் பார்க்கணும் நாம்:(

said...

வாங்க அன்பரசன்.

உங்களுக்கும் வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

நானும் 'தேங்க் யூ'ன்னு தமிழில் சொல்லிக்கறேன்:-)

said...

வாங்க வழிப்போக்கன் - யோகேஷ்.

முதல் வருகைக்கு நன்றி. நலமா?

ஆளாளுக்குக் கத்தி இருக்கு (நாக்கிலே)

'எதிரி' ஒன்னை வாங்க விட்டுருவோமா:-)))))

said...

வாங்க கோமதி அரசு.

நல்வாக்கு சொல்லி இருக்கீங்க. ஆனா எல்லாப் பக்கத்திலும் வளர்ச்சி ஒரே மாதிரி இல்லைபோல இருக்கே:(

said...

வாங்க ரிஷான்.

அவுங்களே Trisha N என்றுதான் கையெழுத்துப் போட்டுருக்காங்க.

said...

தீபாவளி (மலர்) வாழ்த்துகள்.
திரு + திருமதி துளசிகோபால்.

said...

THULASIDHALAM ANAIVARUKKUM INIYA DEEPAVALI VAZLTHUKAL.

said...
This comment has been removed by the author.
said...

முன்னெல்லாம் தீபாவளி ந புது துணி தான் முதல நினைப்போம்,இப்பலாம் அடிகடி புது துணி எடுகரதள தீபாவளி கு எடுகுர்ப அந்த சந்தோசம் மிஸ்ஸிங்,
அதுவும் இங்க அமெரிக்க வந்ததுல இருந்து தீபாவளி யும் ஒரு நாள் அவ்ளோ தான்,இங்க வெடியும் கிடையாது,நமக்கு ஸ்வீட்டும் செய்ய வரத்து.அதனால எல்லோரும் கொண்டடரத நெனச்சு சந்தோஷ படுக்க வேண்டியது தன.

said...

ஒரு தீபாவளி மலருக்கு முதலில் விமர்சனம் எழுதியவர் என்கிற பெருமையை!! நீங்கள் பெறுகிறீர்கள் :))

ஒரு காலத்தில் சந்தைக்கு வரும் எல்லா தீபாவளி 'மலர்'களும் என்னுடைய தாய் மாமா தயவில் வாசித்துவிடுவோம். முழு குடும்பமும் உட்கார்ந்து ஒரு கருத்தரங்கம் அளவுக்கு விமர்சித்து தீர்த்துவிடுவோம். சில சமயங்களில் அது சண்டையில் முடிந்ததும் உண்டு.

கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்த அந்த காலம் மீண்டும் வருமா :((

said...

அக்காவிற்கும், குடுபத்தாருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் - " சங்கமம்" விஜயகுமார்

said...

வாங்க மாதேவி.

அவர் வேற எப்பப்பார்த்தாலும் தான் துளசியின் ஹஸ்பெண்ட் என்றே அறியப்படுவதாகச் சொல்லிக்கிட்டு இருக்கார்.

இப்ப நீங்க 'திரு துளசிகோபால்
ன்னு சொன்னதும்.........ஆஹா.......:-))))

said...

வாங்க சிவஷன்முகம்.

நன்றி.

உங்களுக்கும் எங்கள் வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க விஜி.

என்ன திடீர்ன்னு பின்னூட்டங்களைத் தூக்கிட்டீங்க??????

said...

வாங்க டிபிஆர்.

அந்தக் காலம் மீண்டும் வரவே வராது. வரவிடமாட்டாங்க தொலைக்காட்சி சீரியல் மேக்கர்ஸ்:(

said...

வாங்க விஜயகுமார்.

தலைப்பு இப்பத்தான் சரியா இருக்கு! பார்த்து எவ்வளோ நாளாச்சு? அஞ்சு வருசம் இருக்குமே!

நலமா?

உங்களை அடிக்கடி நினைச்சுக்கிட்டேன். அதுவும் நியூஸிலாந்து புத்தகம் வெளிவந்த சமயம் நினைப்பு அதிகமா இருந்துச்சு.

உங்க மின் அஞ்சல் முகவரி ஒன்னு தட்டி விடுங்க. கொஞ்சம் பேசணும்.

said...

சாரி டீச்சர்
ரெண்டு தடவ பதிவு ஆகுச்சுன்னு delete பணினேன்.கடைசில ரெண்டும் போய்டுச்சு.
இதன் அந்த பதில்
முன்னலாம் தீபாவளி மலர்ன என்னக்கு இலவச பொருட்கள்
தான் நாபகம் வரும்.உருபடதாதா இருந்தாலும் அது என்னனு தெரிஞ்சுகரதுல ஒரு ஆர்வம்.இப்பலாம் அதுவும் இல்ல.கூடவே bookla பெரியவர் ஆசி ,சிறுகதைகள் ஒண்ணுமில்ல இப்ப.எதோ இந்த தடவ எங்க தலைவர் படம் ஆவது அட்டை படத்துல இருக்கே ;-)

said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

said...

iniya deepavali vaazhththukkal! aamaam inime loanla car vaangumpodu konjam roadum sayrththu vaanganum.

said...

விஜி,

நான் கூட கவனிக்கலை. நம் வீட்டு பின்னூட்ட (எண்ணிக்கை) ப்ரேமிதான் பதறிப்போயிட்டார்:-)))))

said...

வாங்க அரவிந்தன்.

உங்களுக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க குலோ.

எங்கே ரொம்ப நாளாக் காணோம்?

ரோடு வாங்க முடியுமுன்னா கொஞ்சம் பெருசா வாங்கிக்கணும். கைவீசி நடக்க முடியலைப்பா:(

said...

வாழ்த்துக்கள்..:)
நான் தமிழ்சஙக்த்துல இருந்து பழைய தீ.மலர் எல்லாம் எடுத்து வச்சு படிப்பேன்..

said...

வாங்க கயலு.

'என்ன தவம் செய்தனை' பாடிக்காட்டவா?

நமக்கு அவ்வளோ அதிர்ஷ்டம் இல்லைப்பா.

said...

//ஆன்மீகம் என்ற தலைப்பில் ஏழு கட்டுரைகள். அதுலே ரெண்டு துளசிதளத்தில் வந்த ரெண்டு இடங்கள்//

நல்வாழ்த்துகள்

said...

வாங்க கோவியார்.


அவுங்க கண்ணால் பார்க்கும்போதுதான் நாம் எழுதுன லக்ஷணம் புரிபடும், இல்லையா????

கதிருக்குத் தலை தீபாவளி வாழ்த்து(க்)கள்.