நவராத்திரிக்குச் சண்டிகர் நகரின் புதிய சண்டியே அழைக்கும்போது போகாமலிருக்க முடியுமா? பேசாமக் கிளம்பி வாங்க.
இந்த வருசமும் மூணுபடின்னு சொன்னப்ப ரூபாய்க்கான்னு கேட்டுட்டார் ஒரு பதிவுலக நண்பர். உடனே நினைச்ச மூணை அஞ்சாக்கிட்டேன்.
பிரமாத அலங்காரம் ஒன்னும் இல்லை வழக்கம்போல! முதல் படி மரப்பாச்சியில் ஆவாஹனம் செய்த தாயார் பெருமாள். குழலூதும் கண்ணன். அவனுக்கு ஒரு வெண்ணைக்குடம் புதுசு. உடுப்பி சமாச்சாரம். த்வார்க்காவிலிருந்து குழந்தைக் கண்ணன். பச்சைப்பிள்ளையார் தாய்லாந்து திருப்பதி பெருமாளின் தங்க விமானம், கலசம் சி.செவில் வாங்குனது.
ரெண்டாவதிலும் பெரும் ஆட்கள். கூடவே ஒரு புத்தர். அவருக்கு முன்னால் தாமரையை வச்சுட்டேன். அதைப் பார்த்துக்கிட்டே அவர் தியானம் செய்யட்டும். குகனின் உதவியுடன் படகில் கங்கையைக் கடக்கும் ராமலக்ஷ்மணர்களும் சீதையும். இன்னொரு குட்டிப்படகில் ஃப்ளோட்டிங் மார்கெட் பழ வியாபாரம்.
மூணாவது, சுத்தப்போன இடங்களில் கொலுவைச் சாக்கா வச்சு வாங்குனது. 'பலேபலே பலேபலே பல்லே' அம்ரித்ஸர். நடனமாடும் காந்தருவனும் காந்தருவியும்(!) பக்கத்துலே நிக்கும் அப்சராவும் தாய்லாந்து. அடுக்களைச் சாமான்கள் அம்மி,உரல்,ஆட்டுக்கல் தக்ஷின்சித்ரா.
நாலாவது யானைகள். புதுசா ஒரு ஒட்டகம் துபாய் சரக்கு.
அஞ்சாவது பூனைகள், துளசிதளத்தைச்சுற்றி:-)
பதிவுலகத் தோழிகளின் அன்பளிப்புகள் எல்லாம் யானை உருவில் அங்கங்கே எல்லாப் படிகளிலும் விரவி நிக்குது. மற்ற பொம்மைகள் எல்லாம் முந்தையக் கொலுக்களில் இருந்ததேதான்.
இன்றைய ஸ்பெஷல் வெள்ளைக் காராமணி சுண்டலும் கப்பக்கிழங்குப் புட்டும்.
முடிஞ்சவரை கொலு அலங்கரிச்சாச்சு. பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் ஏற்கனவே வந்து கொலுவில் மறைவா இருக்காங்க:-)
படிகள் 'அமைக்க' உதவி செஞ்ச கோபாலுக்கு நன்றி.
பதிவுலக நண்பர்களையும், வாசகர்களையும் சண்டியின் கொலுவுக்கு மனம் நிறைந்த அன்போடு அழைக்கிறேன்.
வாங்க எல்லோரும்.
என்றும் அன்புடன்,
துளசி
PIN குறிப்பு: சுண்டல் & புட்டுவின் படம்
Friday, October 08, 2010
சண்டி அழைக்கிறாள்.......
Posted by துளசி கோபால் at 10/08/2010 10:29:00 PM
Labels: அனுபவம் Kolu Chandigarh
Subscribe to:
Post Comments (Atom)
65 comments:
வந்தேன், ரசித்தேன். :-)
படிகள் 'அமைக்க' உதவி செஞ்ச கோபாலுக்கு நன்றி.
இதென்ன அக்கிரமம். தலைவர் கொலு அமைக்க படிகள் மட்டுமா உதவி இருக்கிறார்.
அவரே பாசப்படிகள் தானே,
வாவ்வ்வ் கொலு சூப்பராயிருக்குக்கா....அப்ப்டியே கொலு படி எப்படி வைப்பதுன்னு சொல்லுங்களேன்....
சிவராத்திரி என்றாலே இரட்டையர் பிறப்பும் அருகே இருந்த பள்ளியில் திருட்டுத்தனமாக வாங்கித் தின்ற ( ரெண்டு முறை வரிசையில் வந்து நின்று கொள்வது) சமாச்சாரங்கள் தான் இன்று நினைவுக்கு வந்து போகின்றது.
ரொம்ப நன்றியும் எங்கள் வாழ்த்துகளும்.
பாக்கவே பரவசமா இருக்கு..இது வரைக்கும் வீட்ல கொலுவெல்லாம் வச்சதே இல்ல..சின்ன வயசில் கூ்ட படிச்சவங்க வீட்டுக்கு போயி பாத்தது தான் கொலுவெல்லாம்..அங்க சாப்பிட்ட ரவா லட்டு ஞாபகம் வந்திருச்சு டீச்சர்..
வந்தோம் பொம்மையெல்லாம் பாத்தோம் சுண்டல் வாங்கிக்கிட்டம்..
கொலு அழகாக உள்ளது... ஆனால் நான் சாமி கும்பிடற ரகம் கிடையாது சுண்டலுக்கும் புளியோதரைக்கும் கோவில் பக்கம் ஒதுங்கும் ரகம்.. ஹீ... ஹீ...
பெரிய எழுத்தாளர்கள் மறைவில் நின்று சப்போர்ட் செய்யும் இந்தக் கொலு நிஜமாவே அதிசய கொலு. அழகான கொலு.
டேப்ஸ், காசெட்கள் அடுக்காத கொலுவா:)
யானைகள் ,கிருஷ்ணன்,அப்சரஸ் &பூனைப் பட்டாளம் அருமையோ அருமை பா. வாழ்த்துகள். சண்டி மஹாராணி நன்றாகவே வருகை கொடுத்திருக்கிறாள்.
கொலு,சுண்டல்,புட்டு எல்லாமே நன்றாக உள்ளது டீச்சர்:))))
கொலுவுக்கு வந்து சுண்டல், புட்டு சாப்பிட்டாச்சு. அருமை
உங்கள் கொலுவைப் பார்த்துவிட்டு நீங்கள் அளித்த சுண்டல்,புட்டு சாப்பிட்டு விட்டோம்.
கோபல் சார் பாட்டு பாடுகிறார் போல!
பாடி முடிச்சு கோபால் சார் சுண்டல்க்கு வெயிட் பண்ணுவது போலவே போச் குடுக்குறாரு:-)))
நல்லாருக்கு டீச்சர் கொலு. 3 படி நிச்சயம், ஐந்து படி லட்சியம்னு இருந்திருக்கீங்க. இப்ப லட்சியமே நிறைவேறிடுச்சு:-))))
அட்லீஸ்ட் சுண்டலுக்காவது வந்துடலாம்.. :(
கொலு அழகு. சுண்டலுக்கும் புட்டுக்கும் நன்றி:)!
சுண்டலும், மஞ்சள்குங்குமமும் எடுத்துக்கிட்டோம். கோபால் அண்ணா என்ன ராகத்தில் பாட்டு பாடறாங்கன்னு சொல்லலியே :-)))).
இந்த ஜிக்குஜூவின் போக்கே சரியில்ல.. கொலு பார்க்க வந்தவங்களுக்கு சுண்டல் கொடுக்க வேண்டாமோ!! மேற்பார்வை பார்த்த களைப்பில் ரெஸ்ட் எடுக்கப்போயிட்டாப்ல இருக்கு. கொஞ்சம் கண்டிச்சு வையுங்க :-)))))))))))))
\\கோபால் அண்ணா என்ன ராகத்தில் பாட்டு பாடறாங்கன்னு சொல்லலியே :-)))).\\
வேற என்ன ஒரு தலை ராகம் தான்:-)))
கடைசி போட்டோவுக்கு முந்தின போட்டோல ஒரு பெரிய பொம்மை உக்காந்திருக்கே.. அது பற்றிய டீடெயில் எதுவும் இதுல இல்லையே..?
ஒருவேளை டீச்சர் மறந்திட்டாங்களோ..?
கொலு அருமை. சுண்டல் & புட்டு போட்டோவில் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவரின் முகபாவம்(கேமரா நைவேத்யத்தை சீக்கிரம் முடிங்க, நான் சாப்டுட்டு ஆபீஸ் போகணும் அப்படின்றா மாதிரி) அருமை. :)
கொலு அருமையாக இருக்கிறது. அழகோ அழகு. பொம்மைகளை ரசித்தேன்.
போர் அடிட்சிடுன்னா உங்க தளத்திருக்கு வருவேன் . வெளிநாடெல்லாம் சுற்றி பார்துத்து ஹாப்பியா கிளம்புவேன் . இன்று கொலு . ஆஹா! அருமை படிகள் & பொம்மைகள் .
கடைசியில் புட்டு படம் பார்த்தேன் . ஆனா சாப்பிடதான் முடியல!
அருமை நன்றி துளசி டீச்சர் !
சண்டியை தர்சித்தோம்.
சுண்டலும் புட்டும் சுவைத்தன.
வாங்க நன்மனம்.
வரவுக்கு நன்றி.
வாங்க ஜோதிஜி.
பாசப்படிகளை மிதிச்சு ஏறிக்கிட்டேதான் இருக்கோம். மனுஷர் அசரலை பாருங்க:-)))))
வாங்க மேனகா.
கொலுப்படி அமைப்பதை முந்தியே போட்ட நினைவு இருக்கேப்பா.
தேடிப்பார்த்து லிங்கறேன்.
ரொம்ப சுலபமா ஒரு வகை இருக்கு. ரங்க்ஸ்கிட்டே பொறுப்பை ஒப்படைச்சு எத்தனை படிகள்ன்னு சொல்லிடணும்.
இடைக்கிடையே நாம் அந்த அறைக்குப்போய் கொலுப்படி கட்டும்போது இது சரியில்லை அது சரியில்லைன்னு புலம்பணும்.
எண்ட் ரிஸல்ட் சூப்பரா இருக்கும்:-)
என்னங்க ஜோதிஜி,
மங்கையர்க்கு ஒன்பதுநாள் நவராத்திரின்னு சொல்லிக்கிட்டு இருக்கேன்......... நீங்க காளையர்க்கு ஓர் இரவு சிவராத்திரின்னு கொசுவத்தி ஏத்துனா எப்படி!!!!
வாங்க சிந்து.
அட.... ரவா லட்டை ஏங்க ஞாபகப்படுத்துறீங்க? செஞ்சுருவோம்.
மேனகாவைக் கூப்புடுங்க முதலில்:-)
வாங்க கயலு.
ஓசைப்படாமல் வந்து போயிருக்கீங்க!!!!
சீக்கிரம் உங்கூட்டுக் கொலுவைப் பதியுங்க. நானும் வரணும்:-)
வாங்க சினிமா பைத்தியம்.
சாமி கும்பிடாதது ஒரு பிரச்சனையா என்ன? நீங்க தாராளமா சுண்டல் வாங்கிக்க வரலாம்.
வாங்க வல்லி.
கேஸட் டேப்ஸ் எல்லாம் நியூஸிக்கு வச்சுருக்கேன். அங்கே அப்படி மாடர்னாத்தான் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை வச்சுக் கொலுப்படி கட்டுவோம்:-))))))
கொலுவுக்கு வருகைதந்ததுக்கு நன்றிப்பா.
பதிவர் வீட்டு கொலுவுக்கு எழுத்தாளர்கள் சப்போர்ட் இருக்காதா:-)))))
வாங்க சுமதி.
வருகைக்கு நன்றிப்பா.
வாங்க புதுகைத் தென்றல்.
ஒரு பாட்டுப் பாடி இருக்கலாம் நீங்க!!!
வாங்க கோமதி அரசு.
(பிரசாதத்திடமிருந்து ) 'ப்ரோச்சே வாரு எவருரா 'ன்னு பாடறார்:-)))))
வருகைக்கு நன்றிங்க.
வாங்க அபி அப்பா.
உங்களொடு பேசுனதாலே ரெண்டு படி கூடிப்போச்சு:-)))))
லட்சியத்தைக் 'கோட்டை' விடலை பாருங்க:-)
வாங்க இளா.
ரொம்ப நாளா ஆளையே காணோமே!
நவராத்திரிக்காவது வந்தீங்களேன்னு மகிழ்ச்சி.
வாங்க ராமலக்ஷ்மி.
நீங்க வந்தது ரொம்ப மகிழ்ச்சியா இருக்குப்பா.
வாங்க அமைதிச்சாரல்.
அப்பா பாடறதைக்கேட்டு, ஓடிப்போய் ஸ்டீரியோ மேலே ஏறி உக்காந்து எம் எஸ் அம்மாவின் சி டியை போட்டுக் கேக்கறான்ப்பா:-))))
எல்லாம் ராகமாலிகாதான் கோபால் பாடுவார்:-)
அபி அப்பா.
இருதலை ராகமா ஆகியே வருசம் 36 ஆச்சு!
வாங்க உண்மைத்தமிழன்.
நீயும் பொம்மை நானும் பொம்மை நினைச்சுப் பார்த்தா எல்லாம் பொம்மைன்னு 'பெரிய பொம்மை' பாடுவது உங்களுக்கு கேக்கலையா? :-))))
வாங்க லக்ஷ்மி.
உங்களுக்குக் 'கனி' இருக்கக் கொலு எதுக்குன்னு இருக்குமே!!!!
கொலுவுக்கு முதல் விஸிட்டரா இல்லாம அவரும் பதிவுலே பார்த்துட்டு வீட்டுக்கு வந்தார்:)
வாங்க டொக்டர் ஐயா.
நீங்க வந்து ரசிச்சது எனக்கு ரொம்பவே மகிழ்ச்சியா இருக்குதுங்க. நன்றி
வாங்க நரசிம்மரின் நாலாயிரம்.
புட்டு சாப்புட்டுட்டா அப்புறம் பாட முடியாது:-)))))
வாங்க மாதேவி.
வருகைக்கு நன்றிப்பா.
அழகான கொலுவைப்பார்த்து அருமையான பிரசாதம் சாப்பிட்ட திருப்தி :)
புத்தரை சும்மா இருக்கவிட மாட்டீங்க போலிருக்கே!! :-)
44 வந்துடுச்சே...சுண்டல் கிடைக்குமா!!??
மேடம். லேட்டாவந்துட்டேன்.. சுண்டல் ஏதும் பாக்கி இருக்கா? அழகான புகைப் படங்கள். கொலுவில் கலந்து கொண்ட திருப்ததி..
super gollu!!!
Fantastic Gollu!!
அன்பு துளசி,கலப்பை சரிவரவில்லை.அழகி கைகொடுக்க அடித்தது தமிழ்.பத்மாசூரி.
டீச்சர்!உண்மை தமிழன் வீட்டுக்குப் போனா கொலு துளசி டீச்சர் வீட்டில்ன்னு இங்கே கைய காண்பிச்சுட்டார்.
அவர்கிட்ட என்ன வத்தி வச்சேன்ன்னு ஒரு எட்டுப் போய் பார்த்துட்டு வாங்க.
போட்டோ சூப்பர். போட்டோக்களுக்கு உங்க விளக்கம் சூப்பர்.
துளசிதளம், இந்தப் பேரில் ஆரம்பிக்கும் தியாகராஜர் கிருத்தி ஒன்று உள்ளது. துளசி தளமுளசே என்று ஆரம்பிக்கும். உன்னால் முடியும் தம்பி படத்தில் கூட வரும்.ஜேசுதாஸ் பாடியது.
வாங்க சுந்தரா.
வருகைக்கு நன்றி.
ஒரு பாட்டுப் பாடி இருக்கலாமுல்லே?
வாங்க குமார்.
அவர்பாட்டுக்குச் சொல்லிட்டுப் போயிட்டார் 'ஆசையை துற'ன்னு. யாராலே ஆகுது?
அதான் ஆசைகளுக்கு மத்தியில் அவரையும் கொண்டு வச்சுட்டேன்!
வாங்க கோபி.
'144' ஆனாலும் சரி. சுடச்சுட சுண்டல் உண்டு:-)
வாங்க மோகன் ஜி.
நம்ம சுண்டல் அக்ஷ்யபாத்திரத்தில் இருக்கு.அள்ள அள்ளக் குறையாது:-)
வாங்க Chelas.
அது என்ன மாடு மிதான்னு போட்டுட்டீங்க!!!
என் பொண்ணு பெயரும் மதுமிதாதான்.
மது என்பதை சில வெள்ளைக்காரப்பசங்க நீட்டி முழக்கி மாடு, மேடு,ன்னெல்லாம் கூப்புடுவாங்க ஆரம்ப காலத்தில்.
வாங்க கீதா6.
வருகைக்கு நன்றி. சீக்கிரம் உங்க வீட்டுக்கொலுவின் படத்தைப் பதிவில் போடுங்க. வந்து பார்க்கணும்.
வாங்க பத்மாசூரி.
அழகி ஆபத்பாந்தவளா இருக்காளே!!!!!
பேஷ் பேஷ். இனிமேல் தங்க்லீஷ் இல்லை. ஜாலியா தமிழில் தட்டுங்க.
வாங்க ராஜநடராஜன்.
உ.த. வீட்டில் பார்த்தேன்.
கோவில் விஸிட்களில் கிடைச்ச புண்ணியத்தையெல்லாம் அப்பப்ப நம்ம மக்களுக்குப் பகிர்ந்து கொடுத்துக்கிட்டே போறதுதான் வழக்கமாக்கும்.
அம்மன் ஆட ஆரம்பிச்சா அப்புறம் மலையேறுவது கஷ்டம்:-)
வாங்க கோபி ராமமூர்த்தி.
நேரம் கிடைக்கும்போது இதைப் பாருங்க. சந்தோஷமுகா பூஜிஞ்சு....
http://thulasidhalam.blogspot.com/2009/05/2009-24.html
வருகைக்கு நன்றி.
ஆஹா!!!அழகான கொலு, அழகான பதிவு. வாழ்த்துக்கள் துளசி அம்மா.
அன்புடன் மங்கை
வாங்க மங்கை.
கொலுவுக்கு வந்ததுக்கு நன்றிப்பா.
அக்கா, நல்லாருக்கீங்களா? ரொம்ப நாளாச்சு.
க்ரியேட்டிவ் கொலு!!
ஹ்ம்ம்ம்.. கப்பகிழங்கு புட்டு. தாளிக்கும்போது உளுந்து கொஞ்சமதிகமா விட்டு சாப்பிட்டா.....அடடா!!!
வாங்க தஞ்சாவூரான்.
நலமா? ரொம்ப நாளைக்கு ரொம்ப நாளு!!!!! செட்டில் ஆகிட்டீங்களா?
நான் இனிப்புப் புட்டு செஞ்சுருந்தேன். இன்னும் ரெண்டு கிழங்கு கிடக்கு. ஒருநாள் காரப்புட்டு செஞ்சுரணும் நிறைய உளுந்து தாளிச்சு:-)
Post a Comment