Monday, October 18, 2010

புல்புல்தாரா

எப்படிங்க இதுக்கு இப்படிப் பெயர் வச்சாங்க!!! வடக்கர்கள் வச்சதா இருக்குமோ? எட்டாவது நாள் நிகழ்ச்சியா 'சுப்ரவீணா'ன்னு இருக்கேன்னு போனவ, அங்கே இதை வாசிக்கப்போகும் நபரைக்கண்டு அதிசயிச்சுத்தான் போனேன். கோவிந்தராஜன் அவர்களை ஒரு மூணு மாசத்துக்கு முன்னே இதே கோவிலில்தான் சந்திச்சேன். கணினி வேலை. சொந்த பிஸினெஸ். வெப்சைட் கூட பண்ணித் தர்றார் என்ற அளவில்தான் தெரியும். இன்னிக்குத்தான் பூனைக்குட்டி வெளியில் வந்தது!


வாதாபி கணபதே,

பண்டுரீத்தி கோலு

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே

அலைபாயுதே

ஆயர்பாடி மாளிகையில்

செத்தி மந்தாரம் துளசி

என்ன தவம் செய்தனை

ஹரிவராசனம்
இப்படி எல்லாமே தெரிஞ்ச பாட்டு என்றதால் அப்படியே ஒன்றிப்போக முடிஞ்சது. கோவிலின் ஆஸ்தான தப்லா வித்வான் ஈஸ்வரன் வழக்கம்போல் ஜமாய்க்க, சண்டிகர் நகரின் ஒரே மிருதங்கக் கலைஞர் கார்த்திக் இன்னொரு பக்க வாத்தியமா வாசிக்கக் கச்சேரி களை கட்டக் கேட்பானேன்!!!

அருமையான வாசிப்பு. அப்படியே கொசுவத்தியைப் பத்தவச்சுருச்சு. எங்க அப்பா புல்புல்தாரா வாசிப்பார். வயலினும் ஹார்மோனியமும் கூட வாசிப்பார். ஆனால் எதையுமே எனக்குத்தான் கத்துக்க வாய்க்கலை:(

இடைக்கிடையில் வளரும் கலைஞர்களா, கோவிந்தராஜன் அவர்களின் மகன்( பெயர் நினைவில்லை) 'கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்' பாட்டையும். சகோதரிகள் ரம்யா & ராதா ராஜசேகர், 'ஸ்ரீமன் நாராயணா, மாணிக்க வீணை ஏந்தும் பாடல்களையும் ஷ்ரத்தா என்ற சின்னப்பொண் ஒரு ஹிந்தி பாட்டையும் பாடுனாங்க.

நம்ம கோவிந்தராஜன் ஜி, நாஸாவுக்காக ஒரு சங்கதியை வடிவமைக்கும் ப்ரோக்ராம் அனுப்பிக்கொடுக்க, அதை அவுங்க தெரிவு செஞ்சு அங்கே அழைச்சுருக்காங்க. அநேகமா அடுத்த மாசம் அவர் அமெரிக்கா போய்வருவார். என்ன ஏதுன்னு விளக்கம் இன்னொருநாள் கேட்டுச் சொல்றேன் உங்களுக்கு. கோயில்விழாவில் அதுக்கான சந்தர்ப்பம் வாய்க்கலை.

சனிக்கிழமை, சரஸ்வதி பூஜையை சாயந்திரம் செஞ்சுக்கலாமுன்னு காலையில் கிளம்பி PVR தியேட்டருக்குப்போனோம். இதுமாதிரி ஒன்பது மணிக் காலைக் காட்சிக்குப்போய் வருசம் 30 ஆகுது. வட இந்தியாவில் தமிழ்ப்படம் தியேட்டரில் வருதுன்னா.... போனாப் போகட்டுமுன்னு , ஞாயிறுகளில் காலைக் காட்சியா ஒரே ஒரு ஷோ போடுவாங்க அப்பெல்லாம். பூனா வாழ்க்கையில் அடிச்சுப்பிடிச்சு எட்டரை மணி ஆட்டத்துக்கு ஓடுவோம்.

சண்டிகர் தமிழ் மன்றத்துக்கு ஸோலார் பேனல்ஸ் போட்ட வகையில் ஆன செலவைச்சரிக்கட்ட 'எந்திரன்' (தமிழ்) ஏற்பாடாகி இருந்துச்சு. வெள்ளிக்கிழமை இங்கே அரசு விடுமுறை என்றபடியால் வெள்ளி, சனி, ஞாயிறுன்னு மூணு நாட்கள் மூணு ஷோக்கள். கோபாலோட வேலை வேற மாநிலம் என்றதால் வெள்ளிக்கிழமை வேலைக்குப் போயிட்டார்.

நல்ல கூட்டம்தான். அப்பப்ப விஸிலடிச்ச அம்பதாயிரம் தமிழர்களில் ஒரு பகுதியினரைக் கண்டேன். ஏற்கெனவே ஹிந்தி ரோபோ ஓடிக்கிட்டு இருக்கு இங்கே. ஒருவழியா நானும் எந்திரன் பார்த்துட்டேன். ஒலி அமைப்பு நல்லாவே இருந்துச்சு. சென்னையில் காதைப்பிளக்கும் வால்யூமில் வைக்கிறது மாதிரி இல்லை. ஆனால் பாட்டு ஸீன்களில் கூடுதல் சத்தம். காதை அடைச்சுக்கிட்டு உக்கார்ந்ததுலே லேசாக் கண்ணயர்ந்துட்டேன் போல!

படம் பார்த்தபிறகு நம்மாட்களின் விமரிசனங்களைப் படிச்சப்பத்தான் அரிமான்னு ஒரு பாட்டு வந்துச்சுன்னு தெரிஞ்சுக்கிட்டேன். படத்தின் பிற்பாதிதான் பிடிச்சது. வில்லன் ரஜினி நல்லாச் செஞ்சுருந்தார்.

மாலையில் கோவிலில் இன்னிக்கு ஒரு ஸ்பெஷல் விசேஷம்! சென்னைவாசிகளுக்கு நினைவிருக்குமோ என்னவோ...... ரெண்டு வருசத்துக்கு முந்தி, ஹனுமன் ரதத்தை இழுத்துக்கொண்டு பட்டதாரி வாலிபர் ஒருவர் உலக சமாதானத்துக்காகப் பாதயாத்திரை செய்கிறார்ன்னு செய்திகளில் வெளிவந்துருக்கு. தமிழ் மலையாளம்,. தெலுங்கு நாளிதழ்களின் பேப்பர் கட்டிங் எல்லாம் அழகா ஒரு ஃபோல்டரில் போட்டு வச்சுருப்பதைப் பார்த்தேன்.

'ஜெய் சீதாராம்' என்ற கோஷத்துடன் நம்மை வரவேற்ற ரமேஷ் அவர்களுக்கு நாப்பது வயசு. ஒடிசலான தேகம். ( இருக்காதா பின்னே...தினம் நாப்பது கிலோமீட்டர் நடையாச்சே. அதுவும் 800 கிலோ எடை உள்ள ரதத்தைக் கையால் இழுத்துக்கிட்டுப்போறார்.)

போனவருசம் ஃபிப்ரவரி 7 ஆம்தேதி திருப்பதியில் இருந்து கிளம்பி ஜம்மு-காஷ்மீர் போய், அங்கிருந்து கிளம்பி வைஷ்ணவோதேவியின் தரிசனம் முடிச்சுக்கிட்டு இங்கே சண்டிகர் வந்துருக்கார். நவராத்ரி ஆரம்பதினத்துக்கு முதல்நாள் நம்ம கோவிலுக்குப் போனப்ப, கோவிலின் உள் வளாகத்தில் (ஏர்போர்ஸ் டெம்பிள் காம்ப்ளெக்ஸ்) ஒரு தேர் நிற்குதே....ன்னு கிட்டப்போய்ப் பார்த்தால்..... தங்கமா ஜொலிக்கும் ஹனுமன் தாமரை பீடத்தில் அமர்ந்துருந்தார். என்ன விவரமுன்னு விசாரிச்சதில் இப்பத்தான் பத்து நிமிஷமாச்சு. இழுத்துவந்தவர் குளிக்கப் போயிருக்காருன்னு சொன்னாங்க. அநேகமா மறுநாள் கிளம்பிருவாராம். நமக்கு இன்னிக்குக் கோவிலுக்கு வரத்தோணுச்சேன்னும் அட்லீஸ்ட் நேயுடுவின் தரிசனம் கிடைச்சதேன்னும் திருப்தியா இருந்துச்சு.

மறுநாள் மாலையில் ரதம் அங்கேயே இருக்கேன்னு விசாரிச்சதில், நவராத்ரி நாட்களில் இங்கே இருந்துட்டுப் போங்கன்னு விண்ணப்பிச்சதில் சரின்னுட்டாராம். தினம்தினம் நமக்குத் தரிசனம் ஆகிக்கிட்டு இருந்துச்சு. நிறைய பக்தர்கள் இல்லாத தருணங்களில் சீதாராம் ரமேஷ் அவர்களிடம் பேச்சுக்கொடுத்து விவரங்கள் சேகரிச்சுக்கிட்டு இருந்தேன். (உங்களுக்குச் சொல்லும் கடமை உணர்ச்சி இருக்கே!)
108 கிலோ எடையில் 108 உலோகங்களின் கலவைகள் கொண்டு தயாரிச்ச விக்கிரகம். ரெண்டரை அடி உசரம். கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்கார். அப்போ எழுபதாயிரம் ரூ செலவாச்சாம். எப்போ? ஒரு நாலைஞ்சு வருசம் முன்பு. ரமேஷ் பி.டெக் படிப்பை முடிச்சுட்டு துபாயில் வேலை செஞ்சுக்கிட்டு இருந்தவர். இவருடைய தந்தை திருமலைதிருப்பதி கோவிலில் பட்டர். ரமேஷுக்கு திருமலைக்கு அருகே ஜாபாலி கோவில் பக்கம் ஒரு காட்டில் சின்னதா ஹனுமன் சிலை ஒன்னு கிடைச்சுருக்கு. அதைக் கண்டெடுத்ததில் இருந்து ஏதோ சக்தி இவரை ஆட்கொண்டதுபோல் ஹனுமன் பக்தரா மாறிட்டார். ஏற்கெனவே கோவில் ஆன்மீகமுன்னு பின்புலம் இருந்ததில் வெறும் பக்தி, அதீத பக்தியா வளர்ந்து விஸ்வரூம் அடைஞ்சுருக்கு. திடீர்னு துபாய் வேலையை விட்டுட்டு ஹனுமனுக்கே தன்னைக் கொடுத்துட்டார். கண்ணாடிப்பெட்டிக்கு முன்புறம் இன்னும் சில சின்ன அளவு விக்கிரகங்கள். இதுலே இடக்கோடியில் இருப்பவர்தான் கிடைச்சவராம்.
அனுமனை எல்லோரும் தரிசிக்க ஏதுவாக் கொண்டுபோய்க் காட்டலாமுன்னு ஒரு எண்ணம் தோணியிருக்கு. ஒரு ரதம் செஞ்சுருக்கார். முதல்முறையா 2007 அக்டோபர் 21 கிளம்புனவர் தமிழ்நாடு முழுக்க ஊரூராப்போய், பின்னே கேரளா, ஆந்திரா, கர்நாடகான்னு முடிச்சு வடக்கே கிளம்பி எல்லா மாநிலங்களும் போயாச்சு. ரதம் அப்போ 600 கிலோ எடையா இருந்துருக்கு. யாரிடமும் கைநீட்டிக் காசு வாங்கறதைல்லை. உண்டியலில் பக்தர்கள் போடும் காணிக்கையை ரதத்தில் வச்சுருக்கும் ஜெனெரேட்டருக்கு எரிபொருள் வாங்கப் பயன்படுத்திக்கிறார். பிரசாதவகைகள் பழங்கள் முதலியவைகளை தினமும் வாங்கிவச்சு பக்தர்களுக்குப் பிரசாதமாக் கொடுத்துக்கிட்டே போறார். இதுவரை 8500 கிலோமீட்டர் நடை. காலில் பாதணிகள் போட்டுக்கறதில்லை. சூடான இடங்களில் வெறும்துணிகளைக் காலுக்குச் சுற்றிக்குவாராம். காலை அஞ்சு மணிக்கு எழுந்து பூஜையை முடிச்சு ஏழு மணிக்குக் கிளம்பிப் போய்க்கிட்டே இருப்பாராம். போகும் வழியில் ஊர்களில் கிடைச்ச இடத்தில் தங்குவார். சிலசமயம் ஹைவேயில் தாபாக்களில்கூட தங்கி இருக்காராம்.
இப்போ ரதத்தின் எடை 200 கிலோ கூடி இருக்கு. மேடுகளில் ஏறும்போது இழுக்கவே முடியாத சிரமத்துக்கிடையில் பிடி விட்டுப்போச்சுன்னா பின்னார் சரிஞ்சு விழும் அபாயமும், கீழே சரிவான பாதையில் இறங்கும்போது கனம் தாங்காமல் ஆளையே இழுத்துத்தள்ளும் விதம் வேகம் இருப்பதாலும் ஒரு மோட்டார்சைக்கிள் இஞ்சின் பொருத்தி ப்ரேக் வச்சுருக்கார். ஆகமொத்தம் இப்போ ரதம் 800 கிலோ! சின்னதா கார்களில் இருக்கும் ஸிடி ப்ளேயர் ஒன்னு பொருத்தி பஜனைப்பாடல்கள் மெல்லிய குரலில் ஓடிக்கிட்டே இருக்கு.

ஒருநாள் சீதாராம் ஜெய் சீதாராமுன்னு ஒரு பாட்டுப்போய்க்கிட்டு இருக்கு. ஒரு பெண் அங்கே நின்னு அது எந்த சினிமாப் பாட்டுன்னு ஸ்வாமிஜி ரமேஷைக் கேட்டுப் பிச்சுப்பிடுங்கறாங்க. எதுன்னு தெரியாதுன்றார் அவர். ஸிடியை வெளியே எடுத்துப்பார்த்துச் சொல்லுங்கறாங்க. அது எம்பி3 யில் யாரோ ரெக்கார்டு செஞ்சு யாத்திரையில் ஏதோ ஒரு ஊரில் பக்தர் ஒருவர் கொடுத்ததுன்னா கேட்டால்தானே?

கடைசியில் உங்க செல்ஃபோனைக் கொண்டு வாங்க. அதிலே ப்ளூடூத் இருந்தா ரெக்கார்டு செஞ்சு தரேன்னதும்தான் இடத்தைக் காலி பண்ணுனாங்க. மனிதரில் பலவகை!

நவராத்திரி கடைசி நாள் சனிக்கிழமையாவும் இருந்ததில் இன்னிக்கு நம்ம சண்டிகர் கார்த்திக் ஸ்வாமி கோவிலில் ஹனுமனுக்கு அபிஷேக ஆராதனைகள் செஞ்சு வால்மீகி ராமாயணத்தில் சுந்தரகாண்டம் படிக்க முடிவாகி இருந்துச்சு. பொதுவா வடக்கே அநேக இடங்களில் துளசிதாஸர் ராமாயணம்தான் புழக்கத்தில் இருக்காம். சண்டிகரில் முதல்முறையா வால்மீகி!

காலையில் அஞ்சு மணிக்கு பூஜைகள் தொடங்கும். ப்ரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர் எல்லாமே கோவிலில் பக்தர்களுக்காக ஏற்பாடாகி இருக்கு. அஞ்சு மணின்னதும் நாம் முழிச்ச முழியே சரி இல்லை. அஞ்சு முதல் ஆரம்பம் எப்ப வேணுமுன்னாலும் வாங்கன்னு ரிலாக்ஸ் செஞ்சார் நம்ம ராஜசேகர். மாலை மலர்களால் அபிஷேகம் நடக்கப்போகுது. 500 கிலோ பூக்கள் வேணுமுன்னு சொன்னாராம் சீதாராம் ரமேஷ்.
மாலை ஆறுமணிபோலக் கோவிலுக்குப் போனோம். அரங்க மேடையில் ஊஞ்சலில் கண்ணாடிப் பெட்டிக்குள்ளே இருந்து
சேவை சாதிக்கிறார் நேயுடு. அலங்காரம் பிரமாதமா இருக்கு. முன்னே தரையில் அந்த சின்ன விக்கிரகங்களின் வரிசை. ஒரு பெரிய சாளக்ராம். ஹனுமன் சாளக்ராமாம். முதல்முறையாப் பார்க்கிறேன்.
தட்டுத்தட்டா சீர் வரிசை வச்சதுபோல சாக்லேட் வகைகள் ஒரு பக்கம். அபிஷேகம்தான் பார்க்கக் கிடைக்கலை நமக்குன்ற ஆதங்கத்தில் காலையில் கண்ணாடிப்பெட்டிக்குள் இருந்து வெளியே எடுத்து அபிஷேகம் ஆச்சான்னு ஆவலா விசாரிச்சேன். ஊஹூம்.... பொட்டியைத் திறப்பதில்லையாம். அபிஷேகம் எல்லாம் கண்டெடுத்தவருக்குத்தானாம். அப்பதான் அந்தக் கதையும் கிடைச்சது. சொல்ல மறந்துட்டேனே....பெரிய 'கதை' ஒன்னும் வச்சுருக்கார் ரதவண்டி முகப்பில்.
காலையில் 7 மணிக்கு அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் முடிச்சு வால்மீகி ராமாயணம் படிக்க ஆரம்பிச்சு மூணரை மணிக்கு முடிச்சுருக்காங்க. கோவிலில் கொலு முன்னாடி ஒரு விரிப்பில் சாமந்திப்பூக்களாக் கொட்டிக்கிடக்கு. அதுலே இருந்து பக்கெட் பக்கெட்டா வாரி எடுத்து ஒரு பெரிய எவர்ஸில்வர் தொட்டியில் இதழ்களாப் பிச்சுப்போடும் வேலை ஆரம்பிச்சது. சின்னக்கைகள் ஏராளமா உதவிக்கு வந்தன. நம்ம கோபாலும் சாஸ்திரி என்ற அன்பரும் ( இவர்தான் நம்ம கோவிலில் விஷ்ணு சகஸ்ரநாமம் ஸ்பெஷலிஸ்ட்) பிள்ளைகளிடம் வேலை வாங்கிக்கிட்டு இருந்தாங்க. இன்றைய பூஜையின் முடிவில் பக்தர்கள் கைநிறைய வாரிவாரி மலராபிஷேகம் செய்யப்போறாங்களாம் குட்டி ஹனுமனுக்கு!
ஏழேகாலுக்குப் பஜனை ஆரம்பிச்சது. 'ராம் ராம் 'என்று உச்சத்தில் ஒலிக்க ஆரம்பிச்சதும் சாக்லேட்டுகளை வாரி கூட்டத்தில் இறைத்துக்கொண்டே ஆடறார் ரமேஷ்ஜி. பாட்டுகளின் நடுவே அந்த 'கதை'யைக் கையில் எடுத்துக்கொண்டு மேடைக்கும் தரைக்குமாகத் தாவிக்குதிச்சு அப்படி ஒரு ஆட்டம்.

எட்டுவரை இருந்து நிகழ்சிகளைப் பார்த்துட்டுக் கிளம்பிட்டோம் நாங்க.

பக்தியே ஒரு போதையா ஆகி இருக்கு! அதுலே மூழ்குனா வெளிவரமுடியாதபடி ஆகிரும் போல!
நவராத்திரி இன்றுடன் முடிஞ்சது. நாளைக்கு நம்ம வீட்டில் விஜயதசமி கொண்டாட்டம் இருக்கு. மறந்துடாதீங்க.......


16 comments:

said...

ஜெய்ய்ய்ய் ஆஞ்சனேயாஆஆஆஆ..:))

சூப்பர் பகிர்வு டீச்சர்.:)

said...

அருமையா இருக்கார் ஹனுமான்..விவரமெல்லாம் சூப்பர்..
நேத்திக்கு ராம்லீலா பாத்துட்டு
வரும்போது ஒரு
ஹனுமான் மாஸ்க் ம்.. வைக்கோல் உள்ளவைத்த தங்க கலர் கதையும் வாங்கிவந்திருக்கார் அண்ணாத்தை..

said...

நவராத்திரி பூஜை, எந்திரன்,ஆஞ்சனேயர் கதை என எல்லாம் கலந்த ஒரு பதிவு நல்லா இருக்கு டீச்சர்:))))

said...

புல்புல்தாரா எங்கள் அப்பாவும் நன்றாக வாசிப்பார். என்ன நினைவை எல்லாம் எழுப்பிவிடுகிறீர்கள் துளசி.
அனுமன்தாசருக்கு இத்தனை உறுதி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறதுப்பா.
அடுத்தபடியாக ராம்லீலா முடியும் படங்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

said...

சந்தனக்காப்பு அலங்காரம் ஜொலிக்குது.. கண்ணை எடுக்கவே முடியலை :-))

said...

\\பக்தியே ஒரு போதையா ஆகி இருக்கு! அதுலே மூழ்குனா வெளிவரமுடியாதபடி ஆகிரும் போல!\\

ஆகா...ஆகா.. தத்துவத்தை நோட் பண்ணிக்கிட்டேன டீச்சர் ;))

said...

வாங்க ஷங்கர்.

ஆஞ்சநேயன் அருள் அனைத்துப் பதிவர்களுக்கும் கிடைக்கட்டும்.

ஜெய் ஆஞ்சநேயா!!!!!

said...

வாங்க கயலு.

ஆஹா..... சீஸனல் பிஸினெஸ் இங்கேயும் நிறையப் பார்த்தேன். ராவணன் மாஸ்க் கூட இருந்துச்சு.

அண்ணாத்தையின் 'நேயர்' ட்ரெஸ் அப்பில் ஒரு படம் போடுங்க. நேயர் விருப்பம் இது:-))))

said...

வாங்க சுமதி.

முற்றிலும் புதிய ஊரில் இதுவும் நமக்குக் கிடைச்ச ஒரு புது அனுபவம்தான்:-)))

said...

வாங்க வல்லி.

இன்னிக்குக் கொலு எடுத்து வச்சதுலே நேரம் போயிருச்சு.

ராம்லீலா வந்துக்கிட்டே இருக்குப்பா.

ஏகப்பட்ட கொசுவத்தி இருக்குப்பா!!

ஹோல்ஸேல் நாந்தான்:-))))

said...

வாங்க அமைதிச்சாரல்.

நல்ல அலங்காரம் செஞ்சாங்கப்பா.

தள்ளு முள்ளு ஒன்னும் இல்லாம, மனசுக்கு திருப்தியான தரிசனம் கிடைச்சது.

said...

வாங்க கோபி.

பாயிண்டைப் பிடிச்சதுக்கு க்ரேஸ் மார்க் பத்து:-)

said...

சின்ன ராம் ..ராம் :)

அம்மன் அலங்காரம் சூப்பர்.

said...

Dear Author
well. Your bulbul thara episode is amazingly.thanx for your neat penned.This, takes me a tremendous
memories which come back in flashes.In 1965 my dad bought for me one bulbul thara from Hydrabad.
It was used to play lot of tamil songs,like 'Venila mugam kungumam perum..' with the help of key-notes.Now that the memories are revealing.Thank u..

said...

வாங்க மாதேவி.

அம்மன் அலங்காரம், அன்னிக்கு அரிசி மாவு!!!!

said...

வாங்க சிவஷன்முகம்.

புல்புல்தாரா, 'வாசிப்பு' பலருக்கு(ம்) பழைய நினைவுகளை 'மீட்டி' இருக்கே!!!!!