மழையான மழை அடிச்சுப் பேய்ஞ்சு ஒரே வெள்ளக்காடா இருக்கு. பார்க்கவந்த பெரிய ஆளைப் பார்க்க முடியலை. பொறுத்துருந்து தண்ணீர் வற்றினதும் போய்ப் பார்க்கணும். அதுவரை எதிரில் இருக்கும் மந்திரகிரி மலையில் தங்கி இருந்தாகணும். வேற வழி இல்லே. காத்திருக்கலாம்...........
மனசில் உறுதியோடு காத்திருந்தார் கலியன் என்ற திருமங்கை ஆழ்வார். பலநாட்களுப்பின் வெள்ளம் வடிஞ்சது. இதுக்கே ஆறுமாசம் ஆகி இருந்துச்சுன்னா பாருங்க! இந்த மலையில் இருந்து அந்த மலைக்குப்போகணுமே! மலையில் இருந்து இறங்கி ஒரு ரெட்டைமாட்டுவண்டியில் ஏறி அந்த மலையடிவாரத்துக்குப்போய்ச் சேர்ந்தார்னு வச்சுக்கணும். அந்த மாட்டுவண்டி இதுதான்னு நான் சாதிப்பேன் ஆமாம்;-))))
ஓடோடிப்போய் சந்நிதி வாசலில் நின்ற திருமங்கை ஆழ்வாருக்குத் தரிசனம் கொடுத்தான் அந்தப் பெரிய ஆள்! எப்படி? 'நின்ற, இருந்த, கிடந்த, நடந்த'ன்னு நாலு வகை! காத்திருந்தது வீண் போகலை.
நான் சென்னைவாசியா இருந்த காலங்களில் பலமுறை பஸ் பிடிச்சுப்போய் வந்த இடம்தான். கோபால் பார்க்கலைன்றதால் போகலாமேன்னு கிளம்பினோம். ஜிஎஸ்டி ரோடில் பல்லாவரம் தாண்டி கொஞ்சதூரம் போய் வலதுபக்கம் திரும்பணும் என்றது மட்டும் நினைவிருந்தது.
இப்ப என்னடான்னா....சென்னையே மாறிப்போச்சு. வழியெங்கும் மேம்பால வேலைக்காகத் தூண்கள் துண்டுதுண்டா நிக்க களேபரமா இருக்கு சாலை. நம்ம ட்ரைவரோ, வழி தெரியாதுன்னு முழிச்சார். வலதுபக்கம் திரும்பும் இடத்தை ஏற்கெனவே கோட்டைவிட்டாச்சு. க்ரோம்பேட்டையைச் சமீபிக்கிறோம். வாய் எதுக்கு இருக்கு? கேட்டுப்பார்ன்னு ஒரு இடத்தில் கேட்டு வந்தவழியில் திரும்பி லெஃப்ட் எடுத்து திருநீர்மலை ரோடைப் பிடிச்சோம். வழி நெடுக சென்னையின் விரிவாக்கம். ஒரு காலத்துலே ஆள் அரவமே இல்லாத சாலை இது!
தூரத்திலே இருந்தே மலைக்கோவில் தெரிஞ்சது. 42 அடி உசரமுள்ள மூடி வச்சத் தேரைக் கடந்து வலப்புறம் திரும்பினால் டபுள் லாட்டரி அடிச்சதுபோல கீழே ஒரு கோவில் மலை மேலே ஒரு கோவில். கீழிருக்கும் கோவிலில் ஐய்யப்பப் பக்தர்களின் கூட்டம். சபரிமலைக்குப் போகுமுன் நடத்தும் பூஜை. முதல்லே மலைக்குப்போய் வந்துடலாம். அதுக்குள்ளே கீழே கூட்டம் குறைஞ்சுருமுன்னு மலை ஏற ஆரம்பிச்சோம். நாலுமணிக்குக் கோவில் திறந்துருவாங்க. இப்போ மதியம் மூணரை. வெய்யில் கொஞ்சம் கடுமையைக் குறைச்சு நமக்குப் பேருதவி செஞ்சது.
பாரதப்போர் முடிஞ்சு ஏகப்பட்ட உயிர்களை 'மேலே' அனுப்பிய பாவம் போக்க , அர்ஜுனன் தவம் செய்ய வந்த இடம் இது. வரும்போதும் காண்டீபத்தைத் தூக்கி வந்துருப்பான் போல! காண்டீபன் வந்த அடையாளமா இதுக்கு காண்டீப வனம் என்ற பெயர் வந்துருக்கு. இங்கே இருக்கும் மலைதான் தோதாத்ரி. தோதா + அத்ரி. இந்த தோதா என்பது தோயா என்பதன் மரூவு. தோயா என்றால் தண்ணீர். அத்ரி என்றால் மலை. தண்ணீர் சூழ்ந்த மலை(ப்பகுதி). நீர்மலை!!
இப்போது நடக்கும் இந்த யுகங்களுக்கு முன்னால் இருந்த மூன்று யுகங்களில் தேவர்களும் ரிஷிகளும் எக்கச்சக்கமா யாகங்கள் நடத்தி அக்னிபகவானுக்கு ஆஹுதி கூடிப்போய் வயிறு மந்தமாப்போச்சு. ஒரே புளியேப்பம். நிறுத்தாம மேலேமேலே உள்ளே தள்ளுனா இந்த கதிதான். ஹாஜ்மூலா மார்க்கெட்டுக்கு வராத காலம். பெருமாளிடம் போய் முறையிட்டார். காண்டீபவனத்தில் போய் பச்சிலை மூலிகைகள் எல்லாம் எடுத்துத் தின்னு. வயிறு சரியாகுமுன்னு அனுப்புனார். சீக்கிரம் உடம்பு குணமாகணுமேன்னு ஒரு இலைவிடாமப் பிடுங்கித்தின்னு இடம் பொட்டல் காடாச்சு. வெப்பாலை மரங்கள் மட்டுமே பாக்கியா அங்கங்கே நிக்குதாம். இதுதான் இங்கே ஸ்தல விருட்சமும் கூட. சளி காய்ச்சலுக்கு நல்ல மருந்தாம் இது! வனத்தில் உஷ்ணம் தகிக்க ஆரம்பிச்சு அங்கே தவத்தில் இருக்கும் ரிஷி முனிவர்களுக்கு நிலை கொள்ளலை. நரகத்தில் வறுத்து எடுப்பதுபோல ............. அவுங்களும் அந்த நாராயணனிடத்தில் முறையீடு செஞ்சதும், கூப்பிட்டார் வருணனை. ஆர்டர் கிடைச்சதும் பொழிஞ்சு தள்ளினான். மலையே மூழ்கும் அளவுக்கு மழை!
காண்டவ வனத்தில் தோயாத்ரி மலைவாசல்னு அலங்கார நுழைவு வாசல். நல்ல அகலமான படிக்கட்டுகள் . ஒரே சீரான உயரத்தில் ஏற்றம். 200 படிகள். பாதி தூரத்தில் வலப்பக்கம் பிரியும் இடத்தில் நாலுபடி இறங்கி எட்டிப்பார்த்தால் சின்னதா ஆஞ்சநேயர் சந்நிதி ஒன்னு தனியா! ஒரு நமஸ்காரம் செஞ்சுட்டு திரும்பி மேலே ஏற ஏறக் கண்ணைச் சுழட்டுனா சுத்துப்புறம் எல்லாம் பச்சைப்பசேலுன்னு இருக்கு. அங்கங்கே புதுசா முளைச்சுருக்கும் கட்டிடங்கள். தொலைவிலே ஒரு பெரிய ஏரி. படம் பாருங்க. ஆடூ'ஸ் ஐ வியூ!
கோவில் முகப்புக்குப்போய்ச் சேர்ந்தோம். மூணுநிலைக் கோபுரமும் முன்மண்டபமுமா கச்சிதமான சைஸ். நாலு தூண்களிலும் இருக்கும் குதிரைவீரன்களின் சிலைக்கு வெள்ளையடிச்சு வச்சுருக்காங்க:( இது கல்கி மண்டபம். நம்ம கல்கி சதாசிவம் & எம் எஸ் சுப்புலக்ஷ்மி அம்மா தம்பதியர் கைங்கர்யம். அவுங்க கல்யாணம் இந்தக் கோவிலில்தான் நடந்துச்சு.
உள்ளே நுழைஞ்சால் வெளிப்பிரகாரம். இடப்பக்கம் ஆதிசேஷனுக்குத் தனிச்சந்நிதி. வலப்பக்கம் கொடிமரம் கடந்து ஒரு பத்துப்படிக்கட்டுகள். ஏறிப்போனால் படியின் முடிவில் நடுவாந்திரமா, பெரியதிருவடி சின்னதா நிக்கும் சந்நிதி. அவருக்கு நேரெதிரா கருவறையில் ரங்கநாதர் தாய்ச்சுண்டு இருக்கார். முகம் தெற்கு நோக்கி இருக்கு. முன்மண்டபம் கடந்து ரங்கனைத் தரிசிக்க ஓடறோம். கருவறைப்படிக்கட்டின் ரெண்டு பக்கமும் பாவை விளக்கேந்தும் பழங்காலப்பெண்டிர்! புடவை கட்டி இருக்கும் நேர்த்தியும் கழுத்து, கால் அணிகள் எல்லாம் 'புதுவிதமா'ப் பழயகால ஸ்டைலா இருக்கு. என்னமாதிரி நெக்லெஸ்!!!! ஆண்ட்டீக்...........
முன்மண்டபத்துலே நிறையக் கற்றூண்கள். சிற்ப வேலைப்பாடுகளுடன் இருக்கே.......ஜொலிக்க வேண்டாமோ? ஊஹூம்.....இஷ்டத்துக்குப் பெயிண்ட் அடிச்சு வச்சு மூக்கும்முழியும் தெரியாம இதைவிட மொண்ணையா வச்சுருக்க முடியவே முடியாது யாராலேயும்:( என்ன ஒரு கோராமை.........
பெருமாள் இங்கே ஸ்வயம்பு(வாம்). இது எட்டு ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரங்களில் ஒன்னு. மற்ற ஏழும் எங்கே? ஸ்ரீரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருப்பதி, ஸாளக்ராமம், நைமிசாரண்யம், புஷ்கரம், பத்ரி. திருநீர்மலை சேர்த்தால் எட்டு.
அதனால் இங்கே மூலவருக்கு அபிஷேகம் இல்லையாம். தீண்டாத்திருமேனி. பாருங்களேன்...... தண்ணிக்கு நடுவிலே இருந்துக்கிட்டுத் தண்ணி ஆகாதுன்னா எப்படி!!!
கார்த்திகை மாசம் பௌர்ணமி தினத்தில் தைலக்காப்பு உண்டு. சாம்பிராணித் தைலம் மட்டும் பூசிக்குவார்.
பெருமாளின் பலவித சயனக்கோலங்களில் இங்கே மாணிக்க சயனம். மற்றதெல்லாம் என்னென்னன்னு மண்டையை உடைச்சுக்காதீங்க. கிடைச்ச விவரத்தை நானே சொல்லிடவா?
1. ஜல சயனம் - திருப்பாற்கடல்
2. தல சயனம் - மல்லை
3. புஜங்க சயனம் (சேஷசயனம்) திருவரங்கம்
4. உத்தியோக/ உத்தான சயனம் - திருக்குடந்தை
5. வீர சயனம் --திருஎவ்வுள்ளூர்
6. போக சயனம் -திருச்சித்ரகூடம்(சிதம்பரம்)
7. தர்ப்ப சயனம் - திருப்புல்லாணி
8. பத்ர சயனம் (பத்ர எனில் ஆலமரத்து இலை)- ஸ்ரீவில்லிபுத்தூர்
9. மாணிக்க சயனம் - திருநீர்மலை
அப்புறம் அனந்தசயனம், சேஷசயனம், பாலசயனம் ப்ரதான சயனம், விட்டேத்தியா ஆகாசத்தைப் பார்த்துக்கிடக்கும் சயனம் (அடையார் அனந்தபத்மநாபன்) இப்படி 'கிடக்கும்' ஸ்டைல்களே ஏராளம்.
சயனங்களைப்பற்றி இன்னும் விவரம் தெரிஞ்சவுங்க உங்க விளக்கங்களைச் சொன்னால் நானும் தெரிஞ்சுக்குவேன்.
தாயார் ரங்கநாயகி தனிச்சந்நிதியில். சேவிச்சுக்கிட்டு உட்ப்ரகாரம் சுத்துனால் பால நரசிம்மர். இவரைச் 'சாந்த நரசிம்மர்'ன்னும் சொல்றாங்க. ஹிரண்யவதம் முடிச்சதும் கோபம் அடங்காம சிலிர்த்த உடலோடு நின்ன சிம்ஹத்தைக்கண்டு ப்ரஹலாதனுக்கு உள்ளூர நடுக்கம். பாலகன் முகத்தில் பயத்தைப் பார்த்ததும்...'ஐயோ! குழந்தையைப் பயப்பட வச்சுட்டேனே'ன்னு இரக்கம் தோணி, அவனுக்குச் சமமா, அவனுக்கேத்த சைஸில் தானும் குழந்தையா மாறி 'இருக்கார்'. கைகள்கூட ரெண்டே ரெண்டு. நல்ல சைக்காலஜி. குழந்தைகளுக்கு இன்னொரு குழந்தையுடன் விளையாடத்தானே விருப்பம் கூடுதல். அதனால்தானே ப்ளே ஸ்கூல்கள் எல்லாம் சக்கைப்போடு போடுது;-)
சுத்திக்கிட்டே அடுத்து கிழக்கே வந்தால் 'நடந்தானாக' உலகளந்தப் பெருமாள் சந்நிதி. கருவறையின் வெளிப்புறச் சுவரையொட்டியே இருக்கார் த்ரிவிக்ரமன். மகாபலியின் தலையில் மூணாவது அடி வச்சவர். வைகாசி மாசத் திருவோண நக்ஷத்திரத் தினத்தில் இவருக்குத் தனி உற்சவம்.
உற்சவமுன்னதும் நினைவுக்கு வருது. பள்ளிகொண்ட பரந்தாமனின் உற்சவமூர்த்தி, கீழே இருக்கும் கோவிலில் தனியறையில் இடம்பிடிச்சு இருக்கார்.. ஸ்வயம்புவுக்கு அபிஷேகம் இல்லாததால் அபிஷேகம், திருமஞ்சனமெல்லாம் உற்சவர் செஞ்சுக்கறார். கூடவே ஸ்ரீதேவி, பூதேவியர். ஆண்டாளம்மாவும் கூடவே இருப்பது விசேஷம். ஒரே ஜாலிதான் போங்க:-) சித்திரை மாசம் நடக்கும் திருவிழாவின்போது இவர் மலைக்குப்போய் மூலவருக்கு ஒரு 'ஹை' போட்டுட்டு வருவாராம்.
வெளிப்பிரகாரத்தில் ஒரு சுற்றுப்போய் சுத்துப்புறக் காட்சிகளையெல்லாம் கவனிச்சோம். இந்த மலை இருக்குமிடம் 15 ஏக்கராம்.
ஒருமணி நேரத்தில் தரிசனம் முடிச்சுக்கிட்டுக் கீழே வந்தோம். மலைமேலே மனிதர்களைவிட ஆடுகள் அதிகமா இருக்கு. கீழே உள்ள கோவில் நிற்கும் நீர்வண்ணப் பெருமாளுக்கு. அழகான அஞ்சுநிலைக் கோபுரத்துடன் முன்வாசல். கோபுரத்தில் அங்கங்கே செடிகள் முளைச்சுருக்கு. மறக்காம சீக்கிரம் அதைப்பிடுங்கிப் போடலைன்னா....கொஞ்சநாளில் மரம்தான்:(
வால்மீகி முனிவர் காலத்துக் கோவிலாம். அவர் ராமாயணம் எழுதி முடிச்சதும் இங்கே வந்து ராமனை மனம் உருகப் பிரார்த்திச்சு 'ராமா.... உன் கல்யாணக்கோலத்தைக் காட்டு' ன்னு வழிபட்டதும் ராமர் அப்படியே சேவை சாதிச்சாராம். ராமர் சீதை, லக்ஷ்மண, பரத சத்ருக்கனர் மட்டுமே உள்ள சந்நிதி. கல்யாண ஸீனில் அனுமன் கிடையாதே! அதனால் அனுமனுக்கு தனியா மண்டபத்தில் ஒரு சிலை வச்சுருக்காங்க. பெரிய உருவம். எட்டடி இருக்கலாம். கழுத்துநிறைய ஸ்ரீராமஜெயம் எழுதுன (காகித)பிட்ஸ் மாலையோடு கைகூப்பியபடி நிக்கறார்.
உள்ளே நுழைஞ்சதும் ப்ரகாரத்தின் வலதுபக்கம் நீர்வண்ணனின் சந்நிதி. திருமங்கைஆழ்வார் மங்களசாஸனம் செஞ்சுருக்கார். பத்தொன்பது பாசுரங்கள். சுவற்றில் பொறிச்சுவச்சுருக்காங்க. பூதத்தாழ்வாரும் பாடி மங்களசாஸனம் பண்ணி இருக்கார்.
ரங்கநாதர் சந்நிதி ஒன்னும் இங்கே இருக்கு. அப்புறம் பெருமாள் கோவில்களில் வழக்கமாக இருக்கும் சந்நிதிகள், தாயார் பெயர் அணிமாமலர் மங்கை! ஆழ்வார்கள், சொர்க்கவாசல் இப்படித் தரிசனம் செஞ்சுக்கிட்டே வரும்போது அந்தப்பக்கமா ஒரு விஸ்தாரமான மண்டபத்தில் ஆண்டாள் சந்நிதி. கதவைக் கெட்டியா மூடிவச்சுருக்காங்க. மண்டபத்தில் ஐயப்பப் பக்தர்களின் கூட்டம். வழக்கமாப் பாடும் தூமணி மாடத்து பாடமுடியாமல் போச்சு:(
கோபுரவாசலுக்கு நேரா இல்லாமக் கொடிமரம் ஓரமா இருக்கு பாருங்கோ!
கோவிலின் உள்ளே 'படம் எடுக்க' அனுமதி இல்லை. ( சேஷனா இருந்தாலுமா? ) போயிட்டுப் போகட்டும். படங்கள் இருக்கேன்னு தலபுராணம் ஒன்னு வாங்கினோம். படங்களின் தரம் ஒன்னும் சரி இல்லை. 'நேரில் வா. பார்த்துக்கோ'ன்னு சொல்றானாயிருக்கும்.
பங்குனி மாசமும் சித்திரை மாசமுமா வருசத்துக்கு ரெண்டு தேர்த்திருவிழா நடக்குது இங்கே. ரெண்டு கோவிலுக்கு ரெண்டு முறை. கணக்குச் சரியாப்போச்சு.
வெளியே வரும்போது கவனிச்சேன்.......இங்கே(யும்) பௌர்ணமிக்குக் கிரிவலம் நடக்குதாம்.
இந்தக்கோவில் 'அந்த நூற்றியெட்டில் ஒன்னு'.
கோவில் சிறப்புன்னா.....நாலு கோலம், மூணு அவதாரம்!
ஓம் நமோ நாராயணா.
நன்றி: திருக்கோவிலின் தலவரலாறு
PIN குறிப்பு: சண்டிகர் போரடிக்குதேன்னு நேற்று சென்னைக்கு வந்தேன், என் கனவில்:-) உண்மையில் கோவிலுக்குப்போனது போன நவம்பர் மாசம்.

23 comments:
நேற்று நேரில் சென்னை வந்து சென்றீர்கள் என்று நினைத்தேன் டீச்சர்,சென்ற வருடம் சென்றதை அழகாக சொல்லியிருகீங்க டீச்சர், நானும் இங்கே போயிருக்கேன் டீச்சர் சென்னையில் இருந்தப்ப கோவில் நல்லா இருக்கும் டீச்சர்.
துளசி,
இந்தக் கோவில் எல்லாப்படங்களிலும் வருமோ:)
முக்காவசி க்ளைமாக்ஸ் சண்டை கூட நடந்த மாதிரி ஒரு நினைவு. இவ்வளவு தல புராணம் அருமையாக் கொடுத்துருக்கீங்க. எப்பவோ சின்ன வயசில பார்த்தது. நூத்தெட்டில ஒண்ணைக் கண்ல காண்பித்ததுக்கு நன்றிப்பா.
உண்மையாவே இப்படி ஒரு வெள்ளை அடிச்சு வச்சிருக்காங்களேப்பா.உண்மையான அழகே போயிடுத்தே.இவ்வளவு அசிரத்தையா:(
டீச்சரின் அபாரமான ஞாபக சக்திக்கு எனது சல்யூட்..!
சிற்ப வேலைப்பாடுள்ள கோவிலுக்கு ஒரு நடை போய் வரவும். சூப்பரான சிற்பம் பாக்கத்தான்...பத்மாசூரி
நானும் கோயிலை சினிமால பாத்தமாதிரி இருக்கேன்னு தான் பாத்தேன்.. ஒருமுறை போகும் ஆசை வருது..
'அந்த நூற்றியெட்டில் ஒன்னு'.
பார்த்தாச்சு.
வாங்க சுமதி.
மலைக்கோவில், அதன் மேலே இருந்து பார்க்கும் சுற்றுப்புறக் காட்சிகள் எல்லாம் அழகு மட்டுமா? அங்கே கொஞ்ச நேரம் உக்கார்ந்துருந்தால் மனசுகூட அமைதியாப் போயிருதுப்பா.
வாங்க வல்லி.
சினிமாப்புகழ் என்பதைக் குறிப்பிட்டு இருக்கணும், இல்லே? :-))))
தமிழ்நாட்டுலே சில கோவில்களில் சுத்தப்படுத்தறோமுன்னு ஸேண்ட் ப்ளாஸ்டிங் செஞ்சு சிற்பங்களுடைய மூக்கையெல்லாம் கரைச்சுருக்காங்கப்பா:(
வாங்க உண்மைத்தமிழன்.
யானைக்கும் இப்பெல்லாம் மறதி கூடி இருக்கு. போனவருசம் போனதை உடனே எழுத மறந்துருச்சு பாருங்க!
வாங்க பத்மாசூரி.
அதே அதே..... வேற ஊர் கோவில்களுக்குப் போய்வரணும்தான்:-)
சிற்பக்கலை எப்படி இருக்குன்னு பார்த்தால்தானே தெரியும்?
வாங்க கயலு.
நம்ம வல்லி சொன்னதேதான்.
வில்லன் நாயகியைக் கடத்திப்போய் அங்கே மலைக்கோவிலில், கல்கி மண்டபத்தில் தான் தாலிகட்டப் போவான். படியெல்லாம் அவன் அடியாட்கள் காத்துருக்க நாயகன் எல்லாரையும் அடிச்சு நொறுக்கிட்டு நாயகியைக் காப்பாத்துவான்:-)
வாங்க மாதேவி.
நம்ம பதிவரில் ஒருத்தர் அந்த நூற்றியெட்டில் ஒரு 100 பார்த்துருக்கார்!!!!
நமக்கு அவ்ளோ பாக்கியம் இல்லைப்பா.
நாங்களும் மூன்று வருடங்களுக்கு முன் போய் இருக்கோம்.
கோவில் படங்கள்,மாட்டு வண்டி படம் எல்லாம் நல்லா இருக்கு.
சிற்பங்களை அழகுபடுத்துறோம்ங்கிற பேர்ல மணலை வாரி அடிக்கிறது, வெள்ளையடிக்கிறதையெல்லாம் யாராச்சும் தடுத்தா தேவலை...
புகைப்படச் சுற்றுலாவில் அழைத்துச் சென்றதற்கு நன்றி.
WARNING: Please note that there is a firm in the United Kingdom which provides private tuition for university students, the majority of whom are from overseas. This firm, called the Institute of Independent Colleges and University Teachers (I.C.U.T.), based in Coventry, United Kingdom, is headed by a man called Dr. Vincent McKee. McKee is a FRAUDSTER and a SCAM ARTIST. Do NOT approach ICUT for your educational needs. Many students who have approached McKee's firm have had money taken out of their bank accounts WITHOUT THEIR CONSENT. Please do NOT pass on your bank account details to ICUT. McKee's dishonest ways go back a long way. Between 1985 to 1989, McKee used to work as a teacher of political science at David Game Tutorial College in South Kensington, London. During this time, he would ask students to lend him money, and yes, you've guessed it -- he would never pay them back. He used to target overseas students, especially. McKee was/is a racist as well. He used to call Asian students "Pakis" and black students "ni***rs." Finally, in 1989, he physically abused a Nigerian student, who complained to Mr. Game (the owner of the college), and McKee was summarily sacked. And then, in 1993, McKee found a job as a politics lecturer at the South Bank University in London, but he was again sacked the following year (1994) when he made racist and homophobic comments to students in his class. In 2005, he set up his own company, I.C.U.T., but from the very beginning, students who approached his company realised that they had made a bad decision when money was being siphoned off their bank accounts. Hotmail was alerted and they suspended McKee's Hotmail account because they correctly identified him as a scam artist. Please, folks, DO NOT seek help from this dishonest, racist thug. Check out
http://www.timeshighereducation.co.uk/story.asp?storyCode=204942§ioncode=26
வாங்க கோமதி அரசு.
வில்வண்டி லேட்டஸ்ட்டு அடிஷன்:-))))
மாடுகள் களைச்சுப்போனா தனியா மேயவிட முடியும்!
வாங்க அமைதிச்சாரல்.
சிற்பங்களுடைய பெருமைகளைத் தெரிஞ்சவுங்க பெயிண்டு அடிக்கும் குழுவில் ஆலோசகராக இருந்தால் நல்லது. புது வேலை வாய்ப்பு உருவாக்கலாம். அரசு மனம் வைக்கணுமே:(
வாங்க டொக்டர் ஐயா.
நீங்களும் சுற்றுலாவுக்குக் கூடவே வந்ததில் எனக்கு மகிழ்ச்சி.
ஸ்கேம் பஸ்டர்ஸ்,
பலருக்கு உதவுமுன்னு பின்னூட்டத்தை வெளியிட்டு இருக்கேன்.
\\நம்ம பதிவரில் ஒருத்தர் அந்த நூற்றியெட்டில் ஒரு 100 பார்த்துருக்கார்!!!!\\
நான் 97 பார்த்திருக்கிறேன். 100 பார்த்த புண்ணியவான் யார்? ஒரு வேளை என்னைத்தான் சொல்கிறீர்களோ?!
திவ்ய தேசம் தொடர் பதிவு ஆரம்பித்தேன். நீண்ட நாட்களாக எழுதவில்லை. எழுத வேண்டும்.
வாங்க கோபி,
அந்த புண்ணியமூர்த்தி சாக்ஷாத் நீங்கதான்! சட்னு இன்னும் மூணு கவர் பண்ணிருங்க. கணக்கு சரியாகிரும்:-)
நாலு கோலம், மூணு அவதார...தரிசனம் கிடைத்தது...அருமை
Post a Comment