எங்கள் வீட்டில் எதாவது ஒரு விஷயம் கருத்து வேற்றுமை இல்லாம எல்லாருக்குமேப் பிடிச்சிருக்குன்னா
அது 'சுஜாதா'வின் கதைகள்தான். எழுபதுகளில் வெளிவந்த எல்லாக் கதைகளையுமே அனுபவித்துப் படித்திருக்கிறோம். அவருடைய ஒரு கதையின் நாயகி என் வீட்டில் இருக்கிறாள்.
பெண்குழந்தையென்று தெரிந்ததும்
'சட்'என்று மனதில் வந்த பெயர்தான் மதுமிதா.
இப்போது பிரிந்தால் என்ன? என்றாவது ஒரு நாள் மேலுலகில் மீண்டும் சந்திப்போம் சுஜாதா.
உங்கள் எழுத்துக்கள் எங்கள் மனதில் வாழ்கின்றன.
எழுத்தாளனுக்கு 'மரணம்' ஏது?
அஞ்சலிகளும், அனுதாபங்களும்
Thursday, February 28, 2008
அஞ்சலிகளும், அனுதாபங்களும்...'சுஜாதா'
Posted by துளசி கோபால் at 2/28/2008 10:08:00 AM
Labels: சுஜாதா sujatha
Subscribe to:
Post Comments (Atom)
22 comments:
மதுமிதா, ஜீனோ, கணேஷ், வஸந்த் இவர்களுடன் காலம் தள்ளுவோம் இனிமேல்..குடும்பத்தினர்க்கும், விசிறிகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்..
அதிர்ச்சியான செய்தி, இப்போது தான் தெரிந்து கொண்டேன், ஆழ்ந்த இரங்கலைப் பதிகின்றேன்.
அன்னாரது ஆன்மா சாந்தியடைவதாக.
என் மகளது பெயரும் சுஜாதாவின் ஒரு சிறுகதையில் வந்த பெயர் தான். பள்ளி/கல்லூரி காலத்தில் படித்திருந்த அந்த பெயர் மனத்தில் அப்படியே இருந்து பெண் குழந்தை என்று தெரிந்த போது நினைவில் முந்தி வந்து பெயரிட வைத்தது.
எழுத்தாளனின் எழுத்துக்கு மரணம் இல்லை என்பது உண்மை தான்.
துளசிக்கா.
என்ன சொல்றதுன்னே தெரியலை. ரொம்ப அதிர்ச்சியா இருக்கு.
ஜுன்ல ஊருக்கு வரும்போது அவரை இன்னொரு தடவை சந்திக்கணும்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன். :-((
பிரார்த்தனைகளும் அஞ்சலிகளும்.
செய்தி தெரிஞ்சவுடனெ ரொம்ப வருத்தமாயிருச்சு.தமிழ் வாசகர்கள் எல்லாரையும் ஏதோ ஒரு வகைல தொட்டவர்.வாழ்க்கையை நன்றாக வாழ்ந்து அனுபவித்துவிட்டு சென்றுள்ளார்.ஆழ்ந்த அனுதாபங்கள்....வேற என்ன சொல்ல
Let it be.
Hi All,
It is really a shocking news.
Did you remember what he wrote about his stay at apollo,he laughed at his pain.He made everything simple,weather it is quantum physics or life.
I met him in his bangalore residenace,did him an interview,i remember even today.
God bless his family.
Kannan
http://www.kannanviswagandhi.com
http://www.truemlmrockstar.com
துளசி, காலை எழுந்து கணிணியைத் திறந்த உடன் - சுஜாதா பற்றிய செய்தி. மனம் பதறியது. 40 ஆண்டு கால கதாநாயகனை இழந்த தவிப்பு. என்ன செய்வது. ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடவதாக.
அவரின் பெயரும், அவரது கதாநாயகிகளில் ஒருவரின் பெயரும் எனது குழந்தைகளுக்கும் வைத்திருக்கிறேன்.
வருத்தமான செய்தி தான். ஏதோ வாழ்ந்தோம் என்றில்லாமல், எழுத்துக்களை ஏணியாக்கி அதன் உச்சத்திலே வாழ்ந்துவிட்டுப் போயிருப்பதால், துக்கத்திலும் சற்று நிம்மதி நெஞ்சிலே தெரிவது உண்மையே. ஊன் மறைந்திட்டாலும், அவரது எழுத்துக்கள் உயிராய் எந்நாளும் வாழும்.
எழுத்தாளர் சுஜாதாவின் மறைவுக்கு அஞ்சலியும் - அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
ரொம்ப வருத்தமாக இருக்கிறது துளசி
துலசி,
இன்று காலை படித்தவுடன் மகா பெரியசோகமாக இருந்தது
உடனே அவர்கள் வீட்டுக்குப் போனதுதான்னவ்அர் பூதஉடல இன்னும அப்பலோவிலேயே இருப்பதாகத் தெரிந்தது.
நாளதான் இறுதிச் சடங்கு.
நான் அவர் மனைவியுடன் உட்கார்ந்த சில நிமிடங்களீல் அவர்கள் புலம்பியது, கதை முடிஞ்சுடுத்தே என்ற வார்த்தைகள் தான்.
மிகவும் எளிமையான மனுஷி.
////இப்போது பிரிந்தால் என்ன? என்றாவது ஒரு நாள் மேலுலகில் மீண்டும் சந்திப்போம் சுஜாதா.////
ஆமாம் நானும் ஒருநாள் அங்கு வந்துவிடுவேன் - அவரைச் ச்ந்திப்பதற்கு!
சுஜாதா அவர்கள் குடும்பத்தார் மன தைரியம் பெற பிரார்த்திக்கிறேன். வருத்தமாக இருக்கிறது.
எனக்கு இப்போதுதான் விடயம் தெரியும்.
//மதுமிதா, ஜீனோ, கணேஷ், வஸந்த் இவர்களுடன் காலம் தள்ளுவோம் இனிமேல்..குடும்பத்தினர்க்கும், விசிறிகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்//
உண்மை பாசமலர், என் அழ்ந்த
அனுதாபங்கள்.
”தொடர்ச்சியாக ஒரு காலக் கட்டத்தில் நாம் சில வருஷங்கள் உயிர் வாழ்கிறோம். பிறப்பிலிருந்து இறப்புவரை நம் உடலும் உள்ளமும் விருத்தியாகிறது. இறந்து அழியும் போது நாமும் அழிந்து விடுகிறோமா? முழுவதுமே அழிந்து விடுகிறோமா? அல்லது நம்மிலிருந்து ஏதாவது பிரிந்து பரம்பொருளை அல்லது ஒரு சாஸ்வத உண்மையைப் போய்ச் சேருகிறதா?”
-சுஜாதா "ஒரு விஞ்ஞான பார்வையில் இருந்து”.
அவருக்கு கண்ணீர் அஞ்சலி.
நமது மரபுகளில் ஒன்று. துளசியைப் பற்றி. மற்றது வில்வத்தைப் பற்றி.
துளசியால் ஸ்ரீவிஷ்ணுவையும் வில்வத்தால் சிவனையும் பூசிக்கிறோம்.
இரண்டுக்குமே ஒரு பொதுவான தன்மை கூறப்படுகிறது.
அவை இரண்டுமே நிர்மால்யம். வாடியிருந்தாலும் அதனை எடுத்து
கடவுளைப் பூசிக்கலாம்.
சுஜாதா ஒரு நிர்மால்யம்.
அவர் எழுத்துக்களால் என்றும் தமிழ் பூசிக்கப்படும்.
சுப்புரத்தினம்.
தஞ்சை.
நண்பர்களுக்கு நன்றி. நாம் எல்லாருமே ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக்கொள்ளும் வகையில் தான் இருக்கின்றோம்.
வாழ்க்கையில் எதாவது ஒரு உண்மை எப்போதும் தன்னை வெளிப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது.
'காய்த்த மரம்தான் கல்லடி படுமாம்'
//இப்போது பிரிந்தால் என்ன? என்றாவது ஒரு நாள் மேலுலகில் மீண்டும் சந்திப்போம் சுஜாதா.//
ம்ம்...
நாம் இறந்த பின் நம்முடைய ஆன்மா என்னும் units இங்கு தான் எங்காவது ஒட்டிக் கொண்டிருக்குமாம், உதா இலையில், மரத்தில் எங்காவது. அது போல சுஜாதாவும் இங்கு தான் எங்கேனும் இருக்கவேண்டும்...எங்கும் போய்விடவில்லை.
சென்ற மாதம் தான் அவருக்கு What the Bleep Do we know என்ற டாகுமெண்டரி DVD அனுப்பி இருந்தேன்
அவர் எழுத்துக்களில் அதை பற்றிய கருத்தை அறிய நமக்கு கொடுத்து வைக்கவில்லை. அவருக்கு மறுபிறவி நம்பிக்கை கிடையாது. அது இருந்தால் மீண்டும் அவர் தமிழ் நாட்டிலேயே பிறக்கவேண்டும்.
வாங்க சீனு.
எந்த இலைன்னு தெரிஞ்சுக்க நமக்கு சக்தி இல்லையே(-:
வாங்க சூப்பர்சுப்ரா.
அவர் இங்கே பிறந்துவிட்டாலும் நமக்கு அவரைத் தெரிஞ்சுக்கும் தெளிவு இருக்குமான்னு தெரியலை.
மறுபிறவி எடுத்தாலும் போனபிறவி நினைப்பு இருந்தாத்தானே எழுத்தைத் தொடர முடியும்.
எல்லாம் நம்ம மனசு தாங்காம ஆத்தாமையில் சொல்றதுதான். இல்லையா?
Post a Comment