Monday, February 04, 2008

பிட்டுக்குச் சுமந்த வளையம்

பிப்ரவரி மாத புகைப்படப் போட்டிக்கான பங்களிப்பு.






PIT புகைப்படப் போட்டிக்காக எடுத்த படங்களில் சில(!!) இங்கே.
முதல் இரண்டும் போட்டியில் கலந்து கொள்பவை.
அப்ப மீதி இருக்கறது?
ஏங்க, எடுத்ததோ எடுத்தாச்சு. அதையெல்லாம் உங்கள் பார்வைக்கு வைக்கலேன்னா நம்ம திறமை(?) உங்களுக்கு எப்படித் தெரியும்?
என்ன தைரியத்துலே நானும் போட்டிக்குப் படம் அனுப்பறேன்னு யாரும் கேக்காதீங்க.......
மோசமான படத்துக்கும் எதோ பரிசு கிடைக்குமுன்னு இங்கே யாரோ சொன்னது என் கண்ணிலும் விழுந்தது:-)))

51 comments:

கோபிநாத் said...

டீச்சர்..எல்லா படமும் சூப்பரே சூப்பர்...

எனக்கு பிடித்த படம் 4வது படம் தான்..அந்த வளையல் & நீலகலர் BG எல்லாம் அழகாக இருக்கு..;))

cheena (சீனா) said...

துளசி, எல்லா வட்டமும் சூப்பர் - வளையல் சூப்பரோ சூப்பர் -யானை ? துளசி வூட்டு யானை - சொல்லவும் வேணுமோ

Kannabiran, Ravi Shankar (KRS) said...

Perspective in the 2nd pic is very nice teacher! :-)
வெற்றிக்கு வாழ்த்துக்கள்!

அந்த வளையல் படங்களை வலையுலக இன்கம் டாக்ஸ் அதிகாரிகள் குறித்துக் கொண்டார்கள் (கொண்டோம்)! :-)))

நானானி said...

ரெண்டாவது படம் சூப்பர்!

pudugaithendral said...

படங்கள் சூப்பர்,
எனக்கு பிடித்த படம் 4வது படம் தான்..அந்த வளையல் & நீலகலர் BG எல்லாம் அழகாக இருக்கு..;))

ரிப்பீட்ட்டேய்ய்ய்ய்ய்.....

இலவசக்கொத்தனார் said...

ரீச்சருக்கு வட்டமாய் மார்க் கொடுக்க மனது விழைந்தாலும் வேண்டாம் என முடிவு செய்து முதல் படத்துக்கு 65 மார்க்! :))

Anonymous said...

ரெண்டாவது படம் நல்லா இருக்கு. வித்தியாசமா இருக்கு. வளையல் மாடல் நோட் பண்ணியாச்சு

பாச மலர் / Paasa Malar said...

முதல் படம்..கூடை..அருமையாக இருக்கிறது..(அதென்ன அப்படி ஒரு தலைப்பு?

வடுவூர் குமார் said...

முதல் படத்தை ரொம்ப நேரம் பார்க்கமுடியவில்லை.
கண்ணு சுத்துதா? படம் சுத்துதா என்று தெரியவில்லை.
ஏதோ பவர் இருக்கும் போல் இருக்கு.:-)

தங்ஸ் said...

பருந்துப்பார்வையில்-னு கூட ஒரு பஞ்ச் வைங்க..எனக்கு பச்சைக்கம்பள யானை பிடிச்சிருக்கு..

துளசி கோபால் said...

வாங்க கோபி.

நாலாவதா? பேசாம அதையே போட்டிக்க்கு அனுப்பி இருக்கலாமோ?

சரி. வளையல் பத்திரமா நம்மகிட்டேயே இருக்கட்டும்:-)

துளசி கோபால் said...

வாங்க சீனா.

பிடிச்சிருந்தா அதன் மகிழ்ச்சியே தனிதான்:-)))

நம்மூட்டு யானைக்கு ரொம்பப் பெருமையா இருக்காம்.

Yogi said...

தலைப்பும் படங்களும் நச் !

துளசி கோபால் said...

வாங்க கேயாரெஸ்.

இன்கம்டாக்ஸ் அதிகாரிகளுக்கு அதை அன்பளிப்பாக(???) தரவும் நான் தயார்:-))))

துளசி கோபால் said...

வாங்க நானானி.

நன்றிங்க. நாற்காலிக்கு வந்த 'மவுஸை'ப் பார்த்தீங்களா !!!!

துளசி கோபால் said...

வாங்க புதுகைத் தென்றல்.
ஜிமிக்கி வளையல் எனக்கும் ரொம்பப் பிடிச்சது.

துளசி கோபால் said...

வாங்க கொத்ஸ்.

அந்த வட்டமான ( அதாவது இருவட்டம்) மதிப்பெண்ணுக்கு முன்னால் ஒரு ஒன்று இருக்குதானே?

65 ம் நாட் பேட்:-))))

துளசி கோபால் said...

வாங்க சின்ன அம்மிணி.

பெருசா நோட்( எல்லாம்) பண்ண வேணாம்.

வேணுமுன்னா அனுப்பி வைக்கவா?

துளசி கோபால் said...

வாங்க பாசமலர்.

தலைப்புங்களா?

PIT புகைப்படப் போட்டிக்கு மண்ணுக்கு பதிலா வளையம் சுமக்கிறோமுன்னுதான்:-)

துளசி கோபால் said...

வாங்க குமார்.

அந்தப் 'பவர்' நடுவர் மனசுக்குள் போகக் கடவதாக:-)))

துளசி கோபால் said...

வாங்க தங்ஸ்.

யானைக்கு இன்னொரு ரசிகர்:-)))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என் கண்ணுலயும் விழுந்தது // :))

முதல் படம் அந்த கூடையா நல்ல ஐடியா..சூப்பர்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என் கண்ணுலயும் விழுந்தது // :))

முதல் படம் அந்த கூடையா நல்ல ஐடியா..சூப்பர்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//துளசி கோபால் said...
வாங்க கேயாரெஸ்.
இன்கம்டாக்ஸ் அதிகாரிகளுக்கு அதை அன்பளிப்பாக(???) தரவும் நான் தயார்:-))))//

ஆகா...வளையல்களைக் காட்டி கையில் வளையம் போடறுதுக்கா? :-)

ஏதேது, அன்பளிப்பாக் கொடுப்பீங்கன்னா, அப்ப இன்னும் அது போல எக்கச்சக்கமா வச்சிருப்பீங்க போலக் கீதே! சுமாரா எவ்வளவு தேறும் டீச்சர்?

ஜிகே, ஜிக்குஜூ கிட்ட இப்பவே பிரெண்டஸ் ஆயிட்டா, பின்னாடி அபேஸ் பண்ண உதவும்! :-)

S.Muruganandam said...

எல்லாப் படங்களும் அருமை. குறிப்பாக சேர்.

தி. ரா. ச.(T.R.C.) said...

பிறந்தநாள் வழ்த்துக்கள்

G.Ragavan said...

போட்டீல குதிச்சிட்டீங்களா...சூப்பர்.

படங்கள்ளாம் நல்லாயிருந்தாலும் இரண்டாவது படமும் வளையலும் சூப்பரோ சூப்பர். மயில்கழுத்துக் கலர் பட்டுச்சேலையும் சூப்பர் :)

துளசி கோபால் said...

வாங்க முத்துலெட்சுமி.

நீங்கெல்லாம் எடுக்கற படங்களுக்குக்கிட்டே வரும் 'சிறு முயற்சி'தான் இது:-)

துளசி கோபால் said...

கேயாரெஸ்.

எக்கச்சக்கமா இருக்கு. எல்லாம் பாண்டிபஜார் சரக்குதான்.

நாலுவளையல் 30 ரூபாய்:-))))

துளசி கோபால் said...

வாங்க கைலாஷி.

நீங்க சாமிகளையும், வாகனங்களையும் போட்டு ஜமாய்க்கறீங்க.

நானு?

ஆஆஆஆஆசாமி உக்காரும் சேர்:-))

துளசி கோபால் said...

வாங்க ராகவன்.

எல்லாம் குண்டு சட்டிக்குள்ளேன்னு வீட்டுக்குள்ளேயே எடுக்கும் விஷயமா இருக்கேன்னுதான் குதிச்சுட்டேன்:-)))

மயில்கழுத்துக்கலர் புடவை இல்லைங்க.

அது க்வில்ட்டுக் கவர்:--)

துளசி கோபால் said...

வாங்க தி ரா ச.

நலமா?

வாழ்த்துகளுக்கு நன்றிங்க.
இப்படிக் காலை ஒடச்சுட்டீங்களே:-))))

parameswary namebley said...

The 1st picture with dark background bettera irukumnu tonuthu :)

துளசி கோபால் said...

வாங்க பொன்வண்டு.

'நச்'சிந்தா?

ச்சால தேங்ஸண்டி:-))

ச்சும்மா...தெலுங்கு பேசிப் பார்த்தேன்:-)

துளசி கோபால் said...

வாங்க பரமேஸ்வரி.

புதுசா இருக்கீங்க....

நலமா?
அடிக்கடி வந்து போகணும்.ஆமா....

நன்றி

வீ. எம் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் துளசி அக்கா

vidhyamss said...

அக்கா, வணக்கம். நல்லா இருக்கீங்களா? இன்றைக்கு உங்களுக்கு பிறந்த நாளாமே??
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Osai Chella said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்! படங்களில் அசாத்திய முன்னேற்றம்! பரிசுகிடைத்தாலும் சந்தோசமே!

டீச்சர் பாசாயிட்டாங்கோ!

அன்புடன்
ஓசை செல்லா

ஆடுமாடு said...

டீச்சர், பிறந்த நாள் வாழ்த்துகள்.

ச.மனோகர் said...

டீச்சருக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

M.Rishan Shareef said...

படங்கள் அழகு.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் டீச்சர்... :)

கோபிநாத் said...

டீச்சர் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இங்கிட்டும் சொல்லிக்கிறேன்!

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் டீச்சர்!
பக்கோடா ப்ளீஸ்! :-)

//மயில்கழுத்துக்கலர் புடவை இல்லைங்க.
அது க்வில்ட்டுக் கவர்:--)//

ஜிரா...மயிலாரு மயிலாரு-ன்னு மூச்சுக்கு முந்நூறு தபா சொல்லிட்டுக் கடைசிலே, மயிலாரு கலருல கோட்டை வுட்டுட்டீங்களே! ஓ மயில் லார்டு! :-)))

வல்லிசிம்ஹன் said...

துலசி,
தலைப்பும் சூப்பர்.
படங்களும் சூப்பர்.


நாந்தான் கடைசி!!!!
வளையல்,தாமரை,தவளை,லேஸ்,யானை,பிட்டுக்கு மண் சுமக்காத கூடை எல்லாமே அருமை.

ஒவ்வொன்றிலும் அக்கறை தெரிகிறது. ஒரே பளிச்:))))))

துளசி கோபால் said...

வாங்க வீ.எம்.

வாழ்த்துகளுக்கு நன்றி.

துளசி கோபால் said...

வாங்க ஸ்ரீவித்யா.

எனக்கு உங்க பேரு ரொம்பப் பிடிக்கும். இந்தப்பெயருள்ள ஒரு நடிகையும் நமக்கு ஃபேவரிட்தான்.

நல்லா இருக்கேன். வாழ்த்துகளுக்கு நன்றி.

துளசி கோபால் said...

வாங்க செல்லா.

பாஸாயிட்டேன்னு கொஞ்சம் 'ஓசை'ப்படாமச் சொல்லுங்கோ:-))))

படங்களில் முன்னேற்றம் எல்லாம் உங்க வகுப்புலே இருப்பதால்தான்.
ஆசிரியர்களின் ஆசிகள்.

வாழ்த்துகளுக்கு நன்றி.

துளசி கோபால் said...

வாங்க ஆடுமாடு, பாபு மனோகர்,ரிஷான், கோபி & கே ஆர் எஸ்.

வாழ்த்துகளுக்கு நன்றி.

இந்த வருசம் எக்கச்சக்கமான வாழ்த்துகள் வந்து குவிஞ்சிருக்கு.

மனம் மகிழ்வா இருக்கு. ஆனால் இதுக்கு க்ரேஸ் மார்க் இல்லை:-))))

யானைக்கு அடிசறுக்குமுன்னா மயிலாருக்கு கலர்லே சறுக்காதா?

நல்லவேளை ராகவன் ஞாபகப் படுத்துனார். மயில் கழுத்துக் கலர் புடவை ஒண்ணு வாங்கிக்கணும். கொஞ்சம் பச்சைகலந்ததுதான் இருக்கு. இந்த ஷேடு இல்லை(-:

துளசி கோபால் said...

வாங்க வல்லி.

கடைசியா வந்தாலும் கமெண்ட் அருமை:-)

ஒப்பாரி said...

நல்லா வந்து இருக்குங்க படங்கள்.
back ground அனைத்து படங்களிலும் அருமையா வந்திருக்கு. வாழ்த்துகள்.

துளசி கோபால் said...

வாங்க ஒப்பாரி.

வருகைக்கு நன்றி. வாழ்த்தியதுக்கும் நன்றி.

புகைப்பட வகுப்பு புரியுதுன்றதுக்கு நாங்கெல்லாம் அத்தாட்சி:-)