Wednesday, February 06, 2008

அன்புக்கு நான் அடிமை

ரெண்டாம்பேருக்குத் தெரியாமக் கொண்டாட ஆரம்பிச்சுப் பல வருசங்களாச்சு. முப்பது தாண்டுனவுடன் ஒரு அதிர்ச்சி வந்துருதுல்லே?
இந்த முறை என்ன ஆச்சுன்னா......?
சரி. அதைவிடுங்கோ.........

போஸ்டர் ஒட்டும்வரைக்குப் போயிருக்கு.


நாச்சியார் துளசிதளமுன்னு ஆரம்பிச்சு வைக்க, நம்ம கேயாரெஸ் சுவரொட்டி தயாரிச்சு ஒட்டி, நம்ம செந்தழல் ரவி வாழ்த்துகள் அறிவிப்பு சொல்ல, நம்ம நானானி திக்கெட்டும் முழங்கன்னு நாலாபக்கமும் சேதி பரவி,
வலை நண்பர்களின் வாழ்த்துகளும் பின்னூட்டங்களா நிறைய வந்துருக்கு மேற்படிப் பதிவுகளில். இத்தனை அன்பு கிடைக்க நான் என்ன செய்தேன்னு தெரியலை.

எல்லோரையும் தனித்தனியா அன்போடு விசாரிக்கணும்ன்னு ஒரு மலைஉச்சிக்குப் போனேன். சுத்திமுத்தி 360 டிகிரி கண்ணுக்கெட்டிய தூரம்வரைப் பார்த்து டெலிபதியில் உங்களுக்கெல்லாம் நன்றி அறிவிப்பை அனுப்பி இருக்கேன்.

டீச்சருக்குப் பிறந்தநாளுன்னு லீவெல்லாம் விடமுடியாது. உங்களுக்காக நகரின் சரித்திரத்தில் ஒரு பகுதி இங்கே.

போர்ட் ஹில்ஸ் (Port Hills)மலைத்தொடரில் கடல்மட்டத்திலிருந்து ஏறக்குறைய 1500 அடி உயரத்தில் இருக்குது, மவுண்ட் கேவண்டிஷ் (Mount Cavendish ) சிகரம். இங்கேயிருந்து பார்த்தால் முழு நகரமும் உங்கள் கண்முன்னே.

கிழக்குப்பக்கம் துறைமுகம், வடக்கே பசிபிக் கடலும் அதன் வளைந்துபோகும் கடற்கரையும், மேற்கே கிறைஸ்ட்சர்ச் மாநகரம், அதன் பின்புலமாக தெற்கு ஆல்ப்ஸ் மலைத்தொடர்களும் , தெற்கே போர்ட் ஹில்ஸ் மலத்தொடர்கள். பேங்க்ஸ் பெனின்சுலா, எல்லஸ்மியர் ஏரி என்று வானத்தின் அடிவரை
தடங்கல் இல்லாத காட்சிகள்.

துறைமுகம் அமைந்துள்ளது , ஒரு காலத்தில் எரிமலையாக இருந்து, இப்போது அணைந்து, குளிர்ந்து போன அதன் க்ரேட்டர் பகுதி. கைக்கு அடக்கமாச் சின்னதா இருக்கு. துறைமுகத்தின் பெயர் லிட்டில்டன்.

மேலே போக கோண்டோலா என்னும் ரோப்கார் வசதி இருக்கு. 945 மீட்டர் நீளமான இரும்புக்கயிறு. ஒரு பெட்டியில் நாலுபேர் வரை போக முடியும்.
11 மில்லியன் டாலர்களும், ஏழு வருச உழைப்பும் செலவானதாம். 1992 முதல்
பொதுமக்கள் பயனுக்கு வந்துருக்கு. ஆரம்பிச்ச காலத்தில் ஒரு முறை போனதோடு சரி. இப்ப உங்களுக்காக 15 வருசம் கழிச்சு நேத்துப்போய் வந்தோம்.
( இது என் பங்கா இருக்கும் 14 ஆடுகளோ?)

அங்கேயுள்ள கட்டிடத்தில் டைம் டன்னல் என்று ஒரு ஆறு நிமிஷ வீடியோ காட்சி ஓடிக்கிட்டே இருக்கு. சுவர் முழுசும் டைனோசார்களின் பிரமாண்டமான படங்கள். அருமையான ஒரு உணவுவிடுதி இருக்கு. சாப்பாட்டின் தரம் 1 0 சதமானம், கண்முன் விரிந்து நிற்கும் காட்சிகளுக்கு 90 சதமானமுன்னு விலை நிர்ணயம்:-))))

எல்லா இடத்திலும் இருக்கறது போலவே நினைவுப்பொருட்கள் விற்கும் கடைன்னு ஜகஜ்ஜோதியா இருக்கு.
குழந்தைகளுக்கு விளையாட ஒரு பகுதி

மேலே ஏறிவர நல்ல சாலைவசதியும் இருக்கு. பலசாலிகள் சைக்கிள் சவாரி செய்வாங்க போல!

அதிவேகமான காற்று வீசும் சமயம் போக்குவரத்தை நிறுத்திருவாங்க. நல்லவேளையா நேத்து அருமையான காலநிலை. கோடையானதால் இரவு ஒன்பதரைவரை நல்ல வெளிச்சமாக இருந்துச்சு. எல்லாம் உங்க அன்புதான் காரணம்.


வாழ்த்திய அன்புள்ளங்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றியோ நன்றி.
தனிமடலிலும், நம்ம பதிவிலும் வாழ்த்தியவர்களை அன்புடன் நினைவு கூருகின்றேன்

பிகு: ஒவ்வொருவரையும் பெயர் குறிப்பிட்டு நன்றி சொல்ல ஆசை இருந்தாலும், மு.சொ. என்று சொல் விழுந்திருமோன்ற பயம் ஆசையைத் தடுத்து நிறுத்தியிருக்கு. சரிசரி. கோண்டோலா குறிப்பு பரிட்சைக்கு வரும்.கவனமாப் படிச்சு வச்சுக்குங்க:-))))

மகள் அளித்த யானை வாழ்த்து

49 comments:

Anonymous said...

மீண்டும் பிறந்தநாள் வாழ்த்துக்களைப்பிடிங்க.
//ரெண்டாம்பேருக்குத் தெரியாமக் கொண்டாட ஆரம்பிச்சுப் பல வருசங்களாச்சு. முப்பது தாண்டுனவுடன் ஒரு அதிர்ச்சி வந்துருதுல்லே?
// கவலைப்படாதீங்க. உங்களுக்கு முப்பத்தொரு வயசுதான்னு எல்லாரையும் நம்பவைச்சுருவோம். பதிவுலகத்துல பாதிபேருக்கு முப்பது தாண்டிருக்கும்ல

said...

நன்றி கூறுவதிலும் துளசி மேடம் ஸ்டைல் தனியழகு..

said...

துளசி,

எல்லா நலன்களும் பெற இனிய வாழ்த்துக்கள்
அன்புடன்
மாதங்கி

said...

ஒரு நாள் லீவு கிடைக்கும் அப்படின்னு பார்த்தா விட மாட்டேங்கறீங்களே!! :))

said...

நன்றி கூறுவதிலும் துளசி மேடம் ஸ்டைல் தனியழகு..

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.

said...

ஆனை அழகா இருக்கு.... :)

said...

yesterday's special ... malai sutrula va.. great..

said...

நேற்று உங்கள் பதிவில்லாமல் மற்ற பதிவுகளில் உங்களுக்கு வாழ்த்துகள் சொல்லவேண்டியதாயிற்று... சுற்றுலா தான் காரணமா ? கோபால்சார் நல்ல பரிசுதான் கொடுத்திருக்காங்க.. நாங்களும் அந்த அழகான சுற்றுலாவில் பங்கு கொண்ட நிறைவைத் தருவது உங்கள் பதிவு. மகளின் பரிசும் topical !!
மீண்டும் உடல்நலமும் பொருள்வளமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகள்!!

said...

டீச்சர் பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடியிருக்கிறீர்கள். இந்த மகிழ்ச்சி எந்நாளும் உங்களுக்குக் கிடைத்திட என் அப்பன் முருகப் பெருமான் அருள் புரிவானாக..

படங்களையெல்லாம் பார்க்கப் பார்க்க கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்கிறது.. (பல பின்னூட்டங்களில் சொன்னதுதான்.. ஆனால் சொல்லாமலும் இருக்க முடியவில்லை.)

வாழ்க வளமுடன்..

said...

துளசி டீச்சர் அம்மாவுக்கும் அவங்க ஹஸ்பன்டுக்கும் தாத்தா பாட்டியின் நல் வாழ்த்துக்கள்.
டூர் போகும்போது எங்களையும் கூப்பிட்டு இருந்தீங்கன்னா நாங்களும் வந்திருப்போமே...
பரவாயில்லை..அடுத்த தரம் 60 வது பர்த் டே கொண்டாடும்போதாவது எங்களை மறக்காம்
கூட்டிட்டு போங்க.
எங்களது ஆசிகளை நேரில் பெற
கட் பண்ணி பேஸ்ட் பண்ணுங்க இந்த யூ.ஆர்.எல் ஐ.
http://www.youtube.com/watch?v=0T-uVpIhEd8

சுப்புரத்தினம்.
மேனகா சுப்புரத்தினம்.
தஞ்சை.

said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் டீச்சர் !!!

said...

\ இலவசக்கொத்தனார் said...
ஒரு நாள் லீவு கிடைக்கும் அப்படின்னு பார்த்தா விட மாட்டேங்கறீங்களே!! :))\\

ஒரு ரீப்பிட்டேய்ய்

படங்கள் எல்லாம் அருமை...;))

மீண்டும் ஒரு வாழ்த்துக்கள் டீச்சர்

said...

ஆனை அழகா இருக்கு.... :)

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நீடு வாழ்க. பீடு வாழ்க. எல்லாம் வல்ல முருகப் பெருமானை வணங்கி வாழ்த்துகிறேன்.

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்...ஆனக்குட்டி நல்லாருக்குங்க..

said...

அடுத்த தலைமுறையின் புரிதல், அணுகதல் ( perception and approach )
எவ்வாறு வியக்கத்தக்கதாக இருக்கிறது ?

என்னுடைய பையன் எனது பிறந்த நாளன்று எனக்கு ஒரு பூனை பொம்மை
வாங்கி அனுப்பியிருந்தான். உங்களுக்கு யானை பொம்மை ? ! ! ?

மீனாட்சி ஆன்டி
சென்னை.
http://meenasury.googlepages.com/http%3Ameenasury.googlepages.commyhappinessisinmywill

said...

vaazthukkal teacher!!!

said...

vaazthukkal teacher!!!

said...

சரித்திரமே சரித்திரம் சொல்லுகிறதுனு எழுத நின்ஐத்தேன்.:))


கீபோர்ட் ஒத்துழைக்கலை.


யானை வெகு ப்ரம்மாதம்.டெலிபதில அனுப்பின நன்றி

வந்துடுத்து.:))

said...

அவ்வளவு உயரத்தில் இருந்து சொல்லியிருக்கீங்க ... கிடைக்காமல் போகவில்லை.வந்து சேர்ந்தது.
மிக்க நன்றி.

said...

வாங்க சின்ன அம்மிணி.

இனிமேல் அந்த 50+ தூக்கி வீசிட்டு இந்த 31+ வச்சுக்கலாம். நல்லா(த்தான்) இருக்கு:-)

said...

வாங்க பாசமலர்.

எல்லாருக்கும் ஒரு வழின்னா இந்த இடும்பிக்குத் தனி வழியாச்சேப்பா:-)

said...

வாங்க மாதங்கி.
வணக்கம். நலமா?

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க கொத்ஸ்.

கிளாஸ் லீடர் என்பதால் வேற யாரும் உங்களுக்கு ப்ராக்ஸி(யும்) கொடுக்கமுடியாது :-)))

said...

வாங்க புதுகைத் தென்றல்.

ரிப்பீட்டுக்கு ஒரு ரிப்பீட் நன்றி:-)))

said...

வாங்க இராம்.

ஆடிவரும் ஆனை அழகா இருப்பதில் என்ன சந்தேகம்?

said...

வாங்க முத்துலெட்சுமி.

மலையும் அந்த மாலையும் நல்லா இருந்தது.

said...

வாங்க மணியன்.

மனநிறைவான சொற்கள் அடங்கிய அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க உண்மைத் தமிழன்.

எங்கே ரொம்ப நாளா உங்களைக் காணோமே?

நமக்கு ஆசைதான் எந்நாளும் மகிழ்ச்சி கிடைக்கணுமுன்னு. ஆனால் உண்மை வாழ்வில் இன்பம் துன்பம் எல்லாம் கலந்துதானே வருது.

படங்கள் எல்லாம் இயற்கையாவே அமைஞ்ச அழகுதான்.


மறுபடியும் பதிவுகளில் தூள் கிளப்ப வாங்க.

said...

வாங்க சுப்புரத்தினம் & மேனகா சுப்புரத்தினம்.

அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. யூ ட்யூப்லே வந்து வாழ்த்தியதுக்கும் ஒரு விசேஷ நன்றி.உங்கள் ஆசிகளைப் பார்த்து மனம் நெகிழ்ச்சியா இருக்கு.




முப்பது வயது சொன்னீங்களே அது உண்மைதான். ஆனா அது வந்து போயே 20+ வருசங்கள் ஓடியிருக்கு.

//தாத்தா பாட்டியின் நல் வாழ்த்துக்கள்//

இதை அப்படியே அண்ணா & அண்ணியின் வாழ்த்துகளா மாற்றிக்கட்டுமா?
நானே இன்னொரு பாட்டி ரேஞ்சுக்கு வந்துட்டேன்:-)))
நம்ம பதிவர் பேபி பவன் என்னை பாட்டின்னுதான் கூப்புடறார்:-)))

said...

ஆஹா....டுபுக்கு.

வாங்க வாங்க.

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க கோபி.
மீண்டும் நன்றி.

said...

வாங்க குமரன்.
ஆனையே ஒரு அழகுன்னா, இது நகையும் நட்டுமா அலங்கரிச்சுக்கிட்டு இருக்கு. அழகுக்குக் கேக்கணுமா?

பெருங் கழுத்தணியைக் கவனிச்சீங்களா?:-)

said...

வாங்க ராகவன்.
'அழகன்' உங்களுக்கு அனைத்தையும் தரணும் என்று வேண்டுகின்றேன்.

அன்பான வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.

said...

வாங்க மீனாட்சி ஆண்ட்டி.
சரியாத்தான் சொன்னீங்க. நாம் மகிழ்ச்சியைத் தேடி ஓடக்கூடாது. அது நம்மைத்தேடி வருமுன்னு. அதற்கான வழிகளை அழகாத் தொகுத்து எழுதி இருக்கீங்களே!!!

நீங்க சொன்னதுபோலவே இளைய தலைமுறை அசட்டையா இருப்பதுபோல நமக்கு ஒரு முகம் காமிச்சுக்கிட்டே, நம்மிடம் கவனமாவும் இருக்கு.

மகள் அவ்வப்போது யானைகளாத்தான் வாங்கிவந்து தருகிறாள். கிறிஸ்மஸ் பண்டிகைக்கு மூன்று யானைகள் ( நம்ம காந்திஜியின் மூன்று குரங்குகள் போலவே) கண்ணையும், காதையும், வாயையும் மூடி உக்கார்ந்து இருப்பது கிடைச்சது.

said...

வாங்க அபி அப்பா.

நன்றி.

said...

வாங்க வல்லி & குமார்

வந்துருச்சா?
வரலியோன்னு நினைச்சேன்:-)))))

வல்லி, சரித்திரம், சரித்திரம் ஆகலை இன்னும்:-)

said...

எங்க ப்ளாட் டெரஸில் போய் நின்னு டெலிபதியில் வந்து கொண்டிருந்த எனக்கான 'நன்றி அறிவிப்பை' லபக் என்று பிடிச்சிட்டேம்ல!!!!

said...

அருமையான படங்கள் மேடம். இயற்கையுடன் பிறந்த நாளைக் கொண்டாடும் சுகமே தனி. தங்கள் குடும்பத்தார், சுற்றத்தார் எல்லோருடைய அன்பிலும் திளைத்து நீடூழி வாழ்க.

(அஸ்ஸாமிற்கு எல்லாமே தாமதமாகத் தான் வரும் - சூரியன் தவிர. இங்கிருந்தும் எல்லாம் தாமதமாகத் தான்).

RATHNESH

said...

தங்களன்புக்கு நாமும் அடிமைகளே!!!
அருமையான படங்கள்; "தங்கள் பறவைப் பார்வை" அழகாக உள்ளது.

said...

துளசி டீச்சரின் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் ஒரு
தாள வாத்தியக் கச்சேரி (தனி) ஏற்பாடு செய்து இருக்கிறேன்.
புகழ் பெற்ற கட வல்லூனர் சுரேஷ், தபலா வல்லுனர் ஜாகிர் ஹுசேன்,
பாலக்காடு மணி ஐயர் மிருதங்கம், மற்றும் கஞ்சிரா புகழ் கணேஷ்
எல்லோருமே நான் அழைத்தவுடன் " துளசி டீச்சர் பிறந்த நாள் நாங்கள்
இல்லாமலா? " எனச் சொல்லிக்கொண்டு வந்துவிட்டனர்.
அவர்கள் கச்சேரி நடக்கும் இடம்:
http://movieraghas.blogspot.com
துளசி டீச்சர் தனது உற்றம், சுற்றம் அனைவருடன் வருகை தந்து
விழாவினை சிறப்பிக்கவேண்டும்.
சுப்புரத்தினம்.

said...

நன்றியெல்லாம் எதுக்குங்க? ஆனாலும் கொடுத்ததை திருப்பி கொடுக்க மாட்டோமில்ல. மீண்டும் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

said...

அக்கா, மறுபடியும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

ஆனையோட 'பெருங்கழுத்தணி' நல்லாயிருக்கு!

கோபால் மாமா வாங்கி குடுத்தாரா? ;)

said...

வாங்க நானானி.

நீங்க 'லபக்'குனதை தொலைக்காட்சியா மானசீகமாப் பார்த்தேன்லெ:-))))

said...

வாங்க ரத்னேஷ்(அப்பா)

இந்த வருசம் என்னமோ அன்பே அன்புன்னு எக்கசக்கமான வாழ்த்து மழை.

பதிவுகின் வீச்சு ரொம்ப தூரத்துக்குப்போய் இருக்கு.

உங்க சூரியன் கூட மொதல்லே இங்கே வந்துட்டுத்தான் அங்கே:-)))

said...

வாங்க யோகன்.

நான் என்று இல்லை. யார் பார்த்தாலும்/எடுத்தாலும் இப்படித்தான் அமையும்.

எல்லாம், இருக்குமிடம் அமைஞ்சது அப்படி:-)

said...

என்னங்க சுப்புரத்தினம்,

பேரன் யானைச் சவாரியில் அருமையா இருக்கான்:-))))

இப்படிப் பிரமாதப்படுத்திட்டீங்களே!!!!

தாள வாத்தியம் தூள்!

என் வாழ்க்கையிலேயே மறக்கமுடியாத பிறந்த நாள் இதுதான்.

அனைத்துச் சிறப்புக்கும் நன்றி.

said...

காட்டாறு வாங்கப்பா.

இப்படியெல்லாம் சொல்லப்பிடாது. நன்றியை நான் சொல்லித்தான் தீருவேன். நீங்க எடுத்துக்கிட்டுத்தான் ஆகணும்.ஆமா:-)))

said...

வாங்க தஞ்சாவூரான்.

மறுபடியும் நன்றி.

கோபால் என்ன விரலரா(விரலிக்கு ஆண்பால்?)பாரியிடம் இருந்து பரிசில் பெற.

காசு போட்டுக் கடையில் இருந்து வாங்குனதுதான்:-))))