Friday, February 08, 2008

குணால் சிங்????

மக்கள்ஸ்,

குணால் ன்னு ஒரு நடிகர் நினைவு இருக்கா? அவர் தற்கொலை செஞ்சுக்கிட்டாராம். இன்னிக்குத் தினமலர்லே இருக்கு.

அவருக்கு என்ன கஷ்டமோ?

காரணம் எதுவா இருந்தாலும், அவர் விட்டுட்டுப்போன மனைவி மக்களுக்கு
அதிர்ச்சியா இருக்கும்தானே? ப்ச்...........

15 comments:

said...

கஷ்டம் தான்,ஆனால் யாருக்கு என்று தெரியலை. :-(

said...

photo pottirukkalaame Thulasi..

said...

ஐயோ பாவம் படத்துல நடிச்சு நம்மள கொண்னுகிட்டிருந்தார், இப்ப அவரையே கொண்ணுக்கிட்டாரா???

said...

அது தற்கொலையா அல்லது கொலையா என்று ஐயம் உள்ளது :(

said...

தற்கொலை செஞ்சுக்கிட்டு குடும்பத்தை நட்டாத்துல விட்டுட்டுப் போறவங்களுக்கு எல்லாம் ஒரு பதிவு போட்டு வேஸ்ட் பண்ணிட்டீங்களே....

said...

அந்த இரண்டு குழந்தைங்க என்ன பாவம் செஞ்சாங்க? நடிப்பு ஒன்னுதான் வாழ்க்கைன்னு நினைச்சுட்டா?

said...

ஓஒ இப்படி கூட ஒரு பதிவு போடலாமா - தினமலர் செய்திகளுக்கு எல்லாம் - இருப்பினும் ஆழ்ந்த அனுதாபங்கள் அவரது குடும்பத்தினருக்கு

said...

துளசி,
பாவமாத்தான் இருக்கு.
எனக்கு அவர் நடிப்பில் ஈடுபாடே
இருந்ததில்லை.


உலகத்தில எத்தனையோ பேருக்கு என்னென்னவோ கஷ்டம்.

அதீதமான போதை,மற்றப் பழக்கங்கள்
இவையே காரணமாகின்றன.

said...

அக்கா,

குணால் நடிச்ச படங்கள, இரட்டைக் கதாநாயகிப் படமென்று கிண்டல் செய்வதுண்டு!

இருந்தாலும், தற்கொலை செய்யும் அளவுக்குக் கோழையென்பது இப்போதான் தெரிந்தது!

தற்கொலை எதற்கும் முடிவல்ல!
அவருக்கு எமது அனுதாபங்கள்!

said...

ஏதோ குடும்பப் பிரச்சினையாம் டீச்சர்.. பாவம் அவருடைய மனைவியும், குழந்தைகளும்.

ஒரு நிமிடம்.. ஒரே நிமிடம்தான்.. அந்தச் சிந்தனை வரும்போது அருகில் ஆத்மார்த்தமானவர்கள் இருக்க வேண்டும். இல்லையெனில் டிக்கெட்தான்..

இதில் யாரைக் குற்றம் சொல்வது..?

ஏற்கெனவே 'காதலர் தினம்' படத்திற்குப் பிறகு வாய்ப்பு கிடைக்காமல் ஹோட்டலில் தங்கியிருந்தபோது விரக்தியாக அனைத்துப் பத்திரிகையாளர்களிடமும் சொன்ன வார்த்தையும் இதுதான்.. "எனக்கு ஏன் ஸார் வாய்ப்பு வர மாட்டேங்குது.. செத்துப் போயிரலாம் போல இருக்கு.."

அப்போதைய சினிமா பத்திரிகைகள் அனைத்துமே இதனனை எடிட் செய்து வெளியிட்டன அவருக்காக..

சினிமா ஹீரோ என்ற வாழ்க்கைதான் நிரந்தரம் என்று நினைத்துவிட்டார் போலும்..

said...

ஓ.. அப்படியா?.. அந்த ஆளு நடிச்ச காதலர்தினம் படத்த பாத்துப்புட்டு எங்க கிளாஸ் பொண்ணுங்க ஓவரா வழிஞ்சி எங்க வயத்தெரிச்சலை கொட்டிக்கிட்டாங்க,.. நாங்க கூட நெனச்சோம்.. மச்சான் இதுக்கெல்லாம் மச்சம் வேணும்டான்னு பொறாமைகூட பட்டோம்.. அப்போ. இப்போ புரியுது,நல்ல வாழ்க்கையை அடைஞ்சதற்க்கு நாங்கதான் கொடுத்து வைச்சிருக்கோம்ன்னு. எல்லாருக்கும்.. பிரச்சனைகள் இருக்குதான்.. ஆனா தற்க்கொலை மிகக் கேவலமான இறப்பு.பரிதாபப் படுகிறேன்.. அவருக்காகவும்,அவர் குடும்பத்திற்க்காகவும்.

said...

பின்னூட்டிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

குமார்,

கஷ்டம் கட்டாயம் அவர் குடும்பத்துக்குத்தான்.


டெல்ஃபீன்,

படமா?

தியேட்டர்லேதான் படத்தைப் பார்த்துட்டு மக்கள்ஸ் ஓடுறாங்க. அப்ப பதிவிலும் போட்டு நம்ம மக்கள்ஸை விரட்டணுமான்னுதான்......................
கருப்பன்,

படமா? அது ஓடலை & கிடைக்கலைன்னுதானே இந்த முடிவு எடுத்துட்டார்.


மணியன்,

கொலையா? இப்படி ஒரு கோணம் இருக்கோ?

கொத்ஸ்,

மனோ தைரியம் இல்லாத கோழைத்தனம்தானே இந்த முடிவு. ஆமாம், கொலைக்குப் பதிவு போட்டால் பரவாயில்லையா?

சீனா,

துளசிதளம் தலைப்பில் இருப்பதைக் கவனிக்கலையா நீங்க?


வல்லி,

யாருக்குமே அவர் நடிப்பில் ஈடுபாடில்லைன்னு தெரியுது.

ஆனால் நடிப்பு என்பதுக்கு அளவு கோல் இருக்கா?

தஞ்சாவூரான்,


தற்கொலை எதற்கும் முடிவல்ல என்பது ரொம்பச் சரி.

உண்மைத்தமிழன்,

எப்பவும் கேமெரா முன்னாலேயே இருக்கணுமா? உலகத்தில் பிழைக்க வேற வழியே இல்லையா?

வாழ நினைத்தால் வாழலாம்,வழியா இல்லை பூமியில்......
பிள்ளைகள்தான் பாவம். ப்ச்....

said...

பாவம் அவர் மனைவியும் குழந்தைகளும்.

said...

@டீச்சர் குனால் சென்னையில் இருந்தபோது.எங்கள் பிளட்டில்தான் குடி இருந்தார்.நாங்கள் 3 அவர் B4. நேரம் கிடைக்கும்போது வந்து பேசிக்கோண்டு இருப்பார்.அவருடைய முதல் பெண் குழந்தை எங்கள் வீட்டில் விளையாடிக் கொண்டுஇருக்கும். அனுவும் நல்ல பெண்மனிதான். ஒருதடவை அவ்ருடைய குழந்தையின் பிறந்தநாளுக்கு சாப்பிட அழைத்துவிட்டு சாப்பாடு வர நேரமானதால் வீட்டிற்கே பிரியாணியை(அசைவம்) கொடுத்து அனுப்பினார்.
நாங்கள் சைவம் என்று தெரிந்ததும் நேரில் மனைவியுடன் வந்து மன்னிப்பு கேட்டார்.ஆனால் மனைவியுடன் அவ்வப்போது சண்டை வரும் அது தற்கொலைவரை போகும் என்று எதிர்பார்க்கவில்லை அது முடிவும் இல்லை

said...

வாங்க ரசிகன் & குசும்பன்.

குழந்தைகளை நினைச்சால்தாங்க ரொம்ப மனசுக்குக் கஷ்டமாப்போயிருது.

வாங்க தி.ரா.ச.

இதுவரை வெளிவராத செய்தி சொல்லி இருக்கீங்க.

நல்ல நடிகனா இல்லேன்னாலும் நல்ல மனிதராத்தான் இருந்துருக்கார் போல.
(எது நல்ல நடிப்புன்னு இன்னும் எனக்குப் புரியலை )

குடும்பமுன்னா சண்டை வராமலே இருக்குமா? அது எப்படிங்க? அதுக்குப்போய்..............(-:

ஒரு சின்ன வாக்குவாதம்கூட இல்லேன்னா..... சிலபேர் இப்படிச் சொல்லும்போது என்னால் நம்பவே முடியறதில்லை.