Tuesday, August 14, 2007

வைரம் ஜொலிக்கட்டும்

இந்திய சுதந்திரத்தின் வைரவிழாவைக் கொண்டாடும்

அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய வாழ்த்து(க்)கள்.





இங்கே எங்க கிறைஸ்ட்சர்ச் டவுன்ஹாலில் நாளைக் காலை எட்டுமணிக்கு, இந்தியக் கொடியை ஏத்தி 'ஜனகண மன' பாடப்போறோம்.















28 comments:

said...

ஹூம்! படம்-பார்சலில் வந்திருந்தா இன்னும் கொஞ்சம் சந்தோஷமாக இருந்திருக்கும்.
இங்கு Embassy தவிர வேறெங்கும் பாடமுடியாது.

said...

அங்க இந்தியா பரேட் எல்லாம் உண்டா? அது பத்திப் பதிவு வருமா?

வாழ்த்துக்கள் டீச்சர் - உங்களுக்கும் மற்ற மாணவர்களுக்கும். :))

said...

வாங்க குமார்.

பார்ஸல் வந்துசேர நாளாகும்:-) எல்லாம் அங்கே
'கோமளவிலாஸ்' சமாச்சாரம்தான்.

இங்கேயும் எம்பஸியில் நல்லா கொண்டாடுவாங்க.

said...

வாங்க கொத்ஸ்.

நாங்க என்ன நியூஜெர்ஸியிலா இருக்கோம்?

பரேடு நம்மூரில் நஹி. ஞாயித்துக்கிழமை
நம்மூர் இண்டியன் கல்ச்சுரல் க்ளப்லே
ஒரு பாட்லக்.

இந்தக் கொடியேற்றமே எனக்குத் தெரிஞ்சு இந்த 20 வருசத்தில்
முதல்முறையா நடக்குது.

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

ஸேம் டு யூ!
20 வருஷத்துக்குப்பிறகு கொடியேற்றம்! ஜனகனமன..வேறு பாடப்போகிறீர்கள்! பாடல் ஞாபகத்தில் இருக்கா?

said...

வாங்க நானானி.

அதெல்லாம் மறந்துருமா என்ன?
ஜமாய்ச்சுப்புடமாட்டேனா? :-)

said...

வாழ்த்துகள் துளசி.

said...

துளசியக்கா!
உங்களுக்குத் தாய்நாடு; எங்களுக்குப் பாட்டியின் நாடு.
ஜொலிக்கட்டும்.

said...

டீச்சர், நீங்களாச்சும் ஜிலேபி கொடுக்குறீங்க.. எங்க நாட்டுல எங்கன பார்த்தாலும் நாலணா மிட்டாய்தான் டீச்சர்.. 60 வருஷமா மிட்டாய் கொடுத்தே சுதந்திரம் கொண்டாடுற நாடு எங்க நாடுதான்..

said...

HAPPY INDEPENDANCE DAY. THULASI .
NAM NAADU MELUM SIRAPPU PErrU
NANRAAKA IRUKKA VENDUM.

said...

வாங்க டெல்ஃபீன்.

இன்னிக்கு லீவு உங்களுக்கு.
ஜாலியா தமிழ்மணத்தில் உலாத்தலாம்:-)

said...

வாங்க ஜெஸிலா.

நன்றி. நமக்கு லீவு இல்லேன்னா என்ன?
கொண்டாடாம வுட்டுருவமா? :-)

said...

வாங்க யோகன்.

அதென்ன தாய் நாடு? தகப்பன் நாடும் அதுதான்ப்பா எங்களுக்கு:-)

said...

வாங்க உண்மைத்தமிழரே.

மிட்டாயில் 'அல்வா'வும் அடக்கம்தானே? :-)))))

உங்கள் 'வெற்றி'க்கு மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்து(க்)களும்.

said...

வல்லி,

நன்றிப்பா.

said...

ஜாங்கிரி ஜாங்கிரி ஜாங்கிரி...அடடா! எனக்கு ரொம்பப் பிடிக்குமே...வேண்டாம். வேண்டாம். இனிமே இதெல்லாம் குறைச்சிக்கனும். அதான் நல்லது.

ஆனாலும்..

எல்லாருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.

Anonymous said...

நாங்களும் கொண்டாடப் போறோமே ! அட நம்பலைன்னா இங்க பாருங்க!
http://www.india.uni-bayreuth.de

http://bayreuthindians.googlepages.com/invitation

நீங்க ஷிலேபி கொடுத்ததுக்கு நான் அழைப்பே கொடுத்துட்டேன்

said...

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் டீச்சர். உங்க பள்ளிக்கூடத்துக்கும் லீவா இன்னக்கி?

said...

டீச்சர், ரொம்ப சக்கரையா காட்டி காட்டி வெறுப்பேத்துறீங்க :( இதெல்லாம் நான் சாப்பிட இன்னும் ஒரு மாசம் காத்துருக்கனும்!

எனிவே, உங்களுக்கும் உங்க 'சக்கரகட்டி' கோபாலய்யாவுக்கும் 'இனிய' சுதந்திரதின வாழ்த்துக்கள். நன்றி.

said...

தேங்கஸ் aunty...இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

said...

சுதந்திர தின வாழ்த்துக்கள் மேடம்!

said...

வாங்க ராகவன்.

//.....வேண்டாம். வேண்டாம். இனிமே
இதெல்லாம் குறைச்சிக்கனும். அதான் நல்லது.//


உங்க பேரிலேயே 'ஜிரா' இருக்கு. கவனமாத்தான் இருக்கணும்.

என் வயசுக்கு, இனி இதையெல்லாம் தின்னாமவிட்டா, அப்புறம் இதுக்குன்னே ஒரு
பிறவி எடுத்து வரணுமே! 'மீண்டும் பிறவாமை' வரம் கிடைச்சிருக்கறதாலே இப்பவே
கொஞ்சம் ஒரு கை பார்த்துக்கிட்டு இருக்கேன். சிங்கையிலிருந்து தினமுமா வருது?
எப்பவாவதுதானே?

said...

வாங்க ஜான் போஸ்கோ.

உங்க அழைப்பிதழ் கிடைச்சது. நன்றி.
தூள் கிளப்பறீங்க போங்க. ஜமாயுங்க.

said...

வாங்க காட்டாறு.

லீவு எல்லாம் இல்லை. காலையில் கொண்டாடிட்டுக்
கடமையைச் செய்யப் புறப்பட்டாச்சு.
என் கடன்............(எழுத்துப்)பணி செய்வதே:-))))

said...

வாங்க தஞ்சாவூரான்.

அதென்ன ஒரு மாசம்? விரதமா? இல்லே, வீட்டம்மா ஊருக்குப் போயிருக்காங்களா?

'சக்கரக்கட்டி கோபாலுக்கு' இனிப்பே பிடிக்காது.( ஹூம், இப்படியும் சிலர்!!!)
நாந்தான் நம்மூட்டுலே வெட்டுறது. எங்கம்மாகூட சொல்வாங்க, அவுங்க மேலே சக்கரையைத்
தூவிட்டா நான் அவுங்களையே சாப்புட்டுருவேன்னு. அதே போலத்தான் ஆச்சு. ச்சின்ன வயசுலேயே
அவுங்களை முழுங்கிட்டேன்.ஆனா........ சக்கரை தூவாமலேயே(-:

said...

ஆஹா.......... அவந்திக்கா!

இந்தியாவின் இளைய தலைமுறையே!
வருக வருக வருக.

நாளைய உலகம் உங்க கையில்தான். கொஞ்சம் பார்த்து எதாவது செய்யுங்க.

said...

வாங்க ஜீவா.

நன்றி. உங்களுக்கும் எங்கள் அன்பான வாழ்த்து(க்)கள்.

said...

சுதந்திரதின நல்வாழ்த்துகள்!