Saturday, August 25, 2007

மாவேலி நேரத்தே வந்நூ

கேரளாவுக்கு போற வழியிலே, இன்னிக்கு இங்கே கிறைஸ்ட்சர்ச்சுக்கு வந்துட்டு போனார் நம்ம மாவேலித் தம்புரான்.


அவருக்கு அருமையான பூக்களத்தோடும் பதினெட்டுவகை ஓண சத்யாவோடும் வரவேற்பு கொடுத்து அனுப்பி இருக்கோம்.


'மாவேலி வருந்ந திவசம் மனுஷரெல்லாம் ஒண்ணுபோல' ன்னு ஒரு சொலவடை இருந்தாலும், இன்னிக்கு எங்க கேரளா அசோஸியேஷன் தலைவர் சொன்னது என்னைக் கொஞ்சம் (!) சிந்திக்க வச்சது.


"இயற்கையின் நிகழ்வுகளைப் பார்த்தால் ஒரு புல் கூட ஒண்ணைப் போலவே ஒண்ணு இருக்காது. அப்படி இருக்கும்போது மனுஷர்கள் எல்லாம் எப்படி ஒரே போல இருக்கமுடியும்? "


நியாயம்தானே? இங்கேயும் சொல்வாங்க, ஸ்நோ விழும்போது ரெண்டு 'ஸ்நோ ஃப்ளேக்ஸ்' கூட ஒண்ணைப்போல ஒண்ணு இருக்காது. பில்லியன் கணக்குலே விழும் பனித்துகள் இப்படியா!!!!!



ஒண்ணுவேணுமுன்னா இப்படிச் சொல்லிக்கலாமா?


மாவேலி வருந்ந திவசம் மாத்திரம் மனுஷரெல்லாம் ஒண்ணுபோல:-))))

இன்று ஒரு நாளாவது நமக்கிடையில் இருக்கும் கருத்து வேறுபாடுகள், சண்டைகள் சச்சரவுகள் எல்லாம் கொஞ்சம் தூர நிறுத்திட்டு மனமகிழ்ச்சியோடு எல்லாரும் இந்த ஓணப் பண்டிகையைக் கொண்டாடலாமா?

அனைவருக்கும் இனிய ஓணம் பண்டிகைக்கான வாழ்த்துக்கள்.

எல்லாவர்க்கும் பொன் ஓணத்திண்டே ஆசம்ஸகள். லோகம் நன்னாயி வரட்டே!






இந்த வருசத்தின் பூக்களம் நம்ம கேரளா சங்கத்தின் ஆண்கள் உண்டாக்கியது. அதனாலெ பூவும் ஸ்பெஷல் பூவு.

அப்படி என்ன பூவு?

தேங்காய் பூ !!!!






திருவாதிரைக் களி ( இது இல்லாம ஓணக் கொண்டாட்டமா? )


முக்கிய விருந்தினரை விளக்கு ஏத்தி வைக்கச் சொன்னோம். ஆளுக்கு ஒரு திரிதான்.



உள்ளூர் எம்.பி.& இப்ப ஆளும் கட்சியாயிருக்கும் லேபர் அரசில் Chief Whip .இவருக்குக் கூடிய சீக்கிரம் கல்யாணம் ஆகப்போகுது, ஒரு பையனுடன்.

நியூஸியின் லேபர் கட்சி பாராளுமன்ற அங்கத்தினர் டாக்டர் அஷ்ரஃப் செளதரி இந்த விழாவுக்காக வந்திருந்தார். (120 ஓட்டு இருக்கே விடமுடியுமா? )

இவரைப் பற்றிய சில தகவல்கள்.


இவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். பஞ்சாபில் பிறந்து வளர்ந்தவர். நியூஸி வந்தது 1976 வருடம்.


இவருடைய பதவியேற்கும் வைபவத்தில், திருக்குரானைக் கையோடு கொண்டுவந்து , அதன் மீது சத்தியம் செய்து பதவிப் பிரமாணம் செய்தார். இனி வரப்போகும் இஸ்லாமிய அங்கத்தினர்களுக்கு பயன்படட்டுமேன்னு அந்தப் புனித நூலை இங்கே பாராளுமன்றத்திற்கே கொடுத்துட்டார். அப்படியே மரபையும் மாத்திட்டார்ன்னு வச்சுக்குங்க. நியூஸியின் முதல் எத்னிக் எம்.பி.


அவரோடு அறிமுகமானப்ப, அவர் ஹிந்தியில் பேச ஆரம்பிச்சுட்டு, உடனே உங்களுக்கு ஹிந்தி தெரியுமான்னுகேட்டார்.


"ஆப்கோ ஹிந்தி ஜாந்தாஹை கியா? "


"க்யோன் நை. சப்ஜன் ஹிந்தி பட்னே ச்சாஹியே போல்கி தம்கி தியானா ஆப் நார்த் லோக்"


" சவுத் லோக் கோ தேக்தே ஹம்கோ பஹூத் டர் லக்தா ஹை"


" அச்சா பாத் ஹை. அய்ஸாகி ஹோனா ச்சாஹியே"


(ஒவ்வொரு வரிக்கிடையிலும் பலத்த சிரிப்புன்னு போட்டுக்குங்க.)



கலை நிகழ்ச்சியில் நம்ம பாய்ஸ் ஒரு ஹிந்திப் பாட்டைப் பாடுனாங்க. நம்ம கேரள உச்சரிப்பில்.


திகைச்சுப்போனவர், அவருடைய உரையை நிகழ்த்தும்போது நல்ல ஹிந்தியில் சற்றுநேரம் பேசினார்.


" ஹமாரா பாய்ஸ் கா கானா கைஸா தா? கான் பக் கயா கியா"



"எங்கே ஹிந்தி மறந்துறப் போகுதோன்னுதான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு ஹிந்தியில் பேசிட்டேன்"



(ஒவ்வொரு வரிக்கிடையிலும் பலத்த சிரிப்புன்னு போட்டுக்குங்க.)
பதிவின் பத்திகளுக்கிடையில் கூடுதலா இடம் இருக்கா? கவலையே இல்லை. அதுலே மகிழ்ச்சி & ஆனந்தம் நிரப்பி வச்சுக்கலாமா?

27 comments:

மணியன் said...

என்ன, ஓண சத்யா பலமா, ஒவ்வொரு வரிக்கும் இத்தனை இடைவெளி ? மாவேலி உங்க ஊரைப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியடைந்து எல்லோரும் நலமே என்று அங்கிருந்தே போய்விடப் போகிறார், மாவேலி தேசத்து தமாஷெல்லாம் காணவேண்டாமா ?

120 பேருக்கும் ஓண ஆசம்சயாக்கள் !!

Unknown said...

ஓணம் நல் வாழ்த்துக்கள்.

siva gnanamji(#18100882083107547329) said...

//இன்று ஒருநாளாவது........ கொண்டாடலாமா?//

இப்ப என்னத்த சொல்லிட்டீங்க? அதுக்கு ஏன் கோபால் இப்படி நமுட்டு
சிரிப்பு சிரிக்கிறார்?

துளசி கோபால் said...

வாங்க மணியன்.

இடைவெளியில் சிரிப்பைப் போட்டு நிரப்பிக்கலையா? :-)))))

ப்ளொக்கர் பகவானின் அருள் இன்னைக்கு இப்படி:-)

சத்யா பலம்தான். என்றவகையில் 'ஓலன்' உண்டாக்கி.

துளசி கோபால் said...

வாங்க டெல்பீன்.

சிங்க மாசத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரம் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை
இருக்கும் 10 நாட்களும் விழா நாட்கள் தான். ஆனால் இப்ப எல்லாப் பண்டிகையையும் போல இதுவும்
ரொம்பச் சுருங்கிப்போச்சு. மறுநாடன் மலையாளிகளுக்கு இதையெல்லாம் வலிச்சுக்கட்டிப் பத்துதிவசம்
செய்ய முடியுதா? (-:

கேரளத்திலும் கோயில்களில் மட்டும்தான் 10 நாள் அலங்காரம் எல்லாம்.

துளசி கோபால் said...

வாங்க சந்துரு.

வாழ்த்துகளுக்கு நன்றி.
முதல்முறையா நல்ல நாளாப் பார்த்து வந்துருக்கீங்க?
நலமா?

துளசி கோபால் said...

வாங்க சிஜி.

கோபாலுக்கு 'நமட்டு' வகையறா எல்லாம் தெரியாது. 'நீங்கதான் சொல்லித்'தரணும்.'
எல்லாம் வெடிச்சிரிப்புதான். 33 வருச பயிற்சி பாழாப்போயிருமா என்ன? :-)))))

வடுவூர் குமார் said...

உனேநே தேக்கே முஜே பி டர் லக்தா ஹை!
:-))

துளசி கோபால் said...

வாங்க குமார்.

வரவர எ(ல்லாத்)துக்கு(ம்)தான் 'டர்' ஆகணுமுன்னு ஆகியிருக்கு.:-))))

மங்கை said...

சேச்சி...அது நிங்களல்லே.. முண்டுவில சேச்சி வல்ய சுந்தரமாயிட்டு உண்டு..:-))

மங்கை said...

அந்திரிக்கு இனிய ஓணத்திண்டே ஆசம்ஸகள்...

நீங்க தானே சொன்னீங்க எல்லாரும் இன்னைக்காவது ஒரே மாதிரி நினைப்போம்னு..அதான்..;-))

வல்லிசிம்ஹன் said...

HAPPY ONAM GREETINGS THulasi.
thank you.
MalayaaLap poNNu oNNu unggaLai maathiriye nikkiRathe.:)))

MP KalyaaNaththukku enggaLukku azhaippu uNdaa.??
Pathivar maanaattukkum serthu
vacchikka sollunga.
rendu saappaadu kidaikkum.....:))))

குமரன் (Kumaran) said...

உங்க ஊருல பையன் பையன் கல்யாணம் பண்றது சட்டப்படி ஆகியாச்சா? எங்க ஊருல இன்னும் அதுக்கு சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க.

என்னங்க இப்படி சொல்லிட்டீங்க. சௌதரி மட்டுமா 120 ஓட்டுகளுக்கு வந்தாரு? சீஃப் விப்பும் அதுக்குத் தானே வந்தாரு?!

//ஹஸ்த்தம் நட்சத்திரம் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை//

இதைப் படிச்சவுடனே கம்சனுக்குப் பயந்து 'அத்தத்தின் பத்தாம் நாள்'ன்னு யசோதை கண்ணனோட நட்சத்திரத்தை மறைச்சு சொல்றதா பெரியாழ்வார் பாசுரம் வரும். அது நினைவுக்கு வந்துருச்சு. :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மங்கை சொன்னாப்ல நீங்க தகதக புடவை கட்டி அழகு .

துளசி கோபால் said...

வாங்க மங்கை.

நமக்குத்தான் எல்லாம் ஒண்ணு ஆச்சேப்பா.
அதனாலே 'அந்திரிக்கி' 'ஓணம்' 'க்ரீடிங்ஸ்' 'செப்பேஸ்தீரா'? :-))))

ஈ முண்டு மூணு கொல்லமாயிட்டுக் காத்திருக்குகயாணு. எப்பவும்
பூக்களம் நாந்தான் போடறேன்றதாலே கட்டிக்கச் சான்ஸே இல்லாம இருந்துச்சு.
குனிஞ்சு நிமிர்ந்து, கீழே உக்கார்ந்து அலங்கரிக்கறப்போ முண்டு அவுந்து போயிட்டா?

இந்த வருசம் நம்ம பாய்ஸ் பூக்களம் போட்டதாலே எனக்கும் ஒரு
ச்சான்ஸ் கிடைச்சிருச்சு:-)))

துளசி கோபால் said...

வாங்க வல்லி.

கல்யாணத்துக்கு எங்களுக்கும் அழைப்பு இல்லைப்பா. எதோ ஒரு
பஸிஃபிக் தீவுகளில் கல்யாணம் & ஹனிமூன் முடிச்சுக்கப் ப்ளானாம்.
தனியாப் பேசிக்கிட்டு இருந்தப்பச் சொன்னாரு. கேட்டுக்கிட்டோம்.

பதிவர் மாநாட்டுக்கு வந்து சேருங்க முதலில். திரும்பி ஊருக்குப்போறவரை
சாப்பாட்டுக்கென்ன குறைச்சல் துளசிவிலாஸில்:-)))

துளசி கோபால் said...

வாங்க குமரன்,

நாங்க எல்லா மரபையும் ஒடைச்சு ரொம்ப நாளாச்சு. மாற்றங்கள்ன்னு சொன்னதும்
முன்னாடி நிக்கும் நியூஸி. அதிலும் எங்க 'அம்மா' உண்மையான 'புரட்சிச் செல்வி'யாக்கும்.

வந்தவங்க எல்லாமே இப்போதைய ஆளும் கட்சிதான். இருக்கையைப் பிரிய நேரிட்டா?
ஒரு பயம்தான்.

துளசி கோபால் said...

வாங்க முத்துலெட்சுமி.

//தகதக புடவை ......அழகு .//

புடவையைத்தானே சொல்றீங்க? அழகுதாம்ப்பா. எல்லாம் நம்ம
தமிழ்நாட்டு நெசவுதான். ரொம்ப மிருதுவாவும் இருக்கு. ரொம்ப நல்ல
காட்டன். விலையும் கொஞ்சம் கூடுதல்தான். அதான் மாவுக்கேத்த பணியாரம்.

மாசிலா said...

மிக

கலகல

நன்றாக

கலகல

எழுதி

கலகல

இருக்கிறீர்கள்.

கலகல

ஓணம்

கலகல

பண்டிகை

கலகல

வாழ்த்துக்கள்!

கலகலகலகலகலகல!!!

;-)

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி துளசி கோபால்.

துளசி கோபால் said...

வாங்க மாசிலா.

இடைவெளியை 'இட்டு' நிரப்புனதுக்கு நன்றி.
'கலகல'ன்னு மகிழ்ச்சிப் பொங்கி வழியுது

இலவசக்கொத்தனார் said...

சேச்சி, மங்கை சம்சாரிச்சது சத்யமாணு கேட்டோ!!

இலவசக்கொத்தனார் said...

ஆ! டீச்சர், மறன்னு போயி. நிங்களுக்கும் சக ஸ்டூடண்ட்ஸுக்கும் நம்முட பொன் ஓணத்திண்டே ஆசம்ஸகள்.

SurveySan said...

எல்லாவர்க்கும் பொன் ஓணத்திண்டே ஆசம்ஸகள். லோகம் நன்னாயி வரட்டே!

வரட்டே வரட்டே!

துளசி கோபால் said...

வாங்க கொத்ஸ்.

எப்படியோ நம்ம வகுப்புலே எல்லாரும் மலையாளம் கத்துக்கிட்டாங்க. அதுவே ரொம்ப நல்ல விஷயம்தான்.
பேசாம ஹிந்திக்குப் பதிலா மலையாளத்தை தேசிய மொழியாச் செஞ்சிருக்கலாம். இவுங்க இல்லாத இடமே
இல்லை:-))))

மங்கையை வழிமொழிஞ்சதுக்கும், வாழ்த்து(க்)களுக்கும் நன்றி .

துளசி கோபால் said...

வாங்க சர்வேசா.

//வரட்டே வரட்டே..//

சர்வேசனே சொன்னபிறகு அப்பீல் ஏது? :-))))

Ayyanar Viswanath said...

ஓணம் வாழ்த்துக்கள் டீச்சர்

துளசி கோபால் said...

வாங்க அய்யனார்.

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் எங்கள் வாழ்த்து(க்)கள். அங்கே
உங்க ஊரில் ஜேஜேன்னு இருந்துருக்குமே.