Friday, August 03, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 4

நடப்பவைகளைப் பார்க்கும்போது, அதிலும் நெருங்கியநண்பர்கள் உறவினர்கள் வாழ்க்கையில் திடீரென்றுநடந்துவிடும் உயிர் இழப்புகள், நிலையாமையை நினைவுபடுத்திக்கொண்டேஇருக்கிறது.

உலகில் பிறந்த கணம் முதல் நம்முடைய நாட்கள் எண்ணப்பட்டு, தினம் ஒவ்வொன்றாகக் குறைந்துகொண்டே வரும் என்பதை இந்தமாதிரி நிகழ்வுகளில்தான் உணர்கின்றோம். இருக்கும் கொஞ்ச காலத்தில் என்னென்ன செய்தோம், செய்திருக்கலாம்..........

யோசனைகள்.......... யோசித்துக்கொண்டே .............


நண்பர் ஆசிஃப் அவர்களின் மனைவியின் ஆன்ம சாந்திக்கும், நண்பர் குடும்பத்தினருக்கு இவ்விழப்பைத் தாங்கும் மனவலிமை கிடைக்கவும் கடவுளை வேண்டுகின்றேன்.


காலனும், காலமும் ஓய்வெடுப்பதே இல்லை (-:

------------------------------------------------------------------------------------


பெங்களூர்லே இருந்து இங்கே மேல்படிப்புப் படிக்கிறதுக்காக வந்துருக்காருன்னு ஒரு இளைஞரைக் கூட்டிக்கிட்டு வந்தார் நம்ம நண்பர். இவரும் இளைஞர்தான். பெங்களுருக்காரு ஆர்கிடெக்ட் படிப்பு முடிச்சுட்டு, இங்கே வந்துருக்கார்.


ஆஹா.......... ஆர்க்கிடெக்ட்ன்னு காதுலே விழுந்ததும் ச்சும்மா இருப்போமா? வீட்டோட ப்ளானைக் காமிச்சோம். அவருக்கும் ரொம்பப் பிடிச்சுப்போச்சு போல. ப்ளானில்தான் வீட்டு முன்புறம்,பின்புறம்னு நாலு பக்கமும் எப்படி இருக்குமுன்னு எலிவேஷன் படம் வரைஞ்சு கொடுத்துருக்காருல்லெ பாய்ட்.


அதுவுமில்லாம அதை ஒரு 3D லே போட்டுக் காமிக்கறேன்னும் சொல்லி இருக்கார்.இந்த நண்பர் பெயர் ஜெயந்த், ( ராஜஸ்தானாம் சொந்த ஊர்) என்கிட்டே ஒரு வரைபடம் கொடுங்க. இந்த வீட்டோட மாடல் செஞ்சு தரேன்னு சொன்னார். கவுன்சில், லைட்டிங்,ப்ளம்பிங், கூரை, ஜன்னல், கதவு லொட்டு லொசுக்குன்னு ஒவ்வொரு விஷயத்துக்கும்,அதுக்குண்டான நிறுவனங்களில் ப்ளானைக் கொடுக்கணுமேன்னு நிறைய(ஒரு 100 இருக்குமோ?) ஃபோட்டோ காப்பி எடுத்து வச்சுருந்ததுலே ஒண்ணு கொடுத்தோம்.ரெண்டு வாரத்துலே 'வீட்டைக் கொண்டுவந்து கொடுத்தார்' .


ஹப்பா............. அழகாத்தான் இருக்கு.கூரை கூட நாம் தெரிஞ்செடுத்த 'நியூ டெனிம் ப்ளூ' கலருலே அட்டையாலே செஞ்சு ஜமாய்ச்சுட்டார். ம்ம்ம்........ வெறும் ப்ளூ கலராத் தெரியுதோ? 'கட்டுன வீட்டுக்குப் பழுது சொல்றது எவ்வளோ சுலபம்' பாருங்க:-)



தினமும் மானசீகமா அந்த வீட்டுக்குள்ளே புகுந்து புறப்பட்டுக்கிட்டு இருந்தேன். 'இந்த வீடு இப்ப ஷோ கேஸ்லே இருக்கு':-) நம்ம வீட்டுக்கு வர்ற பிள்ளைங்க, இதைப் பார்த்தா ஆச்சரியத்தோட,இந்த வீடுதான் இந்த வீடா? ன்னு கேக்கறப்போ ஜெயந்தை நினைச்சுக்கறதுதான்.



சமையலறை 'டிஸைனர்' ஒருத்தரைப் போய்ப் பார்த்து,நம்ம சமையல் அறை அளவைக் கொடுத்தோம். 'டிஸைனர் கிச்சன்' வருது!நம்ம சமையல் அறை 13 அடிக்கு 13 அடி. எல்லாரும் இது ரொம்பப் பெருசுன்னு சொல்றாங்க. ஆனா இப்ப நம்ம இருக்கறதுலேயும் இதே அளவுதானே இருக்கு? இதையும்தான் பெரூஊஊஊஊசுன்னு வர்றவங்க சொல்றாங்க. என்னத்தைப் பெருசோ, ஒரேசமயம் 'ரெண்டு' மூணு பேர் இருந்து சமைக்கணுமில்லை:-))))



நம்ம டிஸைனர் பேரு 'ரேச்சல்'. ஒரு நாலஞ்சு தடவைப் போக வேண்டியிருந்தது. 'இவங்களும்' நாம என்ன சொல்றோம்னு கேட்டுட்டு,'அவுங்களுக்குப் பிடிச்சமாதிரி' ஒண்ணை வரைஞ்சு வச்சிட்டாங்க. இந்த ஆளுங்களுக்கு இதே வேலையாப் போச்சு! இத்தனைக்கும் நம்ம தேவை என்னன்னு இவரு ஒரு படமா வேற வரைஞ்சு தந்தார். நான் இன்னும் ஒரு படி மேலே போய், இங்கே 'ரெடிமேட்' ஆ கிடைக்கற டிஸைன் கட்டிங் எடுத்து, வெட்டி ஒட்டி ஒண்ணு தயார் செஞ்சும் காண்பிச்சேன். அதையெல்லாம், தலையைச் சுத்தி தூக்கிக் கடாசிட்டு,அவுங்க வேலையை அவுங்க பாத்தாங்க!
அது வேணாம், எங்களுக்கு இப்படி,இப்படி இருக்கணும்னு ரெண்டு மூணுவாட்டி திருப்பித்திருப்பிச் சொல்லி அவுங்க மண்டையிலே ஏத்தணும்!



ஒருவழியா அதுவும் சரியாச்சு. கொஞ்சம் 'மாடர்னா' இருந்துச்சு. வெள்ளைக்காரன் சமைக்க அரிசி எவ்வளவு வாங்குவான் தெரியுமா?அரைக் கிலோ. ஆனா, நாம? ஒரு 25 கிலோ மூட்டை வாங்கறோமா இல்லையா? அதுக்கும்,வகைவகையான பருப்புங்க,மசாலா அது இதுன்னு சேமிச்சு வைக்க நிறைய அலமாரிங்க வேணாமா? ஒரு மாதிரியா, நாம சொன்னதுபோல அவுங்க வரைஞ்சாங்க! 1600 டாலர் செலவாச்சு.



இப்ப, அதை செய்யறதுக்கு ஒரு 'ஜாய்னர்'வேணுமுல்லே. அதுக்கு மூணு இடத்துக்கு அனுப்பி தோராயமா எவ்வளவு செலவு ஆகும்னு பார்த்துச் சொல்றேன்னும் சொன்னாங்க. அதுக்கு முதல்லே, அடுக்களையிலே, பெஞ்ச் டாப், கப்போர்டு இதுக்கெல்லாம் என்ன கலர்,என்ன மெட்டீரியல்னும் பாக்கணும். மார்பிள், க்ரானைட் எல்லாம் ரொம்பவே நல்லா இருக்கு. ஆனா நம்ப 'பட்ஜெட்'உதைக்குதே! கடைசியில் ரேச்சல் வாங்கித் தந்த quote களின் படிப் பார்த்தா, வெறும் அடுக்களை மட்டும்தான் கட்டிக்கணும். நாமெல்லாம் ஊர்க்குருவி. அவ்வளவு மேலே பறக்க முடியாது.




'காம்பரமைஸ்' இதோட முழு அர்த்தமும் இப்பத்தான் எனக்குப் புரியுது. 'திடீர் புத்தர்' ஆனேன்! ஆசையே துன்பத்திற்குக் காரணம்!என்ன ஞானோதயம்...........எப்ப வந்துருக்குன்னு பாருங்க!



நமக்குத் தெரிஞ்ச ஒரு தோழி வீட்டுலே இருந்த அடுக்களையைப் புதுப்பிச்சாங்களா,அதை வந்து பாருங்கன்னு சொல்லிக்கிட்டிருந்தாங்க. ஒரு நாளு அங்கெ போனோம் பார்க்கறதுக்கு. சின்ன இடமா இருந்தாலும் நல்லா அருமையா இருந்துச்சு. இப்ப திடீர்னு அது எங்களுக்கு நினைவு வந்துச்சு. அந்த அடுக்களை செஞ்ச ஆளையும் கேட்டுப் பாக்கலாம்னு முடிவு செஞ்சு அதுக்கும் ஏற்பாடு செஞ்சோம். அந்த ஆளு 'ஹாங்காங் சீனர்'.அவரு அவரோட வீட்டுக்கு நம்மக் கூப்பிட்டாரு. அவரு வீட்டுலே போய்ப்பாத்தா, அம்மாடீ..... என்ன அட்டகாசமான அடுக்களை! ரொம்ப விசாலமா, நிறைய அலமாரிங்களொட, நல்ல க்ரானைட் போட்டு பள பளன்னு இருக்கு! அவரேதான் செஞ்சிருக்கார். உடனே தீர்மானிச்சுட்டேன், அவரைக் கொண்டே நம்ம அடுக்களையை முடிக்கலாம்னு.



அவர் பேரு 'கிங்'. 'கிச்சன் கிங்'ன்னு வச்சிருக்கலாம்! அவரு டிஸைனைப் பாத்துட்டு, சில மாறுதல் செஞ்சாரு. நமக்குப் பிடிச்சிருந்தா ஏத்துக்கலாம். இல்லைன்னா, 'ரேச்சல்' வரைஞ்சபடி செய்யறேன்னார். இவரு ச்சீனர்ன்னாலும், நம்ம ஆசியாவைச் சேர்ந்தவர். முக்கியமா அரிசி திங்கறவர். நம்மைப் போலவே சிந்திக்கிறார்! அவரு சொல்லற மாத்தமும் ஞாயமாத்தான் இருக்கு.'சிம்மெட்ரிக்கலா' இருக்கணும்னும் சொல்றார். நல்ல உழைப்பாளி மட்டுமில்லை, நேர்மையா இருக்கார் அப்டின்னு தோணுச்சு. சரின்னு அவரையே செய்யச் சொல்லணும்னு பேசிகிட்டோம். 'கிங்' அதற்குண்டான படங்களையெல்லாம் கம்ப்யூட்டரில் போட்டு, ப்ரிண்ட் எடுத்துக் கொடுத்துட்டு, மூணு வாரம் விடுமுறையிலே அமெரிக்கா போயிட்டார் மாமனாரை பார்க்க. நமக்கும் 3 வாரம் இருக்கு, இதைப் பத்தி ஆலோசிக்க!



எங்கிட்டே ஒரு பழக்கம்( கெட்ட/நல்ல எப்படிவேணா எடுத்துக்குங்க)இருக்கு. ஒரு பொருளை வாங்கணும்னா 100 தடவை யோசிப்பேன்.வாங்கினபிறகும், அதுக்கு சரியான விலை கொடுத்தமா இல்லை ஏமாந்துட்டமான்னு ஒரு 1000 தடவை 'செக்' செய்வேன். "இந்தப் பழக்கம் எப்பத்தான் உன்னை விட்டுப் போகப்போதோ" ன்னு சொல்லிகிட்டிருந்த கோபாலையும், இப்ப இது மெதுவா தொத்திக்கிச்சு.ஆனா என்னளவு மோசம் இல்லை!



நேரம் கிடைக்கறப்பல்லாம், அங்கெ, இங்கென்னு போய், எல்லாத்துக்கும் விவரம் சேகரிச்சுகிட்டே இருந்தோம்.உண்மையைச் சொன்னாவிவரம் ரொம்பவே கூடிப் போச்சு! அதுனாலெ முடிவு எடுக்கறதும் ரொம்பக் கஷ்டமாவும் ஆயிருச்சு! ஒண்ணைவிட ஒண்ணு நல்லா இருக்கு. எதைஎடுக்கறது, எதை விடறதுன்னு வம்பாவேப் போயிருச்சுங்க.



நாளு ஓடிகிட்டு இருக்கு! குடித்தனக்காரைக் காலி செய்யச் சொல்லி 'நோட்டீஸ்' குடுத்து 6 வாரமாகப் போகுது! இது வீட்டுச் சொந்தக்காரருக்கு இருக்கற சட்டம். ஆனா, குடித்தனக்காரங்க காலி செய்ய நினைச்சா அவுங்க 3 வாரம் 'நோட்டீஸ்' தந்தா போதும்!



இப்பத்தான் ஒரு 'ஐடியா' வந்தது. இந்த வீட்டை'க் கட்டும் விஷயத்தையே ஒரு 'ஜர்னல்'லாக எழுதினால் என்ன? எழுதிட்டாப் போச்சு! இப்பத்தான் 'மரத்தடியில் எழுத்தாளர்'னு ஒரு அங்கீகாரம் கிடைச்சிருக்கே! எழுதிப் பழகறதுக்கும் ஒரு விஷயம் வேண்டாமா? நாளையிலிருந்து நடக்கறதை தினம் எழுதிட்டு வரணும். கூடவே 'டிஜிட்டல் கேமெரா'வில் படங்களும் எடுக்கலாம். அப்புறமா அவைகளைத் தொகுத்து ஒரு கட்டுரை வடிவில் எழுதலாம்னு முடிவு செஞ்சேன்! ஹூம்....... எல்லாம் உங்க நேரம்:-)



( அப்ப நான் பதிவராக ஆகலை. துளசிதளம் ஆரம்பிக்காத காலம் அது.)



தொடரும்................

23 comments:

said...

//நண்பர் ஆசிஃப் அவர்களின் மனைவியின் ஆன்ம சாந்திக்கும், நண்பர் குடும்பத்தினருக்கு இவ்விழப்பைத் தாங்கும் மனவலிமை கிடைக்கவும் கடவுளை வேண்டுகின்றேன்.//

ஆண்டவா.


//அப்ப நான் பதிவராக ஆகலை. துளசிதளம் ஆரம்பிக்காத காலம் அது//

என்னது இவ்வளவு நாளா இதை இவ்வளவு நுணுக்கமா ஞாபகம் வெச்சு இருக்கீங்களா? அடேக்கப்பா.

// 'கட்டுன வீட்டுக்குப் பழுது சொல்றது எவ்வளோ சுலபம்' பாருங்க:-)//
அதுசரி, எது சுலபமோ அதைத்தானே செய்ய முடியும்?

Anonymous said...

உங்க பதிவைப்பாத்துட்டு நாமளும் வீடு கட்டலாமான்னு யோசிக்க ஆரம்பிச்சாச்சு

said...

கும்மானிங் டீச்சர்

ம்ம், அப்புறம் என்னதான் ஆச்சு.

(நாங்களும் இங்க வீடு கட்றோமே,
அடடா, 24 மணி நேரம் போதலை
டீச்சர்)

Anonymous said...

//காலனும், காலமும் ஓய்வெடுப்பதே இல்லை (-://

இறப்பை தாங்கும் சக்தியை கடவுள் நண்பர் ஆசிப் குடும்பத்தாருக்கு தரட்டும். உறவினர் எல்லாம் போனதும் 10 நாள் கழித்து வீடு வெறுமனெ இருக்க மாதிரி இருக்கும் பாருங்க.வீடே சூன்யமா இருக்குன்னு தோணும். தாயை இழந்த குழந்தைகளுக்கு கடவுள் துணையிருக்கணும்.

said...

வாங்க இளா.

என்னாங்க ஞாபகம்? அப்பவே ஜர்னலா எழுதி வச்சிருந்ததைத்தான் இப்ப 'நடை'யை மாத்திப்
போட்டுக்கிட்டு வரேன்:-)))

பழமொழிகள் எல்லாம் அப்படியே உண்மை.
எல்லாம் அனுபவப்பட்டுத்தான் சொல்லி இருக்காங்க.

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

அப்ப உங்க தொடரும் வரப்போகுது:-))))

வாழ்த்து(க்)கள். ( யோசிச்சதுக்கு!)

said...

மாடல் ஆச்சு,கிச்சன் முடிவு பண்ணின மாதிரி தான்.
அடுத்து?

said...

வாங்க பெருசு.

குட்மார்னிங்.

24 மணி போதலையா? இன்னும் 24 சேர்த்துக்குங்க.:-))))

வீடு கட்டறீங்களா?
வாழ்த்து(க்)கள். அனுபவிங்க. அதாவது அனுபவிச்சுச் செய்யுங்கன்னு சொல்றேன்:-)

said...

உண்மைதான் ச்சின்ன அம்மிணி.
மனசு வலிக்குது(-:

said...

வாங்க குமார்.

இவ்வளவும் வெறும் 'ஆலாபனை'.

அடுத்த பகுதியிலே இருந்துதான் 'ரியல் ஆக்ஷன்' ( பல்லவி)
கெமரா..........ரெடி.... ஸ்டார்ட்.......ஷூட்:-)))

said...

//காலனும் காலமும் ஓய்வு எடுப்பதே இல்லை//

நூற்றுக்கு நூறு!

said...

டீச்சர், என்ன இது? மாடல் படம் (!!) எல்லாம் போடாம, இப்படி வெறும் எழுத்தாவே பதிவை ஓட்டுனா எப்படி?

said...

வாங்க கொத்ஸ்.

நம்ம தமிழ்மணம் குடும்பத்தில் நடந்த அசம்பாவிதத்துக்கு
எனக்குத் தெரிஞ்ச 'இரங்கல்' இப்படி. படம் என்னும்
ஆர்ப்பாட்டமில்லாமல் ஒரு பதிவு இன்னிக்கு.

said...

வாங்க சிஜி.

பேராசிரியர் 'நூத்துக்கு நூறு' ன்னு சொன்னதுதான் ரொம்பச் சரி.

மனசு நல்லாவே இல்லை.

said...

...ம்...சொன்னமாதிரி மனசே சரியில்லை தான்..

இங்கபதிவுல எத்தனை துல்லியமா வருடங்களானலும் எழுதறீங்க...துளசி இதுல மட்டும் உங்கள குருன்னு சொல்லிக்கிட்டாலும் என்னால இம்மி கூட உங்க பக்கத்துல வரவே முடியாது.
அத்தனை ஞாபகமறதிக்காரி நான்.

said...

வாங்க முத்துலெட்சுமி.

எனக்கு இந்த ஞாபகம் தாங்க பலமும் பலவீனமும். மறந்து தொலைக்க வேண்டியதையும்,
மறக்கவிடாது.

நீங்களா ஞாபகமறதிக்காரி? ச்சின்னவயசுதானே................ என் வயசு வரும்போது
அப்படியே எதிர்ப்பதமா மாறி இருப்பீங்க.

நன் இவ்வளொ சொல்றேனே........... போன திங்கக்கிழமை என்ன கொழம்பு வச்சேன்னு
மட்டும் கேட்டுறாதீங்க..........
சுத்தமா நினைவில்லை:-)

said...

அரிசி தின்ங்கறவர் டிசைனையே எடுத்திக்கிட்டீங்களா துளசி.

சின்னவன் வீட்டுக் கிச்சான்ல ஆளு நின்னா ரொட்டியைச் சுட்டு, சாலட் செய்துட்டு வெளில வராலாம்.
அதூக்க்கப்புறம்,, அவனா வசதி செய்து கொண்டான்.

1992ல வாசனையா இருந்தீங்களா.::)))
பழசை நின்னைச்சா அப்படித்தான் ஞாபகம்வரது.
சரீ கடவுளே. இனிமேலயாவது மணம்மா இருப்போம்.

said...

ஆசீப் குடும்பத்தினருக்கு நேராப் போயாறுத்ஹல்ல் சொல்ல ம்முடியலையேனு இருக்கு.:((

said...

டீச்சர் ஒங்க பதிவுகளுக்கெல்லாம் பின்னூட்டத் தொடுப்பே வர மாட்டேங்கி. ரெண்டு கமெண்ட்டுக்கு மேல தெரிய மாட்டேங்கி. :( ஒருவழியா வலைப்பூவுக்குப் போய்...அதுல ஒவ்வொரு பதிவுல இருக்குற பின்னூட்டத் தொடுப்பையும் கிளிக்கிப் பின்னூட்டம் போடுறேன்.

said...

வாங்க வல்லி.

ஆசிப் மனைவியை நினைச்சா, மனக்கவலையா இருக்குப்பா.

அடுக்களை எப்படியாவது வச்சுத்தானே ஆகணும். அதுதான்
ஆசியாக்காரரை செய்ய வச்சுட்டோம்:-)

said...

வாங்க ராகவன்,

எனக்கும் ஒண்ணும் புரியலீங்க. கொஞ்சநாளா இந்த பின்னூட்டம் காமிக்கறது,
கொஞ்சம் படுத்துது. ப்ளொக்கர்ஸ்க்கு ஒரு மயில் அனுப்பணும்.


// ஒருவழியா வலைப்பூவுக்குப் போய்...அதுல ஒவ்வொரு
பதிவுல இருக்குற பின்னூட்டத் தொடுப்பையும்
கிளிக்கிப் பின்னூட்டம் போடுறேன். //

நன்றிப்பா. சிரமத்துக்கு மாப்பு.

பதிவுகளில் காமிக்கமாட்டேங்குதுப்பா.
ஆனா 'துளசிதளம்' தலைப்பில் க்ளிக்கினா
அப்ப காமிக்குது.



இந்தக் க.கை. நா வை கடவுள்(தான்) காப்பாத்தணும்!

said...

டீச்சர், எங்களுக்கும் அந்த மாடல் வீட்டை காட்டினால் நல்லா இருக்குமே? :-)

said...

//இவரு ச்சீனர்ன்னாலும், நம்ம ஆசியாவைச் சேர்ந்தவர். முக்கியமா அரிசி திங்கறவர். நம்மைப் போலவே சிந்திக்கிறார்! //

:-))))