Saturday, August 26, 2006

பனங்காய் பணியாரமே

நம்ம யோகன் பாரிஸ் கற்பகத்தரு எழுதி இருந்தாரில்லையா? அதைப் படிச்சது முதல்இந்தப் பனங்காய் ரொம்பப் பாடாய்ப் படுத்திருச்சு. நம்ம தமிழ்ச் சங்கத்துலே ஒரு ச்சின்னப்பிள்ளை இந்தப் பாட்டுக்கு நல்லா ஆடுனார். அவுங்க அம்மாகிட்டே கேட்டு இப்ப இந்த முழுப் பாட்டையும் போட்டுருக்கேன். இதோட ஆடியோவும் அனுப்பி இருக்காங்க. இங்கே அதை இணைக்க எனக்குத் தெரியாததாலே விட்டு வச்சுருக்கேன். பாடலைக் கேக்க விருப்பம் இருக்கறவங்க தனி மடல் அனுப்புங்க. நல்ல துள்ளலோடு இருக்கும் இசைதான்!


தொகையறா: (prelude (??)

வல்லை வெளியிலே காற்றடிக்கும் திரளி
மீன் துள்ளியெழும் ஒடியல்
கூழ் குடித்தால் மனமெல்லாம்
விண் கூவும்
===========
பனங்காய் பணியாரமே (2)

பச்சைக் கொழுந்து ( கொழும்பு ?) வெத்திலையே
உன் பார்வை கொஞ்சம் பத்தலையே
பனையோலைப் பாய் விரித்து படுத்துறங்கும் மணியக்கா
கமுக மர பாக்கு தந்து கவுக்கிறது என்னக்கா (1)

காங்கேசந்துறை சுண்ணாம்பை கொஞ்சம் தடவி தடவி கொ (கு)டடி
உன் கையாலே வாய் சிவக்க வெத்தலை மடிச்சு கொடடி
ஒக்கார (??) மூலைக்குள்ளே கொக்கு வந்து நிக்குது
கொக்கரக்கோ சேவல் வீட்டு கூரையிலே ஏறுது


கீரிமலைப் பனங்கள்ளும் களுத்துறைக் கருவாடும்
ஒன்றாக சேர்த்தடித்தால் கிக்குதான் கிக்குதான்

கீரிமலைப்பனங்கள்ளும் களுத்துறைக் கருவாடும்
ஒன்றாக சேர்த்தடித்தால் மப்புதான் மப்புதான்


நான் கோவில்கடவை ஆளு,
நீ சேலை கட்டிய தேரு
நீ சுன்னாகத்து மாங்காய்,
நான் கொடிகாமத்து தேங்காய் -----

பனங்காய் பணியாரமே


கீச்சுமாச்சு தம்பலம் கீயா மாயா தம்பலம்
மாச்சு மாச்சு தம்பலம் மாயாமாயா தம்பலம் (2)

மட்டு நகர் தயிர் எடுத்து வளைஞ்சு நெளிஞ்சு வாடி
என் உயிரை பிடித்து உறைய வைத்து உறியில் வைத்து போடி
மண்பானை தயிர் கனக்கும் என் நெஞ்சு துடிக்கும்
சும்மாடாய் நான் வரவா? சும்மாடாய் நான் வரவா?


கண்டி குளிரிலதான் கைகால் விறைக்குதடி
கொஞ்சம் சூடேற்ற நெஞ்சு நினைக்குதெடி
முல்லைத்தீவு போவோம் முயலிரண்டு பிடிப்போம்
நீ மூச்சிழுக்கும் நேரம் நான் பேச்சிழந்து போவேன்

பனங்காய் ...பணியாரமே


பாடலை அனுப்பிய இனிய தோழிக்கு நன்றி.

17 comments:

said...

பாடலை எங்கயோ கேட்ட மாதிரி ஞாபகம்.
ஒலிப்பதிவு கேட்டால்தான் தெரியும்.

//நீ சுன்னாகத்து மாங்காய்,
நான் கொடிகாமத்து தேங்காய் -----
//
யார் எழுதியது, பாடியது போன்ற தகவல்கள் தெரியுமா?
தனிமடல் போட்டிருக்கிறேன் பாருங்கள்.

//
கீச்சுமாச்சு தம்பலம் கீயா மாயா தம்பலம்
மாச்சு மாச்சு தம்பலம் மாயாமாயா தம்பலம்
//

இந்தவிளையாட்டு உங்களிடத்திலயும் இருக்குத்தானே?

said...

வசந்தன் வாங்க.

//இந்தவிளையாட்டு உங்களிடத்திலயும் இருக்குத்தானே?//

ஏன் இல்லாமல்? ஆத்து மணல் கொட்டிக்கிடக்குறதைப் பார்த்தால் இதுதான் விளையாட்டு.

பாடலை உங்களுக்கு அனுப்பி இருக்கேன், பாருங்கோ.

said...

சின்னாளபட்டி சேலை, சேலம் மாம்பழம், திண்டுக்கல் பூட்டு.. இப்படி இங்கிருக்கும் 'ஊர்ப்பிரமுகர்'களை நினைவுபடுத்தியது இந்தப்பாட்டு.
தனி மடல் அனுப்பி இருக்கிறேன். தாங்க, கேட்டு ரசிக்கிறேன்.

said...

துளசி, தேடி, பிடிச்சு, போட்டு கேட்டு எல்லாம் ஆச்சா?

பாட்டை கேட்டால் ஆடத் தோன்றுமோ?

நல்லாத்தான் இருக்கும்.

said...

வாங்க கெளதம்.
பாட்டு அனுப்பி இருக்கேன்.

said...

வல்லி,

நல்லாத்தான் இருக்கு கேக்கறதுக்கு. நல்ல எளிமையான நாட்டுப்பாடல் வகை.

உங்களுக்கு அனுப்பறேன்.

said...

அடடே! இலங்கைத் தமிழ்ப் பாடலா! நன்றாக இருக்கிறதே...எளிமையான சொற்கள். கேட்க முடிந்தால் நன்றாக இருக்கும். தலைப்பில் சொல்லியிருப்பதைத் திங்க முடிந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

said...

கிராம பாட்ட அழகாயிருக்கு எனக்கும் அனுப்பி வையுங்கள் அதை இணைத்தில் எப்படி சேர்ப்பது என்பதையும் தெரிந்து எனக்கும் சொல்லுங்கள்

said...

ராகவன்,

நம்ம வசந்தன் நல்லவேளையா போட்டுட்டார். இங்கேயே அதுக்கு லிங்கும் கொடுத்துட்டேன். கேட்டுப் பாருங்களேன்.

said...

நம்ம மலைநாடான் மின்னஞலில் கொடுத்த பின்னூட்டம் இது.

உங்கள் தனி மடல் முகவரி தெரியவில்லை. தயவு செய்து எனக்கம் பாடலை அனுப்பி வையுங்க கேட்டுவிட்டுக் கருத்துச் சொல்கின்றேன். நன்றி அம்மா!

வருகைக்கு நன்றிங்க. பாட்டோட லிங்க்கு மேலே பாருங்களேன்.

said...

நண்பர்களே,

இந்தப் பாடலைக் கேக்கணுமுன்னா

வசந்தன் இங்கே போட்டுருக்கார்.

said...

அடக்கடவுளே!

'இங்கெ' ன்னு போட்டதுலே எதோ தவறு/குழப்பம் நடந்து போச்சு.
மன்னிக்கணும்.

பின்னூட்டங்களின் கடைசியில் வசந்தனே ஒரு லிங்க் போட்டுருக்கார்.

said...

துளசி,
நன்றி.

said...

வதனா,

வருகைக்கு நன்றி.

said...

நம்ம பதிவுகளுக்கு வெள்ளைக்காரர்கள் தவறாம வந்துட்டுப் போறாங்கப்பா:-)))))

நடமாட்டம் கூடிப்போச்சு.

said...

துளசி அக்கா!
"மணப்பாறை மாடு கட்டி" வடிவில ஈழத்து ஊர் சிறப்புகளைக் கொண்ட பாடல்;தேடித் தந்ததுக்கு நன்றி!;வசந்தன் பக்கம் போய் பாட்டும் கேட்டேன்; பெருமையா இருக்கக்கா! நம்ம பையன்களும் குறைஞ்சவங்களல்ல!இவங்கமேல சரியான வெளிச்சம் இன்னும் விழவில்லை.
யோகன் பாரிஸ்

said...

வாங்க யோகன்.
இந்தப் பதிவுக்குக் காரணகர்த்தாவே
நீங்கதான்:-)))

வெளிச்சம் விழற நாளும் ரொம்ப தூரத்துலே இல்லை.