Wednesday, August 23, 2006

பரிசு வாங்கலையோ பரிசு

"பரிசு பரிசு பரிசோ........வ் பரிசு,பரிசு வாங்கலையோ பரிசு"

"போனா வராது பொழுதுபோனாக் கிடைக்காதுபரிசோ............. பரிசு."

"ஏம்மா, கூடையைக் கொஞ்சம் இறக்கு. என்னா பரிசுன்னு பார்க்கலாம்."

"ஒரு கை கொடும்மா, இறக்கிப்பிடலாம்."

"அட! புத்தகமா? ஆமா, டஜன் என்னான்னு கொடுப்பே?"

"சரியாப் போச்சுப் போ. நல்லா உத்துப் பாரு. ஒரு டஜனா இருக்கு? எண்ணி ஏழே ஏழு. முத்தாட்டம் ஏழு... உன் சொத்தாகப் போது......."

"பாட்டெல்லாம் இருக்கட்டும், என்ன விலை? அதை சொல்லு மொதல்லே."


"யம்மாடி....... இதுக்கெல்லாம் நீ(ங்க) காசே கொடுக்க வேணாம்.வெறும் கடுதாசி போட்டாவே போதும். வூடு தேடி வந்துரும்."


"யாருக்குப் போடணும்? மந்திரிக்கா?"


"அவ்வளோ கஷ்டமெல்லாம் வேணாம் தாயி. நம்ம சிவகுமார் இருக்காகளே,அவுங்க பதிவுக்குப் போய், படிச்சுப் பார்த்துட்டு பின்னூட்டமுன்னு ஒரு பெட்டி இருக்கு பாருங்க, அதுலே நீங்கப் படிச்சதைப் பத்தியும், என்னா புரிஞ்சுக்கிட்டீங்கன்னும், இன்னும் அதை எப்படிஎப்படி லகுவாச் சொல்லலாமுன்னும் எழுதிப் போடுங்க."


"போட்டா?"


"ஒரு வாத்தியாரும், ஒரு (அப்பாவி) பொது ஜனமும் மார்க்குப் போடுவாங்களாம். எல்லாத்தையும் கூட்டிக் கழிச்சுப், பெருக்கி, வகுத்துப் பார்த்து நிறைய மார்க்கு வாங்குனவங்களுக்கு இந்தப் புத்தகம் ஒண்ணை நம்ம சிவகுமார்தம்பி அனுப்பி வச்சுப்புடுவாக."


"ஏம்மா.. நீ சொல்றது சரிதான். ஆனா 'பரிசு'ன்னு சொல்லி விட்டுறாம இப்படிப் புத்தகம், அத்தோட பேரெல்லாம் சொல்லிப்புட்டா ஆளுக அப்பீட்டாயிருச்சுன்னா?"


"நானும் அப்படித்தாம்மா நினைச்சேன். தம்பி ஒரு வெள்ளாந்தி. அதுதான் மர்மமா வுடாம இப்படிப்போட்டு ஒடைச்சிருச்சு.


எல்லா விவரமும் தம்பி சிவகுமார் இங்கே விலாவரியாப் போட்டுருக்கு. படிச்சுப் பாருங்க.
நானும் இன்னும் நாலு தெரு போகணும். ஒரு கைகொடும்மா, கூடையைத் தூக்கித் தலையிலே வச்சுக்கறேன்."


யம்மா. சொல்ல மறந்துட்டேனே, " ஆஹா அருமையான பதிவு. சிந்திக்கத் தூண்டுகிறது"ன்னு ஒரு குத்துமதிப்பாகுன்ஸாப் போட்டா, மார்க்கு ஒண்ணும் கிடைக்காதாம், சொல்லச் சொன்னாக."


"ம்ம்ம்... பரிசு வாங்கலையோ பரிசு,
பரிசு வேணுமா.............. பரிசு.
பரிசு பரிசு பரிசு
பரிசு பரிசு பெருசு..........."

20 comments:

said...

துளசியம்மா (நன்றி மகேந்திரன் ! அக்காவிலிருந்து அம்மாவிற்கு புரோமசன்)

எவ்வளவு கிடைக்கிறதோ அவ்வளவையும் உங்களிடம் கொடுத்துவிடுகிறேன்.

சரி...! துளசியம்மா..! பரிசு கிடைத்தான் நான் வாங்கிக் கொள்கிறேன் வேறு ஏதாவது கிடைத்தால் ?

:))

said...

நல்ல போட்டுள்ளீர்கள்

said...

//குத்துமதிப்பாகுன்ஸாப் போட்டா, மார்க்கு ஒண்ணும் கிடைக்காதாம்,//

:-))

//பரிசு கிடைத்தான் நான் வாங்கிக் கொள்கிறேன் வேறு ஏதாவது கிடைத்தால் ?//

தளத்துக்கு வாங்க, புண்பட்ட உடம்ப பதிவு போட்டு ஆத்திடுவாங்க :-)

துளசி மேடம்,
தகவலுக்கு நன்றி!!!!

said...

GK,

//பரிசு கிடைத்தான் நான் வாங்கிக் கொள்கிறேன் வேறு ஏதாவது கிடைத்தால் ?//

இதுலே என்ன தயக்கம். வீட்டுக்கொண்டுபோய்
' எல்லாரோடும் ' பகிர்ந்துக்க வேண்டியதுதான்:-))))

said...

வாங்க என்னார்.

பின்னூட்டம் எழுத இன்னும் ஆரம்பிக்கலையா?

said...

நன்மனம்,

ச்சும்மா அங்கிருந்து 'ஊக்கு வித்தால்' போதாது. பின்னூட்டப் போட்டியிலே
கலந்துக்கணும், ஆமாம்:-))))

said...

//ஆனா 'பரிசு'ன்னு சொல்லி விட்டுறாம இப்படிப் புத்தகம், அத்தோட பேரெல்லாம் சொல்லிப்புட்டா ஆளுக அப்பீட்டாயிருச்சுன்னா?"

நானும் நினைச்சேன். பட்டியல் போடாமல் இருந்தாலும் ஒரு மர்மம் இருந்திருக்கும்தான். என்னவோ இதுதான் சரி என்று பட்டது :-)

அன்புடன்,

மா சிவகுமார்

said...

யப்பா துளசிம்மா தூள்!!!

///தம்பி ஒரு வெள்ளாந்தி. அதுதான் மர்மமா வுடாம இப்படிப்போட்டு ஒடைச்சிருச்சு.///

வெள்ளந்தி தான்

said...

" ஆஹா அருமையான பதிவு. சிந்திக்கத் தூண்டுகிறது"


(துளசியம்மா! இந்த "அருமையான" பின்னூட்டதிற்க்கு நீங்க எழுதின புத்தகம் எதாவது பரிசு கிடைக்குமா......?)


அன்புடன்...
சரவணன்.

said...

அதுதான் மர்மமா வுடாம இப்படிப்போட்டு ஒடைச்சிருச்சு//

ஆமாங்க. பரிசு நமிதா, சிலுக்கு ஸ்மிதா இவங்களோட வாழ்க்கை சரிதம்னுருந்தா ஒருவேளை அருமையான பின்னூட்டங்கள் வந்திருக்குமோ..

சிவக்குமார் தப்பா நினைச்சிக்காதீங்க.. ஒங்க பரிசு லிஸ்ட் எத்தன பேர இழுத்துக்கிட்டு வரும்னு உண்மையாவே தெரியலீங்க.

said...

வாங்க சிவகுமார்.

//நானும் நினைச்சேன். பட்டியல் போடாமல் இருந்தாலும்
ஒரு மர்மம் இருந்திருக்கும்தான். என்னவோ இதுதான் சரி
என்று பட்டது :-)//

அதான் வெள்ளந்தின்னு சொல்றது. ஸீதா ஸாதாவா இர்ந்தா இப்படித்தான்.

said...

மது,
நலமா? ஆளைக் காணொமே ரொம்ப நாளா?
வலைப்பதிவாளர் சந்திப்புலேயே கண்டுபுடிச்சிட்டீங்களா
ஆளு இப்படின்னு:-))))

said...

சரவணன்,

உங்க பின்னூட்டத்துக்கு 'நான்' எழுதுன(???) புத்தகங்கள்தான் கொடுக்கணும்.
எழுதி முடிச்சா சொல்றேனே.

said...

வாங்க டிபிஆர்ஜோ.

நல்லவங்களா, எளிமையா இருக்கறதுகூட
இந்த சமூகத்துலே எவ்வளவு கஷ்டமாப் போச்சு பாருங்க.

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேணும்" ன்னு சொன்னதுபோல
நல்லவங்க நட்பு கிடைச்சதுக்கு உண்மையான சந்தோஷம் .

said...

கொன்னுட்டீங்க!
நூல் இருக்கிற இடத்தைச் சொன்னா புடவையே நெய்துட்டீங்க;
கீரைனவுடனே பாட்டே பாடிட்டிங்க!
நல்லவேளை!
அங்கே 3 ரெக்டார் னு பதிவாகியிருக்காம்.
அதுக்கும் பரிசு விற்றதுக்கும்
சம்பந்தமில்லையே?

said...

உங்களுக்கும் ட்டிபி ஆர்க்கும் நன்றி!
"ஒருமையுடன் உனது திருவடிநினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்"பாடலை ஞாபகப் படுத்தி விட்டீர்கள்.

said...

1. குறிப்பிட்ட வாரத்தில் இடப்பட்ட எல்லா பின்னூட்டங்களையும் சேர்த்துக் கொள்ளலாம் அல்லவா? முதலில் நான், அந்த வாரம் பதியப்பட்ட பதிவுகளின் பின்னூட்டம் மட்டும் புரிந்திருந்தேன். அப்படி இல்லாமல் எந்தப் பதிவுக்கும் (எகனாமிக்ஸ் என்ற தலைப்புடன்), அந்த வாரத்தில் கொடுக்கப்பட்ட பின்னூட்டங்கள் அனைத்தையும் சேர்த்துக் கொள்வோம். சரியா?

2. கவிதா கெஜானன் மின்னஞ்சல் மூலமாக சில குறிப்புகளை அனுப்பி பின்னூட்டமாக சேர்க்கச் சொல்லியிருந்தார். அதில் ஆட்சேபணை எதுவும் இல்லையே!

அன்புடன்,

மா சிவகுமார்

said...

அன்புள்ள சிவகுமார்,

ஒரு வாரமுன்னு காலக்கெடு வச்சா சிலபேருக்குக் கஷ்டம்தான். நேரம் கிடைக்கிறப்ப பழைய பதிவுகளை அதாவது
விட்டுப்போனதுகளைப் படிக்கறவங்களும் இருக்காங்கதானே?

அந்த வாரம் வந்த பின்னூட்டங்கள்ன்னே வச்சுக்கலாம். சிஜி என்ன அபிப்ராயப்படுறாரோ?

மின்னஞ்சலில் வந்ததைப் பதிவுலே முதலிலெ சேர்த்துக்கணும். அப்பதான் மத்த வாசகர்களும் அதைப் பார்க்க இயலும்.
மற்றபடி அதுலே ஒண்ணும் பிரச்சனை இல்லை. பின்னூட்டம் பின்னூட்டம்தான் எப்படி வந்தாலும்.

ஆனால் தொலைபேசியில் சொல்பவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது :-)))))

said...

சரி இப்படி அறிவியுங்கள்
........தேதி முதல்........தேதி
வரையிலான பின்னூட்டங்களுக்கு.."
என்று

said...

மின்னஞ்சலில் வந்ததை பின்னூட்டமாகவே சேர்த்து விட்டேன். சிவஞானம்ஜியும் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்