Thursday, August 03, 2006

ஆச்சரிய(ம்)

"வீடுகள் தோறும் வேதங்கள் சொல்லி, யாசகம் பெற்று வாழ்க்கை நடத்தும் உஞ்சவிருத்திபிராமணன் இனத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனின் கதை. இந்த இளைஞன் சந்தித்த நபர்களையும், சந்தித்த நிகழ்ச்சிகளையும் தொகுத்துத் தந்திருக்கிறோம்.

இது சினிமாக் கதை அல்ல. சுவாரஸியமாக இருக்கை நுனிக்குக் கொண்டு செல்லும் கற்பனைக் காட்சிகளோ, கூட்டம் கூட்டி ஆடும் ஆட்டம் பாட்டங்களோ, கட்டிப் பிடித்து உரசி உருளும்காதல் காட்சிகளோ இன்றி இந்த இளைஞனின் வாழ்க்கையைப் பின்தொடர்ந்து சென்று படம் பிடித்திருக்கிறோம்.

ரசிகர்களாகிய நீங்களும் எங்களைப் பின் தொடர்ந்து பயணிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கின்றோம் "

ஆரம்பத்துலேயே இப்படி ஒரு 'டிஸ்கி' போட்டுக்கறாங்க. இதைப் பார்த்ததும், அப்பாடா...ன்னு இருந்துச்சு.


தர்மம் செய்யறதையே நிறுத்திட்ட கிராமத்துலே உஞ்சவிருத்திக்கு ஒண்ணும் கிடைக்கலை. பசி. பசி. பசி மட்டும்தான்இருக்கு. பசியை ஜெயிக்க முடியாம ஓடிடறான் பையன். அப்பா ஏற்கெனவே போயாச்சு வீட்டைவிட்டு. அம்மாவைஊர்ஜனம் குதறியே கொன்னுருது. பையன், ஒரு இஸ்லாமியர்கூட இருக்கான். ஆனா நாமத்தை மட்டும் விடலை.


அப்புறம் பையர்( பெரியவனா வளர்ந்தாச்சு) வேலை தேடி ராமநாதபுரம் வந்து, எப்படி தாதாங்க கூட்டுலே போயாச்சுன்னு சொல்றாங்க. அங்கே சந்திக்கும் ஒரு சுவாரஸியமான மனுஷி நம்ம மாயாக்கா. அக்கா அக்கான்னு ஜனமே சுத்தி வருது.( ஒவ்வொரு தடவையும் 'அக்கா' ன்னு வர்றப்ப எனக்கு என்னமோ என்னைத்தான் சொல்றாங்களோன்னு ஒரு தோணல்)


சினிமாக் கதை இல்லைன்னு சொன்னாலும், நாயகி வேணுமில்லையா? வாழ்க்கை போரடிச்சுராதா? நாயகி வராங்க.மொத்தம் மூணே பெண்கள்தான் (சொல்லிக்கற மாதிரி அட்லீஸ்ட் ரெண்டு வாக்கியம் வசனம் பேசும் ரோல்) வர்றாங்க.நாயகி, மாயாக்கா & பாட்டி( நாயகியின் பாட்டி). நாயகனோட அம்மாவையும் வேணுமுன்னா சேர்த்துக்கலாம். ஆனாஅவுங்க வாயைத் திறக்கவே இல்லை. பாவம்........ பசி வாயைக் கட்டிப் போட்டுருச்சு.


நாஸர் இருக்கார். சரண்ராஜ் இருக்கார். கஞ்சாக் கருப்பு இருக்கார். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் தேவன் இருக்கார். அதுவும் நல்லவரா இருக்கார்.
வெட்டுக் குத்து எல்லாம் தாராளமா இருக்கு. இன்னொருக்கா 'டிஸ்கி'யைப் பாத்துக்குங்க. இதைப் பத்தி 'மூச்' விடலை.


இதுலே அந்த முஸ்லீம் பெரியவர் எதுக்கு மூணே சீன்லே வர்றார்ன்னு தெரியலை. என்ன சொல்ல வர்றாங்க? 'நாயகனை இப்படி ஒரு குறிப்பிட்ட இனமாக் காட்டுவதன் மர்மம் என்ன?'ன்னு யோசிச்சேன். இன்னும் என்னென்னவோ யோசனைகள் வந்ததுதான். வாக்குவாதம் செய்ய மனமும், பலமும் இல்லாததால் இதைப் பத்தி ஒண்ணும் சொல்ல விரும்பலை( இப்ப பாருங்க என் நிலமையை. நானும் ஒரு 'டிஸ்கி' போட்டுக்க வேண்டியதாப் போச்சு)


மாயாக்கா அட்டகாசமாப் பண்ணி இருக்காங்க.


நாயகன்,நாயகி பேர் எல்லாம் டைட்டிலில் போடலை. யாரா இருக்கும். இந்த ஆளை எங்கியோ பார்த்திருக்கேனேன்னு மண்டையைப் பிச்சுக்கிட்டும் ஞாபகம் வரலை. நெட் எதுக்கு இருக்கு? தேடுனப்பக் கிடைச்சது. விக்னேஷ் & திவ்யா.


பஞ்சத்துலெ அடிபட்ட மாதிரி இல்லாம விக்னேஷ் நல்லா கொழுகொழுன்னு இருக்கார்.


சில போலீஸ் ஸ்டேஷன் காட்சிகள் 'இயல்பாய்' இருக்கு.


இயக்கம் & அது இது எல்லாம் ரவி. 'ம்யூஜிக்' ஸ்ரீகாந்த் தேவா.

ஒரு தடவை பார்த்து வைக்கலாம், இந்த ஆச்சார்யாவை.

30 comments:

said...

என்னா பில்டப்பு!! படத்துல அவிங்கதான் ஆரம்பத்துல கார்டு போட்டாங்கன்னா, இங்க துளசி விமசர்சனத்திலயே அதவிட செமயா சொல்லுறாங்க. இதுல என்ன ஆச்சரியம்? நீங்க பொறுமையா பாத்து விமர்சனம் எழுதினதா?

said...

சுரேஷூ,

அப்படியும் வச்சுக்கலாம்.:-)))))

said...

துளசி, ஆடி பதினெட்டு நல் வாழ்த்துகள்.
எதுக்கு அவரு நாமம் எடுக்காமலியே வராரு?
பையிலேயே நாமக்கட்டி, திரு சூரணம் எல்லாம் வைத்து இருப்பாரோ.விமரிசனத்திற்கு 45/50

said...

வாங்க வல்லி.

எப்பவும் கைவசம் வச்சுக்கிட்டு இருக்கார். அடிஷனல் இன்ஃபோ: தென்கலை நாமம்.

மீதி அஞ்சு மார்க் போயிருச்சே.....

உங்களுக்கும் அன்பான பதினெட்டாம் பெருக்கு நல் வாழ்த்து(க்)கள்.

said...

// ஒவ்வொரு தடவையும் 'அக்கா' ன்னு வர்றப்ப எனக்கு என்னமோ என்னைத்தான் சொல்றாங்களோன்னு ஒரு தோணல்//

அதுக்கு மொதல்ல வெத்தல பாக்கு போட்டு பிராக்டிஸ் பண்ணனம். :-))

said...

இன்னுமா சினிமா வாரம் ஓயலை. டீச்சர், இதெல்லாம் டூ மச். இப்படியே போச்சு நாங்க டீசர் ஆகிடுவோம். சொல்லிட்டேன்.

said...

வாங்க நன்மனம்.

அப்ப டெண்டிஸ்ட் பில்லு?

said...

கொத்ஸ்,

சினிமா வாரத்துக்கப்புறம் வகுப்புக்கே வரலையா நீர்? அடக்கடவுளே.....
எங்கே அந்த வருகைப் பதிவேடு?

இது வாரத்துக்கொரு சினிமா. ( சினிமா வாரமல்ல)

said...

'ஆச்சார்யா' படம் பார்க்கலாமா வேண்டாமா என்று ஒரு பெரிய போராட்டம். ஆனால், 'இது என்ன' பாடல் அருமையான பாடல் மற்றும் உணர்ச்சிகரமான காட்சிகள் கொண்ட காட்சிகள்.

said...

வாங்க சீனு.

இது என்ன சினிமாதானே?

இதுக்கு ஏன் இப்படிப் போராட்டமெல்லாம்?

சில காட்சிகள் அருமையாத்தான் இருந்துச்சு, உண்மைக்கு ரொம்ப நெருக்கமா.

said...

என்னா பில்டப்பு!!

விமர்சனம் நல்லா இருக்கு.

said...

அடடே படம் பாத்தாச்சா! காட்சிகளின் ஒலியொளி அமைப்பு நன்றாக இருந்து. தொலைக்காட்சிகள்ள காட்டுறாங்களே. நடிப்பும் இயல்பா இருந்தது. ஆனா படம் பாக்கலை.

அக்கான்னா உங்களக் கூப்புடுற மாதிரி இருந்ததா...அடடா! டீச்சர்னு யாராவது சொன்னாலும் உங்களுக்கு அப்படித்தான இருக்கனும். சரி..உங்களுக்கு இட்டிலி சுடத் தெரியுந்தானே!

said...

இது மதுரையில் உண்மையாக நடந்த சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்று கூட "டிஸ்கி" படம் வெளிவருவதற்கு முன் பேட்டிகளில் சொல்லப்பட்டது.

விக்னேஷின் பாடி லாங்வேஜ் சேது விக்ரமிற்கு அளவிற்கு இருந்ததா என அறிய நானும் படம் பார்க்கவேண்டும் :)

கிளிப்பிங்ஸ் பார்ததளவில் விக்னேஷை ஓரளவிற்கு பம்மி பம்மி நடிக்குமளவிற்கு மாற்றியிருக்கிறார்கள். அது இயல்பான நடிப்பா கதையோடு போகிறதா என தெரியவில்லை. உங்கள் விமர்சனத்தை படிக்கும்போது பொருந்தவில்லை என்றே நினைக்கிறேன்.

எனினும் படம் தமிழில் ஆச்சரியம் என்பதில் மிகையில்லை.

said...

நட்பு பாராட்டும் வாரம்
நண்பர்கள்தின வாழ்த்துகள்
ஆடிப்பெருக்கு இன்று
காவிரியில் தண்ணீர்!
ஊற்று வெட்டி நீரெடுத்து ஆடிப்பண்டிகை கொண்டாடிய கொடுமை போச்சுடா சாமி
"காவேரி தண்ணீர் பட்டால்
கண்ணியர் மேனி தங்கம்..."
ஆடி 18 வாழ்த்துகள்
அப்றம் என்னமோ மறந்து போச்சே...
ஆங் ஆச்சார்யா-விமர்சனம் நல்ல இருந்திச்சு

said...

சிவமுருகன்,

ஆரம்பத்துலே இயக்குனர் கொடுத்த பில்டப்புக்கு முன்னாலே நம்மது எல்லாம் ஜுஜுபி....

நீங்க சென்னைக்குப் போயாச்சா? தமிழ்ப்படம் பார்க்கணுமுன்னு சொல்லிக்கிட்டு இருந்தீங்களே...
அதான் கேக்கறேன். எந்தப் படத்தை ' போணி 'பண்ணலாமுன்னு நினைக்கிறீங்க?

இன்னும் 'இம்சை' வரலை.

said...

வாங்க ராகவன்,

//சரி..உங்களுக்கு இட்டிலி சுடத் தெரியுந்தானே//

என்ன இப்படிக் கேட்டுட்டீங்க. நல்லா க்ளோஸ் ரேஞ்சுலெ சுடுவேனே:-)))))

நம்ம வீட்டுலே பொதுவா இதுகளை அவிச்சுருவோம்.

said...

தயா,

விக்னேஷ் நல்லா நடிச்ச படமுன்னா எனக்கு நினைவில் இருக்கறது
பார்த்திபனோட சேர்ந்து பண்ண ஒரு படம் . படத்தோட பேர் சூரின்னு நினைக்கறேன்.
கண்டெய்னர் மேலே படுத்துக்கிட்டு வருவார்.

said...

சிஜி,

//காவேரி தண்ணீர் பட்டால்
கண்ணியர் மேனி தங்கம்..."//

தண்ணி இல்லாத காரணம்தான் எல்லாம் அழுதழுது, கன்னியர்கள் எல்லாம் கண்ணியர்களா ஆனது.

ஓஓஓஓஓஓஓஓ இன்னிக்கு நல்லநாளா? .........நண்பர் தின வாழ்த்து(க்)கள்


அப்ப ஊத்து வெட்டியாச்சா?

said...

----இப்ப பாருங்க என் நிலமையை. நானும் ஒரு 'டிஸ்கி' போட்டுக்க வேண்டியதாப் போச்ச---

:-))

said...

நாலு பேரு சொல்லுறதக் கேட்டுப் படம் பாக்கிற ஆளு நாம. இனி நாலு இடமெல்லாமில்ல. ஒன்லி டீச்சர்கிட்டதான்...:))

ஒரு படமும் விடமாட்டீங்களோ..?

said...

யாரங்கே அந்த டிஸ்க்கிகளை கொண்டு டிக்கியில் போடவும். - இம்சை


:))

said...

நாயகி டிபன் பாக்ஸில் சிக்ரெட் வைப்பது,

லவ் சீன்ஸ் போன்றவையெல்லாம் இயல்பாவே இல்லை

படத்துக்கு 45மார்க்கு ரொம்ப அதிகம் தான்

said...

Thanks Bala

said...

மலைநாடான்,

//ஒரு படமும் விடமாட்டீங்களோ..?//

விடமாட்டேன். நம்ம வீடியோ க்ளப்புக்கு வாங்கற படங்கள்தான் இதுங்க.
என்ன..... தெரிஞ்ச(????) நடிகர்கள், பிரபலமான படங்கள் இதுக்கெல்லாம் விமரிசனம்
எழுதறது இல்லை. யாரும் பார்க்காம,நம்ம ஹோம் தியேட்டர் ரிலீஸ்க்கு மட்டும்தான்
எழுதுவேன். நானும் எழுதலேன்னா அது வந்த விவரம் மக்களுக்கு எப்படித்
தெரியும்?:-)))) நமக்கும் ஒரு கொளுகை வேணுமுல்லையா?:-))))

said...

வாங்க சிறில்.

//.............போடவும். - இம்சை//


ம்ம்ம்ம்ம்.... 100 போட்டாச்சு. அதுக்கு வந்த வாழ்த்துகளுக்கு பதில் சொல்லமுடியாம திக்கு முக்காடும் வேளையில்
கூட..... 'இம்சிச்சதுக்கு' நன்றி :-)))))

said...

மி.மி,

45 மார்க் படத்து இல்லைங்க. விமரிசனத்துக்குத்தான்:-))))))

//லவ் சீன்ஸ் போன்றவையெல்லாம் இயல்பாவே இல்லை//

அதைத்தான் அவுங்க டிஸ்கி போட்டுச் சொல்லிட்டாங்களே, ஏமாந்து போகாதீங்கன்னு:-)))

said...

//நீங்க சென்னைக்குப் போயாச்சா? //

இன்னும் போகவில்லை, வரும் 28தேதி எல்லார்கிட்ட சொல்லிட்டு போகனும்.

//தமிழ்ப்படம் பார்க்கணுமுன்னு சொல்லிக்கிட்டு இருந்தீங்களே ... அதான் கேக்கறேன். எந்தப் படத்தை ' போணி 'பண்ணலாமுன்னு நினைக்கிறீங்க?//

அதை அங்கே பார்த்துக்குவோம்.

மொதல்ல ஒரு வாரம் மதுரையில அப்பறம் தான் சென்னை.

said...

ஒவ்வொரு தடவையும் 'அக்கா' ன்னு வர்றப்ப எனக்கு என்னமோ என்னைத்தான் சொல்றாங்களோன்னு ஒரு தோணல்//

தோணும், தோணும்.. அந்த அக்கா யாருன்னு பாத்தீங்கல்லே..

said...

டிபிஆர்ஜோ,

படத்துலே 'அக்கா'தான் சூப்பர் ஆக்டிங். கொன்னுட்டாங்க x 2

said...

சிவமுருகன்,

மதுரை & ச்சென்னை.
அனுபவி ராஜா அனுபவி:-)))