Tuesday, August 22, 2006

'இம்சை' என் பார்வையில்

இம்சை அப்படி, இம்சை இப்படின்னு சமாச்சாரமெல்லாம் அடிபட அடிபட , என்னடா நமக்குஇன்னும் வரலையேன்னு கொஞ்சம் ஏங்கத்தான் வச்சுருச்சு. முந்தாநாள் ஒருத்தர் வந்து சொல்லிட்டுப் போனார்,மூணு கோடிதான் செலவாம் முப்பது கோடி வசூலாமுன்னு. நேத்தைக்கு வேற ஒருத்தர் மூணு கோடிபோட்டு,நாப்பது கிடைச்சிருச்சாமுன்னு.


பொதுவா, நல்ல ஓடுற அல்லது பலராலும் பரவலா அறியப்பட்ட படங்களுக்கு விமரிசனம் எழுதறது இல்லைதான்.ஆனா 'ரொம்பப் பழைய படங்கள்' மட்டும் இதுக்கு விதிவிலக்கு. இந்தக் கணக்குலே இதை விட்டுறலாமுன்னு பார்த்தாலும் முடியலையே.


வடிவேலுவின் நடிப்பு.....? ஒரே அட்டகாசம். எல்லோர் மனசையும் அப்படியே அள்ளிக்கிட்டு போயிட்டார்.முதல் காட்சியிலே அப்பா படத்துக்கு முன்னாலே கைகூப்பி நிக்கும்போதும், நடக்கும்போதும் அப்படியே சிங்கத்தின் நினவு. ( இங்கே சிங்கம்ன்னு சொன்னது நம்ம சிவாஜி கணேசன். மகள் எப்பவும் சிங்க மாமான்னுசொல்றதாலே அவருக்கு நம்ம வீட்டுப்பேரு இது)
அவர் நடிகர், சொன்னதைச் செஞ்சுட்டுப் போயிருவார்ன்னு பார்த்தா, இவரை இது மாதிரி செய்யவச்சவரைத்தான்பாராட்டவேணும். சிம்புதேவன். பேரே புதுசா இருக்கேப்பா. ஒவ்வொண்ணையும் ஆழமா சிந்திச்சு இருக்கார்.


கதைன்னு பெருசா ஒண்ணும் இல்லை. முதல் காட்சியிலேயே 'உத்தமபுத்திரன்'( அதே சிங்கம்) நினைவு. இப்பத்தானே ஆறுமாசம் முந்தி வாங்கியாந்தேன். காட்சிகள் பலதும், இன்னும் பல சினிமாக்களைத்தான் ஞாபகப்படுத்துது.மனோகராவைக் கூட விட்டு வைக்கலை. அதே வில்லத்தனமான மாமா, ராஜமாதா, அரண்மனை ஜோஸியர் வகையறாக்கள்.


யாரடீ நீ மோகினி........... பட்டிதொட்டியெல்லாம் கூட போடுபோடுன்னு போட்ட பாட்டு. ஏறக்குறைய அதே ஸ்டைல்,ஆனா இதுலே ஒரு அரண்மனைக் குளியல் வருது. சாம்பிராணி போட்ட ஆகாசம் பார்க்கும் மீசையில் ரெண்டு பூ:-))


காட்சிகளை அமைச்சுக் கதை சொன்னவிதம் நல்லாவே இருக்கு. இப்ப சமுதாயத்தில் இருக்கும் பல பிரச்சனைகளைத் தொட்டுப்போறார். சிரிப்பு மட்டுமில்லை, அதுக்குள்ளேயே நிறைய சிந்திக்கவும் வச்சுட்டார் இயக்குனர். அவரோட வசனங்களும் அருமையாத்தான் இருக்கு.


முழுப்படத்தையும் பத்திச் சொல்லிட்டா, இன்னும் பார்க்காதவங்களுக்கு செய்யுற அநீதியாச்சேன்னு எங்களுக்குப் பிடிச்ச காட்சிகளை மட்டும் சொல்லட்டுமா?


அரண்மனைக் கோட்டையில் இருக்கும் வீட்டு எண்.

புதிய எண்
பழைய எண்
எதிர்கால எண்:-))))))


அரண்மனை அந்தப்புரத்தில் அவ்வையார்.


ஜாதிச் சண்டைக்குன்னு தனியா ஒரு இடம் அரசாங்க சொத்தையெல்லாம் அழிக்கவேணாம் பாருங்க,அதுக்கு.


திருடர்கள் உலவும் பகுதி ( எச்சரிக்கை போர்டு) எல்லாத் திருடர்களுக்கும் நெத்தியிலே ஒரு பெருக்கல் குறி:-))))


புலிகேசி விடுகதை போடும்போது சிஸர் மனோகர், இன்னும் பக்கத்துலே இருக்கும் காவலாளிகளோட முகபாவம்.இன்னும் சொல்லப்போனா எல்லாக் காவலர்களின் முகபாவங்களும் அட்டகாசம்தான்.


புலிகேசியின் அம்பு விடும் திறமை, அம்பு விட்டுப் பழகும் அழகு, கடைசியில் அதே அம்பு விட்டதும், ஆள் குழப்பத்தில் இருக்கும் நாசரின் முகபாவம் .


அரண்மனைக் கொல்லன் செஞ்சு கொடுத்த வாள் இன்னும் மற்ற இரும்புச் சாமான்கள்ன்னு சொல்லிக்கிட்டே போகலாம்.


உக்கிரபுத்தன், புலிகேசியின் ஆடை, அணிகளைப் போட்டுக்கிட்டு, ராஜா செருப்போட விறுவிறுன்னு நடக்கும் நடை( கால் மட்டும் என்னம்மா
ந(ட)டிக்குது)


மந்திரி இளவரசு சரியான ச்சாய்ஸ். பின்னிட்டாரு.


கடைசியில் புலிகேசியின் பத்து கட்டளைகள் தூள். அதுலேயும் அந்த அர்த்தநாரீஸ்வரர் கொள்கையை சாமியோடு நிறுத்திக்காம, நாட்டு நடப்புலே கொண்டு வரச்சொன்னது.( இதைத்தான் நானும் ரொம்ப நாளாச் சொல்லிக்கிட்டு இருக்கேன்)


இந்த 10 கட்டளைகளையும் உண்மையாவே இப்ப அமுலுக்குக் கொண்டுவந்தா நம்ம நாடே ரொம்ப உயரத்துக்குப்போயிரும்.



இந்தப் படத்துக்கு உண்மையான ஹீரோ நம்ம சிம்புதேவன்தாங்க. படத்தோட வெற்றி முழுசும் அவருக்குத்தான்.


ராஜாதி ராஜ, ராஜ கம்பீர, ராஜ மார்த்தாண்ட, ராஜகுல திலக, ராஜ குலோத்துங்க, ராஜ பராக்கிரம, ராஜ வைராக்கிய மாமன்னர் புலிகேசி வாழ்க.


இருங்க எண்ணிப் பார்த்துக்கறேன், ஏழு இருக்கான்னு!

23 comments:

said...

//ராஜாதி ராஜ, ராஜ கம்பீர..வாழ்க.//

இருங்க எண்ணிப் பார்த்துக்கறேன், ஏழு இருக்கான்னு!//

அது என்ன கணக்கு?

"இம்சை" தாங்காதுன்னு பாக்காமே விட்டுருக்கேன். :O)

said...

மூனு வாரத்துக்கு முன்பு பார்த்தேன்,எனக்கென்னவோ சிம்புதேவனைவிட நம்ம வடிவேலு தான் முன்னால் நிற்கிறார்(ஆஹா! சிம்புதேவன் பின்னாடிதானே நிற்கிறார்??).அலுங்காத குலுங்காத நடிப்பு.புதிய பரிமாணம்.
சறுக்கு மரம் தான் முதல் கலக்கல்.
ஆனால் பாவம் இங்கு வந்த பல குழந்தைகள் தமிழ் சரிவர புரியாமல் ஆங்கிலத்தில் அம்மாவிடம் கேட்டு தெரிந்துகொண்டனர்.

said...

ஷ்ரேயா,
படத்தைப் பாருங்க. ஏழு என்னன்னு புரிஞ்சுரும்:-)

said...

//ஆனா 'ரொம்பப் பழைய படங்கள்' மட்டும் இதுக்கு விதிவிலக்கு. இந்தக் கணக்குலே இதை விட்டுறலாமுன்னு பார்த்தாலும் முடியலையே.//:-))
புலி இப்பதான் வந்தாராக்கும். ஒரு அநாமதேய கிசுகிசு என்ன சொல்லுதுன்னா இந்த படத்துல பல காட்சிகள அமைத்தது இந்த படத்தோட ஹீரோதானாம். அப்போ அசல் இயக்குனர் யாரு?

said...

குமார்,

ஆ.வி.யிலேயே நிறைய இந்த அரண்மனை ஜோக்ஸ் எல்லாம் முந்தி இருந்தே படிச்சுச்
சிரிச்சுட்டதாலே 'சறுக்கு படிக்கட்டு' எல்லாம் அவ்வளவா சிரிப்பு வரலை. எனெக்கென்னவோ
ஒவ்வொரு ஃப்ரேமிலும் இயக்குனர் ஞாபகம்தான் வந்துச்சு.
ஆனா வடிவேலு நடிப்புலே அப்பழுக்குச் சொல்ல முடியாது. ரெண்டு வகையாவும் ஒண்ணுக்கொண்ணு
குழப்பாம அபாரமாச் செஞ்சிருந்தார். கொஞ்சம் ஆளு குண்டாயிட்டார் போலத் தெரிஞ்சது.

said...

சுரேஷூ,

// அநாமதேய கிசுகிசு என்ன சொல்லுதுன்னா இந்த
படத்துல பல காட்சிகள அமைத்தது இந்த படத்தோட ஹீரோதானாம்.
அப்போ அசல் இயக்குனர் யாரு? //

அட!!! இப்படி ஒரு 'நூஸ்' இருக்கோ? அப்ப காம்ப்ரமைஸ் செஞ்சுக்கலாம்.
யார் காட்சிகளை அமைச்சாங்களோ அவுங்கதான் கில்லாடி!

said...

ரொம்ப நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல முழுநீள நகைச்சுவை படம். நல்ல விமரிசனம்.

said...

ரொம்ப நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல முழுநீள நகைச்சுவை படம். நல்ல விமரிசனம். //

அதே.. அதே..

said...

மணியன் & டிபிஆர்ஜோ,

வாங்க வாங்க.

நன்றி நன்றி.

படம் பார்த்துட்டீங்களா நீங்க ரெண்டு பேரும்?

said...

துளசி,
பார்த்துட்டீங்களே இம்சையை.
அருமையா விமரிசனம்.

தரியலை
விட்டு விட்டீங்களே.
படம் பார்த்த திருப்தி வந்துவிட்டது.
இங்கே நாடோடி மன்னன் கூட நல்லா ஓடிகிட்டு இருக்கு.

said...

என்னாச்சு
நான் போட்ட பின்னூட்டம்
என்னாச்சு
பின்னூட்டத்திற்கு பரிசுனு வந்ததும்
நல்ல பின்னூட்டமெல்லாம்
அம்பேல் ஆய்டுதா?

said...

பின்னூட்டம் பரிசோதனை.

said...

///அரண்மனைக் கோட்டையில் இருக்கும் வீட்டு எண்.

புதிய எண்
பழைய எண்
எதிர்கால எண்///
இதன் அர்த்தம் என்ன? படத்தைப் பார்த்துட்டன். எனக்கு விளங்கவில்லை

said...

இப்போதுதான் பார்த்தேன். தங்கள் விமர்சனம் சிறப்பாக இருக்கிறது.

said...

வாங்கோ பாட்டி.

//இப்ப என்ன புதுசா ஹிட்டு படமெல்லாம் பாக்குற. //


எல்லாம் (உங்க) போறாத காலம்தான்

நம்ம கொளுகையிலே இருந்து தவறிட்டேனேன்னு இப்ப மனசு ஒரே 'இம்சை.'
அதான் உடனே இன்னொரு படத்துக்கு விமரிசனம் எழுதி இந்த 'இம்சை'யைப்
போக்கிடலாமுன்னு...................

said...

வல்லி,

பதிவுக்கு வர்ற நாலுபேரை 'டரியல்' ஆக்கவேணாமுன்னுதான்
அதை விட்டுட்டேன்:--))

எம்ஜிஆர் படங்கள் எப்பவும் வசூலில் ஹிட்டுத்தான். தியேட்டர் நஷ்டத்துலே
ஓடும்போது ஒரு பழைய எம்ஜிஆர் படம் போட்டு அந்த
நஷ்டத்தை ஈடு கட்டிருவாங்களாம் சில ச்சின்ன ஊர்களிலே.

said...

சிஜி,

இன்னும் உங்க பின்னூட்டம் வந்து சேரலை(-:

said...

கேபிடல்,

நீங்க ச்சென்னைவாசி இல்லையா? அதான் ..............

இப்ப வீடுகளுக்கு பழைய நம்பர்களை எடுத்துட்டு புது நம்பர் கொடுத்துருக்காங்க.
எல்லா வீடுகளிலும் வெளியில் பழைய & புதிய நம்பர்கள் எழுதிவச்சுருக்கு.
பாவம், தபால் இலாக்கா ஆளுங்க. எங்கும் எதிலும் கன்ஃப்யூஷன். இதனாலே
ரேஷன் கார்டு இத்தியாதிகள் வழங்கறதிலும் குழப்பம்.
இனி எதிர்காலத்துலே இன்னொரு மாற்றம் வருமுன்னு ச்சூசகமா
மூணாவது எண் சேர்த்திருக்கார் இயக்குனர்.:-)))))))

said...

வாங்க பாலா.
நீங்க போட்டிக்கதைகளில் பிஸியா(???!!!) இருக்கீங்கன்றதுதான் தெரியுமே!

ஆமாம். படம் பார்த்தீங்களா?

said...

ஏங்க நானே, இங்க ஜியார்ஜியவில மாட்டிக்கிட்டு, இருந்த ஒரே ஒரு விடியோ கடை தாத்தாவும் மூவ் ஆகி, texas போயிட்டாரு இப்ப இது போன்ற முக்கியமான படங்கள் கூட பார்க்க முடியாலேயேன்னு வெருப்போட இருக்கேன், நீங்க வேற இப்பிடி எழுதி என்ன உசிப்பேத்தி வுட்றீங்க... :-)))

நான் எப்படியாவது இந்த படத்த பார்த்தாகணுமே... என்ன பண்ணுவேன்... இப்பிடி ஒத்த ஆள மண்டபத்தில குறுக்கும் நெடுக்குமா நடக்க வைச்சிப்புட்டீகளே...

பி.கு. ஏன் இந்த பதிவு முழுமையாக கீழிறக்கம் செய்ய முடியவில்லை... பின்னூட்டமிடுவதற்கு, யாரவது சொன்னார்களா?

said...

I am getting the following error in Ineternet explorer 6.

Error: nickname is undefined

(padam paarthaachu)

said...

வாங்க தெ.கா.

என்ன பதிவிறக்கம் ஆகலையா?
யாரங்கே... யாரங்கே

கூப்புட்டவுடனே யாரும் 'அண்மனையிலே'........ வந்துட்டாலும் .........ஹூம்

அங்கே நம் நண்பர்கள்கிட்டே சொன்னால் உள்ளூர்தானே போஸ்ட்லே அனுப்பி விடமாட்டாங்களா?

( எனக்கே இங்கே போஸ்ட்லேதானே படம் வருது)

said...

பாலா,
இங்கே எங்கிட்டேயும் எக்ஸ்ப்ளோரர் 6 தான்.

இதுவரை ஒண்ணும் தகராறு இல்லையே.

( டச் வுட்)