Thursday, August 10, 2006

ரெடிமேட் பகுதி 11

புதுத்தைய்யல் மெஷீனைப் பார்க்கப் பார்க்க பரவசமா இருக்கு. நாமும் கொஞ்சம் தைச்சுப் பார்க்கலாமுன்னு துணியைத் தேடறேன். ஒண்ணும் வாகா இல்லை. ஒரு கைகுட்டையை எடுத்து வச்சுக்கிட்டு மெஷீனை ஓட்டுனேன். தைய்க்குதுதான். ஆனா கொஞ்சம் டைட்டா இருக்கோ?


மெஷீனை கொஞ்ச நேரம் ஆராய்ச்சி செஞ்சதுலே நூல் ஒரு இடத்துலே ரெண்டு தகடுக்குள்ளே சுத்திட்டு, அப்புறம் அங்கிருந்து இறங்கி ஊசிக்கு வருது. ஆஹா..... இந்தத் தகடுதான் நூலை இப்படி இழுக்குது. அதை எடுத்துட்டா சுலபமா ஓடும். எடுத்துட்டேன். அனாவசியமா(!) அதுக்குள்ளே ஏன் நூல் போய் வரணும்?



இப்பத் தைச்சுப் பார்த்தால் நல்ல சுலபமான ஓட்டம். தைச்ச துணியை வெளியே எடுத்துத் திருப்பிப் பார்த்தேன்.அடுத்தபக்கமும் சீரா வரணுமே. கொசகொசன்னு நூலுங்க அடையாப் பிடிச்சிருக்கு. ரொம்ப நேரம் இதையும் அதையும் திருப்பி இன்னும் கொஞ்சம் நேரத்தையும் நூலையும் பாழாக்கிட்டு மெஷீன் சரியில்லைன்ற முடிவுக்கு(?) வந்தேன்.

ஏமாத்திட்டான்............நல்ல ப்ராண்டா வாங்கி இருக்கணும்.


ஆமாம். இன்ஸ்ட்ரக்ஷன் புத்தகத்தைப் பார்க்கலியான்னு கேக்கறீங்களா? அப்படியெல்லாம் ஒண்ணும் தரலையே.


மறுநாள் இவர் வேலைக்குப் போறப்ப, மெஷீன் கடைக்கு ஃபோன் போட்டு 'நல்லாத் தைக்கலை'ன்னு சொல்லச் சொன்னேன். வீட்டுலே அப்பெல்லாம் போன் வச்சுக்கறது பெரிய ஆடம்பரம்.


அன்னிக்கு மத்தியானமே ஆள் வந்துச்சு. அதே பையந்தான். விஷயத்தைச் சொல்லி, நான் தைச்சு(?) வச்சதைக் காமிச்சேன்:-))))


டென்ஷனிலே இருந்து நூலை ஏன் வெளியே எடுத்தீங்கன்னு கேட்டதும் நான் முழிச்சேன். அப்புறம் 'அது ரொம்படைட்டா இழுக்குது'ன்னதும் அதை எப்படி லூஸ் செய்யணுமுன்னு காமிச்சிட்டு, ( அட ! இப்படி ஒரு வழி இருக்கா?)நான் கன்னாபின்னான்னு திருப்பி வச்சிருந்த எல்லாத்தையும் மறுபடி சரியாக்கிட்டு, அதே கைகுட்டையிலே மறுபடி என்னையே தைக்கச் சொன்னதும் எனக்குச் சிரிப்பு வந்துருச்சு. அட! சரியாத்தான் தைக்குது!


இப்பத் தைக்கத் தெரிஞ்சுபோச்சு. தைக்கத்தான் துணி இல்லை. சாயந்திரம் இவர் வந்ததும் கடைக்குக்( அதே எம்.ஜி. ரோடு)கிளம்பினோம். இருக்கறதுலேயே மலிவா ஒரு துணியை ஒரே ஒரு மீட்டர் வாங்கியாச்சு. அதை வெட்டறதுக்கு?முந்தி ஒரு கதை (பேரு ஞாபகம் இல்லை)யிலே ஒரு அம்மா அருவாமணையிலே துணிகளை வெட்டிக் கையாலே ஊசிநூல் வச்சுத் தச்சு ஜாக்கெட் போட்டுப்பாங்க. அப்படியே நாமும் செஞ்சிரணுமோ?ஹாஹா....


யானை வாங்குனா அங்குசமும் வாங்கணுமில்லே?

இன்னொரு கடையிலே சுமாரான விலையில் ஒரு கத்தரிக்கோல், நூல்கண்டுன்னு கொஞ்சம் வாங்கினோம்.


இப்ப தினமும் டைம்பாஸ் துணி தைக்கறதுன்னு ஆகிப்போச்சு. அந்த ஒரு மீட்டர் துணியைத் துண்டுதுண்டா வெட்டி, ச்சும்மா நீளமா தைக்கறதுதான். நேர் தைய்யல். எங்கியாவது போய் தைக்கப் படிக்கணுமே. இங்கே எதாவது தைய்யல் வகுப்பு இருக்கா? விசாரிக்கணும். இதுக்குள்ளே நம்ம அக்கம்பக்கத்து ஆட்கள் கிழிஞ்சதைத் தைக்க நம்ம வீட்டுக்கு வர ஆரம்பிச்சாங்க. நம்ம மெஷீன் ஆச்சே. நாம்தானே தைக்கணும்?


கிழிசல் தைக்கறதுலே எக்ஸ்பெர்ட்டா ஆனேன். சமூக சேவை.
நமக்குத் தெரிஞ்ச ஒருத்தர் மூலமா ஒரு வாடகைவீடு கிடைக்கறாப்புலே இருந்துச்சு. எங்க இவர் ஒரு சைக்கிளை மாச வாடகைக்கு எடுத்திருந்தார்னு சொன்னேனில்லை. ( ரெடிமேட் 6)அதுக்குப் பணம் கட்டப் போனப்ப, பக்கத்து வீட்டு மாடிகாலியாகப் போகுது. உங்களுக்கு வேணுமான்னு கேட்டாராம். இவரும் வீட்டைப் போய்ப் பார்த்துருக்கார். நல்ல(?)வீடு.வீட்டுக்காரர்கிட்டே பேசினாராம். அவருக்கும் சம்மதம்.


வீடு மாறிட்டோம். இப்பச் சாமான்கள் நிஜமாவே கூடிப்போச்சு. முந்தி மாதிரி ரெண்டு மணி நேரத்துலே மூட்டைக்கட்ட முடியலை. இதுக்கிடையிலே நமக்கு ஒரு நாய்க்குட்டியும் வந்துருச்சு. எல்லாருமா அங்கே போய்ச் சேர்ந்தோம்.அப்பத்தான் நான் அந்த வீட்டை முதல்முதலாப் பார்க்கறேன். மாடி வீடு. ரெண்டு ரூம். உண்மையாவே பெரூசா ரெண்டு ரூம். வெளியே வெராந்தாக் கடைசியில் ஒரு பாத்ரூம். முந்தி இருந்த வீட்டைப் போல டபுள் சைஸ்.


கோர்புரி பஜார்லே வீடு. முன்னாலும் பின்னாலும் வெராந்தா வச்ச மாடிவீடு. ஒரு பக்கம் மெயின் ரோடு. அதைத்தொட்டாப்புலே மிலிட்டரி கிரவுண்டு. கூர்க்கா ரெஜிமெண்ட். அடுத்தபக்கம் கடைத் தெரு. ரெண்டு பக்கமும் வரிசையாக்கடைங்க. அநேகமா எல்லாக் கடைகளுக்கு மேலேயும் வீடுங்க. கீழேயும் தெருவைப் பார்த்து இருக்கற முன்வரிசையில் மட்டும் கடைகள். அதுக்குப் பின்னே இருக்கற அறைகளில் அநேகமா அந்தந்தக் கடைக்காரர்களின் குடித்தனம். ஒரு நாலைஞ்சு கடைகளிலே மாத்திரம், பின்னம்பக்கம் குடி இருக்கறவங்க அந்தக் கடைகளுக்குச் சம்பந்தம் இல்லாதவங்க. நம்ம பால்கனியிலே இருந்து பார்த்தா எதிர்வரிசைக் கடைகளும், மாடியில் இருக்கும் வீடுகளும் தெரியும். அதுலே நமக்கு நேர் எதிரா இருந்த வீட்டுலே ஒரு கோவானி மிஸ் இருந்தாங்க.


நாம அங்கே போன சில நாளுலேயே, அவுங்களோடு பழக்கமாயிருச்சு. நம்ம வீட்டுக்குக் கீழே வீட்டுலே இருக்கற அம்மாவோடு அவுங்களுக்கு நல்ல பழக்கம். ஒரே பையன். 15 வயசு இருக்கும். அவுங்க வீட்டுக்காரர் எதோ அரபுநாட்டுலே வேலையா இருந்தார். அவுங்க நல்லா தைப்பாங்களாம். சரி. நல்லதாப் போச்சு. இவுங்க தான் இனி நமக்கு டீச்சர். தைய்யல் டீச்சர் கிடைச்சாச்சு.

27 comments:

said...

ஓட்டத்தெரியதவர்களுக்கு கார் தைக்கத்தெரியாவங்களுக் தையல் மெசின்
வேடிக்கை.

said...

//கோர்புரி பஜார்லே வீடு.... கீழேயும் தெருவைப் பார்த்து இருக்கற முன்வரிசையில் மட்டும் கடைகள்.//

ஏ..யப்பா!! map வரைஞ்சிடலாம் போலருக்கே... ;O)

தைக்கக் கத்துக்கிட்ட கதையை சீக்கிரம் சொல்லுங்க. நானும் தையல் பழகினேன்.. இப்ப என்னடான்னா குறிப்புப் புத்தகத்தை வைச்சு எதுக்கு இந்த துண்டுனு கொஞ்ச நேரம் குழம்பினப்பறம்தான் மண்டையிலே உறைக்கும்!!! :O)

said...

என்னார்,

அதெப்படி? வாங்குனாத்தானே கத்துக்க முடியும்?
இப்பவும் கம்ப்யூட்டர் வாங்கின பிறகுதானே
இவ்வளவாவது தெரிஞ்சுக்க முடிஞ்சது.

said...

ஷ்ரேயா,

முட்டிமோதிக் கத்துக்கறதுலெ இருக்கற சுவையே தனிப்பா:-))))

said...

சின்ன விஷயம்கூட மறக்காம வெச்சு நீங்க கதை சொல்ற பாங்கு இருக்கே:)) தமிழ்சினிமா ஒரு நல்ல கதாசிரியரை இழந்துருச்சோ:((

said...

டீச்சருக்குக் கிடைத்த டீச்சர்னு பதிவுக்குத் தலைப்பு வெச்சிருக்கலாமோ!

படபடன்னு ஒரு கோர்வையாச் சொல்லீருக்கீங்களே...

ரெண்டு பெரிய ரூம்னு சொல்லும் போது கண் முன்னாடி ரெண்டு ரூம் வந்துச்சு. அதுல ஓரத்துல நீங்க தையல் மிஷின் வெச்சி தக்கிற மாதிரி நெனைச்சுப் பார்த்தேன்.

said...

வீடு மாறிட்டோம். இப்பச் சாமான்கள் நிஜமாவே கூடிப்போச்சு. முந்தி மாதிரி ரெண்டு மணி நேரத்துலே மூட்டைக்கட்ட முடியலை//

ஆமாங்க துளசி.. வீட்டுக்காரனுக்கு ஒரு வீடுன்னா வாடகைக்காரனுக்கு பல வீடுன்னு சொல்றதுக்கு ஈசியாத்தான் இருக்கு. ஆனா ஒவ்வொரு தடவையும் வீடு மாத்தி முடிக்கறதுக்குள்ள போறும் போறும்னு ஆயிரும்..

அதுவும் இந்த முப்பது வருசத்துல முப்பது வீடாவது மாறியிருப்பேன் போல.. எவ்வளவு ஊருங்க, எத்தனை வீடுங்கன்னு.. அதுக்குன்னே ஒரு தி.பா தொடர் எழுதலாம்.. அவ்வளவு அனுபவங்கள் இருக்கு..

பயந்துறாதீங்க.. எழுதப் போறதில்லை:)

said...

வாங்க செல்வா.

//தமிழ்சினிமா ஒரு நல்ல கதாசிரியரை இழந்துருச்சோ:((//

இது மெகா சீரியலுக்குத்தான் சரிப்படும். ரெண்டரை மணி நேரத்துலே
அடங்கிருமா என்ன? ஆனா அப்பெல்லாம்தான் டிவி சீரியலே கிடையாதே:-)

said...

ராகவன்,

//ரெண்டு பெரிய ரூம்னு சொல்லும் போது கண் முன்னாடி
ரெண்டு ரூம் வந்துச்சு. அதுல ஓரத்துல நீங்க தையல்
மிஷின் வெச்சி தக்கிற மாதிரி நெனைச்சுப் பார்த்தேன்.//

:-)))))))))

அட! ஆமாம். ஆனா ஒரு படம்கூட புடிச்சு வச்சுக்கலை. கேமரா எல்லாம்
கனவுலே மட்டுமே வந்த காலங்கள் அவை:-)

said...

டிபிஆர்ஜோ,

// இந்த முப்பது வருசத்துல முப்பது வீடாவது மாறியிருப்பேன்
போல.. எவ்வளவு ஊருங்க, எத்தனை வீடுங்கன்னு..
அதுக்குன்னே ஒரு தி.பா தொடர் எழுதலாம்..
அவ்வளவு அனுபவங்கள் இருக்கு.. //

பேசாம அதையும் எழுதுங்க. அனுபவம்தானேங்க வாழ்க்கை.

நான் பொறந்ததுலே இருந்தே இந்த ஊரூரா டேராதான். இப்போ நினைச்சாவே
அதிசயமா இருக்கு. இன்னிக்கு இருக்கற நிலமையிலே வீடு மாறணுமுன்னு
நினைச்சாவே மயக்கம் வந்துரும்.

said...

ஹி,ஹி,ஹி,ஹி, நீங்க தைச்சதையெல்லாம் உங்க அவருக்கே போட்டுப் பார்த்தீங்க தானே? ரொம்பப் பிடிச்ச்ச்ச்ச்சதாமே?

said...

கீதா,
அவ்வளோ பாக்கியம் அவர் செஞ்சுருக்காரா என்ன?

ஆமாம், மாரியம்மா காளியம்மான்னு இல்லாம இது என்ன இன்னிக்கு ஒரே நக்கல்?:-))))

said...

அம்மா,
எங்க வீட்ல 2 வருஷம் அடுப்பு எரிந்ததே இந்த கலைவாணியால் தான்.

said...

"ஒரு தையல் தையல் கற்கின்றார்.."
தலைப்பு நல்லா இருக்கா?
பின்னூட்டம் ரெடிமேட்10 ல் கொடுத்துவிட்டேன்...முடிஞ்சா இங்கே கொண்டுவரவும். இல்லாங்காட்டி ஒருமுறை படித்துவிட்டு விட்டு விடவும்
(விடுபட்டதை எல்லாம் ஒரே சமயத்தில் படித்ததால் இக்குழப்பம்)

said...

வாங்க சிவமுருகன்.

இப்பவும் இந்த மெஷீன் இருந்தா ஒரு குடும்பத்தைச் சுமாரா
நடத்திக்கிட்டுப் போகலாம்தான். ஆதரவு கொடுக்கறதுலே இதுக்கு நிகர் இல்லைதான்.

said...

சிஜி,
அங்கே இருந்ததை இங்கே கொண்டு வந்துட்டேன்.

//எல்லா ட்டீச்சரும் இதைத்தான் செய்வாங்க.....நடத்துற சப்ஜெக்ட்லே
தடங்கல் வந்தா நைஸா வேற சப்ஜெக்ட்ட எடுத்துடுவாங்க
எனக்கு என்ன வசதினா மிக சமீபத்திலேதான் ரெடிமேட் 9
எபிசோடையும் திருப்பி திருப்பி படிச்சேன்//

தலைப்பெல்லாம் நல்லாதான் இருக்கு. புடவைத்தலைப்பைப்
பத்திதானே சொல்றிங்க?:-)))))

ரொம்பப் பழைய சரித்திரமுன்னா முந்திக் காலத்துலெ ஒரு ராஜா இருந்தாராம்னு
ஆரம்பிச்சுச் சொல்லிறலாம். ஆனா நம்ம நியூஸி சரித்திரத்துலே இப்ப நிக்கிறது 1987லே.
சமீபத்து விஷயங்கள் வர்றதாலே கொஞ்சம் நிதானமா, நாலுபக்கமும் பார்த்து அலசி
எழுதணும். அதான் நடுவிலே கொஞ்சம் தடங்கல்கள்.

said...

ஒரே மூச்சா உக்காந்து 11 பகுதியையும் முடிச்சாச்சு. இப்போ உங்க சரித்திரதுல ப்ரேக் விட்டு நியூசி சரித்திரம் பக்கம் போனீங்க, டென்ஸன் ஆகிருவேன், சொல்லிட்டேன். ஆமா.

said...

"தையல்" -எப்படி இந்த அனுபவத்தைவிட்டேன் என்று தெரியவில்லை.மனைவிக்கு வாங்கிக்கொடுத்தபோதும் அதன் பக்கமே போகவில்லை.
ஏனோ இது என்னை அவ்வளவாக கவரவும் இல்லை.
பார்ப்போம் உங்க டீச்சர் எப்படி என்று!

said...

"ennar said....
ஓட்டத்தெரியாதவர்களுக்கு கார் தைக்கத்தெரியாதவங்களுக்குத்
தையல் மெசின்
வேடிக்கை"
ரொம்ப சரி

said...

கொத்ஸ்,

வாங்க . நலமா?

ஒரே மூச்சுலே படிச்சீங்களா? மூச்சு முட்டியதா?

வீணா டென்ஷன் ஆகாதீங்க. இதை எப்படியும் முடிச்சுரலாமுன்னுதான் இருக்கேன்.

நியூஸி எங்கே போகப்போது?:-)))))

said...

குமார்,

'தை(ய்)யல்' ன்னு சொன்னாலும் பெரிய பெரிய ஃபேஷன் டிஸைனர்கள்
எல்லாம் ஆம்புளைங்கதான்:-))))

said...

சிஜி,

இது எப்படின்னா எழுத்தாளரா இல்லாமலேயே நான் பதிவு எழுதற மாதிரியா?

இல்லே பதிவு எழுதி எழுதியே எழுத்தாளரா ஆவற மாதிரியா? :-))))

said...

துளசி, ஊர்ரு ஊராப் போன கதை வேற.
வீடு எனக்குத் தெரிஞ்சே(11) பகுதிகளில் இருபது தடவை மாத்திட்டீன்ங்களா/??
பொறுமையின் பூஷணமே நீவிர் அறியாததும் ஏதும் உளதோ?

அப்ப, நியூசிக்கு வந்தா டைலர் தேட வேண்டாம்.!!என்ன 50$ (ஒரு கர்சீஃப்)கொடுத்தால் உங்க மஷின் தைக்குமா:-))

தோடா தரணிகிட்ட சொல்லி இருக்கேன்.நிங்க கொடுத்த விவரங்களை வைத்து செட் போட்டுப் படம் எடுக்கப் போறோம்.

said...

வர வர எழுத்தாளர் எண்ணிக்கை
குறையுதுங்க
எல்லாம் தட்டச்சாளரா ஆய்ட்டாங்க...
(எழுதுறவங்க தானே எழுத்தாளர்?)

said...

மானு,

//தோடா தரணிகிட்ட சொல்லி இருக்கேன்.நிங்க கொடுத்த விவரங்களை
வைத்து செட் போட்டுப் படம் எடுக்கப் போறோம்.//

த்தோடா......... அப்ப எனக்கு ஒரு நடிகையாவும் இருக்க ச்சான்ஸ் வருதோ? :-)))))

நம்ம மெஷீன் தாராளமாத் தைக்கும். அதெல்லாம் கவலை இல்லை. எப்ப வர்றீங்க?

said...

சிஜி,

இனிமே எழுதறதுக்குப் பேப்பர் பேனாவையெல்லாம் தேடுற நிலையில் எழுத்தாளரும் இல்லை,
அதைப் பொறுமையாப் படிக்கிற பத்திரிக்கை ஆசிரியரும் இல்லை.
நஷ்டம் எல்லாம் தபால்துறைக்கும், இதை வச்சு ஜோக் எழுதற ஜோக்காளர்களுக்கும்தான்.:-))))

ஆனா கணினியிலே எழுதறவங்க எண்ணிக்கை இன்னும் கூடிக்கிட்டே போகும்.

அதுசரி. இன்னும் ஏன் நீங்க புதிய பதிவு ஒண்ணும் தட்டச்சலை?

said...

ஹி,ஹி,ஹி, துளசி,
நம்ம பதிவுக்கு நீங்க சமீபத்திலே வரதில்லைனு புரியுது. வந்து பாருங்க, நக்கலாவது, நையாண்டியாவது, எல்லாரும் துண்டைக் காணோம், துணியைக் காணோம்னு ஊரை விட்டு ஓடறாங்க, நீங்க வேறே புதிசா எழுதறேன்னு சொல்றீங்களே, நம்ம ஸ்டைலே அதுதான்.