Wednesday, March 27, 2024

தீபத்திருநாள் !

திரும்பிப்பார்த்தால் கார்த்திகை தீபம்..... இதோ நான் வந்துட்டேங்குது.... அதுக்குள்ளேயா ? 
"பின்னே.... நீ பாட்டுக்குத் தீபாவளிகளைக் கொண்டாடிக்கிட்டு இருந்தால் அது முடியும்வரை நான் காத்திருக்கணுமா ? "

"சொல்றது சரிதான்.... இந்த வருஷம் தீபலக்ஷ்மிகள் வேற வந்துருக்காங்க...... கொண்டாடினால் ஆச்சு !"
முக்கியமா தீபம் ஏத்தணும்!  ஏத்தியாச் :-) 












சம்ப்ரதாயமா செய்றதெல்லாம் இங்கே முடியலை...... தெரிஞ்சவரை செய்யறதுதான்.... அதுவுமே  இந்தியப் பண்டிகைகளைக் கொண்டாடும்  வகையில்  நம்ம குடும்பச்சங்கிலியில்  கடைசியில் நிக்கறது நாந்தான்...... விடக்கூடாது !

என்ன ஒரு சோகமுன்னா.......   இந்த கலாட்டாவில் நம்ம தோட்டத்துலே இருக்கும் கன்ஸர்வேட்டரியை எட்டிப்பார்க்கலை..... பதிமூணு வருஷமாக் காத்திருந்த கள்ளியில் அன்றைக்கு மொட்டு வந்துருச்சேன்னு கொண்டாடிட்டு, தினமும் ஒரு பார்வை பார்க்காமல் போனது என் தப்புதான்.


முந்தாநாள் பூத்துருக்கு ! இதன் வாழ்வு 24 மணி நேரந்தான் என்றபடியால் வாடி நிற்கும் பூவைப் பார்த்துக்  கண்ணில் ஜலம் வச்சுண்டேன்.............. ப்ச்...
ஆனால் ஒரு அல்ப சந்தோஷம்.... நான் யூகிச்சதுபோல பூவின் நிறம் வெள்ளை !


6 comments:

said...

படங்களின் மூலம் அழகிய தீப ஒளி வரிசைகளை கண்டேன். குழந்தை நமஸ்கரிப்பது அழகு. கவனிப்பாரின்றி போன கள்ளிப்பூ!

said...

கார்த்திகை கொண்டாட்டங்கள் நன்று.

வாடிய பூ - வருத்தம் தான். ஆனாலும் வாடித்தானே ஆக வேண்டும்! நிலையாக இருக்க முடியாதே!

கொண்டாட்டங்கள் தொடரட்டும்.

said...

தீப லஷ்மிகளுடன் தீபாவளிக் கொண்டாட்டம் கண்ணைக் கவர்கிறது.

said...

வாங்க ஸ்ரீராம்,

விளக்கே, ஒரு அழகுதான் இல்லே !!!!

குழந்தைகள் என்ன செய்தாலும் அழகுதான் !

கள்ளிப்பூ...... ப்ச்.... ஆனால் எப்படி இருந்துருக்குமுன்னு லேசா ஒரு எண்ணம் இருக்கு ! நம்ம பெரிய தொட்டிக் கள்ளிப்பூவும் வெள்ளை நிறம்தான்!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

நமக்குத்தான் எத்தனைவிதமான பண்டிகைகள் !!!!!

கள்ளி வாடியதுகூட பிரச்சனை இல்லை. ஆனால் கண்ணில் காட்டிட்டு வாடி இருக்கலாம்! ப்ச்....

அடுத்த மொட்டு வரும்போது 'விழித்து' இருக்கணும் !

said...

வாங்க மாதேவி,

ரசித்தமைக்கு நன்றிப்பா !