போதும் போதும்னு சொல்லும் வகையில் தீபாவளியைக் கொண்டாடித் தீர்த்தோம் ! இனி ஒழுங்கு மரியாதையா வீட்டில் விட்டு வச்சு வச்சுருக்கும் வேலைகளை முடிக்கணும். இப்போதைக்கு அது கொலுப்படி :-)
படிகளுக்குப் பலகை போட்டு முடிக்கணும். அதுக்கு முதலில் படியை எங்கே வைக்கப்போறோமுன்னு முடிவு செஞ்சுக்கணும். நம்ம பழைய படி இருக்குமிடத்துலேயே வைக்கலாம் என்று பார்த்தால் இது தரையில் நீளமா நீட்டி வருது. நமக்கு அறைக்குள் போகவரக் கஷ்டம்தான். காலில் இடறினால் அவ்ளோதான்:-(
ஸ்வாமி மேடைக்கு நேரெதிரா இருக்கும் சுவரையொட்டி அளந்து பார்த்தால் சரியா இருக்கு. என்ன ஒரு ப்ராப்லமுன்னா அங்கே போட்டு வச்சுருக்கும் சோஃபாவை எடுத்து வேறிடத்தில் போடணும். இருக்கும் 'மூளை'யைக் கசக்கிப்பிழிஞ்சதில் ஊஞ்சலுக்கந்தாண்டை இருக்குமிடம் பரவாயில்லை. ஆனால் அங்கே இருக்கும் பொம்மை வரிசையை இடம் மாத்தணும். யாஹாங் ஸே வஹாங்னு.... பொம்மைகளைப் ஃபோயருக்கு மாத்தினோம்.
சோஃபா இங்கே வந்தது. நம்ம வைஷுவும் ஐஷுவும் புது இடத்து மாறினாங்க. இந்த இடம் நம்ம ரஜ்ஜுவீட்டாண்டை ! சின்னவன் வண்டியைப் பார்க் செய்வது அங்கேதான் !
கொலுப்படிக்கு ஒரு உறையும் கிரியே விற்பதால் அதையும் சேர்த்தேதான் வாங்கி அனுப்பினார் நண்பர். மொத்தமே மூணு நிறங்கள்தானாம். சிகப்பு, மஞ்சள் & வெள்ளை. பச்சை இல்லயேன்னு கொஞ்சூண்டு கவலைப்பட்டுட்டு , மஞ்சள் சொன்னேன். எல்லாம் போட்டுப் பார்த்ததும் நல்லா இருக்கான்னு யோசிக்குமுன்னேயே நம்மவனுக்குப் பிடிச்சுப்போச்சு போல !
சரசரன்னு ஏறுவதும் இறங்குவதுமா டைம்பாஸ் ஆகுது ! இறங்கும்போது துணியை நகங்களால் பிடிச்சு இழுத்துக்கிட்டே இறங்கறான். ஐயோ.... இது வேலைக்காகாது. பொம்மைகள் இருக்கும்போது துணியைப் பிடிச்சு இழுத்தால் எல்லா பொம்மைகளும் விழுந்து வைக்கும் !
அதனால் கவர் இல்லாமல் இருக்கட்டும்னு முடிவு. 'அது ஒன்னும் எனக்குப் பிரச்சனையே இல்லை. ஜங்கிள் ஜிம் போல இருக்கு ! அடிவழியா நுழைஞ்சு போய் அங்கிருந்து எது வசதியோ அந்தப் படிக்குத் தாவி ஏறுவேன்'னு அவன் முடிவு. எப்படியானாலும் தலைவலி பொம்மைகளுக்குத்தான்..... உடைஞ்சுபோனால் நான் என்ன செய்ய ?
கடைசியில் வேற வழி இல்லாமல் பக்கவாட்டில் கட்டங்கட்டமாய் இடைவெளி தெரியும் ஜங்கிள் ஜிம்மை மறைக்கும்படி ஆச்சு. திருப்பதி தேவஸ்தானக் காலண்டர் பழசு ஒன்னை எடுத்து அந்தப் படங்களை ஒட்டிவச்சோம்.
முன்பக்கத்துக்கு, வால்பேப்பர் ரோல் ஒன்னு வீட்டில் இருந்ததை அளவு பார்த்து வெட்டி ஒட்டியாச். ஒட்டறதுன்னா..... ப்ளூடாக் போட்டுத்தான். வேண்டாமுன்னா பிரிச்சு எடுப்பது சுலபம்.
இவ்வளவும் ஆனபின், நம்மவர் சொல்றார்.... இனி எல்லாத்தையும் பிரிச்செடுத்துப் பெட்டியில் வச்சுடலாமா ? அடுத்தவருஷம் கொலுவுக்குத் திரும்பப் படி கட்டினால் போதாதா ?
ஐயோ..... ப்ளாஸ்டிக் தண்டுகளை இணைப்பது அவ்வளவு சுலபமில்லை. மரக்கட்டையால் தட்டித்தட்டித்தான் இணைக்கணும். பலமாத் தட்டினால் ப்ளாஸ்டிக் ஃபணால்......... ஒன்னா ரெண்டா...... இத்தனை இணைப்பை பிரிக்கவும் திரும்பப் பொருத்தவும் இனி மெனெக்கட முடியாது....
அதுபாட்டுக்கு அப்படியே இருந்துட்டுப் போகட்டும் !
ததாஸ்து...........................
6 comments:
படிகளின் இணைப்பு பலே... ரஜ்ஜுவின் ஆராய்ச்சியும் குழியும் படங்களில் தெரிகிறது! ஆமாம் அவனுக்கு - பொதுவாக பூனைகளுக்கு, நாய்களுக்கு - நிறம் தெரியுமோ?
படிக்கட்டு - கட்டுவதும் பிரிப்பதும் பெரிய வேலை தான். ஆனாலும் செய்யத்தானே வேண்டும்!
ஐந்து படி இப்போது இருக்கிறது! பெரிதாக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். பார்க்கலாம்.
வாங்க ஸ்ரீராம்,
Just like dogs, cats' color vision is primarily in shades of yellow, blue, and gray, although cats tend to perceive more blue and greenish-yellow hues, while dogs' vision focuses more on blue and yellow.
கூகுள்காரன் இப்படிச் சொல்றான்!
இருக்குமோ ? இருக்கலாம் !
படிகளை இணைக்கறது ரொம்ப பேஜாரா ஆனது !
வாங்க வெங்கட் நாகராஜ்,
வருஷாவருஷம் மெனெக்கெட வேணாமுன்னு அப்படியே வச்சுட்டோம் :-)
கிரியில் ஒன்பது படிகள் கூட இருக்கு ! அதுக்குக் கொஞ்சம் ஹை ஸீலிங் உள்ள இடம் வேணும். நம்ம பூஜை அறையில் நடுவில் மட்டுமே 2.4 மீட்டர். ஓரங்களில் 2.1 என்பதால் ஏழாவது படியில் பெரிய பொம்மைகளை வைக்கலை, சுவரில் மாட்டி இருக்கும் படங்களை மறைத்துவிடும் என்பதால்......
பொருத்துவதற்கு சுலபமான படிகள் கிடைச்சா நல்லது !
கொலுப்படி ரஜ்ஜூவுக்கு மிகவும் பிடித்துவிட்டது அவன் ஏறி இறங்குவதை பார்க்கும்போது தெரிகிறது.
வாங்க மாதேவி,
முதல் ஒரு வாரம் அந்தப் படிகளாண்டேயே சுத்திக்கிட்டு இருந்தான். இப்போ பழகிப்போச்சு போல. சட்டையே செய்யறதில்லை :-)
Post a Comment