இன்னிக்கு ஒரு கல்யாணத்துக்குப் போகவேணும். ஒரே மேடையில் ரெண்டு பெண்களுக்குத் தாலி கட்டப்போறான் மாப்பிள்ளை.!!! அதுவும் நியூஸியிலே ! என்ன தில்லு , பாருங்க..............
நம்ம வீட்டுலே இன்றைக்குத் தீபாவளி வேற கொண்டாடணும். அதுக்கான வேலைகளைக் கொஞ்சம் செஞ்சு வச்சுட்டுக் கல்யாணத்துக்குக் கிளம்பினோம். கோலப்புடவையில் கோலாகலம்தான் :-)
தம்பி கல்யாணத்தைப் பார்த்துக்கிட்டுப் பாவமா உக்கார்ந்திருந்தார் அண்ணன். அபிஷேகம் அப்பதான் ஆரம்பமாகி இருந்தது. அழைப்பிதழில் சொன்னதுபோல் பூஜை நடத்திக்கொடுக்க நம்ம பண்டிட்கள் யாரையும் காணோம். நண்பர்தான் பூஜை நடத்திக்கிட்டு இருக்கார். அப்புறம் தெரிந்தது.... வரவேண்டிய பண்டிட்டுக்குத் திடீர்னு உடல்நலக்குறைவுன்னு....
அபிஷேகம் முடிஞ்சு , திரைமறைவில் அலங்காரம் செய்யும் நேரம் கலை நிகழ்ச்சிகள் ஒருபக்கம்!
அலங்காரம் முடிஞ்சதும் சீர்வரிசைகளோடு கல்யாணம் நல்லபடி நடந்தது. உடனே இரு மனைவியரோடு ஊர்வலம் புறப்பட்டார் மாப்பிள்ளை !
https://www.facebook.com/1309695969/videos/371987508644194/
இன்னும் கோவிலைக் கோவிலாக் கட்ட ஆரம்பிக்கலை. ஒரு வணிக வளாகத்தில் ஒரு வக்கீல் ஆஃபீஸை விலைக்கு வாங்கி, உள்புறத்தைச் சீரமைச்சு நம்ம கோவில் நடந்துக்கிட்டு இருக்கு இப்போதைக்கு ! ஓரளவு நல்ல கூட்டம்தான் !
கல்யாண விருந்து விளம்ப நம்மவரும் நண்பர்களுமாப்போய் எல்லாத்தையும் எடுத்துவச்சாங்க.
அன்னதானத்தோடு விழா முடிஞ்சது. நாங்க வீடு திரும்பியபோது மணி ரெண்டரை.
சாயங்காலம் நம்ம தீபாவளிநாயகனின் வருகை ! பண்டிகைக்குப் புதுத்துணி போடணும் ! போட்டுவிட்டோம். பொறந்தது முதல் 'எட்டுமாசமா' வேட்டி கட்டிக்கிட்டு இருக்கும் பாவனையில் இயல்பா இருக்கான் !
https://www.facebook.com/1309695969/videos/424126880164441/
வீட்டில் பெருமாளுக்கு ஆரத்தி எடுத்துப் பூஜை முடிஞ்சதும், ஒரு மினி விருந்து ! தீபாவளின்னா இட்லி தோசை முக்கியமில்லையோ :-)
கொஞ்சம் இருட்டினதும் சம்ப்ரதாயமான பட்டாஸ் கொளுத்தணும். கம்பி மத்தாப்பு எரிவதைப் பார்த்து மகிழ்ந்த நம் வீட்டு வீரன், பூச்சட்டி கொளுத்தியதும் அழ ஆரம்பிச்சான். அவ்ளோதான் , கடையைக் கட்டிட்டோம். பாக்கி இருக்கும் பட்டாஸ் அடுத்த வருஷத்துக்கு :-)இத்தனைக்கும் இங்கே வெடிகள் ஒன்னும் கிடையாது. ஒளி மட்டுமே !
https://www.facebook.com/1309695969/videos/1063449291384969/
குழந்தை தூங்கும் நேரம் வந்தாச்சு. இன்றைக்கு ஒரு மணி நேரம் லேட் என்று சொல்லிட்டுக் கிளம்பிட்டாங்க. ஆச்சு நம்ம வீட்டு தீபாவளி !
பிள்ளைகள் படுக்கைக்குப் போக வேண்டிய நேரம் இங்கே நியூஸியில் ஏழரை. இப்ப நமக்கு டேலைட் ஸேவிங்க்ஸ் காலம். உண்மையில் ஆறரை மணி என்பதை கடிகாரம் ஏழரையாக் காட்டும். எந்தப்பிள்ளைகளாவது நல்ல வெளிச்சம் இருக்கும் ஆறரைக்குத் தூங்குமான்னு நீங்களே சொல்லுங்க.............
8 comments:
கொண்டாட்டங்கள் தொடரட்டும்.
ரொம்ப சந்தோஷம். பேரன் வாழ்க வளமுடன்
வாங்க ஸ்ரீராம்,
உண்மையில் ஒன்னு மாத்தி ஒன்னுன்னு தொடராக வந்துக்கிட்டே இருக்குதான் என்றாலும் இந்த திவாலி இப்படிப்பண்ணுமோ !!!!
வாங்க நெல்லைத் தமிழன்,
வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் மிகவும் நன்றி !
தீபாவளி கொண்டாட்டங்கள் நன்று. தொடரட்டும்.
வாங்க வெங்கட் நாகராஜ்,
கொஞ்சம் அதிகமாத்தான் கொண்டாடியிருக்கோம் போல :-)
இரண்டு மனைவியரும் தாலி கட்டியவர் அவருக்கு சீர்வரிசை எல்லாம் நன்றாக இருக்கின்றன.:)
தீபாவளிக் கொண்டாட்டம் படங்கள், இனிப்புகள், இட்லி,தோசை, பட்டாசு என சிறப்பாக இருந்தன.
வாங்க மாதேவி,
ரெண்டு என்ன.... எத்தனை வேணுமானாலும் அவர் கட்டிக்கலாம். மனுசரைப்போல் கடைகண்ணிக்குக் கூட்டிப்போக வேணாம் பாருங்க ! :-)
Post a Comment