Monday, March 11, 2024

செல்வின் திவாலி !

உள்ளூருலே கொண்டாடிக்கிட்டு இருப்பது பத்தாதுன்னு பக்கத்து மாவட்டத்துக்கும் போய் திவாலி கொண்டாடுவோம் நாங்க !  
ரொம்ப தூரமொன்னும் இல்லையாக்கும்.  நம்ம வீட்டிலிருந்து ஒரு பதினைஞ்சு கிமீ தூரம்தான். 
அங்கே ஒரு யூனிவர்ஸிட்டி இருக்கு.  வேளாண்மைக் கல்வி.  நம்ம ஊர்களில் இருந்து வரும் மக்கள் பலர் அங்கே படிக்கிறாங்க.  விவசாயமுன்னா  'ஏர் பூட்டிப்போவாயே'ன்னு மட்டும் இல்லையாக்கும். இங்கே  இன்னும் பலவிதப் பாடத்திட்டங்களும் இருக்கு.
நியூஸியில் படிக்கப்போனால்.... படிச்சு முடிச்சதும் அங்கேயே வேலை கிடைச்சு செட்டில் ஆகிறலாமுன்னு  'புள்ளை புடிக்கப்போற ஆட்கள்' சொல்றதை முழுசா நம்பி வர்ற கூட்டம்தான் முக்கால்வாசி.  இந்த வேலை செய்யறவங்களும் இங்கே இப்படி வந்து, எப்படியோ 'செட்டில் ' ஆன நம் மக்களேதான். நம்ம சண்டிகர் வாழ்க்கையில்  ஆஸி, நியூஸி, கனடா, இங்கிலாந்து, யூ எஸ் ஏ யில் படிக்க விருப்பம் இருக்கான்னு  பெரிய பெரிய பேனர்களோடு  விளம்பரம் பண்ணும் இடங்களைப்  பார்த்துருக்கேன்.  ப்ச்......

தில்லிக்கார நண்பர் ஒருவர், (இங்கே  ஒரு வருஷம் நமக்கு முன் வந்தவர்) இந்த யூனியில் வேலை செஞ்சுக்கிட்டு இருந்தார்.   அப்பெல்லாம் இந்த பாய்ன்ட் சிஸ்டம் எல்லாம் கிடையாது.  இங்கே வேலை கிடைச்சால் தான்  வரமுடியும். முதலில் ஒர்க் பர்மிட், அப்புறம்  நிரந்தரக்குடியுரிமை கொடுத்துட்டு, அதுக்கப்புறம்  மூணு வருஷம் கழிச்சு நமக்கு விருப்பம் இருந்தால் நியூஸி குடியுரிமைக்கு  அப்ளை செய்து மாத்திக்க முடியும். என்ன ஒன்னு..... நம்ம இந்தியப் பாஸ்போர்ட்  இனி செல்லாது.  ( இதெல்லாம் அப்போ. இப்ப பாய்ன்ட் சிஸ்டம். குறிப்பிட்ட பாய்ன்ட் இருந்தால் நீங்கள் ஊரில் இருந்தே அப்ளை பண்ணி, கிடைச்சதும்  இங்கே வரலாம். வந்து வேலை தேடிக்கணும்.... இந்திய பாஸ்போர்ட்டுக்குப் பதிலா OCI வாங்கிக்கலாம்.  இப்படி நிறைய மாற்றங்கள் வந்துருக்கு )

தில்லி நண்பர் ஒரு ரெண்டு வருஷத்துலே ஊருக்குப்போய்க் கல்யாணம் பண்ணிக்கிட்டு மனைவியோடு இங்கே வந்துட்டார்.  மனைவிக்கு எங்கூர் யூனியில் வேலை. அப்ப இருந்தே நம்ம குடும்ப நண்பர்களாத்தான் இருக்காங்க. அந்த மாவட்டத்துலேயே வீடும் வாங்கி அப்போ செட்டில் ஆனாங்க.   இங்கே நியூஸியில் 'திவாலிப் புகழ்' பரவி நாடெல்லாம் அங்கங்கே விழா கொண்டாடும்போது... நம்ம மாவட்டத்திலும் கொண்டாடினால் என்னன்னு  நண்பருக்கும் தோழிக்கும் தோணியிருக்கு.  நாமெல்லாம் வழக்கம்போல் ஆதரவுக்கரங்களை நீட்டினோம். ! 

நம்மவர் 1997 இல்  இண்டியன் சோஸியல் & கல்ச்சுரல் க்ளப்  (ISCC) தொடங்கியப்ப, நண்பர் ரொம்ப ஆதரவு தந்தார். க்ளப்  செகரட்டரியாகவும்  பொறுப்பேத்துக்கிட்டார். இவர்தான் நம்ம  நகரின் சிட்டிக்கவுன்ஸிலின்  எத்னிக் கம்யூனிடி  தலைவர். இந்தப் பொறுப்பில் ஒரு பத்துவருஷங்களுக்குமேல் இருக்கார் !

இவுங்க மாவட்டத்தில் முதல் தீவாலி  2015 லே  கொண்டாடினாங்க. அப்ப எழுதிய பதிவின் சுட்டி இங்கே !

https://thulasidhalam.blogspot.com/2015/11/blog-post.html  

நேரம் இருந்தால் எட்டிப்பாருங்கள்.

அப்போ லிங்கன் க்ரீன் என்ற   பரந்த புல்வெளியில் விழா நடத்தினாங்க.  இப்பவும் அங்கேதான். ஒரு விசேஷம் என்னன்னா.... இந்தப் புல்வெளியையொட்டி, ஒரு ப்ரமாண்டமான ஹால் கட்டி இருக்கு  அந்த  ஊர் சிட்டிக்கவுன்ஸில். லிங்கன் ஈவண்ட் சென்டர்னு பெயர்.  அருமையான வசதிகள். அதனால் நாங்களும் பெரிய நிகழ்ச்சிகளுக்கு அந்த ஹாலையே வாடகைக்கு எடுக்கிறோம். இந்த வருஷ (2023)ஓணம் பண்டிகை அங்கேதான்!
மலையாள சினிமாவின் பின்னணிப்பாடகர் எம் ஜி ஸ்ரீகுமார், சிறப்பு விருந்தினராக வந்துருந்தார்.
துளசிதளத்தில் அப்போ பதிவு எழுதலை. ஃபேஸ்புக்கில் மட்டும்  நாலுவரிகளும் படங்களுமாய்க் கடமையைச் செஞ்சுருந்தேன். 

விவரம் இதோ.... கீழே.... அதென்னமோ பதிவின் லிங்க்  கொடுக்காமல், embed postன்னு தான் இருக்கு.  நீங்கதான் காப்பி & பேஸ்ட் பண்ணனும்.

https://www.facebook.com/gopal.tulsi/posts/10224978725437907?ref=embed_post

இன்றைக்கு  மாலை நாலு மணி முதல் ஒன்பதுவரை விழா !  மகளும் குடும்பத்துடன் வரேன்னு சொன்னதால் கொஞ்சம் லேட்டாச்சு கிளம்பிப்போக.  ஒரு அஞ்சு மணிக்குப்போய்ச் சேர்ந்தோம். மேடை நிகழ்ச்சி அஞ்சரைக்குத்தான் ஆரம்பம். விழான்னால் இது   வடநாட்டுலே எதுக்கெடுத்தாலும் பண்டிகைக்கு முதல்நாள் 'மேளா'ன்னு  கடைகண்ணி, தீனி சமாச்சாரங்கள் இருக்குமே அதே வகைதான் நியூஸியில் பொதுவாக.  ஆன்மிகக்குழுக்கள் மட்டுமே சாமிப்படம், சிலை,  அலங்காரமுன்னு வச்சுக் குறைஞ்சபட்சம்  விளக்கேற்றி தீபாராதனை செய்வாங்க.  

மத்தபடி  இந்தியர் நடத்தும் பொது விழாக்களில் மேடை நிகழ்ச்சி ஆரம்பிக்குமுன் விஐபிக்களையும்  விழாவுக்கு ஸ்பான்ஸார் செய்தவங்களையும்  குத்துவிளக்கேற்றி வைக்கச் சொல்வது  வழக்கம்.  அடுத்தமுறையும் அவுங்க நிதிஉதவி செய்யணுமா இல்லையா ! 

 புல்வெளியில் ஒரு வரிசையில் டென்ட் போட்டுக் கடைகள்.  நம்ம ஊரில் புள்ளையார் கோவில் கட்டப்போறாங்கன்னு சொல்லியிருந்தேனில்லையா.... அந்த நண்பரின் ஸ்டால் முதலில் இருந்தது.  நிதி சேகரிப்பு செஞ்சுக்கக் கோவில் விவரங்கள் எல்லாம் வச்சுருந்தார். 
அன்பு விநாயகர் கோவிலுக்குப் பெயர் மாற்றி இப்போ க்றைஸ்ட்சர்ச் ஹிந்து  டெம்பிள் & கல்ச்சுரல் சென்டர் னு ஆகியிருக்கு.  பெரிய திட்டம் என்பதால் நிதி  திரட்டத்தான் வேணும். ஊர்கூடித்தான் தேரிழுக்கணும் இல்லையா !

ஒரு பக்கம் மேடை, மற்ற பக்கங்களில் கடைகள். மேடைன்னா.... இங்கே மேடைக்கான பெரிய ட்ரக்கைக் கொண்டு வந்து நிறுத்திப் பக்கவாட்டு ஷட்டரை திறந்தால் மேடை !  என்ன ஒரே ஒரு குறைன்னா... மேடையின் பேக்ட்ராப், வெளிறிய நிறத்தில் இல்லாமல் கருப்பாகவே அமைச்சுருக்காங்க. 
 நல்ல வெயிலில்  பார்வையாளர்கள் அமர்ந்திருக்க, எதிரே மேடை நிகழ்ச்சிகள் நடக்கும்போது  கெமெராக்கண்ணுக்கு ஒரே இருட்டாத் தெரியுது.  நானும் பல இடங்களில்  பெருமாள் மேல் பாரத்தைப் போட்டுட்டுக் க்ளிக்குவேன்.  வர்றது வரட்டுமுன்னுதான். 

ஃபோட்டோ பாய்ண்ட்க்கு ஒரு அலங்காரம். கடமையைச் செய்தோம்:-)


நம்மவரின்  ஆஃபீஸ் நண்பர் குடும்பத்தை ரொம்ப நாள் கழிச்சுப் பார்த்தோம். குசலவிசாரிப்பைத் தொடர்ந்து சில க்ளிக்ஸ்.  இப்ப  இவர் பில்டிங் கம்பெனி நடத்தறார். இவருடைய வாடிக்கையாளர்களில்  முக்கால்வாசியும்   இந்தியர்களே ! இந்த விழாவை ஸ்பான்ஸார் செய்துருக்கு இவருடைய கம்பெனி !  நன்றி மறவாமை !

ஒரு ஃபிஜித்தோழி, துணிக்கடையில்  ராமராஜ் வேட்டிகள் வச்சுருக்காங்க !
இன்னொரு இந்தியன் தோழி புடவைக்கடை.  இவுங்களிடம்தான்  ரெண்டு வாரத்துக்குமுன் ஒரு புடவை வாங்கியிருந்தேன். 




பார்ட்டி சப்ளை  ஸ்டால் ஒன்னு இருந்தது.  மண் விளக்கு செஞ்சுக்க ஒரு மேஜை. சில்ரன் ஆக்டிவிட்டி ! ஃபேஸ்பெயின்டிங், அனிமல் மாஸ்க்,  காதணி, ப்ரேஸ்லெட்ன்னு ஒன்னு, (தங்கம் ஒன்னும் இல்லையாக்கும்..... )

ஃபுட் ஆர்ட் சயன்ஸ்ன்னு  சமையல் வகுப்பு நடத்தும்  தோழி.... 'ஆரோக்கிய உணவு' மாதிரிகளை வச்சுருந்தாங்க,

சாப்பாட்டுக்கடைகள் ஒரு பத்து.... சனம் பூராவும் சாப்பாட்டுக்குத்தான் வருது.  இண்டியன் ரெஸ்ட்டாரண்டுகளில் போய் 'டேக் அவே' வாங்குவதைவிட இந்த மாதிரி இடங்களில் மலிவு வேற !

நண்பர் ஸ்டால் போட்டுருக்கார். இட்லி வடை சட்னி சாம்பார்ன்னு.....  தீபாவளி இனிப்புகள் கொஞ்சம்..... 

நம்ம புள்ளையார் கோவில் வழக்கமான தோசைக்கடை !

ஃபிஜித் தோழியின் ஐஸ்க்ரீம் , ஜூஸ் வகைகள் இன்னொரு வரிசை.....
குழந்தைகள் விளையாட்டுன்னு ஒரு ராட்டினம் ! இதுக்கு என்ன பெயர்னு தெரியலை. ஏகப்பட்ட விதிமுறைகளோடு நடக்குது. பாதுகாப்பு முக்கியம் இல்லையோ !  ஆம்புலன்ஸ் ஒன்னு  நிக்குது.  மக்கள் கூடுமிடங்களில்  ஒரு ஆம்புலன்ஸைக் கொண்டு வந்து விழா முடியும்வரை நிறுத்திவைப்பது இங்கே வழக்கம். எந்த நேரத்தில் உதவி தேவைப்படும் என்று யாருக்குத் தெரியும், சொல்லுங்க.

ஒரு சுத்து பார்த்துட்டு, மேடைக்கு முன்னால் போய் உக்கார்ந்தோம். நிகழ்ச்சிகள் ஆரம்பமாச்சு. இந்திய தேசிய கீதமும், நியூஸி தேசிய கீதமும் பாடினாங்க.  கலைநிகழ்ச்சிகள் எல்லாம் நமக்குத் தெரிஞ்சவங்க நடத்தினதுதான். நம்ம தமிழ்ச்சங்கம்  பிள்ளைகள் நடனம்  இருந்தது. மவொரி  மக்களின் நடனமும் இருந்தது. 



நம்ம்மூரில் பரதநாட்டியப் பள்ளிகள்  மூணு ! இதுதவிர மற்ற நாடுகளின் நடனங்களுக்கான பள்ளிகள் வேற !

ஆறு வயசு அரோஹா பாட, அரோஹாவின் அம்மா வீணை, நம்மூர் தப்லா கிங் ஜோஷுவா, லியம் ஆலிவரும், இன்னொரு பெண்மணியும் சிதார்னு  ஒரு நிகழ்ச்சி அருமை !
ஏகப்பட்ட நடன  ஐட்டங்கள். நாஞ்சொல்லலை.....  எல்லா விழாக்களிலும் எல்லோரும் வந்து ஆடுவாங்கன்னு.... அதே அதே.....
மெள்ளக் குளிர் காற்று அடிக்கத்தொடங்கினதும்  எல்லோருக்கும் பகீர்!  வெயில் இருக்கேன்னு முக்கால்வாசிக்கூட்டம்  ஸ்வெட்டர், ஜாக்கெட் வகையறாக்களைச் சுமக்கலை.  திறந்த வெளியாக இருந்ததால் குளிரின் தாக்கம் அதிகமே ! இத்தனைக்கும் நாங்க ரெண்டுபேரும் ஒரு கனமில்லாத ஸ்வெட்டர் போட்டுருந்தோம்தான்.......
குழந்தையை நாங்க பார்த்துக்கறோமுன்னு சொல்லி மகளையும் மருமகனையும் சாப்பிட்டு வரச் சொன்னோம்...

கொஞ்சநேரத்தில் அவுங்க திரும்பி வந்ததும், எல்லோருமாக் கிளம்பிட்டோம்.  திடலில் பார்த்தால் முக்கால்வாசிக் கூட்டம் காலி. மறுநாள் உண்மையான தீபாவளி என்பதால் உடம்பைக் காப்பாத்திக்க வேணாமா ? சூஷிச்சால் துக்கமில்லைதானே !  மணியும் எட்டேகால் ஆச்சு.

வீட்டுக்கு வந்து தோசை சுட்டுச் சாப்பிட்டதும், நம்ம ஜன்னுவுக்கு தீபாவளி உடுப்பு போட்டுவிட்டேன். நம்மவன்...  அவள் கழட்டிப்போட்ட  உடுப்பின் மேல் உக்கார்ந்து கருவிக்கிட்டு இருந்தான் :-)   

பொழுது விடிஞ்சால்  தீபாவளிப் பண்டிகை !


10 comments:

said...

எப்படியோ சுவாரஸ்யமாக, இனிமையாக பொழுது போகிறது என்று சொல்லுங்கள்...

said...

வாங்க ஸ்ரீராம்,

நம்ம பண்டிகையை நம்ம கம்யூனிட்டி மக்கள் கொண்டாடும்போது நாமும் ஆதரவுக்கரம் நீட்டணுமா இல்லையா ? அதுதான் சப்போர்ட் விஸிட் !

said...

சிறப்பு.

தொடரட்டும் இந்த வகை கொண்டாட்டங்கள்.

said...

அருமை நன்றி

said...

வாங்க பிரபா,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

ரசித்தமைக்கு நன்றி !

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

சிறப்பான கொண்டாட்டம் நல்ல பொழுது போக்கும்.
ஜன்னு தீபாவளி உடையில் சூப்பர்.

said...

வாங்க மாதேவி,

நன்றிப்பா !

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !