Saturday, April 01, 2023

சிவலோகத்துலே யானைகள் இருக்கு ! கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 32

நமக்கு  மாலை நாலே முக்காலுக்குத்தான் ஃப்ளைட். ஆனால்  மூணுமணி நேரத்துக்கு முன்னால் என்ற ரூல்ஸ்தான் படுத்துது.  இதுலே  அம்பது நிமிட், பார்க்கில் இருந்து ஏர்ப்போர்ட் போய்ச்சேர....  ஒரு மணிக்கு நரேஷை வரச் சொல்லியாச்சு. 

கொஞ்சம் நிதானமாகவே  எழுந்து ரெடியாகி ப்ரேக்ஃபாஸ்ட் போனோம். ரொம்ப போரடிக்குது இங்கே இந்த பஃபே.  (என்ன ஆனாலும் நம்ம லோட்டஸை மிஞ்சமுடியாது கேட்டோ ! ) இவருக்கு அதே அரை மசால்தோசை :-) 

அறைக்குத் திரும்பி ஃபேஸ்புக், ஜிமெயில், வாட்ஸ் அப்ன்னு நான் முக்கியமான வேலைகளில்  பிஸியாகிட்டேன்.  நம்மவருக்கு  வெறும் ஆஃபீஸ் வேலை.  ஒருமணிக்கு  நரேஷ் வந்ததும், கடைசி க்ளிக்ஸ் ஹுஸைன்சாகரும் ரெயில்வே ஸ்டேஷனும். உச்சிவெயிலுக்குப் புறாக்களைக்கூடக் காணோம்.

ஹொட்டேல் கணக்கை முடிச்சுட்டுக் கிளம்பிட்டோம்.  வழியில் கண்ணில்பட்ட  மரப்பாலமும் அதுலே மனுச சிற்பங்களும் நல்லா இருக்கு. ஆனால் என்ன இடம் அதுன்னு தெரியலை.  ரெண்டு மணிக்கு ஏர்ப்போர்ட் வந்துட்டோம். நரேஷுக்கு நன்றி சொல்லி சில க்ளிக்ஸ்.  ரெட்டி ட்ராவல்ஸாம் ! 

 



ஹரிக்கேன் லைட் வரிசையும் ஒரு அழகுதான், இல்லே !



செக்கின் ஆச்சு.  அப்ப ரெண்டு இன்டிகோ ஸ்டாஃப், என்னாண்டை வந்து 'எங்க சர்வீஸ் எப்படி இருக்குன்னு  சொல்றீங்களா'ன்னு கேட்டாங்க.  சின்னதா வீடியோ க்ளிப் எடுத்து விளம்பரத்துக்கு பயன்படுத்துவாங்களாம். அட! 
சொன்னால் போச்சு.  அதுவும் ஆச்சு.  சின்னப் பொண்களைப் பார்த்ததும்  .......  நல்லதாகவே சொல்லிவச்சேன்.  இப்ப பதில்சேவையா, நம்ம கேமெராவில் சில க்ளிக்ஸ் :-)

நம்மவராண்டை, இவ்ளோ சனம் இருக்க என்னை ஏன்னு (அப்பாவியா) கேட்டால்.... பார்க்கப் பாவமா இருக்கறவங்களைத்தான்   ஆட் லே போடுவாங்கன்றார் :-) அப்பாடா..........  


ஏகப்பட்ட நேரம் இருக்கு...  ச்சும்மாச் சுத்திப்பார்க்கவேண்டியதுதான்....  ஹைதராபாத் முத்து மாலைகள்.... டிஸ்ப்ளே.... ரொம்பப்பொடி முத்துகள் கோர்த்த மாலை...  முப்பதாயிரமாம் !  இவ்ளோ காசு கொடுத்து வாங்கறவங்க ,  இங்கேயா வாங்குவாங்க ? ஊருக்குள்ளே நல்ல பெரிய கடைகளில் வாங்கமாட்டாங்களா ? இல்லே, இந்தியாவில் முப்பதாயிரம்  எல்லாம் ஜூஜுபியா ? ஙே.........



நம்ம ஜன்னுவுக்கு  நேத்து ஒரு முத்துமாலை வாங்கினேன். அதுவே இதைவிட நல்லா இருக்கு !  

நம்மவருக்கு லேசாப்பசி வந்ததுன்னு அங்கே ஃபுட்கோர்ட்டில் இட்லிவடை !  சுமாராத்தான் இருக்குன்னார். 
நாலேகாலுக்கு போர்டிங் ஆச்சு.  இந்தமுறை நமக்கு LCVG !  உள்ளே இப்படி! 


அஞ்சுஅம்பதுக்கு பெங்களூரு வந்தாச்சு.  ஊருக்குள்ளே வேணாமுன்னு  ஏர்ப்போட் பக்கமே தங்கறோம். Shivas Galaxy.  பார்க்கை விட ஒரு நக்ஷத்திரம் குறைவு. ஆனால் அவ்வளவு மோசமா இருக்காதுன்னு நம்புவோமாக ! வாசலில் ரெண்டு யானைகள் இருக்கு !


தொடரும்......... :-)

10 comments:

said...

சுவாரஸ்யம்.  ஏர்போர்ட்டில் எது சாப்பிட்டாலும் அது அதன் இயற்கை சுவையில் இருக்காதே....!

said...

மதிய நேரம் புறாக்கள் எல்லாம் மரத்துல நிழல்ல அடைஞ்சுக்கு. நிழல் பகுதில வெளில பறந்துட்டு இருக்கும். படங்கள் எல்லாம் நல்லாருக்கு.

ஏர்போர்ட் சாப்பாடு ரொம்பவே சுமார் ரகமாச்சே....அட! அப்ப இண்டிகோ விளம்பரத்துல உங்களைப் பார்க்கலாமா!!! எப்ப வருமாம்?!

கீதா

said...

இன்டிக்கோ விளம்பரமும் குடுத்தாகி விட்டது .
பெங்களூர் .......வருகிறோம்.

said...

அருமை நன்றி

said...

வாங்க ஸ்ரீராம்,

உண்மைதான். அவர்களும் பயணத்தில் பரபரப்பா இருக்கும் மக்களுக்கு இது போதுமுன்னு இருக்காங்க போல !

said...

வாங்க கீதா,

உச்சி வெயிலில் தகரக்கூரை கொதிக்குமே ! அதுகளுக்கு நம்மைவிட விவரம் அதிகம் இல்லையோ !

இண்டிகோ விளம்பரம்......... ஹாஹாஹா

said...

வாங்க மாதேவி,

பெங்களூரும் முந்தி மாதிரி இல்லை. வேகமான மாற்றங்கள் ஏராளம் !

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

அட பெங்களூர் வாங்க வாங்க ...

said...

வாங்க அனுப்ரேம்,

ரெண்டு நாட்கள்தான்ப்பா அங்கே !