Wednesday, April 19, 2023

பெங்களூருவிலிருந்து சென்னைக்கு..... ... கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 37

இந்தியாவுக்கு வந்த பின்  நம்ம பயணத்தின் முதல் கட்டம் இன்றோடு முடியுது. நாமும் பெங்களூருவை விட்டு இன்றைக்குக்  கிளம்பறோம்.    காலை ப்ரேக்ஃபாஸ்ட்க்காகக் கீழே போகும்போது ,வழக்கம்போல்   நம்ம நாலாவது மாடி லேண்டிங்  ஏழைகளின் ரவிவர்மாவை  க்ளிக்கினதும், மற்ற மூணு மாடிகளிலும் என்ன இருக்கு ன்னு பார்க்கப் படிவழியாக இறங்கிப்போனேன் போனேன். அங்கேயும் ரவிவர்மாக்களே ! 



நல்லவேளை... மகாராசா எப்பவோ மேலே போயிட்டார்...........  ரத்தக்கண்ணீர் வந்துருக்காது ? 







கெமெராக் கண்ணால் க்ளிக்கினதும் நம்மவர் வெஸ்டர்னும் நான் இண்டியனுமா  ஆச்சு !  உப்புமா, எலுமிச்சை சாதம் & வடைகள் எனக்கு :-)

நேத்து, ஹொட்டேல் பணியாளர்களில் ஒருவர்,  நம்மை ஏர்ப்போட்டில் கொண்டு விடுவதாகவும்,  கார் புக் பண்ணிக்க வேணாமுன்னும்  சொல்லி இருந்தார்.  நமக்கு ஃப்ளைட் பதினொன்னுக்குத்தான் என்றபடியால்  நிதானமாகப் போலாம்னு  இருந்தோம்.  ஷிவாஸ் கேலக்ஸியைத் தொட்டடுத்துப் புதுக் கட்டடங்கள் நிறைய  கட்டிக்கிட்டு இருக்காங்க.   இங்கே மட்டுமில்லை.....    உலகம் முழுக்கக் கட்டடங்கள் கட்டும் வேலை தொடர்ச்சியா நடந்துக்கிட்டே இருக்குதான் !  சனத்தொகை கூடிக்கூடி வளர்ந்துக்கிட்டே தானே இருக்கு....... 


எட்டரைக்கு வந்த   ஹொட்டேல் பணியாளர் இப்போ கொண்டுபோய் விடறேன்னார்.  இன்னும் ரெண்டரை மணி நேரம் இருந்தாலும், அந்த நபருக்குக் கூடுதல் வருமானம் போகட்டுமேன்னு  கிளம்பிட்டோம்.  நம்மைக் கொண்டுபோய் விட்டுட்டு வந்ததும்   அவருடைய வேலை நேரம் ஆரம்பிக்கும் போல !
நாம் தங்கி இருக்கும் இந்த ஷிவாஸ் கேலக்ஸிக்கும் ஏர்ப்போர்ட்டுக்கும்  ஏழு கிமீ தூரம்தான்.  பத்து நிமிட்டில் போய்விடலாம்.  ஆனால் இந்த ஆள், பூனை குணம் உள்ளவர் போல..... (Cats have their own mind )சுருக்கு வழின்னு எங்கியோ சந்து பொந்துக்குள் எல்லாம் நுழைஞ்சு நம்மை ஏர்ப்போர்ட்டில் விடறதுக்கு நாப்பது நிமிட்  ஆகியிருக்கு !   போதுண்டா சாமி..... 



செக்கின் செஞ்சதும்,  ஷாப்பிங் செய்யப்போனேன். நம்மவர் வயித்துலே கொஞ்சம் புளி கரைச்சு விடணும். என்னோடது விண்டோ ஷாப்பிங்னு அவருக்குத் தெரியாது :-)  நெக்லெஸ் ஒன்னு சூப்பர்!  இருக்கட்டும். பயங்கரப் புளிப்பு.....

பத்தரைக்கு போர்டிங். இந்த முறை நமக்கு CNWT சர்வீஸ்.  திறந்து பார்த்தால்  முந்திரி.  ஒன்னு இப்போ போதும். இன்னொண்ணு இருக்கட்டும்.  ஃபேஸ்புக்கில் அப்போ படம் போட்டால், தோழி சொன்னாங்க.... ஒன்னு முந்திரி, ஒன்னு பாதாம்னு வாங்கியிருக்கலாமுன்னு!  ஆஹா.... தெரியாமப்போச்சே..  மகள் பார்த்துட்டு, டப்பாவை எடுத்து வைக்கச் சொன்னதும்,  'திறக்காதது உனக்குத்தான்'னுட்டேன்.



பனிரெண்டுக்கு சென்னை.  உள்நாட்டுக்கான   ஏர்ப்போர்ட் நல்லாவே இருக்கு ! பெட்டி வந்து சேரவே கொஞ்சம் நேரமாகிருச்சு. 








லோட்டஸ் வந்து அறைக்குப்போய் பெட்டிகளைப் போட்டுட்டுக் கீழே ரெஸ்ட்டாரண்டுக்குச் சாப்பிடப்போனோம். அவரவருக்கு வேண்டியது அவரவருக்கு.
என்னதான்னு தெரியலை.... பயணங்களில் சென்னைக்கு வந்து சேர்ந்ததுமே ஒரு நிம்மதி  வரத்தான் செய்யுது. அதுவும்  லோட்டஸுக்கு வந்துட்டால்..... நம்ம பேட்டைன்ற  நிறைவு !

சாயங்காலமாக் கிளம்பி நம்ம டெய்லர் கடைக்குப்போய் தைக்கக்கொடுக்க வேண்டியவைகளைக் கொடுத்துட்டு கீதா கஃபே இட்லிகளை முழுங்கிட்டு, மலபார் ஜூவல்லரி வரை போய் வந்தோம் :-)  தங்கம் ரொம்பவே விலை ஏறிக்கிடக்கு !  

ஆனாலும் அவசியமுன்னு (! ) ஒரு காரணம் கிடைக்கும்போது விடமுடியுதா ? 


தொடரும்........ :-)   


4 comments:

said...

//என்னோடது விண்டோ ஷாப்பிங்னு அவருக்குத் தெரியாது :-)// இப்போ தெரிஞ்சிருக்குமே.

நன்றி

said...

படங்கள் சுவாரஸ்யம். ரவிவர்மா பாவம்தான்! கார்ட்டூன் போட்டிருக்கிறார் ஓவியர்!

said...

வாங்க விஸ்வநாத்,

எப்பவுமே இப்படி இல்லை. எதிர்பாராத சமயம் ஷாக் கொடுப்பதும் உண்டு :-)

said...

வாங்க ஸ்ரீராம்.

ராஜா பாவம்தான் ! நல்லவேளை இதெல்லாம் அவருக்குத் தெரியாது !