காலையில் எழுந்ததும், இன்னைக்குக் காதுக்கு எங்கியாவது போகணுமான்னு கேட்டேன். இல்லையாம். அப்பாடா..... இனி நம்ம வேலையைப் பார்க்கலாம் ! மழை கொஞ்சம் நின்னமாதிரி இருக்கு. எதிர்வீட்டுத் தண்ணீர், நம்மூர் வயல், தோட்டங்களில் இருக்கும் பம்பு செட் போல தண்ணீரை உறிஞ்சு ஊத்திக்கிட்டே இருக்கு. என்ன ஒன்னு ஊரில் யாராவது குளிப்பாங்க, இல்லை துணிமணிகளைத் துவைச்சுக்கிட்டு இருப்பாங்க. அது ஒன்னுதான் மிஸ்ஸிங்.
வழக்கமான கடமைகள் முடிச்சு ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடப்போனோம்.
இன்றைக்கும் நான் கொஞ்சம் ஹெவியாத்தான் சாப்பிட்டேன்.
நம்மவர் தென் தமிழ்நாட்டுப் பயணத்துக்கான ஹொட்டேல் புக்கிங் செஞ்சுக்கிட்டு இருந்தார். எங்கெங்கே எத்தனை நாள் என்ற கணக்கெல்லாம் நியூஸியிலேயே முடிவு செஞ்சதுதான். விமானம் ஏறுமுன்பே வீட்டுக்குள் 'கத்திச் சண்டை' போட்டால் போதாதா ?
பதினொரு மணிபோல கிளம்பி மயிலைக்குப் போறோம். எனக்கொரு தீபக்கால் வாங்கிக்கணுமுன்னு பலவருஷக் கனவு. எனக்குன்னா எனக்கேவா ? நம்ம வீட்டுப் பெருமாளுக்குத்தான். கனவுலே வந்து சொன்னார்னு அடிச்சு விட்டுருந்தா முந்தியே கூடக் கிடைச்சிருக்கும். மொதல்லே அதுக்குச் சரியான பெயர்கூடத் தெரியலை. நண்பர்களிடம் கேட்டு, தூபக்கால் போல தீபக்கால் னு தெரிஞ்சது.
முந்தாநாள் ஜிஆர்டியில் விசாரிச்சப்ப, இருக்குன்னு ஒன்னு காமிச்சாங்க. ரொம்பப்பெருசா கோவில்களில் இருக்கறதைப்போல இருந்தது. நம்ம பெருமாள் நம்மை மாதிரியே சின்ன உருவம். அதனால்
சுக்ராவில் தேடலாமுன்னு போய்க்கிட்டு இருக்கோம். இருக்கான்னு கேட்டதும் டக் னு எடுத்துக் காமிச்சாங்க. முழநீளம்! ஆனால் பிடி சதுரவகையா இல்லாமல் உருண்டை வடிவில். இப்படியே குத்தஞ்சொல்லிக்கிட்டு இருந்தால் வாங்குனமாதிரிதான், இல்லே ?
பார்க்க நல்லாதான் இருக்கு. அப்புறம் என்ன ? வாங்கியாச்.
வெளியே வரும்போது மணி பனிரெண்டு. இனி கற்பகத்தை தரிசிக்க முடியாது. கோவில் நடை மூடியிருக்குமே !
சரி.... நம்ம விஜயாவையாவது எட்டிப்பார்க்கலாமேன்னு தோணுச்சு. அங்கெ போனால் மட்டும் எப்படியோ நேரம் ஓடிருது! தேடிக்கிட்டு இருந்த திருமண் கிடைச்சது. நாஞ்சொல்லலை.... நம்ம வீட்டுக்கு யார் வந்தாலும் நாமம்தான்னு ! கொஞ்சம் நகைகள் வாங்கினேன். இந்த மாதிரி இடங்களில் நம்மவரோடு 'ஐ கான்டாக்ட்' வச்சுக்கப்டாது, கேட்டோ !
அதுக்குள்ளே லஞ்ச் டைம்! நம்மவருக்கு எப்பவும் நம்ம ட்ரைவர், நேரத்துக்குச் சாப்பிடணுமுன்னு சொல்வார். அதுவும் விஜி சின்னப்பையன் வேற ! நம்ம புள்ளெ மாதிரித்தான், இல்லையோ....
நைவேத்யத்துக்குப் போனோம். அவுங்க ரெண்டுபேருக்கும் மினி மீல்ஸ் போல சப்பாத்தியும், கலந்த சாதமுமா.... எனக்கு ஒரு வெஜி கட்லெட். சுமாரா இருந்தது.
விஜி போய் , சுக்ரா கார்பார்க்கில் இருந்து வண்டி கொண்டுவரும்வரை வேடிக்கை பார்க்கலாமேன்னு நடந்தால் ஒரு பொம்மைக்கடை ! சட்னு உள்ளே நுழைஞ்சுட்டேன். நல்ல அழகான பொம்மைகள் ! நவராத்ரி சமயம் வந்துருந்தால் இந்த வீதி பூராவுமே பொம்மைக்கடைகளா இருந்துருக்கும் !
இந்தக் கடை எப்பவுமே இங்கே இருக்காமே ! ஹா.... நமக்கான ' நிக்கறவளை' விசாரிச்சால் இதோன்னு எடுத்துக் காமிச்சார் கடைக்காரர். ஏறக்கொறைய நம்ம ரவிவர்மாவின் லக்ஷ்மி! யானைகூட இருக்கு. உயரமும் சரியே ! முகம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......... மண்பொம்மையில் இவ்வளவு வந்ததே அதிகம்!
ரெஸின் இல்லை பேப்பர் மேஷேன்னா பயமில்லை. மண் பொம்மை என்பதால் கவனமாக் கொண்டு போகணும். கேபின் பேகை நேர்ந்துவிட்டால் ஆச்சு !
வலையில் பார்த்துவச்சுருந்த லக்ஷ்மியை நியூஸிக்கு வரவழைக்க கூரியர் சார்ஜ், பொம்மை விலையை விட ரெண்டரை மடங்கா இருந்தது. உள்நாட்டுக்கு ஃப்ரீ ஷிப்பிங். இந்தியா வரும்போது வாங்கலான்னு பார்த்தால் அவுட் ஆஃப் ஸ்டாக்காம். ஸ்டாக் வந்ததும் சொல்லச் சொல்லியிருக்கேன். நாம் திரும்பறதுக்குள்ளே வருமான்னு தெரியலை. இப்போக் கிடைச்சதை விடுவானேன் ? வாடியம்மான்னு எடுத்து வண்டியில் வச்சேன்.
ரொம்ப ஆசைப்பட்ட ரெண்டும் கிடைச்ச திருப்தியில் லோட்டஸுக்குத் திரும்பியாச்சு.
மேலே படம்: வலையில் பார்த்தவள்
இன்னும் யார் யாரை விஸிட் செய்யணுங்கற லிஸ்ட்டை எடுத்துப் பார்க்கணும். நேரம் கிடைக்கும்போது போயிட்டு வர்றதுதான் பெஸ்ட்.
தொடரும்......... :-)
6 comments:
அருமை நன்றி
என்ன என்ன, நீங்க வாங்கிடப்போறீங்களோன்னு நினைச்சு நினைச்சு கோபால் சாருக்கு ப்ரெஷர் வந்திடாதோ?
வாங்க விஸ்வநாத்,
நன்றி !
வாங்க நெல்லைத் தமிழன்,
ப்ரெஷர் வராதுன்னுதான் இருந்தேன். ஆனால் வந்தே வந்துருச்சு :-(
பயணத்தில் மகாலஷ்மியும் வீட்டுக்கு வந்துவிட்டார்கள்.
வாங்க மாதேவி,
இன்னொரு மஹாலக்ஷ்மியும் சென்னையில் நண்பர் வீட்டுக்கு வந்து எனக்காகக் காத்திருக்கிறாளாம் !
Post a Comment