Monday, April 10, 2023

ஏகப்பட்ட வேணுகோபாலன்கள் ! கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 34

மணி ரெண்டேகால் ஆச்சு. வயிறு  சோறு கேக்குது. கீழே ரெஸ்ட்டாரண்டுக்குப் போய்  சாப்பிட்டோம்.   நாலு மணிக்குக் கொஞ்சம் வெளியே போய் ஊர் சுத்த ஏற்பாடு !  தினேஷ் வந்துருந்தார்.  காலையில்  வந்துருந்த  ட்ரைவர் சந்த்ரசேகர்  அனுப்பியவர். 

சிவாஜி நகர் வரை போய் வரலாம்னு கிளம்பியாச்சு.  நல்ல கூட்டமான   மார்கெட் ஏரியாவில் நாங்க இறங்கிக்கிட்டோம். பார்க்கிங் கிடைப்பது மஹா கஷ்டம்.  தேவைப்படும்போது  தினேஷை வரச்சொன்னால் ஆச்சு.  செல்ஃபோன்தான் இருக்கே!

வேடிக்கை பார்ப்பதே என் வாடிக்கைன்னு கண்ணில்பட்ட அபூர்வங்களை க்ளிக்கிக்கிட்டே மெல்ல நடந்து போறோம். 

Our Lady of Good Faith Church நெடுநெடுன்னு நிக்குது. நம்மூரில் தடுக்கி விழுந்தா அங்கே ஒரு சர்ச் இருப்பதால்....  மேலோட்டமாப் பார்த்துக்கிட்டே கடந்தேன். நம்ம ஊருக்குப் பெயரே க்றைஸ்ட்சர்ச் தான் ! 
கொஞ்சதூரத்தில்  ஒரு மசூதி !  Masjid e Azam.  இது இருப்பதே ஜும்மா மசூதி ரோடுதான். அப்ப ஜும்மா மசூதி எங்கே ?  கண்ணில் படலையே.....  கூகுளார் சொல்றார், ஒரு நிமிட் நடைதான்  ரெண்டு மசூதிக்கும் இடையில்னு !!!!  
யோசனையோடு நடந்தால் சட்னு வள்ளியூர்  வந்துட்டாப்லே.........  ஹைய்யோ !!!!   பனங்கிழங்கு !  பார்த்தே வருசம் பல ஆச்சு !  அதும் பக்கத்துலேயே விளாம்பழம்!  ஹைய்யோ ஹைய்யோ....

வெளிநாட்டு வாழ்க்கையிலே ரொம்ப மிஸ் பண்ணறது இதைப்போல ஐட்டங்கள்தான்.  அமெரிக்கா போனப்ப நம்ம தோழி, பத்மா அர்விந்த் ( பதிவர், எழுத்தாளர் & மருத்துவர் ) கூட்டிப்போன காய்கறிக்கடையில்  வாழைப்பூ, வாழைத்தண்டு உட்பட அசல் இந்தியா பார்த்துட்டுப் பெருமூச்சு விட்டது உண்மை.  ஆனால் நியூஸியில் இது எதுவும் கிடைக்காது.... பூமிப்பந்தின் கீழ்ப்பகுதியில்  குளிரைத்தவிர வேறொன்னுமில்லையே....
கடைவரிசைகளுக்கிடையில் கொடிமரம் பார்த்துட்டுக் கால்கள் நின்னுபோச்சு. முகப்புவாசலில் நாமம் வேற !  வேடிக்கை கிடக்கட்டுமுன்னு உள்ளே நுழைஞ்சேன்.  ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி மூலவர் !  (பெயரே ரொம்பப்பிடிச்சுப்போச்சுன்னு தனியாச் சொல்ல வேணாம்தானே :-)  ஹாஹா !)




ருக்மிணி, சத்யபாமாவுடன்  ஜாலியா நிக்கறார் !  (இப்படி இருவருடன் தரிசனம் எனக்கு முதல்முறையோ? சரியா நினைவில்லையே..... பெருமாளே.. )
சுக்ரீவனும் ஆஞ்சியுமாக ஒரு தனிச் சந்நிதி !
மஹாலக்ஷ்மித் தாயார், புள்ளையார், சிவன், ஆஞ்சுன்னு  எல்லோரும்  இருக்காங்க.  கோவிலுக்கு வயசு நூறுக்கும் மேலே !  சிலாரூபங்களைப் பார்த்த்தால்  அப்படித்தான் தோணுச்சு !


பட்டர்ஸ்வாமிகள் தீப ஆரத்தி எடுத்ததும், தீர்த்தம், சடாரி வழங்கினார். 
நம்மவர் தரிசனம் முடிஞ்சதும் வாசப்படியில் போய் உக்கார்ந்தார்.  மூலவர் போலவே நம்ம (வேணு)கோபாலுக்கும் கமர்ஸியல் தெரு தரிசனம் :-)
பெருமாளும் தாயார்களும், ஆண்டாளும், நவநீத க்ருஷ்ணனும், ஸ்ரீ வேணுகோபாலனுமாய் உற்சவமூர்த்திகள் அருமை ! 



பட்டர்ஸ்வாமிகள் அனுமதியுடன் சிலபல க்ளிக்ஸ் ஆச்சு.  நன்றி சொல்லிட்டு வெளியே படி இறங்கினால் காசி விஸ்வநாதர் சந்நிதி.
 கம்பிச்சட்டங்களுக்கிடையில் அவருக்கும் கமர்ஸியல் தெரு தரிசனம்தான் !



இன்றைக்கு இந்தப் பதிவு எழுதும்போது இந்தக்கோவில் எங்கே இருக்குன்னு  சரியான விலாசம் தேடக்  கூகுளாரைக் கேட்டால்  ஏகப்பட்ட வேணுகோபால ஸ்வாமி கோவில்களைக் காமிக்கறார் !  
தீபாவளி அலங்காரமோ இல்லை எப்போதும் உள்ள ஸ்திர அலங்காரமோ தெரியலை, கமர்ஸியல் தெரு மின்னிக்கிட்டு இருக்கு ! உள்ளே போகலை. இந்த ஜூம்மா மசூதி ரோடுலேயே தொடர்ந்து நடந்தோம். ஒரு சின்னக்கடையில் நகைநட்டு அலங்காரம் பார்த்துட்டு ஜன்னுவுக்கு சில  ஆட்டுக்கம்மல்கள்  ஆச்சு. ஒரு இளம்ஜோடி, கொண்டை அலங்காரம் தேடி வந்தாங்க. 
தயக்கத்தோடு இருந்தவருக்கு,  மாடலா நின்னேன் :-)   பின்பக்கத்தலைதானே !  நோ ஒர்ரீஸ்.  நம்மவர்,  நீயும் வாங்கிக்கம்மான்னார்.  தயாளு !   வேண்டாம். குருவி தலையில் பனங்காய் ஆகாது :-)  எப்படியோ ஜோடியை வாங்க வச்சாச் :-)
நடந்து நடந்து காமத் ஹொட்டேலின் வாசலுக்கு வந்துட்டோம்.  ஆமாம்.... ஒரு காலத்தில் பெங்களூரில் எங்கே பார்த்தாலும் காமத் ஹொட்டேல் ரெஸ்டாரண்ட் இருக்குமே.... அதையெல்லாம் இப்பக் காணவே காணோம் ? 
தினேஷை வரச்சொல்லிட்டு அங்கேயே நின்றோம். எதிர்வாடையில்  கோபுரமும் மினாராவும் !  அது ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம ஸ்வாமி கோவில் !  கொஞ்சம் உள்ளே தள்ளி இருக்கு போல....  தினேஷ் வரும்நேரம் சமீபிச்சதால் அங்கே போகலை.

ராச்சாப்பாடு எங்கேன்னு  இன்னொரு தேடல்.  எம் டி ஆர் போனால் ஆச்சு, இல்லை ?
கப்பன் பார்க் தாண்டி செயின்ட் மார்க்ஸ் ரோடில் இருக்கும்  எம் டி ஆர் 1924  போனோம். 

கீழே : இது வலையில் சுட்டது. அன்னாருக்கு நன்றி. அரைகுறை வெளிச்சத்தில் நான் எடுத்தபடம் சரியா வரலை.
ஒயிட் ஹௌஸ் பில்டிங், முதல்  மாடி.   எந்த ஒரு  ஆடம்பரமும் இல்லாத சிம்பிள்  உள் அமைப்பு. 


எப்படி எம் டி ஆர்  ஆரம்பிச்சாங்கன்ற 'சரித்திரச் சுருக்கம்'  சுவரில் !  சுத்தம், சுகாதாரம், ஒழுங்கு என்ற மூணும் முக்கியமுன்னு.... அப்போ முதல் இப்போ வரை !

பொதுவா இந்த மூணும் ஒரு நாட்டில், அதன் மாநிலங்களில் இருந்தால் .... எவ்ளோ நல்லா இருக்கும்....................   ஹூம்........
இவுங்களோட ஃபேமஸ் மஸால்தோசைதான் எங்கள் மூவருக்கும்.  மெனு கார்ட் பாத்த நான் சந்த்ரஹாரா ஒன்னு ஆர்டர் செஞ்சேன். இது இவுங்க ஸ்பெஷல் ஐட்டம். ஞாயிறுகளில் மட்டுமே கிடைக்குமாம். இன்றைக்கு ஞாயிறுதான் இல்லை :-) அதிர்ஷ்டம் இருக்கு. 


இந்த 1 பை 2, 3 பை  5 இதெல்லாம் பெங்களூரில் சகஜம். பாருங்க நான் சொல்லாமலேயே மூணு ஸ்பூன் வந்துருக்கு !

1950களில்தான் இதைச் செய்ய ஆரம்பிச்சுருக்காங்க. அப்போ இதுக்குப்பெயர் ஃப்ரெஞ்ச் ஸ்வீட்.  கொஞ்சநாளில்  பக்கத்துலே இருந்த தியேட்டரில் என் டி ஆர் நடிச்ச சந்த்ரஹாரம்னு ஒரு படம் வந்து சக்கைப்போடு போட்டதும்,  இவுங்க தங்களுடைய கண்டுபிடிப்பான இனிப்புக்கு  சந்த்ரஹாரான்னு பெயரை மாத்திட்டாங்க.  போகட்டும், எம் டி ஆருக்கும் என் டி ஆருக்கும் ஒரே ஒரு எழுத்துதானே வித்யாசம் :-)

ரவா இட்லி கூட இவுங்க கண்டுபிடிப்புத்தானாம் ! 

நம்ம சந்த்ரஹாராவை மற்ற இருவரோடும் பங்குபோட்டாச் !  நல்லாதான் இருக்குன்னு நம்மவர் சொன்னார். நான் இனிப்புப் பிசாசு என்பதால் என் கருத்து முக்கியமில்லை.    
ஆச்சு இன்றைய ஊர் சுத்தல்னு ஷிவாஸ் கேலக்ஸி திரும்பிட்டோம். நாளைக்குக் காலை எட்டரைக்கு தினேஷை வரச் சொல்லியாச்சு.

தொடரும்............ :-)




11 comments:

said...

எங்க ஊர்ல எம்டிஆர் ஏகப்பட்ட விலையாயிருக்கே. அந்த அளவுக்குக் க்வாலிட்டி இல்லை. இதுக்கு எஸ் எல் வி மற்றும் பல உபஹார்கள் இருக்கு... 40-50 ரூபாய்ல நல்ல தோசை சாப்பிட.... நெல்லை

said...

அருமை நன்றி

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

வரவர எல்லா இடங்களிலும் பெயரை வச்சே பெருமைக்கு மாவிடிக்கறதாப் போச்சு. செராங்கூன் ரோடு சிங்கப்பூரில் எம் டி ஆரில் பயங்கரக் கொள்ளை. பெயரைப்பார்த்து உள்ளே நுழைஞ்சுடறோம் இல்லையா ?

said...

செட் தோசை 82 ரூபாய், ஆனியன் மற்றும் பிளெயின்  ரவா 118..    நம்மூர் போலதான் இருக்கு.  அந்த ஸ்வீட் பாஸந்தியின் மறுபெயரா?

said...

வாங்க ஸ்ரீராம்,

பாஸந்திக்குப் பாலாடைதானே ! இதில் மைதாமாவில் பூரிபோல் பொரிச்சு நாலா மடிச்சு ஒரு கிராம்பு குத்தியிருக்கும் சமாச்சாரம் இருக்கே ( பெயர் மறந்து போச்சு ) அதை, பால்கோவாவை க்ரீம் பதத்தில் சேர்த்து ஊறவச்சுருக்காங்க.

said...

// ( பெயர் மறந்து போச்சு ) //


பதர்ப்பேணி!

said...

துளசிக்கா சிவாஜி நகர் பஸ்டான்ட் எதிரிலேயே பெருமாள் கோயில் ஒன்று, பக்கத்துலயே பெரிய சர்ச் (நீங்க போட்டிருக்கும் படம் தான்) அப்புறம் மஸ்ஜித் மூன்றுமே அருகருகே இடத்துல இருக்குமே...

எம் டி ஆர் முன்ன போல இல்லை.

சந்திரஹாரம் இது பெங்காலி ஸ்வீட் போல இருக்கே....லவங்க் லதிகா/லவங்க் லதா பெங்காலில சொல்லணும்னா லொபொங்கோ லொடிகா!!! நல்லாருக்கும்....செய்ததுண்டு

கீதா

said...

வாங்க ஸ்ரீராம்,

ஆஹா.... பெயர் நினைவுக்கு வந்துருச்சு. பாதாம் பூரி.

said...

வாங்க கீதா,

எல்லாம் அந்த லவங் லதிகாதான். கெட்டியா க்ரீமை மேலே ஊத்தியிருக்காங்க. அதை அறிமுகப்படுத்தினப்ப சினிமா வந்துருக்கு :-)

said...

ஸ்ரீவேணுகோபால் தரிசனத்துடன் தொடர்ந்தோம் பகிர்வை.