Wednesday, March 29, 2023

எதிர்பாராத சந்திப்பு !!!! கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 31

ஏம்மா.... என்னவோ நகைகள் (! ) வாங்கணுமுன்னியே....  பத்துமணிக்குப்போய் வாங்கிட்டு வந்துறலாமா.....
தீபாவளியன்னிக்குக் கங்கையில் முங்கினதன்  காரணமோ என்னவோ... அன்றைக்கு மாலையில் இருந்தே காதுக்குள்ளே ஙொய்னு இருந்தது.  சரியாக் கவனிக்காம  ஊர் சுத்தற பிஸியிலே இருந்துட்டேன்.  முந்தாநாள்  ஃப்ளைட்டுலே வந்தாட்டு,  காதடைப்பு வேற !  பொதுவா பயணங்களில் ஃப்ளைட்  தரையிறங்கும் சமயம் இப்படித்தான் காது அடைச்சுக்கிட்டு ஒரு நாள் ஆனதும்  அடைப்பு....'Bப்ளக்'னு ரிலீஸ் ஆகிரும்.  இந்த முறை அந்த 24 மணி நேரக்கணக்கும் இல்லாமப் போயிருக்கு.  

இதுலே முந்தாநாள், காசியிலிருந்து ஹைதை வந்தமா..... பழையபடி காதடைப்பு!  இன்னும் ரிலீஸ் ஆகலை. ஆனால் செலக்டிவ் ஹியரிங்க் போல!!     ' நகைகள்' என்ற அருஞ்சொல்  மட்டும் காதுலே விழுந்துருச்சு, பாருங்க  ! எப்பவாவது இவர்  பேச்சை மீறி நடந்துருக்கேனா என்ன ?   உடனே 'சரி' ன்னேன்.  :-) 

காலையில் எழுந்ததும்  ரயிலை  வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேன்.  நம்ம சனத்துக்கு, மெனெக்கெட்டாலும் பரவாயில்லை.... குறுக்கு வழி வேணும்தான்.....  ஸ்டேஷன் வேலியைத் தாண்டிக் குதிச்சு வர்றதும்,  ப்ளாட்ஃபாரத்திலிருந்து குதிச்சு, ரயில் பாதையி ல் நடந்து எதிர்ப்புறம் ப்ளாட்ஃபாரத்துக்கு ஏறி வர்றதுமா  இருக்காங்க. 



வழக்கம்போல் கூரை முழுசும் புறாக்கூட்டம்.  ஒன்னு வந்து ஹலோ சொல்லிட்டுப் போச்சு ! பார்க் பக்கத்துலே புதுக்கட்டடங்கள் வந்துக்கிட்டு இருக்கு. அங்கே வேலைக்கு வந்திருக்கும் தொழிலாளர்கள் குடியிருப்பு அங்கேயே......  ஒருவிதத்தில் அவுங்களுக்கு நல்லதுதான்.  வேலை முடங்காமல், நேர விரயம் ஆகாமல் இருக்கும்.

ஹுஸைன் சாகரில்   படகு சவாரி  நடக்குது........  நாமும் கடமைகளை முடிச்சுட்டுக் காலையுணவுக்குப் போகணும்.  அதுவும் ஆச்சு.
வண்டிக்குச் சொல்லவான்னார்.  இங்கே  பொதுவாக் காலை வேளைகளில் அவ்வளவா சுறுசுறுப்பு இல்லை.  எல்லாமே பத்துமணிக்கு மேலேதான்.....  ராத்திரி பத்து, பதினொன்னுவரை கடைகள் திறந்துதான் இருப்பதால்  எல்லாம் நிதானம் ப்ரதானம் ! போன பயணத்துலேயே கவனிச்சதுதான். ஒரு பதினொரு மணிக்கு மேலே   கிளம்பலாமுன்னேன்.

பயணங்களில், ஒவ்வொரு ஊருக்கும் போகும்போது,  நம்ம வரவை ஃபேஸ்புக்கில் போட்டு வைப்பது ரொம்ப நல்ல சமாச்சாரம்.  நண்பர்கள் கண்ணில் படாமலா போயிரும் ? 

நம்ம துளசிதளத்தின் வாசகி, சேதி அனுப்பினாங்க. நமக்கு நேரம் இருந்தால், சந்திக்க இயலுமான்னு !  கரும்பு தின்னக்கூலியா ??? .  நம்மவர் நரேஷை  பதினொன்னரைக்குத்தான் வரச்சொல்லி இருந்ததால்,  காலை  பதினொன்னரை வரை அறையில் இருப்போமுன்னதும், வரேன்னுட்டாங்க!

ஸ்ரீவித்யா முத்துசாமி, பார்க் வந்துட்டேன்னு சேதி அனுப்புனதும் துள்ளிக்கிட்டுப் போனேன். முதல்முறை பார்க்கும் உணர்வே இல்லை. நெடுநாளையத்தோழி போலவே!  ஒரு கல்யாணத்துக்குப் போயிட்டு, அங்கிருந்து வந்துருக்காங்க.  கல்யாண விருந்தை மிஸ் பண்ணி இருப்பாங்கன்னு  நினைக்கிறேன்.  கொஞ்சநேரம்தான் பேச்சு என்றாலும்.... மனசு  நிறைவாக இருந்துச்சு..... அன்பளிப்பாக  எனக்கொரு புத்தகம் ! அட!  நம்ம கானா பிரபா !  
எடை எச்சரிக்கை வந்தது நம்மவரிடமிருந்து.  அதுவும் நியாயம்தான். ஏற்கெனவே  கனம் கூட்டா ஒப்பந்ததில் கையெழுத்துப் போட்டுருந்தேன்.  எப்படியும் நியூஸி திரும்புமுன் சென்னையில் புத்தகங்கள் கொஞ்சம் வாங்கிப்போம்தானே....  அதுலே சேர்த்துக்கிட்டால் ஆச்சு, இல்லை ? 
நாம் போகும் வழியில் ஸ்ரீவித்யாவை இறக்கி விட்டுப்போகலாமுன்னா.... அவுங்க வேற திசையில் போகணுமாம்.  பார்க் வாசலிலேயே  அவுங்களுக்கு வண்டி கிடைச்சது. நரேஷ் கிட்டே பேகம்பெட்ன்னு சொன்னதும்  அங்கே போய் நம்மை   இறக்கி விட்டுட்டு, பார்க்கிங் தேடிப்போயிட்டார்.  ஏதோ சந்து மாதிரி போகுதே.... சந்து நம்மை விடாதுபோலன்னு போனால்......கடைகள் ஒன்னும் திறந்தபாடில்லை.... எதோ ஒரு கடை திறந்துருக்க அதுக்குள்ளே நுழைஞ்சு பார்த்தால் ஒன்னுரெண்டு கிடைச்சது. நான் தேடும் வகை அங்கே இல்லை. 

அப்பதான் தெரியவருது... இது பேகம் பஸார் இல்லைன்னு.....  நரேஷுக்கு ஃபோன் செஞ்சு இறக்கிவிட்ட இடத்துக்கு வரச் சொல்லி, பேகம் பஸார் போறோம்.  அங்கே  ஒரு இடம் வரைதான் கார் போகுமாம். அந்த இடம் ஒஸ்மானியா ஹாஸ்பிடல்.  மார்கெட் ரோடு என்பதால் நடந்துதான் போகணும். ஆஸ்பத்ரி வாசலில் ஏகப்பட்டக்கூட்டம்.  நாங்க வேடிக்கை பார்த்துக்கிட்டே மார்கெட் ரோடில் போறோம். நல்லவேளை ஒரு ஐநூறு மீட்டர்தான்.  ரோடுக்கு அந்தாண்டை க்ராஸ் பண்ணினதும்,  வாசலில் டிஸ்ப்ளே பண்ணதை வச்சுக் கடையைக் கண்டுபிடிச்சுட்டேன்.  இதிலெல்லாம் நான் நல்ல உஷார் :-)

ஏகப்பட்ட வகைகள். நாம் எது வாங்கிப்போனாலும் ஜன்னுவும் பெருமாளும் ஒன்னும் சொல்லமாட்டாங்கன்ற தைரியத்தில்  கொஞ்சம் நிறையவே வாங்கினேன். ஒருத்தருக்கு சரியில்லைன்னா இன்னொருத்தருக்கு சரியாத்தான் இருக்கும். அதான் வைஷூ, ஐஸ்ஸூ கூட்டம் சேர்ந்து போச்சே ! கடையில் வேலைசெய்யும் பசங்க, கேட்டவைகளையெல்லாம்   சோம்பல் இல்லாம எடுத்துக் காமிச்சாங்க.





வந்த வழியாகவே திரும்பி ஆஸ்பத்ரிவரை போனோம்.  சென்னையில் கந்தசாமி கோவிலைச் சுத்தி இருக்கும் கடைப்பகுதிக்குள் நுழைஞ்சாப்போல இருக்கு இங்கே !  போறபோக்கில் சிலபல க்ளிக்ஸ். பத்தே ரூபாய்க்குப் பிரியாணியாம் ! 

மணி பார்த்தா மூணாகப்போகுது !  எங்கியாவது நல்ல இடமா லஞ்சுக்குப் போகலாமேன்னதுக்கு நரேஷ், தாஜ்மஹால் போனார்.  லஞ்ச் டைம் முடிஞ்சு போனதால்  தாலி மீல்ஸ் ஆப்ஷன் இல்லை.  எனக்கு வடை,  நம்மவருக்குப் பூரி, நரேஷுக்கு செட் தோசை.  எங்களுக்கு மட்டும் காஃபி. பரவாயில்லாமல் இருந்தது. 






இனி வேறெங்கும் போகும் எண்ணம் இல்லாததால் அறைக்குத் திரும்பிட்டோம். இங்கே உள்ளறை அமைப்புத்தான் பேஜார். எழுதும் மேஜையை எங்கே  பொருத்தியிருக்காங்கன்னு பாருங்க.  நடக்கும்போது இடிச்சுக்கமாட்டோம் ?  டாய்லட் பேப்பர் ஹோல்டர் கூட  வாழ்க்கையை பேலன்ஸ் பண்ணிக்கச் சொல்லுது :-) 

அவரவர் அவரவர் வேலைன்னு  இருந்து  கடைசியில் தூங்கியிருக்கோம்.   பயணத்தில்  இருக்கும்போது இருட்டினபிறகு எங்கேயும்  போற வழக்கம் வச்சுக்கலை.
ராச்சாப்பாடு ரூம் சர்வீஸில். வெஜ்.பிரியாணி கூடவே என்னவோ ரெண்டு பாத்திரங்களில்.  இப்போ படத்தைப் பார்த்தாலும்  அதெல்லாம் என்னன்னே தெரியலை.ஙே........

நம்மவருக்குத் தொண்டை வலி லேசா ஆரம்பிச்சு இருமத்   தொடங்கியிருக்கார்.  அலைச்சல் கூடிப்போயிருக்கு....... நாளைக்கு இங்கிருந்து கிளம்புவதால் பொட்டிகட்டி வச்சதும்  நிம்மதியான தூக்கம்தான்!

தொடரும்.......... :-)


9 comments:

said...

உங்களையும் கோபால் சாரையும் சந்திச்சது அவ்வளவு மகிழ்ச்சி. நீங்க சொன்னது போலவே முதல் முறை பார்த்த மாதிரி தோணவே இல்லை. முன்னாடியே பிளான் பண்ணி இருந்தால் உங்க கூடவே வந்து நகை செட்டு வாங்கி கொடுத்திருப்பேன். குருவை பார்க்க முதல் தடவை போனபோது எங்கம்மா, பாட்டி, உங்களை தான் நெனச்சுண்டேன்.அடுத்த முறை குருவை பார்க்க சேர்ந்து போகலாம் மா.

said...

உங்களையும் கோபால் சாரையும் சந்திச்சது அவ்வளவு மகிழ்ச்சி. நீங்க சொன்னது போலவே முதல் முறை பார்த்த மாதிரி தோணவே இல்லை. முன்னாடியே பிளான் பண்ணி இருந்தால் உங்க கூடவே வந்து நகை செட்டு வாங்கி கொடுத்திருப்பேன். குருவை பார்க்க முதல் தடவை போனபோது எங்கம்மா, பாட்டி, உங்களை தான் நெனச்சுண்டேன்.அடுத்த முறை குருவை பார்க்க சேர்ந்து போகலாம் மா.

said...

இந்த ரயில்வே ஸ்டேஷன் தாண்டும் விடீயோக்களைதான் பேஸ்புக்கில் போட்டிருந்தீர்களா?

said...

ஒருவேளை, மோர்க்குழம்போ ?
நன்றி,

said...

பெருமாள் ஜன்னு எல்லோருக்கும் புது நகைகள் கிடைத்திருக்கிறது. சூடி அழகு பார்த்திட வேண்டியதுதான்.

காது அடைப்பு தொண்டை வலி எல்லாம் வந்துவிட்டதே பயணங்களில் இதுவும் படுத்தும்.

said...

வாங்க வித்யா,

உங்களை சந்திச்சதில் பெரும் மகிழ்ச்சி அடைந்தோம். குருவின் அற்புத தரிசனத்துக்கே இன்னொருமுறை வந்தால் கொள்ளாம் ! இப்ப நீங்களும் அங்கே ! ரெட்டிப்பு மகிழ்ச்சி !

said...

வாங்க ஸ்ரீராம்.

முந்தியெல்லாம் நேரடியாகவே வீடியோவை பதிவில் சேர்க்க முடிஞ்சது. இப்போ அது முடியலை. அதான் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துட்டு இங்கே சுட்டி தரேன்.

said...

வாங்க விஸ்வநாத்,

இல்லை.... மோர்க்குழம்பு இல்லை. சாப்பிட்டவருக்கும் நினைவில்லையாம் !

said...

வாங்க மாதேவி,

இந்தக் காது அடைப்பு ரொம்பவே கஷ்டப்படுத்திருச்சுப் பயணம் முழுவதும் :-(