Wednesday, March 01, 2023

அஸ்ஸி Gகாட் வரை போயிட்டு வரலாம், வாங்க ! கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 20

நாலுமணிக்கு செல் கூப்ட்டது. சட்னு  ரெடியானோம்.  நாலரைக்குக் கீழே போனால்..... யாருமில்லை.  நம்ம கோலு (GOlu ) ஒரு சோஃபாவில் படுத்து நல்ல தூக்கத்தில்.  பாவம்.... தினமும் எவ்ளோ ஓட்டம்.... தூங்கட்டுமுன்னு விடலாமுன்னா வெளியே போகும் கதவு பூட்டியிருக்கே !  மனசில்லா மனசோடு எழுப்ப வேண்டியதாப் போயிருச்சு. 

கதவு திறந்ததும் படிகளில் இறங்கிக்  கீழே  போறோம். எந்தப் படகு, யார் ஓட்டறாங்கன்ற விவரம் ஒன்னும் இல்லை.   அரையிருட்டில் வேடிக்கை.  இந்தியக் கொடி போட்ட படகு ஒன்னு இருக்கு. அது கிடைச்சால் கொள்ளாம்.  ஆனால் அது நம்மது இல்லை.  அது நகர்ந்ததும் நமக்கான படகு, படித்துறைப் படிகளையொட்டி வந்து நின்னது.  கஷ்டப்படாமல் அதுலே ஏறினேன்.  படகு ஓட்ட ஒரு ஆளும், நல்ல நீட்டா உடுத்தின ஒருவரும் இருந்தாங்க. அவருடைய படகுதானாம்.  மஹிந்தர்னு சொல்லி அறிமுகப்படுத்திக்கிட்டார். டீஸல் எஞ்சின் வச்ச படகுதான்.  போனமுறை துடுப்புப் போடும் படகில் போயிருந்தோம்.



இன்னொருத்தரும் வராருன்னு சொல்லி இன்னுமொரு அஞ்சு நிமிட் வெயிட்.  ரெண்டு சின்னப்பிள்ளைகளோடு ஒரு ஜோடி வந்து சேர்ந்துக்கிட்டாங்க. படகு கிளம்பிருச்சு.  அஸ்ஸி Gகாட் நோக்கிப் போறோம்.  அங்கே ஆரத்தி பார்க்கலாமாம் !      
நாலே முக்கால்தான் ஆகி இருக்கு. இருட்டில்தான் போய்க்கிட்டு இருக்கோம். வழியில் இருக்கும் Gகாட்களில் எல்லாம்  விளக்கு வெளிச்சமும் ஆள் நடமாட்டமுமா இருக்கு.  கேதார் Gகாட்டில் நல்ல கூட்டம்.   சில படித்துறையையொட்டி இருக்கும் கட்டடங்களில் விளக்கு அலங்காரம் ! 
  ஹரிச்சந்த்ரா Gகாட்டில் இந்நேரத்துக்கும் ரெண்டு மூணுபேர் ஒளியோடு  ஐக்கியமாகிக்கிட்டு இருக்காங்க. ஒரு இருவது நிமிட்டில் அஸ்ஸி Gகாட் வந்துருக்கோம். 

நமக்கு முன்னேயே ஒரு நாலைஞ்சு படகுகள் வந்து நின்னுக்கிட்டு இருக்கு.  ஒரு ஆள்,  பெரிய டீ கெட்டிலும், ஒரு அடுக்கு  பேப்பர் கப்புகளுமா  படகுகளுக்கு  மேல் நடந்து  வர்றார்.  ஆறு கப் சாயா நம்ம படகுக்கு.   வெறும் வயத்துலே இருக்காம  நம்ம எஞ்சினுக்கும்  வார்த்தோம்.  சுமார் ருசிதான். ஆனால் அந்தக் காலை வேளைக்கு இதமாத்தான் இருந்தது.  காசு கொடுக்கப்போனா... மஹிந்தர்   வேணாமுன்னார்.   ஆன் தெ  போட் ! 

பலபலன்னு பொழுது விடிஞ்சுக்கிட்டே வருது.  எதிர்ப்பக்கம் ரொம்பவே நீளமாக  இருக்கும்  அஸ்ஸிGகாட் படிகளுக்கு மேலே  கங்கா ஆரத்திக்கு எல்லாம் ரெடி.  'கங்கா ஆரத்தி சேவா  ஸமிதி' பண்டிட் ஏழுபேர்  வந்து நின்னாங்க.  படபடன்னு ஒரு அஞ்சு நிமிட்டுக்கு பட்டாஸ் மழை. தீபாவளி ஸ்பெஷலோ என்னவோ !   
ஸ்பான்ஸார் செஞ்சவங்களும் மேல் படியையொட்டி நின்னாங்க.   சின்னதா ஒரு நெய் விளக்கு ஏத்தி அவுங்க கையில் கொடுத்ததும்  கங்கையை நோக்கி ஆரத்தி காமிச்சாங்க. எங்கே கங்கையை நோக்கி .... எதிரில்  நாம்தான் படகுகளில்  கூட்டமா இருக்கோமே !
அப்புறம்  பெரிய ஆரத்தி ஆரம்பிச்சது.   முந்தாநாள் கேதார் Gகாட்டில் பார்த்தோமே அப்படியேதான். ஆனால் அங்கே ஒருவர். இங்கே எழுவர் !

இந்த ஆரத்தி சமாச்சாரம் முந்தியெல்லாம்  தஸ் அஸ்வமேத Gகாட்டில் மட்டுமேன்னு ஆரம்பிச்சு இப்ப நிறைய Gகாட்களில் நடக்குது. ஹரித்வார், ரிஷிகேஷ்னு கங்கை போறவழிகளிலும்   அவளுக்கு ஆரத்தியெடுத்து வணங்கி வழியனுப்புறாங்க. ரிஷிகேஷில் கங்கையையொட்டி இருக்கும் ஆஸ்ரமங்களில் எல்லாம்  தனிப்பட்ட வகையில் கங்கா ஆரத்தி நடந்துக்கிட்டுதான் இருக்கு !  ஆனால்.... எங்கே நடந்தாலும் கூட்டத்துக்குக் குறைவொன்றுமில்லை!  
இந்த கங்கா ஆரத்தி சேவா ஸ்மிதி ஆரம்பிச்சபின்,  பண்டிட்களுக்கு யூனிஃபார்ம் எல்லாம் கொடுத்து  ஒரு ஷோ மாதிரி நடத்தறாங்க.  ஸ்பான்ஸார்களும் அள்ளிக்கொடுப்பதால்..... அந்தக் காசெல்லாம்  கங்கையைச் சுத்தப்படுத்தும்  திட்டத்துக்குப் போறதாகச் சொல்றாங்க.  ரொம்ப நல்ல விஷயமே !

நானும் சின்னச் சின்னதா அஞ்சாறு வீடியோ க்ளிப்ஸ் எடுத்தேன்.   ரெண்டு நிமிட் நாப்பது வினாடிக்கு மேல் இருந்தால் வாட்ஸப்பில் அனுப்ப முடியறதில்லை.

ஃபேஸ்புக்கில் போட்டு வச்சுருக்கும் க்ளிப்ஸின் சுட்டிகள் இவை.  நேரம் இருந்தால் பாருங்கள்.  எல்லாம் ஒரு அனுபவம் !  நான் பெற்ற இன்பம் வகை :-)

https://www.facebook.com/1309695969/videos/638401304437237/

https://www.facebook.com/1309695969/videos/680548769898432/

https://www.facebook.com/1309695969/videos/761221075181648/

https://www.facebook.com/1309695969/videos/175063818591775/

https://www.facebook.com/1309695969/videos/878168063467255/
கிட்டத்தட்ட அரைமணி  நேரம்.  காலை ஆறடிக்க ரெண்டு நிமிட்  இப்போ.   படகு மக்களெல்லாம் அப்படியே இந்தப் பக்கம் திரும்பி உக்கார்ந்தோம். சூரியன் வர்றான்! மெள்ள நம்ம படகு திரும்பினதும் மெதுவா நகர்ந்து வந்த வழியில் போக ஆரம்பிச்சது. ஒவ்வொரு படித்துறையையும் கடந்து போறோம். நான் வேடிக்கை பார்த்துக்கிட்டும் படங்கள் எடுத்துக்கிட்டும் வந்தேனா.... ஒரு கால்விநாடி ஒரு காட்சி கண்ணில் பட்டு மறைஞ்சது. 

 படித்துறைகளையொட்டி  இருக்கும் மாடிக்கட்டடங்களில் ஒரு ஜன்னலில் தெரிஞ்சது  மதர் திரேஸா சிலை .  கங்கையைப் பார்த்தபடி !!!!    எனக்கு ஒரு சம்ஸயமும் இல்லை...    அந்த வெள்ளைப்புடவையும் நீல பார்டரும், முகமும், கண்ணாடியும்  அடையாளம் தெரியாதா என்ன ?  எந்தக் கட்டடமுன்னு  அடையாளம் வைக்கறதுக்குள்ளே படகு ரொம்பவே நகர்ந்து போயிருச்சு.
ஆனாலும் கீழே இருக்கும் படத்தில்  இருக்குமிடம்னுதான் நினைக்கிறேன். நீலத்துலே மார்க் செஞ்சுருக்கேன்.... 
நம்ம நாட்டவர் மட்டுமில்லாமல் ஏராளமான வெளிநாட்டுப் பயணிகளும் இந்தக் காலை நேரத்துப் படகு சவாரியில் கலந்துக்கறாங்க. 
கீழே படம்: கேதார் காட். போகும்போதும் வரும்போதும்!

மக்கள் கங்கையில் குளிச்சு முடிச்சவுடன், பூஜை செஞ்சு வைக்க பண்டாக்கள், குடைக்களுக்கடியில்   தயாரா  இருக்காங்க.

நம்ம சௌஸத்தி Gகாட்  வரும்போது  சீதாவை க்ளிக்கினேன்.  இறங்குனதும்  பாண்டே சொன்னபடி அறுநூறு எடுத்துக் கொடுக்கப்போன நம்மவரை சட்னு நிறுத்திய  கூட வந்த இன்னொரு குடும்பத்தலைவர் (கல்கத்தாக்காரர்கள்) ஒரு படகுக்கு வாடகை அறுநூறு. நாம் இப்போ ரெண்டு பேர் என்பதால்  ஆளுக்கு முன்னூறு கொடுத்தால் போதுமுன்னு சொல்லி  அப்படியே ஆச்சு ! 50 %  !      தீபாவளி போனஸ் நமக்கு !  
எனக்கு இப்படிப் பகலில் ஒருமுறை  வருண்  முதல் அஸ்ஸி வரை போகணும் என்றதும் மஹிந்தர், அவரோட செல் நம்பரைக் கொடுத்து எப்ப வேணுமுன்னாலும் கூப்பிட்டுச் சொல்லுங்க. வரேன்னார்.   அவருக்குக் கொஞ்சம் தீபாவளி அன்பளிப்பு கொடுத்துட்டு  அறைக்குப் போனோம். நாலரைக்குப்போய் ஆறரைக்குத் திரும்பியாச்சு !



தீபாவளிநாள்  ஆரத்தி தரிசனம் மனசுக்குத் தனி மகிழ்ச்சிதான் !  கங்கையில் சூர்யோதயம் பார்க்கலைன்ற குறையும் தீர்ந்தது இன்றைக்கு ! 



தொடரும்....... :-)




9 comments:

said...

அதி காலையில் கங்கை ஆரத்தி காண்பது மனதுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கும்.

சூரிய உதயமும் கங்கையும் நீங்கள் அமர்ந்திருப்பதும் படம் சூப்பர்.

said...

அருமை நன்றி

said...

சூரியோதயம், ஆரத்தி, எல்லாம் அருமையான அனுபவங்கள். படங்கள் அழகு

அது சரி மதர் தெரேசா சிலையா? நீங்கள் குறித்திருக்கும் நீலக்கட்டத்துக்குள் தெரியலை...ஒரு வேளை பிம்ப ரூபமா? ஆ!!! நிஜமாவா?!!!

கீதா

said...

நாங்கள் மாலை ஆரத்தி பார்த்தோம்.  படங்கள் யாவும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன.

said...

வாங்க மாதேவி.

நமக்கு அதிகாலை கங்கை ஆரத்தி இது முதல்முறை ! மனசுக்கு இதமா இருந்தது உண்மை.

கோபால், படம் எடுப்பதில் தேறிட்டார் போல !!!!

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க கீதா,

அதிகாலை அழகு தனி வகை !

நின்னு படம் எடுக்க முடியலை.... 100% உண்மை, அங்கே அந்தச் சிலையைப் பார்த்தது. ஆளுயர ஜன்னலில், கங்கையை நோக்கி வச்சுருக்காங்க. அந்தக் கட்டடம்தான்...... ஜன்னல் அளவைப் பாருங்க.

பகல் நேரத்தில் படகு சவாரி போக நினைச்சேன். அப்போ அதுக்கு எதிரில் நிறுத்திப் பார்க்கணும். ஆனால்..... படகு சவாரி அமையலை.

said...

வாங்க ஸ்ரீராம்,

நாங்களும் காசியில் தஸ் அஸ்வமேத Gகாட்டிலும், கேதார் Gகாட்டிலும் ஹரித்த்வார், ரிஷிகேஷிலும் மாலை ஆரத்திதான் பார்த்தோம். அதிகாலை ஆரத்தி இது முதல்முறை !

said...

இனிய விடியல் ...உங்க போட்டோ செம்ம