Wednesday, March 15, 2023

அய்யர்ஸ் கஃபே ரசஞ்சாதம் ! கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 26

நம்ம  வராஹிக்காக ராத்ரி மூணரைக்கே எழுந்ததால்  ரொம்ப சோர்வா இருக்குன்னு நம்மவர் போய் தூங்க ஆரம்பிச்சார். எனக்கு.... இருக்கவே இருக்காள் கங்கா !  பால்கனியின் உக்கார்ந்து வேடிக்கையும் அப்பப்ப செல்லுமா இருந்தேன். மகளும் ஆன்லைனில் வந்தாள்.  நியூஸியில் அப்போ  மாலை அஞ்சரைதானே!  இந்தியாவுக்கும் நியூஸிக்கும் வருஷத்துலே ஆறுமாசத்துக்கு ஏழரை !

ஷாப்பிங் முடிஞ்சதான்ன்னு கேட்டதும், ரொம்ப ஒன்னும் வாங்கலை.  சாயங்காலம் போய்ப் பார்க்கணும்னு  சொல்லிக்கிட்டு இருக்கும்போதே...... அரைத்தூக்கத்தில் இருந்த 'நம்மவர்'......  என்னவாம்னு கேக்கறார்.  சமாச்சாரம் சொன்னதும் என்ன வேணுமுன்னு கேளுன்னாரா....    மணிகள் கோர்த்த ப்ரேஸ்லெட் வேணுமாம்.  கிடைச்சால் பார்க்கிறேன்.  அதுக்கு துல்ஸி Gகாட் பக்கம் போகணும்.   அங்கேதான்  வெள்ளைக்காரப் பயணிகளுக்கான  பல சமாச்சாரங்கள்  கிடைக்கும்.  இப்போ முக்கியமா வளைகள்தான் வாங்கணுமுன்னு இருக்கேன்னு சொன்னேன்.  லேட்டாதான் தூங்கப்போறேன். ஒரு மணி வரை வேலை இருக்குன்னாள்.

அஸ்ஸியும் துல்ஸியும் அடுத்தடுத்துதான்.  துல்ஸி Gகாட் மட்டுமே மற்ற எல்லாப் படித்துறைகளையும் போல் கிழக்கே பார்க்காமல்,  வடக்கே பார்க்கும் படித்துறை. துல்ஸின்னாலே இடும்பிதான் :-)   வடக்கு தெற்காப் போகும்  கங்கை  இங்கே மேற்கில் திரும்பிடறாள்.

சட்னு எழுந்து  உடை மாத்திக்கிட்டு, 'கிளம்பு போயிட்டு வந்துறலாமு'ன்னு சொல்றார் இவர்.  மகள் என்ற மேஜிக் வேர்டு நல்லா வேலை செய்யுது.  காலையில் போன அதே பெங்கால் டோலா ரோடு என்ற சந்துலே போறோம்.  ம்யூஸிக்  ஸ்டூடியோ (கடை !)இருக்கு !  கச்சேரி நடக்குமாம். ஆனால் இன்னிக்கு ஒன்னும் இல்லைன்னாங்க.  வெளிநாட்டுப்பயணிகளுக்கு இந்திய இசையை  அறிமுகப்'படுத்துவாங்க'ளாம்! ஓ...
ஒரு நாலு நிமிட் தூரத்துலே திடுக்னு ஒரு காளி கோவில் கண்ணில் பட்டது.  எத்தனை முறை இந்தச் சந்தில் போயிருக்கோம். ஆனால் கண்ணில் பட்டது இப்பதான்.  எங்கெ பார்த்தாலும்   சின்னதும் பெருசுமாக் கோவில்களே !  ஒருவேளை இதையெல்லாம் சேர்த்துத்தான் அவுங்க சொல்லும்  இருபத்துமூணு ஆயிரமோ !   
தஸ் அஸ்வமேத் Gகாட் ரோடுக்கு வந்துட்டோம். தெருவோர காய்கறிக்கடைகள் எக்கச்சக்கம்.  அப்படி ஒன்னும் தளதளன்னு கண்ணைப்பறிக்கலை.  வெண்டைக்காய் பரவாயில்லை. நம்மவரின் ஃபேவரிட் :-)




ஒரு குறுக்குச் சந்துக்குள்ளே மெடிகல் ஷாப் (இங்லிஷ் மருந்துக்கடை ) பார்த்ததும்,  நம்மவர் தொண்டை வலிக்கு மருந்து வாங்கிக்கணும்னார். ஆச்சு. சாலையோர சிவனும் இருக்கார்.  பக்கத்துலேயே என் புடவைக்கடை :-) 



எதிர்வாடையில்   காசி விஸ்வநாதர் கோவிலுக்குப் போகும் ஆதிசங்கரர் கேட் நம்பர் 1.   இன்னும் தடுப்பு வச்சுக்கிட்டு நிக்குது போலிஸ்.  விவரம் விசாரிச்சுக்கிட்டு வழி விடுவாங்க போல !  கோவில் இருக்குமிடம் வரை உள்ள சந்துகளில் இருக்கும்  கடைகளின் வியாபாரம் பாதிக்கப்படும்தான் , இல்லே ? 

இந்த ரோடில் கூட்டம் குறையறதே இல்லை. சாரிசாரியாப்போகும் மக்கள் பெரும்பாலும் தெலுகு பேசிக்கிட்டே போறாங்க.  பேசாம ஹிந்திக்கு பதில் தெலுகை , இந்தியாவின் தேசிய மொழியா வச்சுடலாம் போல ! வளையல் கடைக்குள் போனேன்.  வாங்கினேன். கடைக்காரர்கூட ஆந்திராவான்னு கேட்டார் !  மத்ராஸ் வந்துருக்காராம் !




அப்பதான் ரவின்னு தன்னை அறிமுகப்படுத்துக்கிட்ட ஒருவர், புடவை பார்க்கறீங்களான்னார்.  பார்த்தால் ஆச்சு, இல்லே?  கடை ஓனர் இவர்தானாம். இவரும் இவருடைய தம்பி சந்தருமாத்தான்  கடை நடத்தறாங்களாம்.  ஒரு நிமிஷநடையிலே கடைக்குக் கூட்டிப்போனார் இன்னொரு சந்துக்குள்ளே !  ஸ்ரீ ராமா ஸில்க் ஃபேக்டரி  ! 


நம்மவருக்கு ஒரு   பனாரஸி குர்த்தாவும், நம்ம ஜன்னுவுக்கு ஒரு  லேய்ங்கா செட்டும் ஆச்சு.  அடுத்த ஹாலில் புடவைகள். அங்கே போனா ஒரு  நாலைஞ்சு பெண்கள் தரையில் போட்டுருக்கும் மெத்தையில் உக்கார்ந்துருக்காங்க. அவுங்களுக்கு முன்னால் சின்ன  புடவை மலை !

அவங்ககிட்டே சரளமாத் தெலுகு பேசிக்கிட்டு இருக்காங்க கடையின் விற்பனையாளர்கள். ரவியைப் பார்த்தவுடன் 'முதலாளிகிட்டே கேளுங்க'ன்னாங்க.  அறுநூத்து அம்பது  ரூபாய் புடவையை  முன்னூறுக்குத் தரச் சொல்லி  ரெண்டு மணிநேரமா உக்கார்ந்துக்கிட்டு இருக்காங்களாம்.  அதை எடுத்து நம்மாண்டை கொடுத்தார் ரவி. ஒரு அம்பது ரூபாய் குறைக்கலாம். ஒரேடியா முன்னூத்தம்பது எப்படிக் குறைக்கமுடியுமுன்னு  கேக்கறார், தெலுகுலே! 


வெறும் அறுநூறா  ? பன்னெண்டு டாலர்தான்.  வெண்டைக்காய் கத்தரிக்காயே  கிலோ இருவதுன்னு வாங்கறமேன்னு  புத்தி கணக்குப்போடுது. அதுக்குள்ளே நம்மவர், இவுங்க தெலுகு பேசுவாங்கன்னதும்,  கூட்டம் முழுசும் என் பக்கம்  திரும்பி,  'மூடு வந்தலு சொப்பண்டி'ன்றாங்க.  அதுலே ஒரு அம்மா,  நம்ம பையைப் பார்த்துட்டு வாங்கியாச்சா வாங்கியாச்சா...  பில்லைக் காமின்னு கைநீட்டிக் கேக்கறாங்க. எதுக்கு ? 
நமக்குப் புடவைகளை எடுத்துப்போட்டதும், பாய்ஞ்சு வந்து கை நீட்டி எடுத்துக்கிட்டு எவ்ளோ எவ்ளோன்னதும்,   கடைக்காரர்   சொன்ன விலைகேட்டு,  ஜாஸ்தி ஜாஸ்தின்னு கோரஸ் வேற !  பொதுவா நான் புடவைக்கடை நகைக்கடைகளில் ரொம்ப நேரம் நிக்கமாட்டேன். பிடிச்சதா... சட்னு எடுத்துக்கிட்டுக் கிளம்பற ரகம். பொம்பளைங்க புடவைக்கடையில் நாள் கணக்கா இருக்கறமாதிரி  பத்திரிகை ஜோக்  பார்த்தாலே எரிச்சலா வரும். உண்மையில் 'நம்மவர்'தான்   அவருக்குத் துணி வாங்கப்போனால்.....  ரொம்ப நேரம் எடுத்துக்குவார். நல்லா இருக்குன்னு நாம் சொல்லுவதையெல்லாம் விட்டுட்டு  கண்றாவிக் கலர்களை எடுப்பார்.   நல்லதை செலக்ட் பண்ணத்தெரியலை.... ஒரே ஒரு விஷயத்தைத் தவிர :-) 


எனக்கொரு புடவையும்,  ரெண்டு ஸல்வார் கமீஸ் செட்டுகளும்  எடுத்ததும்,  அதையெல்லாம் வாங்கிப் பார்த்த பெண்மணிகள் கூட்டம்  'எவ்ளோ? பில் காட்டு'ன்னு  கேட்டுக்கிட்டே இருக்காங்க. ஒரு ஊரில் இருந்து  நாப்பது அம்பது பேர்னு  கூட்டங் கூட்டமா வர்றாங்களாம்.  உண்மையில்   எல்லா மாநில மக்கள் காசிக்கு வந்தாலும், தெலுகு மக்கள்தான்  எண்ணிக்கையில்  கூடுதல்!  ரவியும் இதையே சொன்னார்.


இப்பெல்லாம்   நாட்டுக்குள் உள்ளூர் மக்கள்  பயணிப்பது  அதிகரிச்சு இருக்கு !  நல்லதுதான்......  பயணம், உடலுக்கும் மனத்துக்கும் நல்லது இல்லையோ !    இந்தப் பயணம் என்பது  எவ்வளவோ வேலை வாய்ப்பை உருவாக்கும் சமாச்சாரம் !  சரியானபடி மற்ற வெளிநாடுகளில் இருப்பதைப்போல் வசதிகள் செஞ்சாங்கன்னா....  சுற்றுலாப்பயணிகள் மூலமாகவே நாட்டுக்கு ஒரு  பெரிய வருமானம் வந்துரும்.  பயணிகளுக்கானத் தங்குமிடங்கள், உணவு,  சுத்தமான  'மற்ற ' வசதிகள், அங்கங்கே முக்கியமான ஊர்களில் சுற்றுலா வழிகாட்டிகள்னு  பலவகைகளில் எவ்வளவோ  இருக்கு!  

இந்தியாவை விடச் சின்னச்சின்ன நாடுகளில் பாருங்க..... சுற்றுலாத்துறை என்ன  அற்புத வேலைகள்  செய்யுதுன்னு....     எனக்கு இந்தியாவைப் பொறுத்தவரை ஆற்றாமைதான்.... ப்ச்....

துணிமணி வாங்கி வெளியே வந்தால் சந்து முனையில்  புள்ளையாரும் பைரவருமா தரிசனம் ஆச்சு ! மெயின் ரோடுக்கு வந்துட்டோமே.... எங்கே இருக்கோமுன்னு பார்த்தால் நந்திக்கம்பம் !


மணி ஒன்னேகாலாச்சு.   இங்கே எங்கியாவது 'நல்ல' ரெஸ்ட்டாரண்ட் இருக்கணுமேன்னு சாலையின் ரெண்டு பக்கங்களிலும்  கண்ணை ஓட்டிக்கிட்டே  நடந்தால்  , அய்யர்ஸ் கஃபே!  போர்டுலே பார்த்தால் அய்யர் காபி !  தமிழனுக்குதான் காஃபி  ரொம்பப்பிடிக்குமே!  ஃபில்ட்டர் காஃபி கிடைக்குமோன்னு உள்ளே போனால்....  சின்னதா ரெஸ்ட்டாரண்ட்.  ரெண்டு ஹால்கள். உள்ளே போய் உக்கார்ந்தால் எதிர்ச்சுவரில் மெனு.


நம்மவர் அதுக்குள்ளே  சாம்பார் இட்லின்னு சொல்லிட்டார். வந்துருச்சு. எனக்கு இட்லி சாம்பார் பிடிக்கும், ஆனால் தனித்தனியா இருக்கணும்.  வேற வழி இல்லாமல் சாப்பிட்டேன். மெனுவில் ரசம் சாதம் & அப்பளம் பார்த்துட்டு  'ரசப்ரேமியான நம்மவரிடம்' சொன்னேன்.  தொண்டை வேற சரியில்லைன்னாரே.... அவருக்கு மட்டும் சொன்னேன்.   ஆனால்  வந்தது மினி மீல்ஸ். 
சாப்பாடானதும் கிளம்பி பாதி வழியில் தான்  ஃபில்டர் காஃபியை விட்டுட்டேனே ஞாபகம் வந்தது.... போகட்டும்.. அந்தக் காஃபியில் என் பெயரை எழுதப் பெருமாளும் மறந்துட்டார் !




திரும்பி சீதாவுக்குப் போறோம்.  வழியில் இன்னொரு கடையில்   ஒரு நைட்டி! ஆறே டாலர் :-) சந்துகளில் நல்ல உறக்கத்தில் சிலர் !

வரவேற்பில் பாண்டே இருந்தார்.  அவரிடம் அஞ்சு நிமிட் பேசிட்டு, மறுநாளைக்கு ஏர்ப்போர்ட் போக வண்டிக்குச் சொல்லிட்டு அறைக்குப் போனோம்.   
ஷாப்பிங் படத்தை மகளுக்கு அனுப்பினேன்.  க்ரே கலரில் பனாரஸ் பட்டு ஸல்வார் கிடைக்குமான்னாள்.  பார்க்கிறேன்னு  சொல்லிவச்சேன்.  இனி கொஞ்சநேரம் ஓய்வெடுத்தே ஆகணும்.

தொடரும்.........:-)

17 comments:

said...

சாப்பாடு சாம்பார் இட்லி எப்படி இருந்தது? நாளை அங்க போறேன் - ஐயர் காபி

said...

தகவல்கள் அனைத்தும் நன்று. நேற்று என் பக்கத்திலும் ஐய்யர் கஃபே தான். காசி எப்போது சென்றாலும் பிரமிக்க வைக்கும் இடம்...... தெலுகு மக்கள் இந்த மாதிரி கோவில் இருக்கும் இடங்களுக்கு வருகிறார்கள். திருவரங்கம் வருவதில் பாதி இவர்கள் தான்.

said...

வாங்க நெல்லைத் தமிழன்,

எங்கே ரொம்ப நாளாக் காணோம் ? நல்லா இருக்கீங்களா ?

காசி எத்தனை நாட்கள் ?

அய்யர் கஃபே ருசி பரவாயில்லை. அவங்க தென்னிந்திய உணவுகள் அங்கே 1926 முதல் சமைக்கிறாங்களாம்.

said...

ஆஹா அய்யர் கஃபே இங்கேயும் வந்தாச்சு!!! நேத்து வெங்கட்ஜி தளத்தில் பார்த்தேன் ஆனால் அவருக்கு அங்கு சாப்பிட முடியவில்லை.

தெலுங்கு தேசத்தவர்கல் எல்லா கோயில் இடங்களுக்கும் போகிறார்கள் அவர்கள் கூட்டம் அதிகம்தான்.

காசி எனக்கு ரொம்பப் பிடிக்கும்...என்ன கூட்டம்! எப்பவும் ஜேஜேன்னு இருக்கும்....எப்ப வாய்ப்பு கிடைக்கும்னு தெரியலை. கங்கை, விச்சு, அன்னபூரணி, அயோத்யாஜி, ஆஞ்சு எல்லாம் பார்க்க ஆவல்.

நெல்லை இப்ப காசி நோக்கிப் ப்யணத்தில்...

பைரவர் தரிசனம் - ஹாஹாஹா ஆங்காங்கே நல்ல தூக்கம் போல

கீதா

said...

// கண்றாவிக் கலர்களை எடுப்பார்.// ப்ளூ கலர், கோடு போட்ட stripes; correct ?

// ஒரே ஒரு விஷயத்தைத் தவிர :-) // நீங்க தான் மொதல்ல 143 சொன்னதா சார் சொன்னாரு

said...

நிறுத்தி, நிதானமா ஒரு ஷாப்பிங் ...

அய்யர் கடை தொடர்ந்து 2 நாளா வந்துட்டு இருக்கார்.. ரொம்ப பேமஸ் போல

said...

இரண்டு நாளாக ப்ளாக்ஸ்களில் ஐயர் கபே படித்ததும் நமக்கும் போகத் தோன்றுகிறதே.

பயணத்தில் தொடர்கிறோம்.

said...

எல்லாம் படித்துவிடுவேன். மூன்று நாலு நாள் காசி, ஒருநாள் கயா இரவு தங்கல்.

said...

அந்தத் தெலுங்குக்கு கூட்டத்தை படம் எடுக்கவில்லையா? நல்லா வியாபாரம் செய்யறாங்களே...

said...

இவ்வளவு கூட்டம் தெருமுழுக்க நிக்கறாங்களே.. இவங்கல்லாம் வெளியூர் வாசிகளா? அந்த ஊர் ஜனங்க இப்படி எப்போ பார்த்தாலும் திருவிழா மாதிரி கூட்டம் இருந்தா அலுத்துப் போயிடாதோ...

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

நீங்க அடிக்கடி போகுமிடத்துக்கு நாங்க இப்போதான் ரெண்டாவது முறை !

தெலுகு மக்கள் இப்படியே இருக்கட்டும். பயணம் உடலுக்கும் உள்ளத்திற்கும் நல்லதுதான் !

said...

வாங்க கீதா,

உங்க பயணத்தில் நம்ம ரெங்கனையும் சேர்த்துக்குங்க. கொஞ்சம் கூட அலுக்கவே அலுக்காத ஊர் !

said...

வாங்க விஸ்வநாத்,

எங்க காலத்துலே 143 யாவது மண்ணாவது..... இப்ப யோசிச்சுப் பார்த்தால் இந்த நாப்பத்தியெட்டரை வருஷத்தில் ஒரு முறைகூட யாரும் யாருக்கும் 143 சொன்னதே இல்லை!!!!
பொழுது விடியட்டும், இதை வச்சே சண்டையைத் தொடங்கலாம் !

said...

வாங்க அனுப்ரேம்,

ஷாப்பிங் செய்யத்தான் நேரம் இல்லை. எல்லாமே ரொம்பவே மலிவுதான் !!!!

said...

வாங்க மாதேவி,

ரொம்ப நல்ல ருசின்னு சொல்லமுடியாது. ஆனால் வயசு நூறுக்கு மேல்! அதுக்காகவே பாராட்டலாம்!

said...

@ நெல்லைத் தமிழன்,

நாங்க இன்னும் கயாவுக்குப் போகலை. என்னமோ திட்டம் போட்டாலும் இதுவரை அமையலை.

said...

வாங்க ஸ்ரீராம்,

அதென்னமோ அவுங்களைப் படமெடுக்கத்தோணலை...

ஊர் முழுக்கத் தினம் திருவிழாதான். உள்ளூர் மக்கள் பழகிப்போயிருப்பாங்க.! பயணிகளால் ஊருக்கே நல்ல வருமானம் உண்டே ! அதுதான் போல எல்லாமே விலை மலிவாகத்தான் இருக்கு!