பொழுதுவிடிஞ்சு பொழுதுபோனால் ஒரே த்யானம்தான். ஆமாம் .... மனதை அலைபாய விடாமல் எதாவது ஒன்றைப்பற்றியே நினைப்பது தான் த்யானம் இல் லையோ ? பத்துப்பேரை என்ன செய்யலாமுன்னு.... த்யானத்தின் பலன் கைமேல் கிடைச்சது. ஆரம்பம்தான் கஷ்டம்..... பிடிகிட்டிப்போச்சுன்னு வையுங்க.... ஒரே டேக் ஆஃப்தான் !
வச்சுக்கொடுத்த ப்ளௌஸ் பிட்டுகளையெல்லாம் நம்ம ஜன்னுவுக்கு ஏதாவது தைக்கணுமுன்னு எடுத்து வச்சுருந்தேனே... அதிலிருந்த ஒன்னில் கொஞ்சமா ஒரு பதினைஞ்சு செமீ வெட்டி எடுத்தேன். 2 X 2 என்பதால் மெல்லிஸாத்தான் இருக்கு. பத்தில் ஒருத்தியை எடுக்கும்போது என் கை என்னையறியாமலேயே போய்த் தொட்டது கருப்பு முடிக்காரியையே ! ரொம்பச் சரி. இவளுக்குத்தான் புடவை பாந்தமா இருக்கும் ! கட்டிப்பார்த்தேன். சரியாத்தான் வருது. ஆஹா.... சரிகை பார்டர் தைச்சுப்போட்டதும் அருமை ! நகைநட்டில்லாமல் மூளியா இருந்தால் நல்லவா இருக்கும் ? அதிலும் இந்தியப்பெண்மணி !!!!! (உண்மையில் இவள் ஆஃப்ரிகாக்காரிப்பா )
நகை வேட்டை ஆரம்பம் ஆச்சு. நாஞ்சொல்லலை..... எதாவது காரியம் இருந்தால்தான் கடைக்குப்போவேன்னு :-) முதலில் வீட்டில் ஏதாவது தேறுமான்னு பார்த்துட்டுத்தான் போனேன். மகள் குழந்தையா இருந்தபோது வாங்கின ஜிமிக்கி வளையல்கள்... அநேகமாப் பயன் ஆகலாம். ஆகணும்.
கழுத்தாபரணம் அடுத்தபடி.... உள்ளூர் பிள்ளைகளுக்கான ப்ரேஸ்லெட் ? ஒரு விஷயம்..... வெள்ளைக்காரர்கள் நகையே போடமாட்டாங்கன்னு நம்மூர்லே சொல்லிக்கிட்டு இருக்கமே.... அது உண்மையில்லை. என்ன ஒன்னு தங்க நகை... அதுவும் 22 காரட்தான் போடமாட்டாங்க :-)
ச்சும்மாச் சொல்லக்கூடாது... காஸ்ட்யூம் ஜூவல்லரிக் கடைகள் ஒவ்வொன்னிலும் டிஸைனும் அழகும் ஒன்னையொன்னு மிஞ்சித்தான் கிடக்கு ! நமக்குத்தான் 'ஐயோ.... இவ்ளோ விலை கொடுத்து வாங்கணுமா.... இன்னும் கொஞ்சம் கூடப்போட்டாத் தங்கமே (அது ஒரு கிராம் என்றாலும் கூட ) வாங்கிக்கலா'முன்னு தோணும். ஆனால் நாம் பொறுமை காத்தால் ஸேல் வரும்போது அடிவிலைக்குக் கிடைச்சுரும். என்ன ஒன்னு.... நாம் பார்த்துவச்சது கிடைச்சால் நம்ம அதிர்ஷ்டம். பொழுதன்னிக்கும் ஸேல் வரும் என்றதையும் சொல்லிக்கறேன் :-) கைக்கடிகாரம் மட்டும் மொத்த விற்பனையில் ஒரே மாதிரி பத்து ! ஹாஹா....
சொந்தமா எதாவது செய்ய முடியுமான்னு பார்க்கணும்.... தங்கச் சோழிகூடக் கிடைச்சது....!!!! மரமணியில் கோர்த்து விட்டேன். புள்ளி வந்து பார்த்ததும் போட்டுவிட்டேன் !!!!
யூட்யூப் எதுக்கு இருக்குன்னு நுழைஞ்சு தேடுனதில் சிலபல ஐடியாக்கள் கிடைச்சது உண்மை. அதைப்பிடிச்சுக்கிட்டு கூடவே நம்ம கற்பனைகளைக் கோர்த்துவிட்டதும்... ஹாஹா... முதலில் உடைஞ்சு போல கைகால் தலை எல்லாம் ஸர்ஜரி செஞ்சு சரியாக்கணும், இல்லையோ !
முதல் பொண்ணை அலங்கரிச்சதும், நம்பிக்கை வந்தது...... நம்மாலும் செய்ய முடியுமுன்னு.... ஒரே ஒரு ப்ரச்சனை.... மற்ற பெண்களுக்கெல்லாம் தலை நரைச்சுக்கிடக்கு :-) 'தங்கமுடி'யாமே.... ஹாஹா....
எதாவது செய்யணும்.....
கருப்பு மார்க்கர் பென்? என்னதான் கைக்கு க்ளவ் போட்டுக்கிட்டுப் பூசினாலும் எப்படியோ முகத்தில் பட்டு, அதை சுத்தம் செய்து பழைய முகக்கலரைக் கொண்டுவருவதில் கஷ்டப்பட்டுட்டேன். அப்படியும் ஆறுபேரை ரெடியாக்கிட்டேன்னு சொல்லலாம். கடைசி மூவருக்கு நீர்க்க ஒரு அக்ரிலிக் பெயிண்ட். சுமார்தான்.
முதல் அழகிப் புடவை கட்டிக்கிட்டதும், வெவ்வேற இந்திய மாநில உடைகள் கட்டிவிடலாமான்னு பார்த்தால் முக்கால்வாசியும் புடவைகள்தான். கட்டும் ஸ்டைல்தான் வேற.
ஒருத்திக்கு முண்டு. அவளைப்போலவே முகஜாடை இருந்த இருவர் மக்களானார்கள். அம்மெயும் மக்களுமாய் மூவர்.
காக்ரா, பாவாடை சட்டை, தாவணி, நாட்டிய உடை, ராஜஸ்தான் இளவரசின்னு பத்துப்பேரையும் ஒரு வழி பண்ணிட்டேன்.
குழந்தைகள் மூவரில் இருவர் ஏற்கெனவே நல்ல உடையில் இருந்ததால் கம்மல் ஜிமிக்கியும் போட்டதோடு சரி. ஒரு குழந்தை மட்டும் ரவுடி பேபியானான் :-)
டிஸ்ப்ளே செய்யத்தான் சரியா ஒன்னும் அமையலை. தாற்காலிகமா வெவ்வேற அமைப்பில் வச்சுப்பார்த்து இப்போதைக்கு வரிசையில் வச்சுருக்கேன்.
ஒருநாள் காலையில் பார்த்தால் ஒருத்தி கீழே விழுந்துருந்தாள். எடுத்து அவளிடத்தில் வச்சேன். மறுநாள் பார்த்தால் மறுபடி கீழே கிடக்கிறாள். விஷயம் பிடிபட்டது. அந்த வாரம் தொடர்ந்து சின்ன அளவில் நிலநடுக்கியதே காரணம். மற்றவர்கள் அனைவரும் ப்ளூடேக் உதவியால் நிற்கறாங்க.
கீழே விழாமல் இருக்க எல்லோருக்குமாச் சேர்த்து ஒரு ஏற்பாடுன்னு மணி கோர்க்கும் நைலான் ஒயரால் தடை போட்டுருக்கேன்.
ஒரே பதிவில் இப்படிச் சொல்லிட்டேனே தவிர முழுசுமாச் செஞ்சு முடிக்க ரெண்டுமாசம் ஆச்சு !
இதுவரை செஞ்ச கைவேலைகளில் மனசுக்கு ரொம்பவே மகிழ்ச்சி தந்தது இப்போதைக்கு இதுதான் !
11 comments:
அடடா !!!! புடவை கடைக்கு டிஸ்பிளே செய்யலாம். கொள்ளை அழகு கண்ணே பட்டுவிடும் வாழ்த்துகள்.
மிக அருமை நன்றி
Fantastic ��. We feel you have been blessed by the artistic and creative ideas by the Almighty God.
You are an amazing and creative artist.
எனக்கு நகை பற்றி எல்லாம் தெரியாது. புன்னகைதான் தெரியும்! எனினும் நெக்லஸ் அணிந்த ரஜ்ஜுவும், பொம்மை புடைவை கட்டியிருக்கும் நேர்த்தியும் சூப்பர்.
வாங்க மாதேவி,
மிகவும் நன்றிப்பா !
வாங்க விஸ்வநாத்,
நன்றி !
வாங்க வித்யா,
மனம் திறந்த பாராட்டுகளை மகிழ்ச்சியோடு அனுப்பி இருக்கீங்க. மிகவும் நன்றி!
நம்ம வீட்டு மஹாலஷ்மித் தாயாருக்கு உடைகள் தைச்சுப்போட்டதுதான் ஆரம்பம். இப்போ ஜன்னுவும் க்ருஷ்ணாவும்தான் அலங்கார ஆர்வத்தை வளர்த்துவிட்டுருக்காங்க.
வாங்க ஸ்ரீராம்,
நகையைப் பத்தித் தெரியாவிட்டால் பரவாயில்லை. மறுபாதியிடம் பொறுப்பை விட்டுருங்க. கேட்கும் பணம் மட்டும் கொடுத்தால் போதும்:-)
Beautiful
வாங்க தெய்வா,
நன்றீஸ் !
Post a Comment