Wednesday, July 27, 2022

எலி வளையா இருந்தாலும் தனிவளையா வேணுமாம்....

இப்படிச் சொன்னது யாருன்னா....  நம்ம பூனை :-)  நம்ம வீட்டைக் கடைசியில, நாம் இருக்கும்போதே பாகம் பிரிக்கும்படியா ஆகிப்போச்சே.....
640 சதுர அடியில் ஒரு கூடம்.  அதுலே காவாசி வேணுமாம் !!!! 

வீடு மொத்தத்தையும்  ஆண்டு அனுபவிச்சுக்கிட்டுத்தான் இருந்தான் இத்தனை வருஷங்களும்.  இப்ப என்னடான்னா.....

மகள் அவளுடைய ஜூபிடருக்கு ஒரு டோனட் வாங்கினாள்.  அவனும் அழகா அதுலே  உக்கார்ந்து போஸ் கொடுத்தான் !  பல சமயம் தூக்கமே அதுலே படுத்துத்தான். 

கீழே படங்கள்  ஜூபிடர்!  போன மாசம் சாமிகிட்டே போயிட்டான். ப்ச்.....

ரஜ்ஜுவுக்கும் ஒன்னு வேணுமான்னு கேட்டாள்தான். ஆனால் 
இவனுக்கு வேணும்னு எனக்குத் தோணலை அப்போ. கொஞ்சநாள் கழிச்சு இவன் நம்ம காலையொட்டிப் படுக்க ஆரம்பிச்சானா..... என்னாலே சட்னு எழுந்து போகவோ, காலை அசைக்கவோ முடியாமல்  போச்சு. சரி. நாமும் ஒரு டோனட் வாங்கிக்கலாமுன்னு தேடினால்... எங்கே ?  வேண்டாதபோது கடைகளில் எல்லாம் கண்முன்னே இருந்ததையெல்லாம் யார் வாங்கிட்டுப் போனாங்க ? 

உள்ளூர்க் கடைகளில் எங்கே கிடைக்குமுன்னு வலை வீசினதில்  ஒரு  கடையில்   இருக்குன்னு தெரியவந்ததும் அங்கே போனோம்.  கார்பார்க்கில் வண்டியை நிறுத்திட்டு இறங்கும்போதே.... கொஞ்சதூரத்துலே ஒருத்தர் டோனட்டை, ட்ராலியில் வச்சுக்கிட்டுப் போறாங்க. நான் விரும்பிய அதே நிறம் வேற !

கடைக்குள் பாய்ஞ்சு, செல்லம் செக்‌ஷனுக்குள் தேடினால்....  இருந்த கடைசி டோனட் தான்  ட்ராலியில் போயிருக்கு. ப்ச்.....  துக்கத்தோடு சுத்திவரும்போது வீடு ஒன்னு  கண்ணில் பட்டுச்சு.  ஈஸ்டர் ஹௌஸ்.   இவனுக்குத்தான்  வருஷப்பிறப்புக்கோ, ஈஸ்டருக்கோ ஒன்னும் வாங்கலையேன்னு (கோவிட் ஹௌஸ் டிடென்ஷன் காலம்  அப்போ)  வீட்டை வாங்கிக்கிட்டு வீட்டுக்கு வந்தோம்.


அப்பா உக்கார்ந்து வீட்டைக் கட்டினார்:-)எஞ்சிநீயர் இல்லையோ !!!!   ஹாஹா

மூணு பக்க வாசல்களோடு நல்லா அம்சமாத்தான் இருக்கு வீடு.  உள்ளே கொண்டு வந்து வச்சதும்  முன்வாசலையே பார்த்துக்கிட்டு இருந்தவன், பக்கவாட்டு வாசல்வழியா உள்ளே போய் உக்கார்ந்தான்.




கொஞ்சம் லேண்ட்ஸ்கேப் பண்ணிக்கொடுத்தேன் :-)

என்ன இருந்தாலும் சொந்த வீட்டு சுகம் வருமோ என்றதைப்போல்தான் அவனுடைய நடவடிக்கை ஆச்சு. ஆன்னா ஊன்னா வீட்டு வாசலில் போய் உக்காருவதும், சிலசமயம் உள்ளே போய் 'வறக் வறக்'னு தரையைப் பிறாண்டி நகங்களைக் கூராக்கிக்கறதுமா..... தரையில் என் தலை தெரியுதோ என்னவோ...

https://www.facebook.com/1309695969/videos/1599968280369075/

வீட்டில் வளர்க்கும்  செல்லங்களுக்கு விருப்பு வெறுப்பு இருக்குமா?  பிடிச்சது, பிடிக்காததுன்னு ....   போனமாசக்கடைசியில் மகள் எனக்கொரு பரிசு கொண்டுவந்து கொடுத்துட்டு, 'மதர்ஸ் டே கிஃப்ட்'  இப்பவே தர்றேன்னாள். பிரிச்சுப் பார்த்தால் தங்கச் செருப்பு ! நானென்ன மைக்கேல் ஜான்ஸனா... தங்க செருப்புப் போட்டுக்கிட்டு ஓட ?  

விசேஷம், பார்ட்டிகளுக்குப் போட்டுக்கிட்டுப் போகவாம்.  எனக்குச் சரிவராதுன்னுன்னதும்,  'வாங்கின கடையில் திருப்பிக்கொடுத்துடலாம்.  பிரச்சனை இல்லை.  வேற ஏதாவது வேணுமுன்னால் மாத்தி எடுத்துக்கலாமு'ன்னும் சொன்னாள்.   அந்த கிஃப்ட் பொதிஞ்சுவந்த தாள் தரையில் கிடந்ததும், இவன் மெள்ள அதுக்குள் போய்ப் பார்த்தான். அதில் இருந்த ஏதோ  ஒன்னு.... (மணம் ? )இவன் மனசுக்குப் பிடிச்சுருச்சுப் போல.  அதுலேயே உக்கார்ந்துக்குவான். அப்போ சொந்த வீடு வரலை.  
கோபம் வரும்போதோ இல்லை போரடிக்கும்போதோ அந்த தாளைக் கிழிச்சுப் போட்டுருவான். வேற கிஃப்ட் ராப் கொடுத்தாலும் பிடிக்கலை. மகளிடம் கொஞ்சிக்கூத்தாடி  கொஞ்சம் கிஃப்ட் ராப் கொண்டுவரச்சொன்னேன்.  அவள் அந்தக் கடையில் இருந்து நிறைய பொருட்களை வாங்கறாள்!  அது லேடீஸ் ஸ்பெஷல் கடை !  ஒவ்வொன்னும் யானை விலை.  தங்கச் செருப்பைத் திருப்பிக்கொடுக்கப்போனப்ப... நான் மகளுடைய பெயரைச் சொல்லி அவளுடைய  அம்மான்னதும் பயங்கர வரவேற்பு!  அந்தக் கடையின் உடைகளுக்கு மகள் மாடலிங் செய்கிறாள் !

இப்படியே  ஒருநாள் டோனட் தேடிப் போனப்பதான் வீடும் வந்தது.  அப்புறம் ஒருநாள்  அந்தக் குறிப்பிட்டக் கடைக்குப்போனபோது  ஸ்டாக் வந்துருக்கான்னு எட்டிப் பார்த்தால் நான் விரும்பிய கலரில் டோனட் ஒன்னு இருந்தது. ஆசை ஆசையா வாங்கியாந்தேன்.     

புதுசா எது வீட்டுக்குள் வந்தாலும் ஓடிவந்து நோட்டம் பார்க்கிறவன், இதை சட்டையே செய்யலை.  மகளிடம் கேட்டதுக்கு, படுக்கை மேல்  அவன் படுக்கும் இடத்தில் வச்சுப் பார்க்கச் சொன்னாள். ஊஹூம்.....   சரி. கலர் பிடிக்கலைபோலன்னு அவனுடைய  பாஷ்மீனா ஷால் எடுத்து அதன் மேல் போட்டு நிறம் மாத்தினேன்.

வேணாமுன்னா வேணாம்.... அம்புட்டுதான் !
அடப்பாவி.... இதே எண்ணமா இருந்து ஓடி ஓடிப் பார்த்து வாங்கினேனே... போச்சா.... எல்லாம் பாழப்போச்சா..  என்னென்ன கனவெல்லாம் கண்டேன்.....  (ஹாஹா... சினிமா விட்டுத்தொலைக்குதா பாருங்க ) 

போகட்டும்...  அதை எடுத்துக்க ஆளா இல்லை ?  இதோ.... குழந்தை தூங்கறது :-)   உன் காவாசி பாகத்துலே போட்டாச்சுடா!.  


நல்லவேளை.... 'ஒற்றுமையா வாழ்வதாலே உண்டு நன்மையே... வேற்றுமையை வளர்ப்பதனாலே....' ன்னு பாடிக்கிட்டே  நடுவே சுவர் ஒன்னும் கட்டலை !



8 comments:

said...

அருமை சிறப்பு

said...

மிக சுவாரஸ்யமான ரஜ்ஜு புராணம், படங்கள்.

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க ஸ்ரீராம்,

ரஜ்ஜு ரொம்பவே சுவாரஸ்யமானவன் :-)

said...

துளசிக்கா ஆஹா ரஜ்ஜுவைக் கண்ணாரக் கண்டேன் ஹையோ செம சுவாரசியம் ரசித்து ரசித்து படித்தேன். அவன் சொந்த வீடு அழகோ அழகு...அவன் விளையாட்டையும் பார்த்தேன் அந்த சுட்டில. ப்ளே டைம்!!! அழகா பிடிச்சு உள்ளார கொண்டு போய்க்கறானே...வீட்டையே சுவாரசியமாக்குவான்....ஒரு வேளை சொந்த வீடு வந்ததுனால டோனட் பிடிக்கலையோ என்னமோ...அது பார்க்க சொகுசா ஸாஃப்டா இருக்கும் போல இருக்கே ஏன் பிடிக்கலையோ...

மகளின் செல்லம் ஜூபிடர் க்யூட் ஆனா பாவம் போய்டிச்சே...

கீதா

said...

ரஜ்ஜு வுக்கு தனிவீடுதான் பிடித்திருக்கிறது :) வீட்டுக்குள் தனி இராச்சியம் :)

said...

வாங்க கீதா,

பிடிவாதம் அதிகம்ப்பா.... வேணாமுன்னா வேணாம் !

மகள் வீட்டுக்கு இப்போ புதுசா ரெண்டு பேர் வந்துருக்காங்க. இங்கே Catnap Cafe ன்னு ஒன்னு இருக்கு. அங்கே போய்ச் செல்லங்களுடன் பொழுது போக்கிட்டு அப்படியே ஏதாவது சாப்பிட்டும் வரலாம். எல்லாச் செல்லங்களும் அடாப்ஷனுக்கு ரெடிதான். அங்கே இருந்து இருவர் மகள் வீட்டில் !

https://www.facebook.com/gopal.tulsi/posts/pfbid0o7SW6EdDDXs2bNqNNgT6GvVg5ZPEtUpg35zqiAQ6BBQsJi8QS2gWDrcusySTxnLjl

said...

வாங்க மாதேவி,

சொந்த வீட்டு சுகம் கண்டுட்டான் :-)