கோடை விடுமுறை விட்டப்பயே.... குடும்பம் அடிக்கடி சந்திச்சுக்கணுமுன்னு முடிவு. அதான் கொரோனா காரணம் சொந்த நாட்டுக்குப்போய், சொந்தக் குடும்பத்தைப் பார்க்க முடியாமல் கிடக்குறோமே..... அதுக்கு ஈடுகட்டும் வகை இது.
இதோ அடுத்த ரெண்டாம்நாள் ஃபிப்ரவரி பொறக்கப்போகுது... யோகா வகுப்பும் ஆரம்பிக்கப்போகுதுதான். ஆனாலும் குடும்பமாக் கோடையைக் கொண்டாட ஆசை !
ஒரு 66 கிமீ தூரத்தில் இருக்கும் ஆஷ்லி கோர்ஜ் (Ashley Gorge)போகப் புறப்பட்டோம். பகல் சாப்பாட்டுக்குப் பாட்லக் கொண்டு போகாமல் ஒரு ரெஸ்ட்டாரண்டில் ஏற்பாடு ஆகி இருக்கு ! அதனால் டென்ஷன் இல்லாம ஒரு பனிரெண்டு மணிக்கு அங்கே சந்திக்கலாமுன்னு....
போகும் வழியில் ஆக்ஸ்ஃபோர்ட் என்ற சின்ன ஊர் இருக்கு. அங்கிருந்து இன்னும் எட்டுக்கிமீ போகணும். அன்றைக்கு ஞாயிறாக இருந்ததால் சண்டே மார்கெட் ஒன்னு திடலில் முளைச்சிருந்தது. வாரச்சந்தைதான். ஆனால் நாம் இத்தனை வருஷத்தில் முதல் தடவையாச் சந்தையைப் பார்க்கிறோம். ஒரு பத்து நிமிட் பார்த்துட்டுப்போலாமுன்னு வண்டியை ஓரங்கட்டினோம்.
சின்னச் சந்தைன்னா.... ரொம்பவே சின்னது. ஒரு பதினைஞ்சு, இருபது கடைகள் இருந்தால் அதிகம்.
ஒரு இடத்தில் ரெண்டு அழகுக்குட்டிகள் இருந்தாங்க. விற்பனைக்குத்தான். Alpaca குட்டிகள். பார்க்கறதுக்கு Llama / llama மாதிரியே அச்சு அசல். ஆனால் சின்ன சைஸ். மினியேச்சர் லாமா ! (The word llama is a trickey one.... the word llama originates from latin roots Double L. )
இந்த அல்பகாவிடம் ஒரு வேடிக்கை இருக்கு.... அதுக்குக் கோபம் வந்தாலோ, இல்லே குஷியா இருந்தாலோ நம்ம மூஞ்சுலே துப்பிரும். அரங்கேற்றம் படத்துலே ப்ரமீளா சிரிக்கிறது போல.... (சரியாச் சொல்றேனா ? )
அதுக்குத்தான் போல வாயைக் கட்டி வச்சுருந்தாங்க. ஒன்னு வாங்கி வளர்க்கலாமுன்னு ஆசைதான்... ஆனா...எங்கூருக்குள்ளே ரெண்டே ரெண்டு நாலுகால்களுக்குத்தான் அனுமதி. நம்ம ச்சிண்ட்டு, நம்ம ரஜ்ஜு. அவ்ளோதான் !
ஒரு கடையில் பல்பு வச்சுருந்தாங்க. கொஞ்சம் ஒரு நாலுவகை வாங்கினேன். செடிக்கிழங்குன்னு சொல்றதே நல்லது. இல்லைன்னா நான் பல்பு வாங்குனமாதிரி ஆகிரும்.
அடுத்த காமணியில் ஹாலிடே பார்க் போயாச்சு. இங்கேயே தங்கறதுக்கும் அறைகள் வசதி உண்டு. வாடகைக்குத்தான். நம்ம சொந்த கேம்பர் வேன், கூடாரம் இருந்தாலும் குறைஞ்ச வாடகையில் தங்கிக்கலாம். நம்மாட்கள் இருக்குமிடத்துக்குப்போனால் செட்டில் ஆகிக்கிட்டு இருக்கு சனம்.
ஒருத்தர் 'வீட்டு' ப்ளம்ஸ் கொன்டு வந்துருந்தாங்க. நாம் ? அந்தத் தர்பூஷணியைத் துண்டுகள் போட்டு ! அடிக்கிற வெயிலுக்கு இதமோ இதம் !
எல்லோரும் வந்து சேர்ந்ததும் ரெடியா இருந்த சாப்பாட்டை ஒரு கை பார்க்கவேண்டியதுதான். ஆறிப்போயிருமில்லையா.... வெஜ் ஃப்ரைட் ரைஸ் & ரய்த்தா, இந்தியன் ரெஸ்ட்டாரண்டுலே இருந்து. நம்ம சனமும் அச்சார், ஸாலட் இப்படி ஆளாளுக்கு ஒன்னுன்னு கொண்டு வந்துருந்தாங்க. டிஸ்ஸர்ட்ன்னு ஸ்ரீகண்ட், ஸோன்பப்டி.....
ஒரு வெட்டு வெட்டிட்டு, அப்படியே ஒரு நடை..... (உள்ளே போனதெல்லாம் செரிக்க வேணும்தானே !) இங்கேயும் சுலபம், கஷ்டம்னு ரெண்டு வழி. நான் ஈஸி கோயிங்தான், இல்லையோ ! இதுலேயும் கூட சில இடங்கள் கொஞ்சம் கஷ்டம்தான் எனக்கு. சமாளிச்சேன். என்னால் நம்மவரும் இதே பாதையில்.... பாவம்.... ப்ச்....
பள்ளத்தாக்கில் ஆஷ்லி ஆறு, அழகுதான். இந்தப்பக்கம் கொஞ்சம் கீழே இறங்கினால் தண்ணீரில் கால் நனைக்கலாம். கொஞ்ச தூரத்தில் மக்கள் தண்ணீரில் இருந்தாங்க. ஒரு செல்லம்கூட இருந்தான்!
நடந்துபோகும் பாதைகளில் அங்கங்கே சில செய்திகள் நமக்கு ! போனமுறை பார்க்கலை. இந்தப்பக்கம் வந்துருக்கமாட்டோம்.....
நடை முடிச்சுத் திரும்ப நம்ம இடத்துக்கு வந்ததும் எங்க டீ ஸ்பெஷலிஸ்ட், டீ போட ரெடி ஆனார். நாந்தான் பக்கத்துலே டீக்கடை இருக்கு. அங்கே போகலாமுன்னு சொல்லிக் கூட்டிப் போனேன் :-)
டீக்கடை இங்கே ! http://thulasidhalam.blogspot.com/2021/02/blog-post_17.html
டீயோடு இன்னும் சில சிறுதீனிகள். நம்ம வகையில் மிக்ஸ்சர்! அப்பதான் கேக்ஸ் வருது! ஹா....
நாம் இந்த யோகா வகுப்பு ஆரம்பிச்ச புதுசுலே ஹால் வாடகைக்காக ஆளுக்குப் பத்துன்னு மாசம் மாசம் கொடுத்துக்கிட்டே வந்திருந்தோம். அதுலே ஹால் வாடகை போக மீதிக்காசெல்லாம் சேர்ந்துக்கிட்டே இருந்தது. அதனால் போன வருஷம் முதல் விசேஷ நிகழ்ச்சிகள் எதாவதுன்னா குடும்ப வகையில் அதிலிருந்து கொஞ்சம் எடுத்துக்குவோம். போனவருஷம் நம்மவர் பொறந்தநாள் கொண்டாட்டத்துக்குக் கேக் எல்லாம் வாங்கி சர்ப்ரைஸ் செஞ்சதும் இப்படித்தான். ஆரம்பமே நமக்குத்தான்னு..... ஹா.....
இதுலே இந்த சர்ப்ரைஸ் கேக் நமக்குத் தெரியாததால் நாங்க உள்ளூர் இண்டியன் ரெஸ்ட்டாரண்டில். கலாகண்ட், ஆலூடிக்கி, வடை சாம்பார் ஆர்டர் கொடுத்துருந்தோம். அவுங்க நாங்க சொல்லி இருந்த நேரத்துக்கு ஹாலுக்கே வந்து கொடுத்துட்டுப்போனாங்க. நாங்களும் 'குடும்பத்துக்கு' சர்ப்ரைஸ் கொடுத்துட்டம்லெ.
https://www.facebook.com/1309695969/videos/405046854318873/
அதுக்கப்புறம்தான் கொஞ்சம் கொஞ்சமா மற்ற அங்கங்களும் ஏதாவது சொந்த விஷயங்களுக்குச் சின்னதும் பெருசுமா சர்ப்ரைஸ் கொடுக்கத்தொடங்கி ஃபுட் யோகா வாக அடிக்கடி நடக்கலாச்சு. எப்படியும் ஒரு காமணி, இல்லே இருபது நிமிட்ஸ் டைம் வகுப்புலே இருந்து போயிரும்.
இது நல்லதில்லையேன்னு ஒருநாள் கூடிப்பேசி, மாசம் ஒருநாள் வகுப்பு நேரமில்லாத ஒரு சனிக்கிழமையில் அந்தந்த மாசத்தில் வரும் பொறந்தநாளைக் கொண்டாடிக்கலாமுன்னு முடிவு செஞ்சோம்.
ஃபெப்ரவரி மாசம் பொறந்தநாள் வரும் நாலு அங்கங்களுக்கு இன்றைக்கு விழா! ரெண்டாளுக்கு ஒரு கேக்!
நம்ம யோகா குடும்பத்தில் எனக்கொரு ரெட்டை இருக்காங்க. கொஞ்சம் வயசுலே மூத்தவங்க என்றாலும் தேதியில் எனக்கு இளையவங்கதான் :-) நான் அஞ்சு, அவுங்க பத்து. ஆனால் ட்வின் சிஸ்டர் :-)
இந்த விடுமுறையின் கடைசி அவுட்டிங் ஆச்சு !
மறுநாள் வாங்கிவந்த கிழங்குகளை நட்டு வச்சேன். ஒரே வாரத்தில் மொட்டு விரிஞ்சது. அப்புறம் பார்த்தால் ஒரு மொட்டுக்குள் அஞ்சு பூக்கள் !!!
4 comments:
அல்பகாவின் வாயைக் கட்டி கொடுமைப்படுத்தி இருப்பது பாவமாக இருக்கிறது!
படங்கள் சுவாரஸ்யம்.
விடுமுறையும் கொண்டாட்டங்களும் பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது.
வாங்க ஸ்ரீராம்.
அல்பகாவின் வாயைக் கட்டி இருப்பது... இந்த மாதிரிப் பொது இடங்களில் வரும்போது மட்டும்தான். இல்லேன்னா சனம் மேலே துப்பிருமே !
வாங்க மாதேவி,
வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றிப்பா !
Post a Comment