Wednesday, July 06, 2022

கோடைக்கு றெக்கை இருக்கோ !


நம்ம பக்கங்களில் சேம்பு இலைக்கறின்னு ஒன்னு செய்வாங்க, நினைவிருக்கோ ? அதையே ஃபிஜி நாட்டுலே நம்மக்கள் டாரோ  (Taro)கிழங்கின் இலையைப் பயன்படுத்திச் செய்வாங்க. இதுக்கு செய்னா (Saina)ன்னு பெயர்.   வட இந்தியாவில் இதுக்கு Patra ன்னு ஒரு பெயர் உண்டு.  நம்ம உள்ளூர் அண்ணிகளில் ஒருவர் வீட்டில் க்ளாஸ் ஹௌஸில்  டாரோ செடிகளை வளர்க்கிறார்.  நமக்கும் கொஞ்சம் இலைகள் கிடைச்சது.  முதல்முறையாக நம்ம வீட்டில் செய்னா செஞ்சேன். மகளுக்கு இது ரொம்பவே பிடிக்கும் என்பதால் மெனெக்கெட்டேன்னு வையுங்க :-)
அதுலேயும் கொஞ்சம் ஈஸிபீஸி வழிகண்டுபிடிச்சுட்டேன்:-) பருப்பெல்லாம் ஊறவச்சு அரைக்காம, அததுக்கான மாவுகளைச் சேர்த்தால் ஆச்சு.  ஒரு கப் கடலைமாவு, அரைக்கப்  உளுந்து மாவு, ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, கலவையில்  கொஞ்சம் இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து அரைச்ச க்ரீன் மஸாலாவும், உப்பு,   சீரகப்பொடி, பெருங்காயப்பொடியும் கலந்து தண்ணீர் விட்டுப் பசை போல ஆனதும், டாரோ இலைகளைக் கழுவித் துடைச்சு,  அதைப் பின்பக்கம் திருப்பிப்போட்டு, செஞ்சு வச்ச மாவுக்கலவையை பரத்தி விடணும்.  அப்புறம் அதன் மேல் இன்னொரு இலையை வச்சு இதே போல் மாவுக்கலவை பரத்தணும். ஒரு நாலைஞ்சு இலைகளுக்கு இந்த சேவை செஞ்சதும்  ஒரு பக்கம் ஆரம்பிச்சுக் கெட்டியாச் சுருட்டி எடுத்து, நீராவியில் வேகவைக்கணும். நான் ரைஸ்குக்கர் ஸ்டீமரில் வச்சேன்.








வெந்ததும் கொஞ்சம் ஆறவிட்டு வில்லைகளாக நறுக்கி கொஞ்சம் எண்ணெயில் வறுத்தெடுத்தால் ஆச்சு.   No Deep fry... just shallow fry is enough.  கொஞ்சம் தேங்காய்த் துருவலையும் எள்ளையும் வெறும் கடாயில் வறுத்தெடுத்து மேலே தூவினால்  கூடுதல் சுவையும் ஆச்சு, அலங்காரமும் ஆச்சு !

வேகவச்சு நறுக்கி எடுத்த வில்லைகளை ஃப்ரீஸர் பையில் போட்டு ஃப்ரீஸும் செஞ்சுக்கலாம். தேவையானபோது தோசைக்கல்லில்  வறுத்தெடுத்தால்  திடீர் விருந்தாளிக்கு ஸ்நாக்ஸ் ஆச்சு. நம்ம வீட்டு தி வி. மகள்தான் :-)
தேவையில்லாத வியாபார நோக்குள்ள விழாக்களை, நாம் மறந்தாலும்  கடைக்காரர்கள் மறப்பதே இல்லை.  ஃபெப்ரவரி மாசம் தொடங்குனதும்  ஆரம்பிச்சுருவாங்க. காதலர் தினமாம்!  இருக்கட்டும் அன்புக்கான நாள்ன்னு ஹார்ட் விட்டுக்கிட்டு இருக்காங்க. நானும் நம்ம வீட்டுப் பூனைக்கு  ஹார்ட் விட்டேன் :-) வாங்கி ஒரு அஞ்சாறு வருஷம் ஆச்சு. நிறம் மங்கலா இருக்கேன்னு பொன் பூசினேன்.  ரஜ்ஜு அப்பப்ப பேபிஸிட் பண்ணுவான்!



நம்மூர் கோவிலில் இருந்து விழாவுக்கான அழைப்பு வந்துச்சு. காதலர் தினத்துக்கு இல்லை. ஆனால்  பொறந்தநாள் விழா !  இந்த வருஷம் ரெண்டும் ஒரே நாளாய் அமைஞ்சு போச்சு. ஸ்ரீ நித்யானந்த த்ரயோதசி.  கோவில் மெயிலிங் லிஸ்ட்லே நம்ம பெயர் இருக்கு !
மலருடை போட்டுக்கப்போறார் ! சனிக்கிழமை வழக்கம்போல் கோவிலுக்குப் போனப்பவே பூக்கள் வந்து இறங்கியிருந்ததைப் பார்த்தேன்.  இந்தக்  கோவிலில் மட்டும் விழாக்களை வீக்கெண்டுக்குத் தள்ளிப்போடும் வழக்கமில்லை. நம்மூர்போலவே எப்ப வருதோ அன்றைக்கே கொண்டாடிருவாங்க.  
இந்த முறை திங்கட்கிழமை !  அதிலும் அன்றைக்குப் பகல் நேர அபிஷேகம்,  பதினொன்னரைக்கு !   மலருடைகளில் அட்டகாசமா இருக்கார் சாமி ! ரொம்ப ஆத்மார்த்தமாய் அபிஷேகம், ஆரத்தி எல்லாம் நடந்தது.  கூட்டம்தான்  ரொம்பக்குறைவு.  


ஞாயிறுகளில்  மாலை நேரத்துலேதான் கூட்டம் அம்மும். அதுவும்  அஞ்சரைக்கு ஆரம்பிக்கும் கோவில் நிகழ்ச்சிகளுக்கு எண்ணி ஒரு பத்திருபது பேர்கள் இருந்தால் அதிகம். ஆறரைக்கு ஆரத்தி எடுப்பாங்க.  சுமார் இருபது நிமிட். அப்புறம் ஒரு அரைமணி நேர பஜன். நாம் பஜன் முடிஞ்சதும்  டின்னர்  வரிசையில் நிற்கலாமுன்னு போனால்  நமக்குமுன்னே ஏகப்பட்ட நபர்கள்  இருப்பாங்க.  எப்போ வந்தாங்க? கோவில் அர்த்தமண்டபத்தில் பார்க்கலையே.... ஙே....  அந்த ஆஞ்சி வாலில் நாம் போய் ஒட்டிக்குவோம். இப்படியேதான்  நடக்குது ஞாயிறுகளில். நல்லவேளையா....  நாங்க சனிக்கிழமை கோவில் போகும் வழக்கம் என்பதால்  எப்பவாவது, விசேஷ பூஜை ஞாயிறுகளில் அமைஞ்சால்தான் போவோம். 

இங்கே நம்ம சமையலுக்குத்  தேவையான காய்கறிகள்  குளிர்காலத்தில் கிடைக்காது. தப்பித்தவறி ஒன்னுரெண்டு கிடைச்சாலும் விலையைப் பார்த்தால் கெதக்னு இருக்கும்.  அதனால் சம்மர் சமயத்துலே  கொஞ்சம் காய்கறிகளை ஃப்ரீஸ் பண்ணி வச்சுக்கிட்டால் நல்லது.  இப்ப ஒரு நாலைஞ்சு வருஷமா இண்டியன் கடைகள் வந்துருப்பதால் ஃப்ரோஸன் காய்கள் கிடைக்குது.   அதையுமே வாங்கினால் முழுப்பாக்கெட்டையும்  சமைச்சால் சாப்பிட ஆள் வேணாமா ? 

ஃப்ரீஸர் குக்கிங் னுதான்  வீட்டுலே சமையலே.   நம்மாண்டை ரெண்டு ஃப்ரீஸர் இருந்தாலும் அதில் ஒன்னு 'ஆட்டோ டீஃப்ராஸ்ட்' இல்லை. என்னவோ சரியா யோசிக்காமல் ஸேலில் வந்தப்ப வாங்கிட்டோம். அதை மாத்திக்கலாமுன்னு  புது ஃப்ரீஸர் ஒன்னு ஆர்டர் செஞ்சு வந்திறங்குச்சு.  


அதைப் பிரிச்சுப் பார்த்தால் உள்ளே கதவாண்டை கொஞ்சம்  டேமேஜ்.  உடனே படம் எடுத்துப்போய்  கடையில் காமிச்சதும்,  மறுநாள் அவுங்களே வந்து எடுத்துக்கிட்டுப் போனாங்க.   நாம் கேட்ட மாடல் இப்போ ஸ்டாக் இல்லையாம்.    காசைத் திருப்பி வாங்கிக்கிட்டு, வர்றப்போ வரட்டுமுன்னு  சொல்லிட்டு வந்தோம். 
அதென்னவோ  எப்பக்கிடைக்கணுமுன்னு இருக்கோ அப்போதான் கிடைக்கும். நம்ம சரா ஃபேஷன்ஸ்லே சொல்லி வச்ச புடவைகள்  பார்ஸல்  வந்துருச்சு. பதிவுலகத்தோழி சங்கீதா ராமசாமியின் சிறுதொழில் வகை !

இதோ பாதி மாசம் போயிருச்சு. கோடை காலத்தில் மட்டும் நாட்கள் வேகமா ஓடுதே !!! றெக்கை இருக்கோ !

7 comments:

said...

இந்த இலைகளைச் சுருட்டி சமைப்பதே ஒரு கலை. இதுல பருப்பை ஊறவைத்து அரைத்து.. என்று எதுக்கு அதிகப்படியான வேலை... இங்கல்லாம் கல்யாணத்துல, என்னவோ திப்பிசம் பண்ணி, பருப்புசிலிக்கான பருப்பு வகைகளை முன்னமே ட்ரையாக அரைத்து வச்சுக்கறாங்க. திருமணம் அன்னைக்கு அதனை தண்ணீர் ஊற்றி ஊறவைத்து உபயோகிக்கறாங்கன்னு தோணுது. காய் 1/10 பகுதி, மிகுதி பருப்பு.

பிரசாதத்துக்கு க்யூவில் நிற்பவர்கள், வயிற்றுக்கு உணவில்லாதபோதுதான் செவிக்குச் சிறிது உணவு என்ற கொள்கையைக் கொண்டவர்களாக இருக்கும். அது சரி..பிரசாதத்தை வாங்கிக்கவாவது கோவிலுக்கு வந்தாங்களே

said...

மிடில் ஈஸ்ட்ல, விமானத்துல எல்லா இந்தியக் காய்கறிகளும் வந்துடும். லோகல், சௌதி ப்ரொட்யூஸ்களான கோஸ், காலிஃப்ளவர், பீட்ரூட்.... என்று ஒரு லிஸ்ட் காய்கறிகளும் புதியதாகக் கிடைக்கும். கிடைக்காத காய்னு எதுவுமே கிடையாது. பெங்களூர்ல எப்பவாவது கிடைக்கும் சிறுகிழங்கும் அந்த ஊரில் அனேகமா நிறைய மாதங்களுக்குக் கிடைக்கும்.

said...

அந்த இலைச்சுருட்டுப் பண்டம் செய்ததுமில்லை, சாப்பிட்டதுமில்லை.

said...

செய்னா நன்றாக இருக்கிறது.

கோடைக்கு றெக்கை இருக்கிறதுதான் நாம்தான் குளிருக்கும் மழைக்கும் வீட்டில் அடைந்து விடுகிறோமே:)

said...

வாங்க நெல்லைத் தமிழன்,

பெருமாள் அவுங்களுக்குப் படியளந்துருக்கான்னு நினைச்சுக்க வேண்டியதுதான்.

இங்கே இந்தியாவுக்கும் நியூஸிக்கும் தூரம் மிகவும் அதிகம் என்றதாலும், இது ஃபார்மிங் கன்ட்ரி என்பதால் நாட்டின் உள்ளே வரும் பொருட்களுக்கு பயங்கர நியமங்கள் உள்ளதாலும் பழவகை, காய்கறிகள் இந்தியாவில் இருந்து வர்றதில்லை. நம்ம ஏற்றுமதியாளர்களையும் சொல்லணும்... தகுந்த ஏற்பாடுகளுடன் பொருட்களை அனுப்பமாட்டாங்க. ப்ச்.....

ஃபிஜி இங்கிருந்து மூணரை, நாலுமணி நேரப் பயணம் என்பதால் அங்கிருந்து நம்ம காய்கள் கொஞ்சம் வருது. அதுதான் ஏகப்பட்ட விலை.

said...

வாங்க ஸ்ரீராம்,

முந்தியெல்லாம் வேகவச்ச சுருள் அப்படியே உருளையாக டின்னில் வந்துகொண்டு இருந்தது. நாம் ஸ்லைஸ் போட்டு வறுத்துக்கணும். இப்ப அதெல்லாம் காணவே காணோம். ஃப்ரோஸன் செக்ஷனில் வில்லைகளாகவே 400 கிராம் பேக்கில் கிடைக்குது. ஹீட் & ஈட் வகை.

said...

வாங்க மாதேவி,

இப்ப நமக்கு மிட் விண்ட்டர். கூட்டுப்புழுவாக இருக்கணும். இன்னும் ரெண்டு மாசம் போகணும், சிறகோடு வெளியே வர :-)