Wednesday, February 09, 2022

சின்னக்கண்ணன் வந்துட்டான் !

நாம் பாட்டுக்குச் சும்மா இருந்தாலும், தினம் நூறுவாட்டித் திருப்பித்திருப்பிக் காமிச்சுக்கிட்டே இருந்தால் ஆசையா இருக்காதா ? அதுவும்  ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் ப்ரேமியான எனக்கு ?  'இது' இல்லைன்னா இனி சமைக்கவே முடியாமப் போயிட்டா ?   அதானே ? 
பிரபல நிறுவனமாம்.  விலை அதிகமாத்தான் இருக்கு.  மகளிடம் சொன்னப்ப,  இன்னொரு இடம் சொல்லி அங்கே பார்க்கும்படிச் சொன்னாள்.  இதே சமாச்சாரம்  மூணில் ஒருபங்கு விலை.  தரம் எப்படி இருக்குமோன்னு ஒரு சம்சயம். உலகெங்கும் எல்லாமும் சீன சப்ளைதான். கவலையே படாதேன்னு 'நம்மவர்' சொல்லிட்டார்.  வழக்கம்போல் மகள் மூலமாக ஆர்டர் போட்டாச்.  அதுவும் ஒரு பத்துநாளில் வந்து சேர்ந்துச்சு. மொத்தம் மூணு பகுதி. 
புதுசா எது வந்தாலும் உடனே  பயன்படுத்திடவேணாமா ?  இப்பதான் முந்தா நாள்  சுதந்திரதினம் வேற கொண்டாடி இருக்கோம்.  தேசபக்தியோடு ஆரம்பிச்சேன்.  நல்லாதான் வருது ! 


ரெண்டுநாள், எண்ணி ரெண்டே நாள்....  கண்மறைவா கப்போர்டுக்குள்ளே போய் உக்கார்ந்துருக்கு. என்ன ஆச்சரியம்....  அதை வாங்கின நாளுக்கப்புறம் அந்த  விளம்பரம் வரவே இல்லை !!!!!

நான் ஏற்கெனவே பதிவு செஞ்சுருந்த மாதிரி,  நம்ம ஃபிஜி இந்திய சமூகத்தில் வீட்டு விழாக்களையும் சநாதன் ஹால் ராமாயண வாசிப்பு நாளில் கொண்டாடுவது ஒரு வழக்கமா ஆகி இருந்தது. 
ஒரு குழந்தைக்கு முதலாவது பொறந்தநாள்னு போனால்,  ஒன்னு வாங்கினால் ஒன்னு இலவசம் என்பதைப்போல் எதிர்பாராத விதமா இன்னொரு குழந்தைக்கும் முதல் பிறந்தநாள்னு தெரியவர,  சமயோசிதமா சட்னு போய் இன்னொரு கேக் வாங்கிவந்து  ரெண்டு பிறந்த நாள் விழாவையும் சேர்த்துக் கொண்டாட வச்ச உத்தியைப் பாராட்டினோம். எல்லாம்  ஒரு அவசரடிதான்.  இன்றிரவு  11.59 ஆனதும் ஒரு வாரம் ஊரடங்கு.

கொரோனா காரணம்,  வீடடங்குன்னு  சொல்லும் அரசு , எத்தனை நாட்களுக்கு இப்படின்னு சொல்லக்கூடாதா ?  இந்தவாரம் இப்படி, அடுத்த வாரம் இப்படின்னு வாராவாரம் மாத்திக்கிட்டே இருக்கு.  திங்கக்கிழமை காலை பார்லிமென்ட் கூடுனதும் உக்கார்ந்து பேசி முடிவெடுத்து, அன்றைக்கு  மாலை நாலு மணிக்கு, செவ்வாய் ராத்ரி முதல்,  வரும் செவ்வாய் ராத்ரி வரை என்ன லெவல்னு பிரதமர் டிவியில் வந்து சொல்வாங்க. வாரவார வாழ்க்கை.  இதனால்  எந்த  நிகழ்ச்சியும்  ஏற்பாடு செய்ய முடியலை....  திங்கக்கிழமை தேவுடு காக்கிறோம்.  லெவல் அனுசரிச்சுத்தான்  ராமாயணமும் !  ஆனால் ஒன்னு... இப்படியெல்லாம் கட்டுப்பாடோடு இருந்ததால்தான்  குறைந்த எண்ணிக்கையில் கோவிட் மரணங்கள். 

நம்ம  சேர்யோகா வகுப்புகளைக்கூட  Zoom வழியாத்தான் நடத்தினோம்.

ஃபிஜி இந்தியர்களிடையே  பண்டிகைக் கொண்டாட்டங்கள் எப்பவுமே வேற மாதிரிதான்.  ஸ்ரீ ராமநவமின்னா.....  ப்ரதமையில் ஆரம்பிச்சு நவமி வரை ஒன்பதுநாள் விழா ! ஸ்ரீ க்ருஷ்ணாஷ்டமின்னா  ப்ரதமையில் ஆரம்பிச்சு, அஷ்டமி வரை எட்டு நாட்கள் விழான்னு கொண்டாடுவாங்க.  மஹாசிவராத்ரி மட்டுமே மூணுநாட்கள் விழா. சநாதன் ஹாலில் கொண்டாடுவதில்லாமல், அவரவர் சார்ந்த மண்டலிகளிலும் நடக்கும்.  இந்த  ஆன் அண்ட் ஆஃப் கோவிட் லெவலால் ஸ்ரீகிருஷ்ணாஷ்டமி விழாவுக்கு  ஹாலில் ஏற்பாடு செய்ய முடியலை.  வீடுகளில்தான் கொண்டாடணும்.


நாமும் வழக்கம்போல் வீட்டிலும்  கொண்டாடிக்கணும். நம்ம ஜன்னுவுக்கும் கிருஷ்ணாப் பாப்பாவுக்கும் புது உடுப்பு தைச்சேன். கூடவே க்ருஷ்ணாப்பாவின் பொம்மைக்கும் :-)  முந்தி இந்தியாவில் பார்த்த ஒரு டிவி சீரியலில் வீட்டில் உள்ள எல்லோருக்கும்  & திரைச்சீலை, சோஃபா கவர் இப்படி எல்லாத்துக்கும்   ஒரே துணியில் உடுப்புகள் தைச்சுப்போடற மாதிரியே !  
மயில்போலே பொண்ணு ஒன்னு.....

யார் வீட்டுக்கும் யாரும் போக முடியாத நிலை. அப்போ கண்ணன் மட்டும் எப்படி வாசல் வழியா வருவானாம்?   இங்கெதானே இருக்கேன்.  இப்படியே சாமி மேடையில் இருந்து கீழிறங்கி வர்றேன்னான்.  அப்படியே ஆச்சு.  சின்ன அளவில் ப்ரஸாதங்கள் பண்ணிக் கொடுத்தேன், அந்த மாட்டுக்காரப்பயலுக்கு :-) எல்லாத்தையும் ஓடி ஓடிப் பார்த்து அனுபவிச்சது யார்னு சொல்லுங்க பார்ப்போம் ? நம்ம ரஜ்ஜுதான் :-)  




இதுக்கிடையில் நம்ம வீட்டு எலுமிச்சைச் செடிகளில் நிறையக் காய்கள் இந்த வருஷம். ஊறுகாய் ஸ்பெஷலிஸ்ட் ஆனேன்.  பேசாம கடை போட்டுறலாமா ? 




14 comments:

said...

//என்ன ஆச்சரியம்....  அதை வாங்கின நாளுக்கப்புறம் அந்த  விளம்பரம் வரவே இல்லை//

அப்படியும் சொல்ல முடியாது.  ஒரு வருடத்துக்கு முன் நான் ஒரு மெத்தை வாங்கினேன். (தூக்கத்தை வாங்கலை!) அதன் விளம்பரம் இன்றளவும் அழிக்க அழிக்க மெயில் பாக்சில் வந்து கொண்டே இருக்கிறது!

said...

ஊறுகாய்ல காயைவிட சாறு ரொம்ப அதிகமோ?

தலைப்பு வேறு மாதிரி யோசிக்க வைத்தது. வாழ்த்துகள்.

said...

அருமை நன்றி

said...

ரஜ்ஜு என்னம்மா எல்லாத்தையும் செக் செய்கிறான்!! அது எல்லாத்தையும் போய் செக் செய்வது ரசானி.

ஊறுகாய் நல்லாருக்கு. கடை போட்டுருங்க துளசிக்கா. ஜன்னு ட்ரெஸ், கிச்சாவின் பொம்மை ட்ரெஸ் வரை எல்லாம் ரொம்ப அழகு. ஜன்னி - மயில் போல பையன் ஒன்னு!!!

எல்லாமே ரசித்தேன்

கீதா

said...

வெகு அழகு.. என்னடா நம்ம பேர் டைட்டில் ல வருதேன்னு பார்த்தேன்.. அன்புடன் சின்னக்கண்ணன்

said...

வாங்க ஸ்ரீராம்,

இந்த விளம்பரம், Candy Crush Game லே வர்றது. மத்தபடி நாம் வீட்டுலே எது பேசினாலும், மனசுலே நினைச்சாலும் அது சம்பந்தமா உள்ள பொருட்களின் விளம்பரம் ஃபேஸ்புக்கிலே வந்துருதே.... விடாது கருப்பு வகை :-)

said...

வாங்க நெல்லைத்தமிழன்.

இது இனிப்பு ஊறுகாய். கொஞ்ச நேரம் கழிச்சுப் பாகு இறுகினதும் சாறு குறைஞ்சுருச்சு.

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க கீதா,

ரஜ்ஜு ரொம்ப நோஸி. அவனுக்குத் தெரியாம வீட்டுலே எதுவுமே நடந்துறக்கூடாது.... என்ன செஞ்சு வச்சாலும், வீட்டுக்குள்ளே வந்தவுடன் எப்படியோ நேரா அங்கே போய்ப் பார்த்துட்டுத்தான் மறுவேலை :-)

நம்ம 'வீட்டு மாங்காய்த் தொக்கு' இங்கே ரொம்ப ஃபேமஸ் ஆகிப்போச்சு. எல்லா கெட் டுகெதருக்கும் ஒரு சைட் டிஷ்ஷாக் கொண்டுபோனதின் பலன் :-)

said...

வாங்க சின்னக்கண்ணன்,

எழுதும்போது உங்க நினைவு வந்தது உண்மை. இப்பப் பார்த்தால் நீங்களே வந்துருக்கீங்க !!!!

said...

நிகழ்வுகள் ஒவ்வொன்றும் ரசிக்க வைத்தன. படங்களும் சிறப்பு.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

நிகழ்வுகளைத் திரும்பிப் பார்க்கும்போது இப்படியா இப்படியான்னு தோணுதுல்லே ?

said...

ஜன்னு குட்டி கண்ணன் டிரஸ் அழகாக இருக்கிறது. விழாக்கள் வருவதே மகிழ்ச்சிதான்.

said...

வாங்க மாதேவி.

ஜன்னு & கிச்சு ரெண்டும் அழகோ அழகுதான்ப்பா !