Wednesday, February 23, 2022

கொலு விஸிட் & விஸிட்டர்ஸ்

இந்த ஒன்பது நாட்களுக்குப் 'போட்ட' கோலங்களும், செய்த நைவேத்யங்களும் என்னன்னு பார்க்கலாமா ?  ஒன்னும் ப்ரமாதமில்லை, ரொம்பவும் மெனெக்கடவும் இல்லை கேட்டோ ! பெரிய திட்டங்களும் இல்லை. காலையில் மனசுக்குத் தோணும் வகைதான். இருக்கும் ரெண்டுபேருக்கு என்னன்னு செய்வது ? 
கொலு பார்க்க யாராவது வர்றதா இருந்தால்தான்  சுண்டலே ! 
நவராத்ரி ரெண்டாம் நாள்  காலையில் நம்மவருக்குக் கண் செக்கப். அதுக்கு ஓடணும் என்பதால் மினி இட்லியும் நெய்ச்சக்கரையுமா  ஆச்சு. ( இந்த நெய்ச்சக்கரை எங்க அப்பாவின் ஃபேவரிட்! )

நம்ம மல்லிச்செடியிலும் பூக்களின் வருகை.

மூணாம்நாள் ..... இப்படி.... ஒரு சுண்டலுடன் நைவேத்யம். தொட்டுக்க ஜாங்கிரி :-)
இன்றைக்கு  நம்ம புள்ளையார் கோவில் சத்சங்கத்தில் நவராத்ரி விழா !  வெலிங்டனில் இருந்து பண்டிட் வர்றார். கோவிலில் விளக்கேற்றி ஆரம்பிச்சு வைக்கும் பாக்யம் கிடைச்சது.








 அம்பாளுக்கு அபிஷேகம், ஆராதனை எல்லாம் அமர்க்களமா நடந்தது. பெண்கள் சேர்ந்து குங்கும அர்ச்சனை செய்தோம்.  

நாலாம்நாள் மாம்பழக் கேஸரி நைவேத்யம். இன்றைக்கு மாலை நம்ம யோகா குடும்பம் வந்தாங்க. 





இன்னொரு நண்பர்குழுவும் வர்றதா இருந்தது.  சிலபல காரணங்களால் வரலை. ஒரு தோழி மட்டும் வந்துட்டுப் போனாங்க.
சாயங்காலம் விஸிட் வர சிலருக்கு முடியலை. பகலில் வரலாமான்னு கேட்டவங்களுக்கு  வாங்கன்னு சொன்னேன். சிலருக்குக்  காலையில் வரலாமா?   மத்யானம் வரலாமா ? ன்னு ஒரு குழப்பம்.  நமக்கும் அவுங்க வந்து போகறதை வச்சு,  மற்ற வேலைகள், விஸிட் எல்லாம் நடத்திக்கணும்.  இவ்வளவு தூரத்தில் இருக்கோம்.  வர்ற ஆசைப்படறவங்களை விடலாமோ ? 

அஞ்சாம்நாள் மூணு செட் நண்பர்கள் வருகை, வெவ்வேற நேரங்களில். 









சாயங்காலம் ' அம்மன்' வருகை !  மனநிறைவா இருந்தது ! 

https://www.facebook.com/1309695969/videos/1207663929713259/

10 comments:

said...

நவராத்திரி சிறிய அளவில் நிறைவான கொண்டாட்டம்.
அம்மன் வருகை சூப்பரோ சூப்பர்.

said...

மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் கொண்டாட்டங்கள் நன்று.

தொடரட்டும் கொண்ட்டாட்டமும் பதிவும்.

said...

வாங்க மாதேவி,

அம்மன் போன வருஷமும் வந்துருந்தாங்க !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

ஒரு சேமிப்புக்காக இருக்கணும் என்றுதான் பழசையெல்லாம் பதிவு செஞ்சுக்கிட்டு வர்றேன்.

said...

முழு போஸ்ட்டும் படிச்சாலும்... 'என்னா உயரம்!' என்று பெருமூச்சுவிட வைச்ச ஃபோட்டோதான் கமண்ட் எழுத வந்ததும் மனசுல இருக்கு. :-)

said...

அருமை சிறப்பு நன்றி

said...

கொலு கொண்டாட்டம் மகிழ்வான தருணங்கள்னு சொல்லுது ...குழந்தைகள் வந்தால் குதூகலம்தான். பரவாயில்லை ரஜ்ஜு பழகிவிட்டானே

கீதா

said...

வாங்க இமா.

அந்த ஒல்லியான இளைஞரா ? அவர்தான் நம்ம யோகா க்ரூப்பில் பேபி :-)

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க கீதா,

விழாக்கள் எல்லாம் பாலைவனத்தில் பசுஞ்சோலைகளே !

ரஜ்ஜு இல்லாமல் நாமில்லை:-)