வருஷத்துக்கு ஒருதபாதான் ட்ரெஸ் சேஞ்ச்.
அநியாயமா இல்லே ? ஆமாம். ஆனால் வீட்டைவிட்டு எங்கேயும் நகர்றதில்லை. ஒரு ஆட்டமில்லை, பாட்டுமில்லை. அழுது மண்ணில் புரளுவதுமில்லை. உடம்பில் துளி வேர்வை வர்றதில்லை. எங்கேயும் போய் சித்த உக்கார்றதுமில்லை. புருஷனும் பொண்டாட்டியும் நின்னது நின்னபடிதான்.
நவராத்ரி வந்துருச்சு. இன்னும் அஞ்சே நாட்கள்தான்..... முதல் அலங்காரம் இந்த திவ்ய தம்பதிகளுக்கே ! போனவருஷத்தில் இருந்து காலளவு கூந்தல் வேற ! தலைவாரிப் பூச்சூட்டி சிங்காரிக்கணும். எடுத்துவச்சுக்கிட்டு உக்கார்ந்தேன். இதோ........... ஸோ அண்ட் ஸோ ஆஜர்.
நம்மூரில் இருந்தால் வருஷாவருஷம் நவராத்ரி கொலுவுக்குப் புதுசா பொம்மைகள் கொஞ்சம் வாங்கிக்கலாம். சாஸ்திரமாம். குறைஞ்சபட்சம் ஒரு பொம்மையாவது புதுசாக் கொலுவில் வைக்கணுமாம். இதுலே காலத்துக்கேத்தாப்லெ வெவ்வேற தீம் வேற ! அதுக்கெல்லாம் நான் எங்கே போறது ?
குண்டுசட்டிக்குள்ளே குதிரை ஓட்டறது போல இருக்கும் பொம்மைகளையே, யஹாங் ஸே வஹாங், வஹாங் ஸே யஹாங்னு .....
எப்பவும் போல இருக்கும் நிரந்தரக்கொலுப்படிதான். மரக்கலர் போரடிக்குதேன்னு சின்னதா ஒரு அலங்காரம் அதுக்கும். சம்ப்ரதாயப்படி ரங்க்ஸ் உதவி செஞ்சு கொடுத்தார்.
ஆனாலும் மனசு கேக்குதா ? சின்னச் சின்ன காட்சிகளை உருவாக்கலாமுன்னு ஆரம்பிச்சுருக்கேன். இந்த வருஷம் நம்ம ரஜ்ஜுவுக்கு ஒரு சொந்த கடற்கரை ! தென்னைமரம் வேற கிடைச்சதே !
Bபேக்கிங் ட்ரே எதுக்கு இருக்கு ? ஹாஹா... ஆளில்லாத பீச் பார்த்ததும் தேவதைகள் ஓடிவந்துட்டாங்க.
வந்து பார்த்தான்.... " அம்மா.... என் பீச்லே நான் எங்கே ? "
' இதோ நீயும் பிக்னிக் போயிருக்கே'ன்னேன் :-)
ஜன்னுவுக்கு ரதியில் இருந்துவந்த பட்டுப்பாவாடைகளில் ஒன்னு ! அவளுக்கென்ன ? ராஜாத்தி !
மாளய அமாவாசைக்கு.... பூனைப்பாதத்தில் படையல். அழகா இருக்குல்லெ ?
மறுநாள் கொலு ஆரம்பம் ஆச்சு. சுமாரான அலங்காரம்தான். மிக்ஸ் & மேட்ச்சா இருப்பதை வச்சுத் தினம் ஒரு கோலம்! (ஆமாம்... இதுக்கொன்னும் குறைச்சல் இல்லை !) தினம் ஒரு வகை நைவேத்யம். இதைத்தவிர வேற புதுமைகள் ஒன்னுமில்லை.
நம்ம சநாதன் தர்ம சபாவில் இந்த ஒன்பது நாட்களும் நவராத்ரிக்கான சிறப்பு வழிபாடு . தேவிபாகவதம் படிச்சு விளக்கம் சொல்றார் நம்ம பண்டிட். இதுதவிர ஃபிஜி மக்கள் பலர், அவுங்கவுங்க வீடுகளில் நவராத்ரி தேவி பூஜைன்னு அழைச்சுருக்காங்க. நம்ம தமிழ்நாட்டுத் தோழி ஒருத்தர் வீட்டில் போனவருஷம் முதல் கொலு வைக்க ஆரம்பிச்சு இருக்காங்க. நம்மவர் கண் சர்ஜரி நடந்த சமயம் ஆனதால் அப்போ நாம் போகலை. இந்த வருஷம் கட்டாயம் வரணுமுன்னு அழைப்பு. சநாதன் சபாவுக்குப் போகும் வழி என்பதால் அங்கே ஒரு விஸிட் முடிச்சுக்கிட்டு, சபைக்குப் போகணும்.
அழகா அம்சமா அஞ்சு படிகளோடு கொலு ! ஊரில் இருந்து அப்பா அனுப்பிக் கொடுத்தாராம். அதான் சுதர்ஸன் ஹோமத்துக்குப் பொருட்கள் வரவழைச்சாங்களே, அப்போ ! இப்பெல்லாம் கூரியர் சர்வீஸ் நல்லாதான் இருக்கு !
சநாதன் தரம் சபா ஹாலில் இன்றைக்கு ஒரு பிறந்தநாள் விழாவும் கூட ! என் புடவைக்கு மேட்ச்சா கேக் ! பஹூத் குஷ் ஹுவா !
நம்ம சநாதன் சபைஅழைப்பு இருந்தாலும் ஒன்பது நாட்களும் போக முடியாது. முடிஞ்சால் வர்றோமுன்னு சொன்னோம். ஆனால் எப்படியாவது முதல் நாளும் கடைசி நாளுமாவது போகணும். நம்ம வீட்டுக்கும் நண்பர்கள் கொலுவிஸிட் வருவாங்க இல்லையா ? யார் வர்றாங்களோ இல்லையோ... நம்வீட்டுக் குழந்தை மட்டும் தவறாம தினம் வந்து 'அதே கொலு'வைப் பார்த்துட்டுப் போறான். !
5 comments:
கொலு ரஜ்ஜூ ஜன்னு அலங்காரங்கள் சூப்பர். திரு.கோபால் மிகுந்த மகிழ்ச்சியில் குழந்தையும் மடியில் சிரித்துக்கொண்டு இருக்கிறது.
யஹாங் ஸே வஹாங் ...வஹாங் ஸே யஹாங் -- வந்தாய் போலே வாராதாய் ...வாராதாய் போல் வருவானே
வாங்க மாதேவி,
ரசித்தமைக்கு நன்றி !
கொலு அலங்காரங்களும் மற்ற தகவல்களும் சிறப்பு. தொடரட்டும் கொண்டாட்டங்கள்.
துளசிக்கா கொலு அல்ங்காரம் செம. அதுவும் பொம்மை ஜோடி அலங்காரம் சூப்பர். ஜன்னு அழகி! நம்ம ரஜ்ஜுதான் எல்லாத்தையும் ரசிச்சு பார்க்குறான் போல!!!
அண்ணா மடில குட்டிப் பாப்பா க்யூடோ க்யூட்!
கீதா
Post a Comment