Friday, February 18, 2022

Bird of the Paradise

சரியாச் சொல்லணுமுன்னா  2017 ஆம் வருஷம் நவம்பர் மாசம் ஒரு  நர்ஸரியில்  இந்த தேவலோகப்பறவைச் செடியைப் பார்த்து, ஆசையோடு வாங்கி வந்தேன்.  கொஞ்சம் கொஞ்சமா வளர வளரத் தொட்டிகளையும் அதுக்கேத்தாப்படி மாத்தி வச்சுக்கிட்டே இருந்தேனா....  கட்டக் கடைசியில் ஒரு மொட்டு விட ஆரம்பிச்சு, பதினைஞ்சுநாள் கழிச்சு லேசாக் கண் திறந்தது.  வாங்கிவந்த பின் மூணு வருஷம், நாலு மாசம், ஒன்பது நாள் ஆகி இருக்கு முகம் பார்க்க ! 








உண்மையில் ஒரு மொட்டுக்குள்ளே நாலு பூக்கள்.  அதுவும் ஒரே சமயத்தில் மலராமல் நின்னு நிதானமா ஒவ்வொன்னா... போதுமடா சாமி!  இவ்வளவு நிதானம் த்ரீ மச் இல்லையோ !  அதுக்காக நட்டதும்,  பூ அன்றே பூக்கணுமுன்னெல்லாம் எதிர்பார்க்கலை .
அதுக்கடுத்த ரெண்டாவது மொட்டு ஆறு மாசத்தில் வந்து நவராத்ரி சமயம் மலர்ந்தது. ஆனால் சும்மாச் சொல்லக்கூடாது.... ஒரு மொட்டு முழுசும் மலர்ந்தபிறகு மூணுமாசம் வரை அந்தப் பூ செடியிலேயே  இருந்துட்டுத்தான்  காய்ந்துபோகுது.  (அதானே... எவ்வளவுநாள் நிக்குதுன்னு கணக்குப் பார்த்துருவொம்லெ. ) இப்ப மூணாவது மொட்டு வர ஆரம்பிச்சு இருக்கு.


இப்போ கொஞ்சநாளுக்கு முன்னே.... எங்க யோகா பரிவாரோடு ஒரு பிக்னிக் போயிருந்தோம். வீட்டிலிருந்து ஒன்னேகால் மணி நேரப்பயணம். 67 KM தூரம். அவரவர் கிளம்பி அங்கே சந்திப்பதாக ஏற்பாடு.  நாம் போற வழியில் ஆக்ஸ்ஃபோர்ட் என்ற சிற்றூரில் ஒரு சண்டே மார்கெட் கூடியிருந்துச்சா.... அங்கே ஒரு ஸ்டாப் போட்டோம்.  ஒரு கடையில் குளிர்காலப்பூக்களுக்கான  கிழங்குகள் விற்பனைக்கு இருக்கவே , அதிலிருந்து ஒரு நாலுவகை வாங்கியாச்.




ஒரு கிழங்கில்  மொட்டு ஒன்னு முளைச்சு நின்னது. ஆஹான்னு அதையே வாங்கினேன்.  மறுநாள் தொட்டியில் நட்டு வச்சாச். எண்ணி அஞ்சாம் நாள் மொட்டு விரிய ஆரம்பிச்சது. இளம் பிங்க் நிறம் ! அடுத்தநாள் பார்த்தால் இன்னொரு பூ  அதுக்குப் பக்கத்தில் தெரிஞ்சது. இப்படியே ஒவ்வொன்னா வெளியில் வர மொத்தம் அஞ்சு பூக்கள் !  தேவதைபோல ரொம்ப நாட்கள் செடியில் நிக்கலை. எண்ணி ரெண்டு வாரம்தான்.

இதுவும் லில்லி குடும்பம்தான். Amaryllis (Belladonna lily)  என்று பெயராம். இந்தச் செடிகளுக்கு இலைகளே கிடையாது. கிழங்கிலிருந்து ஒரு தண்டு வளர்ந்துவந்து நுனியில் மொட்டு !  பூக்கள் எல்லாம்  வந்து முடிஞ்சாவுட்டு, நிதானமா  கிழங்கிலிருந்து இலைகள் முளைச்சு வருமாம்.  பார்க்கலாம், என்னதான் நடக்குமுன்னு....

இதுக்கு வெள்ளைக்காரன் வச்ச இன்னொரு பெயர் தெரியுமோ ? Naked ladies !   



10 comments:

said...

விதம் விதமான பூச்செடிகள், காய்கறி செடிகள் என்று எவ்வளவு வெரைட்டி உங்கள் வீட்டில். அவ்வளவுக்கும் இடம் இருக்கிறதா?

இன்றைய பூக்கள் படம் கொள்ளை அழகு.


Jayakumar

said...

அழகிய பூக்கள். நம்ம வெப்பநிலைக்கு இவை ஏற்காது . இங்கு லில்லி இனங்கள் மழைக்குத்தான் பூக்கின்றன.

said...

Like it.

said...

வாவ் ....பிங்க் பூக்கள் ..

said...

பூக்கள் படம் செம கலர் அண்ட் அழகு படங்கள் துளசிக்கா.

நம்ம ரஜ்ஜு செக் பண்ணாம எதுவும் உள்ள போகாது போல!!! ஹாஹாஹா...இந்தப் பதிவுல ரஜ்ஜுவின் அழகு முகம் நல்ல போஸ்!!!!

கீதா

said...

வாங்க ஜயகுமார்,

இடம் ஒன்னும் ரொம்பப்பெருசில்லை. சுமார் நாலு க்ரௌண்ட் இடம். அதுலே 30% வீடு . மீதி தோட்டம். ஃபென்ஸ் ஓரங்களைத்தவிர செடிகள் எல்லாம் தொட்டிகளில்தான்.

பூக்களே அழகுதான், இல்லை !!!!

said...

வாங்க மாதேவி.

காலநிலை முக்கியம் இல்லையா? இங்கேயும் அதுதான் எனக்குப் பெரிய குறை.

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க அனுப்ரேம்,

வாவ் வாவ் !!!

said...

வாங்க கீதா,

பூக்களை வ் அச்சே ஃப்ல்ம் காட்டிருவேன் :-)

ரஜ்ஜுவுக்குத் தெரியாமல் எதுவும் நடக்கச் சான்ஸே இல்லை !