பாண்டிச்சேரியில் இருந்து கிழக்குக் கடற்கரைச்சாலை வழியே நேராச் சென்னைதான். மாமல்லபுரத்தாண்டை, முருகனுக்கு ஒரு டீ ப்ரேக். எனக்கு சுசிலா சிற்பக்கலைக்கூடம் :-) சிலைகளைப் பார்க்கும்போது ஆசையாத்தான் இருக்கு! நியூஸிக்கு அனுப்பி வைப்பாங்கதான். ஆனால் இன்னும் இங்கே கோவில் கட்டலையே....
பெரிய சிற்பங்கள் கூடவே சின்னச் சின்ன வீட்டு உபயோகச் சாமான்களும் செஞ்சு வச்சுருக்காங்க. அத்தனைக்கும் ஆசைப்பட்டு, ஒரு பெருமூச்சோடு கிளம்பி லோட்டஸ் வந்து சேர்ந்தப்ப மணி அஞ்சே முக்கால். முருகனை அனுப்பிட்டு அறைக்குப் போனோம். கீழே ஸ்டோரேஜில் போட்டு வச்ச பெட்டிகள் திரும்ப வந்தன.
துவைக்கவேண்டிய துணிகளை எல்லாம் எடுத்துத் தனியா வச்சோம். லோட்டஸில் என்ன ஒரு கூடுதல் வசதின்னா.... காலையில் லாண்ட்ரிக்குக் கொடுக்கும் துணிகள், அன்று மாலையே சுத்தமாத் திரும்பி வந்துரும். மற்றவைகளை நாமே இங்கே துவைச்சுருவோம். 'நம்மவர்' அவருடைய எல்லாத்துணிகளையும் லாண்ட்ரிக்கு அனுப்புவார்.
அடுத்த வேலை என்னன்னு பார்க்கணும்! சென்னைக்குன்னு சில வேலைகள் எப்பவுமே இருக்கே. டெய்லர் கடைக்குப்போய் தைக்கக் கொடுத்தவைகளை வாங்கினதும், கீதாவில் ராச்சாப்பாடு, பாண்டிபஸாரில் சின்னதா துப்பட்டா ஷாப்பிங் எல்லாம் ஆச்சு. கைராசின்னு ஒரு சின்னக்கடை இருந்தது யாருக்காவது நினைவிருக்கோ? அந்தக் காலத்துலே மேட்சிங் ப்ளவுஸ் ஸ்பெஷலிஸ்ட் ! அது இப்போ அழகான பெரிய மாடிக் கட்டடம் ! அவுங்க கொடுக்கும் பளாஸ்டிக் பைகள் மக்கும் தன்மை உடையதாம். நல்லது !
மறுநாள் எங்கேயும் போகலை !!!!! கொஞ்சம் நல்லா ரெஸ்ட் எடுக்கணும். சாப்பாடெல்லாம் இங்கே லோட்டஸ் க்ரீன்வேஸில்தான். திரும்பப்பெட்டிகளை அடுக்கும் வேலை. அடுத்த பயணத்துக்கு ஒரு வாரத்துக்குள்ளவைகளை எடுத்துத் தனியா வச்சுட்டு, லோட்டஸில் வச்சுட்டுப் போகும் பெட்டிகளில் மற்றவைகளை அடுக்கினோம். சாயங்காலம் லாண்ட்ரியில் இருந்து வந்தவைகளில் தேவையானதை எடுத்துக்கிட்டார் 'நம்மவர்'. காலையில் ஒரு ஏழே காலுக்குக் கிளம்பணும். ப்ரேக்ஃபாஸ்ட் ஏழரைக்கு என்பதால் காலையில் ஒரு ஆறேமுக்காலுக்கு எதாவது கிடைக்குமான்னு ரெஸ்ட்டாரண்ட் மேனேஜரிடம் பகல் சாப்பிடும்போது கேட்டு வச்சதில் 'சரி'ன்னார்.
காலையில் சீக்கிரம் எழுந்து கடமைகள் முடிச்சு, பெட்டிகளை ஸ்டோரேஜுக்கு அனுப்பிட்டு கீழே ப்ரேக்ஃபாஸ்டில் எட்டிப் பார்த்தால் இட்லியும் காஃபியும் கிடைச்சது. இது போதுமே நமக்கு !
ஏழு மணிக்கு முருகன் வந்துட்டார். ஏர்ப்போர்ட் ட்ராப் :-) ஏழே முக்காலுக்கு இன்ட்டர்நேஷனல் ஏர்ப்போர்ட் போயாச்சு. ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் முடிச்சு, காத்திருக்கோம். ஒரு ம்யூரல் பார்த்ததும் நம்ம வித்யா சுப்ரமணியன் நினைவு வந்தது உண்மை!
ஒன்பது இருபதுக்கு போர்டிங் ஆச்சு. இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்பிடும் ! இதுதான் முதல்முறை எமிரேட்ஸில் போறேன்றதால் ரொம்ப எதிர்பார்ப்புடன் இருந்தேன்.
அப்படி ஒன்னும் பிரமாதமா இல்லை..... ரெண்டு வரிசைகளுக்கிடையில் இடைவெளி (லெக்ரூம் ) கொஞ்சம் அதிகம்.
சென்னையா இது ? எந்த இடம் ?
கிட்டத்தட்ட நாலரை மணி நேரப் பயணத்தில் துபாய் போய்ச் சேர்ந்தோம். அடுத்த ஃப்ளைட்டுக்கு ரெண்டு மணி, இருபது நிமிட்ஸ் காத்திருக்கணும்.
எனக்குக் கொஞ்சம் நகைக்கடைகள் பார்க்கணும்னு இருந்ததுதான். ஆனால் ட்ரான்ஸிட்டில் எங்கே இருக்குன்னு தெரியலை. 'நம்மவர்' ஏற்கெனவே இங்கே போய் வந்தவர்தானேன்னு கேட்டதுக்கு, அதெல்லாம் அரைவலில்தான்னு அடிச்சுவிட்டார். பயமா இருந்துருக்கும் போல :-)
நல்ல பெரிய ஏர்ப்போர்ட். நடந்து நடந்து ட்ரான்ஸிட் லவுஞ்சுக்குள் போகும்போதே கால் வலி ஆரம்பம்.
தொடரும்..... :-)

6 comments:
பயணம் தொடரட்டும். சிலைகள் பார்த்து ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தது. எத்தனை உழைப்பு அவர்களிடம்.
தொடர்ந்து பயணிப்போம்.
அடடா! ... அடுத்த பயணம் ஆரம்பம் ஆவலுடன் இருக்கிறோம்.
//அதெல்லாம் அரைவலில்தான்னு அடிச்சுவிட்டார். //
ஹாஹாஹா, யானைக்கு ஒரு காலம் ... I mean, கோபால் சார் செமையா தப்பிச்சிட்டார்.
வாங்க வெங்கட் நாகராஜ்,
மாமல்லபுரம் உள்ளே போனால் இன்னும் ஏராளமான சிற்பக்கலைக்கூடங்கள் இருக்கே! என்ன உழைப்புன்னு நானும் நினைப்பேன்.... அழகோ அழகு!
வாங்க மாதேவி,
ஆரம்பம் ஆச்சு :-)
வாங்க விஸ்வநாத்,
அப்படியெல்லாம் தப்ப முடியாது..... கேட்டோ..... இதெல்லாம் டெம்ப்ரரிதான் :-)
Post a Comment