ஒவ்வொரு ப்ரகாரமாப்போய் தரிசனம் செஞ்சுக்கிட்டே சுத்தி வர்றோம். தாயார் சந்நிதியில் நிம்மதியான தரிசனம். மேட்டழகிய சிங்கரும் கருணை காட்டினார். சித்திரங்கள் எல்லாம் பளிச்ன்னு.... புதுப்பிச்சுருக்காங்களோ?
கொஞ்சநேரம் அங்கே படிகளில் உக்கார்ந்துருந்தோம். ஹைய்யோ.... என்ன ஒரு நிம்மதி !
திரும்ப சுத்தப்போனோம். சனம் ஆஞ்சியைப் பார்த்தா மட்டும் சும்மா விடாது இல்லே?
கண்ணாடியறை ஆண்டாள், கண்ணாடி மூலமே கெமெராவில் சிக்கினாள் !
வெள்ளைக்கோபுரத்தாண்டை வந்ததும், அக்காவைப்போய்ப் பார்த்துட்டு வரலாமேன்னு தோணுச்சு. அட! இன்னொரு சொந்தமும் இருக்குல்லே? எப்படி மறந்தேன்? நெருங்கிய தோழியின் ஓர்ப்படி. ஆனால் தோழியின் கணவர் 'மன்னி'ன்னு கூப்பிடறதால் தோழியும் மன்னின்னே குறிப்பிடுவாங்க. ஆனால் எனக்கு அவுங்க 'அக்கா'தான்! இந்த கோபுரவாசலில் இருந்து இடதுபுறம் ரெண்டு நிமிட் நடையில் அவுங்க வீட்டுக்குப் போயிடலாம்.
இடதுபக்கம், ஆண்டாள் வீடு இருக்கேன்னு தலையைத் திருப்பினால்......... வீட்டையே காணோம். என்ன ஆச்சு? தாங்க முடியாம, ஒரு வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கிட்டு இருந்த பெண்ணைக் கேட்டேன். ஆண்டாளுக்குப் புதுவீடு கோவிலுக்குள்ளேயே கட்டியாச்சாம் !
ஹா..... எங்கே ? எங்கே? விசாரிக்கணும்........
மாடியேறிப்போனால், வீட்டு வாசலில் கார்த்திகை அகல்விளக்குகள்! ஏத்தி வச்சுட்டு அப்பத்தான் உள்ளே காலடி எடுத்து வச்சுருக்காங்க, டான்னு துளசி ஆஜர்! அக்காவுக்கு ரொம்ப சந்தோஷமாப் போயிருச்சு. 'விளக்கேத்தி வைச்சவுடன் வந்துட்டேம்மா. மனசு நிறைஞ்சுத் திருப்தியா இருக்கு'ன்னு சொன்னாங்க. அத்திம்பேர் கையில் ஒரு தட்டில் அகல்கள் ஏந்தி நின்னுக்கிட்டு இருந்தாரா, 'நம்மவர்' சட்னு போய் தட்டை வாங்கிக்கிட்டார். அப்புறம் அவுங்க ரெண்டுபேருமாப் போய் பால்கனி கைப்பிடிச்சுவரில் வரிசையை அடுக்கி வச்சாங்க. ஹாலில், அறைகளில், வாசலில்னு எல்லா இடங்களிலும் ஜோதிமயம்!
'ஸ்வாமி நமஸ்காரம் பண்ணிக்கோ'ன்னு அக்கா கூப்பிட்டதும் பூஜையுள்ளுக்குப் போனேன். கார்த்திகைதீபம் ஸ்பெஷல் பொரியுருண்டை நிவேத்யம் ! அம்மாவுக்கு முடியலைன்னு மும்பையில் இருந்து மகள் செய்து அனுப்பியது. அன்றைக்குத்தான் வந்துருக்கு, துல்ஸி ஆஜர் ஹோ ! என்ன டைமிங் பாருங்க :-)
கோவில் காலண்டர் படி அன்றைக்குத்தான் தீபம். பெரியவர்களை வணங்கி ஆசி வாங்கிக்கிட்டுக் கிளம்பியாச். பால்கனியில் வந்து நின்னு வழி அனுப்பிது பிடிச்சுருக்கு ! க்ளிக் க்ளிக்.
வீதி முழுசும் வீடுகளில் விளக்கேத்தி வச்சுருக்காங்க. இப்படிப் பார்த்தே ரொம்ப வருஷமாச்சு. அந்தி மயங்கும் நேரம் என்ன ஒரு அமைதி !
திரும்பக் கோவிலுக்குள் போனோம். நம்ம உடையவர் சந்நிதி வெளி மண்டபம், உள் மண்டபம் எல்லாம் ஜிலுஜிலுன்னு விளக்குகள் ! குருவை வணங்கி வெளியே வந்தால்....
சொக்கப்பனையாண்டை கூட்டம் சேர்ந்துருக்கு! மணி இன்னும் ஆறேகால் கூட ஆகலை. எட்டுமணிக்குத்தானே விழா ஆரம்பம். அறைக்குப் போயிட்டு வரலாமுன்னார் 'நம்மவர்'.
ராஜகோபுரத்துலே இருந்து காலை வீசிப்போட்டு நடந்தா அஞ்சே நிமிட்டில் ஹயக்ரீவா வந்துடலாம். ( இருக்கற கூட்டத்துலே எங்கேன்னு காலை வீசிப்போட ? ) கோவிலைச் சுத்தி இருக்கும் எல்லா தெருக்களையும் ஒன்வேயா மாத்தி வச்சுட்டதால் நாமும் காரில் சுத்திச் சுத்திதான் போகணும். பத்து நிமிட் ஆகும்.
அரைமணி போல ஆனதும் கிளம்பலாமுன்னு பிடுங்கியெடுத்தேன். ஏழேகாலுக்குக் கிளம்பினோம். இன்னும் முக்கால் மணி நேரம் இருக்குன்னு முணுமுணுத்துக்கிட்டே வந்தார். ராஜகோபுரத்தாண்டை இறங்கி நேரா நடந்தால் ஆச்சு. கடைகண்ணிகளை வேடிக்கை பார்த்தமாதிரியும் இருக்குமேன்னதும் அப்படியே ஆச்சு. கோவிலுக்குள் போனால், சொக்கப்பனையாண்டை கூட்டமானகூட்டம் ! ஏழரை கூட ஆகலை.
ரங்கவிலாஸ் மண்டபத்தின் அந்தக்கோடியாண்டை ஓரமா நமக்குக் கொஞ்சம் இடம் கிடைச்சது. ஒரு தள்ளு தள்ளினால் நான் மண்டபத்துலே இருந்து, கீழே உக்கார்ந்துருக்கும் சனத்து மேலே விழுந்துருவேன்....
கம்பித்தடுப்பு வச்சு சனத்தை அந்தாண்டை தள்ளிட்டு, கம்பித்தடுப்புக்குள்ளே காவல்துறை கூட்டம் ! இதுலே முக்கிய அங்கங்கள், அவர்கள் குடும்பத்தினர்னு அந்தப்பக்கம் கூட்டம் சேர்ந்துக்கிட்டே இருக்கு. காவல்துறையினர், சனங்கள் பக்கம் திரும்பி, 'அப்படியே உக்காருங்க. உக்கார்ந்தே பார்க்கலாமு'ன்னு சொல்றதைக்கேட்டு சிரிப்புதான்:-) சுவர் போல முன்னால் கூட்டமா நின்னு மறைச்சுக்கிட்டா, சனம் எப்படிப் பார்க்கும்?
எட்டிருபத்தியஞ்சு மணிவரை சனக்கூட்டத்தையும், அதிகாரிகள் கூட்டத்தையும் வேடிக்கை பார்த்துக்கிட்டு நிக்கறோம். திடீர்னு கார்த்திகை கோபுரம் வழியா ஆட்கள் திமுதிமுன்னு வெளியே வர, கொட்டுச்சத்தம், தீவட்டி தொடர்ந்து, நம்பெருமாள் ஜாலியா வெளியே வர்றார்! கதிர் அலங்காரமாம்!
வந்தவர் சொக்கப்பனையை ஒரு சுத்து சுத்திவந்து நேரா சக்கரத்தாழ்வார் சந்நிதியாண்டை போய் நின்னார்.
சொக்கப்பனைக்கு அந்தாண்டை நம்ம ராமானுஜர் சந்நிதிவரை இதே போலக்கூட்டம் நெருக்கியடிச்சு நிக்குது.
அப்புறம் நம்பெருமாள் தீவட்டியை ஒரு ஆளிடம் கொடுத்தனுப்ப.... அவர் வந்து சொக்கப்பனையை மூணு சுத்து சுத்திவந்து, தீவட்டியை உள்ளே நுழைச்சார். இப்போ தீவட்டி, பனையின் தலைக்குமேலே தெரிஞ்சது.
நான் வீடியோ எடுத்துக்கிட்டு இருக்கேன். அப்பப்ப சில க்ளிக்ஸும். ஒரே வீடியோவா எடுக்காதே.... சின்னச் சின்ன க்ளிப்ஸா எடுன்னு எனக்கு உத்தரவு வேற அப்பப்ப. அதுதான் வலையேத்த ஈஸியாம் (!). இப்படியே மூணு எடுத்தேன். அதைத்தான் இங்கே வரிசையாப் போட்டுருக்கேன்...
நல்லாக் காய்ஞ்ச பனையோலையில் தீ சட்னு பிடிச்சுச் சடசடன்னு எரிய ஆரம்பிச்சது. ஒரே வெக்கை.... ரெண்டு மூணு நிமிஷத்துலேயே.... ஓலைகள் எரிஞ்சு விழுந்து, உள்ளே இருக்கும் எலும்புக்கூடு தெரிஞ்சது. நடுவிலே முஹூத்தக்கால் நிற்க சுத்திவர மூங்கில் கழிகளால் ஃப்ரேம் கட்டி அதுக்கு மேலே பனையோலை மட்டைகளைப் போர்த்தி இருக்காங்க.
ரங்கனின் அருளால்....... வாழ்க்கையில் முதல்முறையாக் காணக்கிடைச்சது!
ஆட்டம் க்ளோஸ். கூட்டம் கலைய நேரமாகும்தான்..... கொஞ்சமா நஞ்சமா.....
முஹூர்த்தக்கால்தான் நின்னு நிதானமா எரியுது.
நம்ம நம்பெருமாள்தான் பயங்கர பிஸி. இங்கிருந்து கிளம்பி 9.15 மணிக்கு தாயாா் சன்னதியில் நம்பெருமாள் திருவந்திக்காப்பு கண்டருளியபின் சந்தனு மண்டபத்துக்குப்போய் 9.45 மணிக்கு ஸ்ரீ முக பட்டயம் படித்தல் நிகழ்ச்சி முடிச்சுட்டு திருக்கைத்தல சேவையுடன் சந்தனு மண்டபத்திலிருந்து புறப்பட்டு 10.15 மணிக்கு கருவறைக்குப் போவாராம். அதுவரை நாம் கூடவே போகலை. அவருக்கென்ன, காலில் இருக்கும் தங்கச்செருப்பைத்தான் கழட்டறதே இல்லையே..... நாம் அப்படியா?
ரங்கா கோபுரத்தாண்டை நாம் காலணிகளைக் காப்பகத்தில் கொடுத்தப்பவே.... ஒன்பது மணிக்கு மூடிருவோம் என்றதால் சட்னு கிளம்பி அங்கே ஓடினோம். போன வேலை ஆச்சு. முருகனிடம் , ராஜகோபுரத்தாண்டை நம்மை இறக்கி விட்ட இடத்துக்கு வரச்சொல்லி சேதி அனுப்பிட்டு, நாங்க ஒவ்வொரு கோபுரவாசலையும் கடந்து போறோம்.
முந்தியெல்லாம் கேரளாவில் மட்டும் கிடைச்ச அவுங்க ஸாரீஸ், இப்ப பேஷனாகிப்போய் எல்லா ஊர்களிலும் கிடைக்குதுபோல ! ரொம்ப அழகழகானவை கண்ணில் பட்டது. ஆனால் நமக்கு நிக்க நேரமில்லை.... முன்னால் பரபரன்னு நடந்து போய்க்கிட்டு இருக்கார் 'நம்மவர்'.
ஹயக்ரீவாப் போனதும் டின்னரை முடிச்சுக்கிட்டே அறைக்குப் போகலாமுன்னு பாலாஜிபவனில் நுழைஞ்சாச். எனக்கு இடியாப்பம். வரட்டும்னு காத்திருந்த போது........
"நீங்க துளசி கோபால்தானே...."
"ஆமாம்... நீங்க? "
ஃபேஸ்புக் ஃப்ரெண்ட் விஜயா ஸ்வாமிநாதனுடன் சந்திப்பு !
முதல்முறை சந்திக்கறோம் என்ற உணர்வு வரவே இல்லை.... ஏதோ காலங்காலங்காலமா தினமும் பார்த்துக்கும் வகையில் பேச்சுக்கச்சேரி ஆரம்பமாச்சுன்னு சொல்லவும் வேணுமோ? :-)
ஒரு கல்யாணத்துக்கு வந்துருக்காங்க. தங்கல் இங்கேதான். திரு ஸ்வாமிநாதனுடன் 'நம்மவர்' பேசிக்கிட்டு இருந்தார். நம்ம பயணத்திட்டத்தை விசாரிச்சவர், மறுநாள் நாம் முதல்முறையாகப் போகும் கோவிலில், தெரிஞ்சவர் ஒருவரை சந்திக்கச் சொல்லி செல்ஃபோன் நம்பரும் கொடுத்தாராம். நல்ல தரிசனத்துக்கு கேரண்டீ !
நாலைஞ்சு க்ளிக்ஸோடு குட் நைட் ஆச்சு :-)
தொடரும்....... :-)
PINகுறிப்பு: நேத்து சூப்பர்மார்கெட்டில் ஃப்ரீஸர் பை செக்ஷனைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாமல், ஒரு பணியாளரை உதவி கேட்டால்.... அவுங்க 'நீங்க துளசி கோபால்தானே?'ன்னு கேட்டாங்க. ஆமாம். நீங்கன்னு...... இழுத்தால், 'நான் ஸோனி. உங்க ஃபேஸ்புக் ஃப்ரெண்ட். கிருஷ்ணா உங்க வீட்டுக்கு வந்ததைப் பார்த்தேன்'றாங்க. ஃபிஜியா? எஸ். ஆஹா..... வாட் எ ஸ்மால் வொர்ல்ட் !!!

5 comments:
சொக்கப்பனை காட்சிகள் நன்று.
திருவரங்கத்தில் கூட்டத்திற்குக் கேட்கவா வேண்டும்? எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது எங்கள் ஊர் மக்களுக்கு!
தொடரட்டும் பயணமும் சந்திப்புகளும்.
அருமை சிறப்பு நன்றி
தங்கள் பகிர்வால் சொக்கப்பனைத் தரிசித்தோம் ..மிக்க நன்றீ
ஆமா மா, மேட்டழகிய சிங்கர் கோவிலில் படங்கள் வெகு அழகு..இந்த முறை நானும் பல படங்கள் எடுத்து வந்தேன்...
சொக்கப்பனை காட்சிகள்..காண கொடுப்பினை வேணும்...தங்களுக்கு கிடைத்ததில் மிக மகிழ்ச்சி மா...
ரங்கனுடன் கார்த்திகை தீபம். சிறப்பு.
Post a Comment