Friday, March 06, 2020

அடிக்கிற வெயிலை வீணாக்காமல்.... (பயணத்தொடர் 2020 பகுதி 23 )

போற வழியில்  நண்பரோட (தொழிலதிபர்)ஸோலார் ஃபார்ம் இருக்கு, அதைக் கொஞ்சம் எட்டிப் பார்த்துட்டுப் போலாமுன்னு சொன்னார் 'நம்மவர்'.  பார்த்தால் போச்சு.....  தலையை ஆட்டி வச்சேன்.

போற வழின்னு சொன்னது....  நாம் போற வழியில் இருந்து பிரியும் பாதையில் ரொம்ப தூரம் உள்ளே போக வேண்டி இருந்தது. கீரனூர் தாண்டியதும்,  வழியில் நமக்காகக் காத்திருந்த  பண்ணை சூப்ரவைஸர்  நமக்கு  முன்னால் போய் வழிகாட்ட, பின் தொடர்ந்து போன நாம், ஸ்ரீரங்கம் விட்டுக் கிளம்பிய  ஒன்னேகால்மணி நேரத்துக்குப்பின் போய்ச் சேர்ந்தோம். ( உண்மையில் நாம் இன்றைக்குப் போக வேண்டிய ஊருக்கே ஒரு  மணி நேரப் பயணம்தான் கேட்டோ... )

இங்கே வெயிலே அவ்வளவா வராத நம்ம ஊரில், நம்மூட்டுக் கூரையில் ஒரு பனிரெண்டு பேனல்ஸ் போட்டுருக்கோமே...  ...  3500 Watt  & 3.5 K Wதான்  வருது.  ஆனாலும் பகல் நேரத்துலே டிஷ்வாஷர், வாஷிங் மெஷீன் எல்லாம்  நம்ம இஷ்டத்துக்குப் போட்டுக்க முடியுதே, எல்லாம் அது போதும் போன்னு இருக்கேன்.  வருஷத்துக்கு ஆறுமாசம்  இலவச மின்சாரம் நமக்கு. அதுவும் பகலில் மட்டும்தானாக்கும்!  கீழே படம்: நம்ம வீட்டில்....

வீரக்குடியில் முப்பது ஏக்கரில்  பண்ணை. விளைச்சல் அமோகம்!  இந்தியாவில் வெயிலுக்கா பஞ்சம்?   ஏழு மெகா வாட் தயாரிப்புக்கான ஏற்பாடுகள் இருந்தாலும் இப்போதைக்கு  அஞ்சு மெகா வாட்தான் உற்பத்தியாம்!

கண்ணை ஓட்டினால் சுத்திவர ஸோலார் பேனல்ஸ், வரிசை கட்டி நிக்குது. நம்ம வீட்டு எண்ணிக்கை போல்  ரெண்டாயிரம் மடங்கு !   அக்கம்பக்கத்து ஊரில் இருந்து ஒரு நாலைஞ்சு இளைஞர்கள் வந்து வேலை செஞ்சுட்டுப் போறாங்க.  வழக்கம்போல் ஒரு  வட இந்தியர், செக்யூரிட்டியா இருக்கார்.



மேலே படத்தின் வலது கோடியில் நம்ம ஓட்டுநர் முருகன்.
கடந்த ஆண்டு வீசிய புயலில் கொஞ்சம் அதிகமாவே சேதாரமாம். நிறைய பேனல்களை எடுத்துப்போட்டு  ஒரு பக்கம் குவிச்சு வச்சுருந்தாங்க. ப்ச்.....  மின்சாரம் கிடைக்கிறது   இயற்கையின் கொடைன்னு சந்தோஷப்படும்போதே.... இத்தனை நஷ்டத்தையும் செஞ்சுட்டுப்போனது அதே இயற்கையின் கொடுமைதான்.


ஐயோ.... முப்பது ஏக்கர் நிலம் போச்சேன்னு நினைக்க வேணாம். எதுக்கும் லாயக்கில்லாத பொட்டல் பூமி.  ச்சும்மாத்தான் போட்டு வைக்கவேணும். இப்ப மின்சாரம் விளையுது !

'நம்மவர்' டெக்னிக்கலா அவுங்களிடத்தில் என்னமோ கேட்டு, என்னமோ சொல்லிக்கிட்டு இருந்தார்.  இன்ஸ்பெக்‌ஷன் ஓவர்.  சிலபல க்ளிக்ஸ் ஆச்சு. கிளம்பினோம்.

MDRசாலையில் சேருமிடத்தில் ஒரு கிராமத்துக்கோவில் கண்ணில் பட்டது.  அங்கே உக்கார்ந்துருந்தவர்தான் இடமா வலமான்னதில் வலமுன்னு சொன்னார்.  சாமி அனுப்பினார்னு சொல்லணும்....
உடையாளிப்பட்டி என்ற ஊருக்குள்  நுழையறோம்.  பயங்கரக்கூட்டம். பஞ்சாயத்து போர்டு தேர்தல் வருதே.... அதுக்காகக் கூடி இருக்காங்களாம்.  வாங்குனதும் செலவழிக்க கொஞ்ச தூரத்தில்  'அரசு நடத்தும் குடிக்கடை' இருக்கு!   இப்படிக்காக் கொடுத்து அப்படிக்கா  வாங்கிக்கலாம்....  ப்ச்....
நிறையப் பட்டிகளைத் தாண்டி மெயின் சாலையைத் தொட்டதும்,  ஏதோ கருகும் மணம்.  அங்கங்கே சாலை ஓரம் சின்னப் பந்தல் போட்ட கடைகளில் முந்திரிக்கொட்டையை வறுத்துக்கிட்டு இருக்காங்க.  ஃப்ரெஷா... முந்திரிப்பருப்பு, பார்க்கவே ஆசையா இருந்துச்சுதான்............. ஆனால்..... வாங்கிக்கலை.



குடிசைத்தொழில் !
கந்தர்வக்கோட்டை வழியா வந்து, தஞ்சை எல்லையில் இருக்கும்  தமிழ்ப் பல்கலைக் கழகம் கடந்த பத்தாவது  நிமிட்டில்  அடையார் ஆனந்தபவன் கண்ணில் பட்டது. மணி கிட்டத்தட்ட ரெண்டேகால்.  இங்கேயே லஞ்சு முடிச்சுக்கிட்டோம்.  நல்ல கூட்டம்தான்.  நம்மவரும் முருகனும் மினி மீல்ஸ், எனக்கு ஒரு சப்பாத்தி.



சங்கம் ஹொட்டேலில் செக்கின் செஞ்சப்ப, ரூம் வித் வ்யூ  வேணுமுன்னதும் (வழக்கமாக் கேக்கறதுதான் )டெம்பிள் வ்யூ தரவான்னாங்க.  மாட்டேன்னா சொல்வேன் ?
அறைக்குப் போய் ஜன்னலில் பார்த்தால் அதோ............
ஒரு ஏழு வருஷத்துக்கு முன் இதே ஹொட்டேலில் தங்கினோம்.    இதே அறைதான்னு நினைக்கிறேன். அப்பவும்   கோபுர தரிசனம்தான் !

தோட்டத்தில்  மரமல்லி மரங்கள் பூத்துக் குலுங்குது !  ஹைய்யோ.....

 அரை மணி நேர  ஓய்வுக்குப்பின்  நாலு மணிக்குக் கிளம்பி  கோவிலுக்குப் போறோம்.

அதுவரை இல்லாமல் இருந்த  மழை ஆரம்பிச்சு வலுத்துக்கிட்டே போகுது.......  அடராமா....

தொடரும்........:-)


11 comments:

said...

ஆஹா தஞ்சையா...

பெரிய கோபுரம் பார்த்தபடி தங்குமிட அறை - நல்ல விஷயம்.

பயணம் தொடரட்டும். நானும் தொடர்கிறேன்.

said...

கோபுர தரிசனம் இல்லை அம்மா. விமான தரிசனம். கருவறைக்கு மேல் உள்ள அமைப்பினை விமானம் என்பர். தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்குள்ளும் சென்று வந்திருக்கலாமே? முன்னரே தெரிந்திருந்தால் தஞ்சையில் சந்தித்திருப்பேன். பயணங்கள் தொடர்ந்து சிறக்க வாழ்த்துகள்.

said...

தஞ்சை பெரிய கோவில் தொடர்கிறோம்.

மரமல்லி மலர்கள் எனது பிறந்த வீட்டின் முன்னால் உள்ள வீட்டில் நிறைந்து நின்றது. இனிய மணம்.

said...

தஞ்சாவூர் - (நான்) படித்த / வளர்ந்த ஊர் (மேல ராஜ வீதி).

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

தொடர் வருகைக்கு நன்றி !

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா!

உண்மைதான். கருவறை மேல் உள்ளது விமானம்தான். அதென்னவோ பழக்க தோஷத்தில் கோபுரம் என்றே வந்துருது.... விமானகோபுரம்னு இனி எழுதலாம்தானே !

பல்கலைக் கழகத்தினுள் செல்ல நேரமில்லாமல் போய்விட்டது. முதலில் தஞ்சை வரும் பயணத்திட்டம் இல்லை. ஸ்ரீரங்கத்தில் அறை கிடைக்காததால் ஒருநாள் தஞ்சைன்னு ஆனதுதான்.

said...

வாங்க மாதேவி,

வீட்டுமுன்னால் மரமல்லியா !!!! ஆஹா....

said...

வாங்க விஸ்வநாத்,

உங்க ஊரா !!!! பேஷ் பேஷ் !

said...

மரமல்லியா? அது பன்னீர்ப்பூக்கள் இல்லையா?

said...

வாங்க நெல்லைத்தமிழன்.

மரமல்லி, பன்னீர்பூக்கள் இப்படி ரெண்டுவிதமாகவும் சொல்வதுண்டு !

said...

அட கீரனூர் வழியா போனீங்க லா அங்க தான் நான் lkg , ukg படிச்சேன் ...