Friday, September 13, 2019

பை பை தீதி...... (பயணத்தொடர், பகுதி 142 )

ஏர்ப்போர்ட் ஒரு 22 கிமீ தூரம்.  காலை நேரம் என்றதால்  ட்ராஃபிக் அவ்வளவா இல்லை... முக்கால் மணியில் போய்ச் சேர்ந்தாச்சு.  நாம் தொலையட்டுமுன்னு  இருந்துச்சோ என்னவோ  மழையும் கொஞ்சம் விட்டுருக்கு !

இன்றைக்குக் கிளம்பறோம். பதினொன்னரைக்கு ஃப்ளைட்.  எப்படியும் ஒரு ரெண்டு  மணி நேரத்துக்கு முன்னாலே அங்கிருக்கணுமாம். அதான்  காலை எட்டு மணிக்கு கோபிந்தை வரச் சொல்லி இருந்தோம்.
சீக்கிரமா எழுந்து  கடமைகள் முடிச்சு, பெட்டிகளை அடுக்கிட்டு, வழக்கத்துக்கு முன்னே ப்ரேக்ஃபாஸ்ட்க்குப் போனோம். இவ்ளோ சீக்கிரம் எதுவும் ரெடியா இருக்காதுன்னாலும், காஃபி & டோஸ்ட் கிடைக்காதா என்ன?
 
டைனிங் ஹால் போகும் வழியில் கீழே ரிஸெப்ஷன் ஏரியாவில் இருக்கும் புத்தரைப் பார்க்கக் கண்ணை ஓட்டினால்.... கீழே ஒரு கும்பல்.  அங்கங்கே  முண்டு முடிச்சா நிக்கறாங்க. ஒரு மூவி கேமெரா வேற நிக்குது.  எதோ பிக்ச்சர்  ஷூட்..... நடிகர்கள் யாருன்னு பார்த்தால் தெரிஞ்ச ஆட்களா (! ) யாரையும் காணோம்.
டைனிங் ஹாலில்  நமக்கானவைகள் தயாராத்தான் இருக்கு!  வடை மட்டும் இன்னும் ரெடி ஆகலையாம். போகட்டும் விடுங்க..... தினம் தினம் என்ன வடை வேண்டிக்கிடக்கு?
சாப்பிட்டு முடிச்சுத் திரும்ப அறைக்குப் போகும்போது பார்த்தால் கீழே இன்னும் வேலை முடியலை. களேபரத்தை, ஓசைப்படாமல் பார்த்துக்கிட்டு இருக்கார் புத்தர்.
எட்டு பத்துக்குச் செக்கவுட் செஞ்சுட்டு நாங்க கிளம்பிட்டோம்.  போற வழியில் எல்லாம் தீதி, கைகூப்பி நிக்கறாங்க.

ஏர்ப்போர்ட் சமீபிக்கும்போது, 'பத்திரமா போயிட்டு வாங்க'ன்னு  வழி அனுப்பறாங்க. இதுவும் நல்லாத்தான் இருக்கு!  பண்பாடு.....

கோபிந்துக்கு நன்றி சொல்லிட்டு உள்ளே போய்  செல்ஃப் செக்கின் செஞ்சுட்டுக் கொஞ்சம் வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தோம். அந்த நேரத்துலேயும் நல்ல கூட்டம்தான்.

உள்ளேயும் தீதி கட் அண்ட் ரைட்டா சேதி சொல்லிக்கிட்டு இருக்காங்க. 'பெங்கால் மீன்ஸ் பிஸினஸ்'ஸாம்!  ஓ.....
ஏழு ஆண்டு சாதனைகளையும் விட்டுடலை. சின்ன விளம்பரம்தான்....

உள் அலங்காரமா  அவுங்க கலை, கலாச்சார அடையாளமான காளியும், முகமூடிகளுமா  வச்சுருக்காங்க.
ஒரு இடத்தில் பாம்பு.... வேணுமான்னு கேட்டுவச்சேன் :-) ஸ்ஸ்ஸ்ஸ்.........  கூடவே   ஒரு தவளையுமா.....  இந்த இருவரும் நண்பர்களா இருக்க முடியாதா என்ன?  ஏன், நாங்க இல்லே ?  :-)



பொண்ணுமாப்பிளைகள் ஜோடிஜோடியா நிக்கறாங்க. எனக்கும் ஒரு ஜோடி ஆச்சு :-)


கல்கத்தா.... இனிப்புக்குப் பெயர் போனது இல்லையோ.....  அங்கேயும் மிட்டாய்கள்.....   பேக்டு ரசகுல்லா இருக்கு!  ரெண்டு மிஷ்டிதோய் வாங்கிக்கிட்டோம். இந்தக் கடையைக்கூட நம்ம தீதிதான் திறந்து வச்சுருக்காங்க.!

ஒன்னேகால் மணி நேர ஃப்ளைட் . புபனேஷ்வரில் தரை இறங்கும் சமயம் மகாநதி கண்ணில் பட்டது.  படு சுத்தமான ஏர்ப்போர்ட்டில் ஷிவன் இருக்கார்.  ஓம் நமஷிவாயா................   ஓம் நமஷிவாயா......




ஹப்பா.... என்ன ஒரு அழகு !!  பத்மஸ்ரீ சுதர்ஸன் பட்நாய்க் அவர்களின் படைப்பு!  ஏகப்பட்ட  வெளிநாடுகளில் இந்தியா சார்பாகப் போட்டியில் கலந்துக்கிட்டு விருதுகளா வாங்கிக் குவிச்சுருக்கார்!  இவரைக் கௌரவிக்கும்  பொருட்டு, இவருடைய சொந்தமாநில விமான நிலையத்தில்  இவரை ஒரு சிற்பம்  செய்யக் கேட்டுக்கிட்டாங்க சுற்றுலாத் துறையினர்.  வேறெங்கும் செதுக்கி, இங்கே தூக்கிவந்து வைக்க முடியாதில்லையா? இதைவிட ஒரு கலைஞருக்கு பெருமை  வேறேது?


பிஜு பட்நாய்க் இன்ட்டர் நேஷனல் ஏர்ப்போர்ட்டில், சுதர்ஸன் பட்நாய்க் செய்த மணல் சிற்பத்தைத் திறந்து வச்சுருக்கார், ஒடிஷாவின் முதல்வர் நவீன் பட்நாய்க்.   என்ன  இது  ஒரே 'பட்நாய்க்ஸா' இருக்கே?  ரொம்ப காமனான ஸர் நேமோ?  ராமா......
ஷிவனுக்குப் பக்கத்தில் அப்சரஸ்கள் நின்னு மேளதாளத்துடன் நமக்கு ஒரு  வரவேற்பு!    பெட்டிக்காகக் காத்திருந்தால் பூரி ஜகந்நாதர் ரதங்களுடன்! அரசின் சார்பில்  முதல்வரும்  பயணிகளைக் கும்பிட்டுக்கிட்டு இருக்கார்.  ஆஹா.... இதுக்குத்தானே வந்துருக்கோம்!

ஒருபக்கம் நம்ம பிரதமர் பைப்லைன் சமாச்சாரம்,  ஒரியா மொழியில் சொல்றார்..... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
இருக்கட்டும்.....பெட்டிகள் வந்ததும் எடுத்துக்கிட்டு ஒரு டாக்ஸி பிடிச்சு நாம் இங்கே தங்கப்போகும் ஸ்வொஸ்தி ப்ரிமியம் என்ற ஹொட்டேலுக்குப் போனோம். எட்டு கிமீக்கும் கொஞ்சம் அதிகம்.

இந்த ஹொட்டேலையும் திறந்து வச்சவர் முதல்வர் நவீன் பட்நாய்க் அவர்கள்தானாம். 3 நவம்பர் 2000 .  ஆச்சே 18 வருஷம்....அப்போ ஒரிஸ்ஸான்னுதான் இருந்துருக்கு. இப்போ ஒடிஷா....  இவரும் அப்போலிருந்தே முதல்வராத்தான் இருக்கார். இதுவே ஒரு ரெக்கார்ட் தான், இல்லை !

வழக்கம் போல் வரவேற்புப் பகுதி அட்டகாசமா இருக்கு!  ரெண்டு பக்கங்களில் ரெண்டு புள்ளையார்கள். அஞ்சாம் மாடி அறை.  ஜன்னல் திரைச்சீலையைத் திறந்தால் எதிரில் நால்கோ !  பெரிய பிரமாண்டமான காம்ப்ளெக்ஸ்!
மணி ரெண்டாகப்போகுதே.... சாப்பிடப்போகலாமேன்னு கீழே போனால் இங்கேயெ மூணு ரெஸ்ட்டாரண்டுகள் இருக்காம்.  வெள்ளைக்கார ஸ்டைலில் (நைட் க்ளப்புடன்) ஒன்னு,  சீனச் சாப்பாடுகளுக்கு ஒன்னு, இந்திய வகைகளுக்கு ஒன்னுன்னு!
(நாஞ்சொல்லலை.... இவுங்களுக்கும் வ வர்றதில்லைன்னு ....  ஹாஹா....   )
15% டிஸ்கவுண்ட் கூப்பான்  கொடுத்தாங்க. சந்தன் ரெஸ்ட்டாரண்டுக்குள் போனோம். உள் அலங்காரம் எனக்கு ரொம்பவே பிடிச்சுப் போச்சு.  ஆனால் கூட்டமே இல்லை. நாங்க மட்டும்தான்!  எல்லோரும் சீனச்சாப்பாட்டுக்குப் போயிருக்கலாம்.
பீட்ஸாவும்,  நம்மவருக்கு ஒரு லஸ்ஸியும், எனக்கொரு ஃப்ரூட் ஃபலூடாவும் சொன்னோம்.
இதுவரை இப்படி ஒரு ருசியான ஃபலூடாவை நான் சாப்பிட்டதே இல்லை.  மடிகேரி உடிபியை எல்லாம் தூக்கி சாப்பிட்டுடுச்சு இது!  ஆஹா......

தொடரும்.......... :-)

8 comments:

said...

ஆஹா... கொல்கத்தாவிலிருந்து ஒடிஷா.... நானும் சென்று வந்த மாநிலம். உங்கள் மூலம் மீண்டும் பார்க்கக் காத்திருக்கிறேன்.

said...

அருமை நன்றி

said...

புவனேஸ்வர் அடுத்து பூரிஜகநாதர் தரிசனமா....

said...

விமான நிலைய உள் அலங்காரங்கள் மற்றும் புத்தர் சிலை அனைத்தும் அழகு மா...

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ஒடிஷாவில் சில இடங்கள் மட்டும்தான்.

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி!

said...

வாங்க மாதேவி,

அதே அதே :-)

said...

வாங்க அனுப்ரேம்,

நன்றிப்பா !