Wednesday, February 14, 2018

ஒரு கேன்யனுக்குள்ளே படகு சவாரி ! (@அமெரிக்கா.... 5)

நல்ல அமைதியான  இடமாத்தான் இருக்கு  பேஜ் என்னும் ஊர். இங்கேதான் க்ளாரியன் இன் னில் நாம் தங்கி இருக்கோம்.  ப்ரேக்ஃபாஸ்ட் இங்கேயே  கொடுக்கறாங்க.  எல்லாம் டூர்  பேக்கேஜ் டீல்தான் :-)  வகைவகையா நிறைய இருந்தாலும்.... நமக்கானதைத் தேடி எடுத்தோம். எட்டேமுக்காலுக்குக் கிளம்பலாமான்னு  இன்க்ரிட் கேட்டாங்க.  நமக்குப் பிரச்சனை இல்லை :-)
கேர்ள்ஸ்தான் கொஞ்சம் டிலே பண்ணிட்டாங்க. போகட்டும்..... சாப்ட்டு வரட்டுமுன்னு   வெளியெ  கார்பார்க்கில்  கொஞ்சம்  வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருந்தோம். ஸாம் பொட்டிகளை எல்லாம்  அடுக்கிக் கட்டி வச்சார்.

இன்க்ரிட் இப்ப நமக்கு ரொம்பவே தோஸ்த் ஆகியாச். இன்னொரு மொழிபெயர்ப்பாளர் பெயர்  மேட்டீயா இல்லை..... மரீ  ?   ன்னு  சரியா நினைவில்லை....    மேட்டீன்னு தான் நம்மவர் சொல்றார்.  அப்படியே ஆகட்டும்.  அவுங்க   முழி பெயர்த்துக்கிட்டே அந்த  அறுவருடன்  இருக்காங்க.  அதுலே ஹனிமூன் ஜோடி  அவுங்க உலகத்தில் தனியாக :-)
நேத்து நம்ம இன்க்ரிட் கிட்டே  மொழிபெயர்ப்பாளர் பெயர் என்னன்னு கேட்டதுக்கு, மரான்னு  சொன்னாங்க. Mara !  மரா மரான்னு சொல்லிக்கிட்டே இருந்தால்  ராமா ராமா  ன்னு  வந்துருதே!  அட ராமா!  (நாஞ்சொல்லலை.... இன்கிரிட் நம்ம தோஸ்த் ஆகித் தொடர்பிலும் இருக்காங்கன்னு )
ஒன்பதுக்குக் கிளம்பி லேக் போவல், க்ளென் அணைக்கட்டுக்குப் போய்ச்சேர்ந்தோம். ஒரு ஏழெட்டு நிமிஷ ட்ரைவ்தான்.  மேல் பக்கம் பாத்திரம் போல வளைஞ்சுருக்கு டிஸைன்!
விஸிட்டர் சென்டரில்  அணை எப்போ, எதுக்கு, எப்படிக் கட்டுனாங்கன்ற விவரம் எல்லாம்  காட்சிக்கு வச்சுருக்காங்க.

அணை கட்ட இங்கே தோண்டுனப்ப, டைனோஸாரஸ் காலடித் தடம் இருந்ததாமே!!!
இந்த  அணைக்கட்டுத் தண்ணீர் இருக்கும் ஏரிக்கு  லேக் போவல்னு பெயர்.
இந்த ஏரியை உண்டாக்குனது மனுஷர்கள்னு சொல்லும்போது பிரமிப்பாத்தான் இருக்கு!  கடல்போல அப்படியே பரந்து விரிஞ்சு போகுது!  பத்து வருசம் ஆச்சாம் அணையைக் கட்டி முடிக்க!
அணைக்கட்டு வேலையில் பதினெட்டு பேர் உயிரிழப்பு  :-(  அவுங்க பெயர்களோடு ஒரு நினைவுச்சின்னம் வச்சுருக்காங்க.....
நம்மவர் எலக்ட்ரிகல் எஞ்சிநீயர் படிப்பு என்பதால்  இந்த ஹைட்ரோ  சமாச்சாரமெல்லாம்  ஆர்வமாப் பார்த்துட்டு,  படிக்கும் காலத்தில்  குந்தா டேம் போனதை ஞாபகப்படுத்திக்குவார்.  நான் சும்மா இருக்க முடியுமா?  மேட்டூர் பார்த்துருக்கொம்லெ :-)
(நியூஸியிலேயும்  மோனாபுரி என்ற இடத்துலே இருக்கும்  ஹைட்ரோ பவர் ஸ்டேஷனுக்கும் போயிருந்தோம் நாங்க என்பதையும் இங்கே சொல்லிக் கொண்டு......  அங்கெதான் வீடியோ கேமெரா பேட்டரியை மேல்தளத்தில் இருந்து தவறவிட்டு சரித்திரம் படைச்சார் என்பதையும்.... உடைஞ்சுருச்சே   ஹிஹி..)

அரை மணி நேரம்  எல்லாத்தையும் நிதானமாப் பார்த்து க்ளிக்ஸ் எல்லாம் ஆச்சு.  இதெல்லாம் ஒரு இன்ட்ரோதான்.  இங்கிருந்து  ஒரு  இருவது நிமிஷ ட்ரைவில்  க்ளென் கேன்யன் நேஷனல் பார்க் , லேக் போவல் ரிஸார்ட்.  அட்டகாசமான நினைவுப்பொருட்கள் கடை!

தகவல்கள் அடங்கிய கையேடு கொடுக்கறாங்க.

இங்கே ஒரு படகுப்பயணம். ஒன்னரை மணி நேரம், பளிங்குத்தண்ணீரில்  ரெண்டு பக்கமும் விவரிக்க முடியாத அழகை ரசிக்கலாம்.

கற்பாறைகள்தான்....   ஆனாலும் எவ்ளோ அழகு!  ஹைய்யோ!!! கல்லிலே        (உளி கொண்டு செதுக்காமலேயே) கலை வண்ணம் கண்டோம்.  சில இடங்களில் கொஞ்சம் கை நீட்டுனா  தொட்டுவிடும் தூரம்தான் பாறைகள். எங்கே படகு இடிச்சுருமோன்னு கொஞ்சம் பயம் கூட  வந்துச்சு!

படகுத்துறையில் இருந்து பார்க்கும்போது சாதாரண ஏரிதான். தண்ணீரைக் கிழிச்சுக்கிட்டுப் படகு போகப்போக ஒரு இடத்தில்  ரெண்டு பக்கமும்    சுவர்  எழுப்புனது   போல்  நிற்கும் இடத்துக்குள்ளே போயிடறோம்.
இந்த இடத்துக்கு ஆன்டிலோப் கேன்யன் என்ற பெயராம் .   இந்த ஏரி(!)யே கடல் மட்டத்தில் இருந்து  ஒரு மூவாயிரத்து  எழுநூத்தி நாலு அடி உசரத்தில் இருக்கு!  உள்ளுர் மக்களே  திருவிழாவுக்கு வர்றதுபோல  வருசம் முழுசும் வந்துக்கிட்டே இருக்காங்களாம்! சின்னச்சின்ன படகுகள், கனூ இப்படித்  தனியா வேற சுத்திக்கிட்டு இருக்காங்க.நம்ம படகு டபுள் டெக்கர்.  தாக சாந்திக்கு காபி, டீ, லெமனேட் எல்லாம் வச்சுருக்காங்க. இஷ்டம் போல் குடிக்கலாம்.  கீழே யாரும் இல்லை.  எல்லோரும் மாடிக்குப் போயிட்டோம்.  நல்லாப் பார்த்து ரசிக்க வேணமா?
எந்த இடத்துலே  என்ன பார்க்கிறோமுன்னு  தெரிஞ்சுக்க வசதி செஞ்சுருக்காங்க.  ஹெட்ஃபோனை எடுத்து மாட்டிக்கிட்டால் போதும் !   நிறைய மொழிகளில் பதிவு செஞ்சுருக்காங்களாம்.  எட்டுன்னு  ஞாபகம்.  இங்லீஷ், ஃப்ரெஞ்ச், ஜெர்மன், ஸ்பானிஷ், இடாலியன், ஜாப்பனீஸ்,  சைனீஸ்   & கொரியன்.....

இந்த சேவையைப் பயன்படுத்திக்க   மேலே சொன்ன அத்தனை நாட்டு மனிதர்களும் படகுலே இருக்கோம்!  நம்ம ஸாம் இருக்காரே.... அவர் ருஸியா (ரஷ்யா) நாட்டுக்காரர்.  யூ எஸ்லே செட்டில் ஆகிட்டாராம்.  அவருக்கு வெவ்வேற நாட்டு மக்களோடு (!)  முக்கியமா..... பெண்கள் (ஹிஹி) படம் எடுத்துக்க ஆசையாம்!   ஜப்பான் நாட்டுப்பெண் ஒருத்தர் நம்ம பக்கத்துலே நின்னு க்ளிக்கிட்டு இருந்தப்ப,  அவுங்ககிட்டே அனுமதி  வாங்கிக்கிட்டார். நாந்தான் அப்பப்ப  ஃபொட்டாகிராஃபர் வேலையும் ஸைடுபைஸைடா பார்த்துக்கிட்டு இருந்தேன்னும்  சொல்லிக்கவா?
அப்ப என்கூட நின்னு படம் எடுத்துக்கலையான்னு கேக்காதீங்க. அதெல்லாம் ஆச்சு முதல்நாளே :-)

அந்த ஜப்பானியர் ஒரு  லாக்கெட்டோடு செயின் போட்டுருந்தாங்க. அன்கட் அமெதிஸ்ட்!  புதுமையா இருக்கேன்னு விசாரிச்சப்ப,  இங்கே நினைவுப்பொருள் விற்கும் கடையில் படகுக்காகக் காத்திருந்தப்ப வாங்குனாங்களாம். அட!  அது நம்ம பர்த்ஸ்டோன் ஆச்சே..... விடலாமா?
வரிவரியா வளைஞ்சும் நெளிஞ்சும்  டிஸைன் போட்டுக்கிட்டு நிக்கும் கேன்யன் சுவர்களையும் அப்பப்ப க்ளிக்க மறக்கலை. 

முழுசாப் பார்த்தால் இப்படி.....  இருக்கு(மாம்!)      வலையில் சுட்ட   படம்.  நன்றிகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு!
ஒன்னரை மணி நேரப் படகுப்பயணம் முடிஞ்சு கரைக்கு வந்தப்ப மணி பதினொன்னே முக்கால்.
ஆங்.... சொல்ல மறந்துட்டேனே.... இந்த ரிஸார்ட் வாசல்லே இருந்து படகுத்துறைக்குப் போக கொஞ்சம் நடக்கணும்.  சரிவில் கீழே இறங்கிப் போகணும். என்னை மாதிரி கால்வலி கேஸ்களுக்காக சின்னதா ஒரு ஷட்டில் கீழேயும் மேலேயுமாப் போய்வருது. அதுலேதான் படகுத்துறைக்குப் போனோம். அதுலேயே திரும்பவும்  மேலே வந்தோம்.
இன்க்ரிட்   வாசலில் நின்னு நம்மை வரவேற்றாங்க.  அவுங்க நம்மோடு படகுலே வரலை.........  கைடுக்குதான் வேலை இல்லையே படகுப்பயணத்தில் :-)

அஞ்சு நிமிசத்துலே கிளம்பிடலாமுன்னதும்,  ரெஸ்ட் ரூமுக்கும்,  சொவினீர் ஷாப்புக்குமா ஓடறோம். பென்டன்ட்  வாங்கிக்க வேணாம்?   (இப்ப அதை நம்மூட்டு சீதை கழுத்துலே போட்டுக்கிட்டு இருக்காள் )
இங்கிருந்து ஒரு எழுபது மைல் தூரத்தில்  ஊடா (Utah)  மாநிலத்துலே  கனாப் (Kanab) என்ற ஊரில் நமக்கு  லஞ்ச் ப்ரேக்!  ஒரு ஒன்னேகால் மணி நேரமாச்சு அங்கே போய்ச்சேர. ஹூஸ்டன்'ஸ் ட்ரெய்ல்ஸ் எண்ட்  என்ற ரெஸ்ட்டாரண்டில் சாப்பாடு.  1945  லே ஆரம்பிச்சு நல்லபடியா   நடத்துன நிறுவனத்தை,  இப்ப  ஹூஸ்டன் குடும்பம் வாங்கி நடத்தது. இவுங்க வாங்கியே  முப்பத்தியஞ்சு  வருஷமாச்சாம்.   நல்ல தரமான உணவுன்னு இன்கிரிட் சொன்னாங்க.

கௌபாய் சமாச்சாரங்கள் தான் உள் அலங்காரங்கள்!  நமக்கு  பொட்டேடோ ஸாலடும், பீக்கன் பையுமா....  உருளைதான்  இப்பவும்.... வேற   உருவிலும் ருசியிலுமா :-)நல்ல சின்ன ஊர் இது.   மத்தவங்க சாப்பிட்டு முடிக்கும்வரை, டவுன் சென்டர் பத்து நிமிட் போல சுத்திட்டு வந்தோம் நாங்க.  இதே ஊரில்தான் இன்றைக்கு ராத் தங்கல். டவுனை விட்டு வெளிவரும் இடத்துலே இருக்கு  டேஸ் இன் (Days Inn)

 எல்லாரும் வந்ததும் ரெண்டேகால் மணிக்குப் புறப்பட்டு,  ஒன்னரை மணிப் பயணம் இப்போ. எழுபத்தி ஆறரை மைல் தூரம்.

அங்கெ என்ன விசேஷமாம்?

தொடரும்...........  :-)17 comments:

said...

படங்கள் ப்ளஸ் பதிவை ரசித்தேன்.

said...

அருமை நன்றி

said...

பிரம்மாண்டமான இடமும் படங்களும்....அழகு

said...

படங்களைப் பாத்தாலே ஊரெல்லாம் சுத்திப் பாக்கனும்னு ஆசை வருது. அவ்வளவு அருமையான எடங்களா இருக்கு.

பேக்கேஜ் டிரிப் உங்க ரெண்டு பேருக்கு மட்டுமா? இல்ல 20-30 பேர் சேந்து போவாங்களே. அந்த மாதிரியா?

said...

அணையின் பிரம்மாண்டம், கேன்யனின் இயற்கை அழகு ரசித்தேன்.

உங்க டிரிப்ல பொதுவா என்ன செலவு என்று நீங்க எழுதறதில்லை.

said...

/ நிறைய மொழிகளில் பதிவு செஞ்சுருக்காங்களாம். எட்டுன்னு ஞாபகம். இங்லீஷ், ஃப்ரெஞ்ச், ஜெர்மன், ஸ்பானிஷ், இடாலியன், ஜாப்பனீஸ், சைனீஸ் & கொரியன்...../ உலகின் மூத்த மொழியில் இல்லையா
/உங்க டிரிப்ல பொதுவா என்ன செலவு என்று நீங்க எழுதறதில்லை./ செலவு எல்லம் ஜுஜுபி அதனால்தான் எழுதுவதில்லை என்று நினைக்கிறேன்

2

said...

@ஜி.எம்.பி சார்- "உலகின் மூத்த மொழியில் இல்லையா" - நம்மவர்கள் நிறைய பயணம் போறாங்களா என்ன? (வெளிநாட்டு). பெரும்பாலும் போறதில்லைனால அதுக்கான facilityஐ நான் பார்த்ததில்லை. மேற்கத்தைய நாட்டவர்கள் வெளினாட்டுப் பயணம், சுற்றுலா என்பது வருடா வருடம் மேற்கொள்கிறார்கள்.

said...

அழகான படங்கள். இயற்கை அன்னை எத்தனை எத்தனை அழகிய படைப்பாளி...

said...

வாங்க ஸ்ரீராம்.

ரசித்தமைக்கு நன்றி !

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றி!

said...

வாங்க அனுராதா ப்ரேம்,

நன்றி. மீண்டும் வருக !

said...

வாங்க ஜிரா.

எனக்கும் இது நெடுநாள் கனவுதான். இப்ப பலிச்சது :-)

நாங்க வலையில்தான் இந்த டூர் கம்பெனியைப் பிடிச்சோம். பயணத்துக்கு வரும் நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து பஸ் ஏற்பாடு. நம்ம குழுவில் மொத்தமே எட்டுப்பேர் என்றதால் பதினைஞ்சு ஸீட்டர் வேன்.

டூர் கம்பெனி அங்கங்கே தங்குமிடங்களுக்கு ஏற்பாடு செஞ்சு அதை டூர் பேக்கேஜாக் கொடுத்துடறாங்க. அவுங்களுக்குள்ளே ஒரு ஒப்பந்தம் இருக்கணும்.

எங்க குழுவில்கூட ஒரு பெண் தனியாதான் வந்துருந்தாங்க.

நம்ம அனுபவம் வச்சுப் பார்த்தால் இது நல்ல டூர் கம்பெனிதான்.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

உண்மையில் காண வேண்டிய இடங்கள்தான் இவை!

செலவுன்ன்னு பார்த்தால் ஸ்கை இஸ் த லிமிட்ன்னும் சொல்லலாம் :-) நம்ம வசதிக்கேத்தமாதிரிதான் செலவும்.

பொதுவாப் பயணங்களில் தங்குமிடத்துக்கு ஒரு 60% செலவாகிருது. சாப்பாட்டுச் செலவு கம்மிதான் எங்களுக்கு!

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

காசுக்கேத்த பணியாரம்! ஹொட்டேல் வசதிக்கு ஏற்ற செலவு.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

இயற்கை அன்னையை.... பீட் பண்ணிட முடியுமோ? ஹிஹி....

said...என்ன அழகு படகு போன இடம்...முதல் படம் அப்புறம் ஒரு படம் நம்மூர் ஹொக்கேனக்கல் பாறை போல கொஞ்சம் இப்படித்தான் இடுக்கு இடுக்கா இருக்கும்...

ரொம்ப அழகு படங்கள் எல்லாம். இயற்கையின் ரகசியமே ரகசியம்தான்...படம் எல்லாம் செம..நல்லாருக்கு தொடர்கிறோம்...

துளசிதரன், கீதா

said...

வாங்க துளசிதரன், கீதா!

இன்னும் ஹொக்கேனக்கல் போகலையே.......தொடர்வதற்கு நன்றி !