காலை 11.35க்குத்தான் ஃப்ளைட். ரெண்டு மணி நேரம் முன்னால் அங்கே இருக்கணுமாம். அதுக்கு முன்னால் ட்ராப்பிக்கானாவிலிருந்து டாக்ஸி பிடிக்கணும். இப்படியே பின்னால் இருந்து ப்ளான் பண்ணிக்கறோம். இங்கே இருக்கும் ரெஸ்ட்டாரண்டில் போய் விஸ்தரிச்சு ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட நேரம் எல்லாம் இல்லைன்னுதான் நேத்து மஃப்பினும் பிஸ்கெட்ஸ்ம் வாங்கியாந்தோம். காஃபி நல்லதா அறையிலேயே இருக்கே!
இந்த அறையில் இருந்து எகிப்து நல்லாவே தெரியுது! பார்க்கலாம்.... அசலுக்கு நேரில் போக ஒரு சான்ஸ் கிடைக்குமான்னு......
ரொம்ப லேட் பண்ணிட்டால் டாக்ஸி கிடைக்காதுன்னு என்னை பயமுறுத்துனதால் ஒன்பதுக்கே ஏர்போர்ட் வந்துட்டோம். தெருவாசலிலேயே ப்ளாட்ஃபாரத்தில் கவுன்ட்டர்களைப் போடு வச்சுருக்கு ! செக்கின் ஆச்சு.
ரெண்டரை மணி நேரம் இருக்கேன்னதுக்கு, என் புலம்பலை நிறுத்த 'கொஞ்ச நேரம் ஆடிக்கோ'ன்னார் 'நம்மவர்' :-) அதான் எங்கே பார்த்தாலும் ஸ்லாட் மெஷீன்ஸ் இறைஞ்சு கிடக்குல்லெ!!!
சிம்மாசனத்துலே உக்கார்ந்து ஷூ பாலீஷ் போட்டுக்கலாமா?
அப்புறமா ஆகட்டுமுன்னு உள்ளே கொஞ்சம் வேடிக்கை பார்க்கப்போனோம். பெரிய ஏர்ப்போர்ட்டாத்தான் இருக்கு.... அப்ப எதுக்கு வெளி வராண்டாவுலேயே கவுன்டர்ஸ் வச்சுருக்காங்க..... காத்தாட இருக்கலாமுன்னா? :-)
நம்ம கேட்டாண்டை போனால்...... ஃப்ளைட் டிலேவாம். ஜஸ்ட் ஒரு டாலர் போதுமுன்னு கொஞ்ச நேரம் 'பொழுது போக்கினேன்' :-) நோ கெயின், நோ லாஸ். முக்கால்மணி நேரம் ஓடிப்போச்சே :-)
லாஸ் ஏஞ்சலீஸ் வந்து சேரும்போது மணி ரெண்டு. ஏர்ப்போர்ட் பக்கமே தங்கறதா முடிவு செஞ்சு டேய்ஸ் இன்னில் அறை எடுத்துருந்தோம். காலையில் ஆறு மணிக்கு நம்ம நியூயார்க் ஃப்ளைட் பிடிக்க ஏர்ப்போர்ட் போயிடணும்.
அறைக்கு வந்ததும், இன்று நம்மை சந்திக்க வரும் தோழிக்கு, வந்து சேர்ந்த விவரத்தைச் சொல்லிட்டு எதாவது வயித்துக்குக் கிடைக்குமான்னு தேடிப்போனால்.... கிடைச்சது....... முறுக்கு! உருளைக்கிழக்கு முறுக்குதான் ! இந்த வடிவத்தில் இதுவரை தின்னதில்லை உ கி யை :-) சும்மாச் சொல்லக்கூடாது..... அவனவனும் உருளைக்கிழங்கைஅசராம வெவ்வேற ரூபத்தில் செஞ்சு கொடுத்துக்கிட்டு இருக்கான்.... நானும் அடிச்சு ஆடிக்கிட்டு இருக்கேன் :-)
இவுங்களுக்குன்னே ஒரு ஸ்பெல்லிங் இருக்குப்பா!
அஞ்சரைக்கு வந்தாங்க தோழி தன் குடும்பத்துடன். நெடுநாள் தோழி... ஆனால் நேரில் இப்பதான் முதல்முறையா பார்த்துக்கறோம்:-) ஸ்கைப்புலே பார்க்கறதெல்லாம் கணக்குலே வராது, கேட்டோ !
'இன்னும் கொஞ்சம் ஊர் சுத்து'ன்னு ஒரு பரிசு கொடுத்தாங்க. கொஞ்ச நேரம் பேசிட்டு, நம்மை சாப்பிடக் கூட்டிக்கிட்டுப் போனாங்க. எல் செங்குண்டோ என்ற ஏரியாவில் ட்ரூ ஃபுட் கிச்சன். வாயிலே நுழையாத பெயரில் என்னென்னவோ ஆர்டர் செஞ்சு பயங்கர உபச்சாரம் கேட்டோ! எல்லாம் வெஜ் என்பதால் பயமில்லாமல் உள்ளே தள்ளினோம் :-)
நல்ல அருமையான காலநிலை இருக்கும் பகுதி இல்லையா இந்த கலிஃபோர்னியா.... தோட்டத்துலே அலங்காரச் செடிகளா கத்தரியும், மொளகாயுமா விளைஞ்சு நிக்குது. ' உண்மையான சாப்பாடு'ன்னு டக் னு பறிச்சுச் சமைப்பாங்க போல :-)
வெளியே தோட்டத்தில் கச்சேரி வேற நடந்துக்கிட்டு இருக்கு ! ஃபேமிலி என்டர்டெய்ன்மென்ட்!
எட்டரை மணி போல கிளம்பி எங்களை டேய்ஸ் இன்னில் விட்டுட்டுப் போனாங்க. முக்கால்மணி நேரப்பயணம் இருக்கு அவுங்க வீடு போய்ச்சேர. மறுநாள் வேலைக்குப் போகணுமே..... அதிலும் மகள் புது வேலையில் நாளைக்குத்தான் சேரப்போறாங்க ! புதுசாப் பார்க்கிறோம் என்ற உணர்வு எங்க ரெண்டு பேருக்கும்தான் இல்லைன்னு சொல்லமுடியாம மொத்தக்குடும்பமும் (ரெண்டு பக்கமும்தான் ) பல வருஷப் பழக்கம்போல் இழைஞ்சுக்கிட்டு இருக்காங்கன்னா பாருங்க..... :-)
நாங்களும் டேய்ஸ் இன்னில் மறுநாள் காலை ஆறுமணிக்கு ஏர்ப்போர்ட் ட்ராப் வேணுமுன்னு ஏற்பாடு செஞ்சுட்டுச் சீக்கிரம் தூங்கிடலாமுன்னு அறைக்குப்போய் மறுநாளைக்கு வேணுங்கறதை எடுத்து வச்சுட்டுப் பொட்டிகளைச் சரிசெஞ்சு மூடறோம்.....
இதுவரை எல்லாம் நல்லாவே, ஒரு ஒழுங்காப் போய்க்கிட்டு இருக்குன்னும் போது க்வான்டாஸ்காரன், குண்டு ஒன்னு அனுப்பினான்.... சேதி ரூபத்தில்!
ஐயோ......... தூக்கம் போச்....
தொடரும்........ :-)

8 comments:
வாழ்க நட்பு.
// க்வான்டாஸ்காரன், குண்டு ஒன்னு அனுப்பினான்.// உங்ககிட்ட நடக்குமா ? யாருன்னு தெரியாம விளையாடியிருப்பா, சின்னப்பயல்.
நன்றாகப் படித்துக்கொண்டிருக்கும்போதே அது என்ன அதிர்ச்சியான குண்டு?
வாங்க ஸ்ரீராம்,
நட்பு = இனிமை !
வாங்க விஸ்வநாத்.
க்வான்ட்டாஸ்லே போகவே கூடாதுன்னு ஒவ்வொரு முறையும் (அதுலே போய் வந்தபிறகுதான்) சபதம் எடுத்தாலும், மலிவுன்னு ஆசை காமிச்சு மடக்கிடறானேப்பா.....
வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
கால நேரம் தெரியாம குண்டு வைக்கிறது இவுங்களுக்கு புதுசே இல்லை !
அப்படி என்ன குண்டு போட்டான்.... தெரிந்து கொள்ள தோ வரேன்...
பயணம் என்றாலே சந்திப்புகள் தானே!
வாங்க வெங்கட் நாகராஜ்.
தாமதமான பதிலுக்கு.... மாப்பு... ப்ளீஸ்....
உண்மை உண்மை :-)
Post a Comment