Wednesday, February 21, 2018

இஷ்டம் போல வெட்டு....... (@அமெரிக்கா.... 8)

நம்ம ஸாமுக்குப் பசியோ ......  அம்பத்தே நிமிசத்துலே செயின்ட் ஜார்ஜ் என்ற ஊருக்கு வந்துட்டோம். கோல்டன் கோரல் என்ற ரெஸ்ட்டாரண்டுக்குள் நுழைஞ்சாச். பிரமாண்டமான ஹால்....... விதவிதமான உணவு வகைகள்.  பஃபே என்பதால் முதலில் காசு கட்டிடணும்.  எங்க ரெண்டு பேருக்கும் நாங்க கேக்காமலேயே  சீனியர் ஸிட்டிஸன் டிஸ்கவுன்ட் கிடைச்சது. (ரொம்பக் கிழமா இருக்கோமோ!)  உண்மையில் நம்ம குழுவில் (மொத்தம் 11 பேர்) நாங்கதான்  மூத்தகுடிகள் :-)
இன்க்ரிட் சொன்னாப்லெ சீப் & பெஸ்ட்தான். என்ன ஒன்னு நமக்கு வயிறு  மட்டும் ஒன்னாப் போயிருச்சு. அதுவும்  ரொம்பவே சின்னது.....ப்ச்.....
பஞ்சு மிட்டாய் உட்பட மொத்தம் 150 ஐட்டம்ஸ். இது பேதம் பார்க்காம சாப்புடறவங்களுக்கு  ஓக்கே....  நமக்கு.............?1973 லே ஆரம்பிச்ச வியாபாரம்.  இப்ப அமெரிக்காவின் நம்பர் ஒன்னு!  நாடு முழுசும் அங்கங்கே  கிளைகள். தனித்தனி ஓனர்கள்தான். Franchise ...... வேணுமுன்னா நாமும் வாங்கி நடத்தலாம். :-)
 'ஒருமணி நேரம் போதுமா'ன்னு கேட்டாங்க....  இன்க்ரிட்.  யதேஷ்டம்! நாமும், நம்ம கெமெராவுமா சாப்பிட்டு முடிச்சோம். ஸாலட் என்ற பெயரில் சோறு ....  என்னென்னவோ  கலந்துருக்கு.....  நமக்கானதில்லை....  போகட்டும்....  ஒரு எலுமிச்சை, இல்லேன்னா புளியஞ்சாதம் வைக்கப்டாதோ..... எனக்கு அதே உருளை....  இந்த முறை, முழுசா..... பேக்குடு வித் ஜாக்கெட்டு :-)
கேக், ஐஸ்க்ரீம், பழங்கள் எல்லாம் ஒரு வெட்டு வெட்டினேன் :-)
இங்கேயே காய்கறிகளும் விக்கறாங்க. கையோடு  வாங்கிப்போனா வீட்லெபோய் சமைச்சுக்கலாம்....  ஆமாம்.... . கண் நிறைஞ்சாவே  வயிறு நிறைஞ்சுடாதோ...  இவ்ளோ வகை பார்த்து,   வயிறு நிரம்ப சாப்பிட்டப்பின், இனி வீட்டுலே போயும் சமைக்கணுமாக்கும்..... க்க்க்கும்.

படகுக்கார் ஒன்னு   :-)

கண்படுமே...பிறர் கண்படுமே....   நீ  வெளியில் வரலாமா.....


ரெண்டு மணிக்கு நம்ம வண்டி கிளம்பி நேரா லாஸ்வேகஸ்  போறோம். 125 மைல்.  ஏறக்குறைய ரெண்டு மணி நேரம் ஆகலாம்.

நல்ல சாப்பாட்டுக்குப்பின் தூக்கம் வந்துட்டா?  நமக்கில்லை.....  ஸாமுக்கு!   என்னமோ பாட்டுகளும்,  படங்களுமா  டிவிடி போட்டு விட்டாச்சு. வண்டி பறக்கும் வேகத்தில் எடுத்த படங்களிலும் பிரதிபலிப்பு.....   நான்  காதை அடைச்சுக்கிட்டு, மேகம் பார்த்துக்கிட்டு வர்றேன். நம்மவர் தூங்கறார் :-)
நேத்துப் பார்த்த நாய், பந்தைத் தொலைச்சுட்டு, சமர்த்தா உக்காந்துருக்கு, செல்லம் :-)

அங்கங்கே இருக்கும் செடிகள், மரங்களையெல்லாம் கவனிச்சுக்கிட்டே,  இன்க்ரிட் கூட பேசிக்கிட்டு இருந்தேன்.  ஜோஷுவா ட்ரீன்னு  காமிச்சாங்க.  நம்மூட்டு மாப்பிள்ளை பெயராச்சே.....  என்ன ஏதுன்னு விசாரிக்க வேணாமோ?

அது எங்கூரு 'யக்கா' மாதிரிதான் இருக்கு.  அசப்பில் கேபேஜ் ட்ரீ போலவும்.....   கிளை விட்டுக்கிட்டு.....   கொஞ்சம்  நம்ம பனைமரத்து இலைகள் போலவும்    இருக்கு.

நம்ம வீட்டு வேலியோரம் கேபேஜ் மரங்கள் இருக்கு.   இலைகள் உதிரும் சமயம்... மகா சல்யம்  :-(...    லான் மோவரில் மாட்டிக்கும் நார் போல.....  இது இங்கத்து நேடிவ் ட்ரீ என்பதால் வெட்ட அனுமதி இல்லை.  

பைபிள் கதையில் ஜோஷுவா, தன் கைகளை நீட்டி வானத்தை நோக்கி கடவுளைக் கும்பிட்டாராம். இந்த மரத்தின் இலைகள் கைகள் மாதிரி இருப்பதால் ஜோஷுவான்னு பெயர் வந்துருக்கு.   இப்போதைய  க்ளோபல் வார்மிங் காரணம், இந்த மரங்கள் மெல்ல மெல்ல அழிஞ்சுக்கிட்டு வருதுன்னு பத்திரிகை சேதி.....   இது    கலிஃபோர்னியாவின் அடையாளம்.....     ப்ச்....
Joshua Tree National Park ன்னு ஒரு எட்டு லக்ஷம் ஏக்கரில் ஒரு  இடம் இருக்கு. அது இப்ப நாம் போய் வந்த இடங்களுக்கு  எதிர்த்திசையில் இருக்கு.  நாடு முழுக்க    எங்கெ பார்த்தாலும் இப்படி நேஷனல் பார்க்குகளா  இருந்தால்..... எதுக்குன்னுதான்  நாம் போறது, சொல்லுங்க...

சின்னச் சின்ன ஊர்களைக் கடந்து ஹைவேயில்   போய்க்கிட்டு இருக்கோம்.  குன்றுகளும், மலைகளும், வறண்ட நிலங்களுமாத்தான் இருக்கு கண் போற இடங்களில் எல்லாம்.  நம்ம மாராவுக்கு ஒரு ஸ்டாப்பிங் வேணுமாம்.  பெட்ரோல் பங்க் & ட்ராவல் ஷாப்ஸ்  இருக்கும் இடம் வருதான்னு பார்த்து  ஹைவேயில் இருந்து கிளை பிரிஞ்ச வழியில் போகச் சொன்னாங்க ஸாமை.   நாங்கெல்லாம் வண்டியிலேயே  காத்திருந்தோம்.


ட்ராவல் கைடா பெண்கள் இருப்பது ரொம்ப நல்லது பயணிகளுக்கு! முக்கியமாக பெண்களின் கஷ்டத்தைப் புரிஞ்சுக்குவாங்க.  நமக்கு நல்ல அதிர்ஷ்டம்தான் இன்க்ரிட் நம்ம டூர் டைரக்டரா அமைஞ்சது !


அப்பதான் சாமி எனக்கு சேதி அனுப்பறார் !!!   டியர்....  ஓ  டியர்!  க்ளிக்கறதுக்குள்ளே  சேதி மறைய ஆரம்பிச்சது. ஆனாலும் விடலை.....  சாமிக்கு இங்லீஷ்தான் தெரியுமுன்னு  இப்பவாவது நம்பணும். ஆமா....  :-)
அமேஸான்  கட்டடம் அதோ....  ஆன்லைன் பிஸினஸில் கொழிக்கிறாங்க இல்லே!

லாஸ்வேகஸ் நகருக்குள் நுழையறோம். எகிப்து நாட்டு (ஹொட்டேல் லக்ஸர்) கார்பார்க்கில்  நுழையும்போது மணி நாலடிக்க நாலு நிமிட்.  ஐடினரி கணக்கில் நாம்  சாயங்காலம் ஏழு மணிக்குப்பிறகு எட்டுமணிக்குள் வந்து சேரணும்.  ஆனால் சீக்கிரம் வந்தது மகிழ்ச்சிதான்!

இந்த மூணு மணி நேரத்தை ஸியானில் செலவழிச்சு  இருக்கலாம்தான். பகல் சாப்பாடு ஒன்னு நடுவில் வந்துட்டதால்.....  சின்ன அட்ஜஸ்ட்மென்ட் ஆகிருச்சு.

எல்லோர்கிட்டேயும்  பை பை சொல்லி,  க்ளிக்ஸ் முடிச்சு, பொட்டிகளை உருட்டிக்கிட்டு ட்ராப்பிக்கானா போய்ச் சேர்ந்தோம்.  செக்கின் செஞ்சு, அறைக்குப்போனதும் (வேற அறை.... 22 ஆம் மாடியில்) கீழே  க்ளோக் ரூம் ஸ்டோரெஜில் போட்டு வச்சுருந்த பொட்டிகளைக் கொண்டு வந்துட்டு,  நல்லதா ஒரு காஃபி குடிச்சுட்டு, ஃப்ரெஷப் பண்ணிக்கிட்டுக் கிளம்பியாச்சு....   எனக்கு வெனிஸ் போகணும்.
ச்சும்மாச் சொல்லக்கூடாது..... லக்ஸர் ஹொட்டேலில் எகிப்து ஸீன்கள் அருமை!


'கொஞ்சம் இருட்டுனாத்தான்  லைட்டிங்ஸ் எல்லாம் அழகா இருக்கும்'னு நம்மவர் சொல்றார். 'ரொம்பச் சரி. அதுவரை கீழே ஸ்லாட் மெஷீனாண்டை இருக்கவா'ன்னதுக்கு,  இப்பக்கூட   லைட்ஸ் இல்லாமயே  அழகாத்தான் இருக்கும்,   வா,      மெள்ள நடந்து போகலாமுன்னுட்டார் :-)

ஏற்கெனவே ரெண்டு நாள் சுத்திக்கிட்டு இருந்ததால்.... இடம் பழக்கப்பட்டுப்போச்சு. எந்த ஹொட்டேல் கட்டடத்துக்குள்  நுழைஞ்சால் எங்கே வெளியேறலாமுன்னு....  ஹிஹி..... முக்கியமா நாளைக்கு இங்கிருந்து கிளம்பிருவோம் என்றதால்...   கூடியவரை இப்பவே இடங்களைக் கண்டு ரசிக்கத்தான் வேணும்!
வெனிஸில் பெரிய கெனாலும், கோண்டோலா ரைடும் கூட இருக்கு. ஒரே ஒரு வித்தியாசம் அசலுக்கும் நகலுக்கும் உண்டுன்னா...   அது இங்கே      சுத்தமான தண்ணீர் உள்ள  கால்வாய்களும்,  அழகான சின்ன படகுகளும்தான்.
அசலில் நம்ம அனுபவம் அவ்ளோ ரசிக்கத்தக்கதாக இல்லை. அழுக்குத்தண்ணியும், துர்நாற்றமுமா இருந்துச்சு. படகுகளும் பெரியவை. இருவது முப்பது பேரை ஒரேடியா ஏத்திக்கிட்டு போனாங்க. சரியான இடமில்லாம, நாங்க மூணுபேரும் (மகளும் கூட வந்துருந்தாள்) ஆளுக்கொரு மூலையில் உக்கார வேண்டியதாப் போச்சு.  அப்புறம் என்னத்தை ரசிக்க?  அது எங்க திருமணநாள் வெள்ளிவிழாப் பயணம்....  ப்ச்....  

சரி...  சின்னதா  தனிப்படகு எடுக்கலாமுன்னா ரெண்டாயிரம் டாலர் கேட்டாங்க. ப்ரிட்ஜ் ஆஃப் ஸையில் விடும் பெருமூச்சை  இங்கேயும் விட்டேன் :-)  ரொம்ப அநியாயம்....  அதுவும் அந்த  நாத்தம் பிடிச்சத் தண்ணிக்கு.... 
ம்யூஸிகல் ஃபௌண்டெய்ன் அழகு. சிம்ஃபொனி இசைக்கு ஏற்ப  நீரூற்றுகள் பீய்ச்சி அடிச்சு ஆட்டம் போடுதுகள்.  சின்ன வீடியோ க்ளிப்ஸ் எடுத்தாலும்,  வலை ஏத்த முடியலை. ஊரு உலகமெல்லாம் கேக்கத் தெருவோரத்தில் முழங்குற பாட்டுக்கு,  வலையில் மட்டும் காப்பிரைட் இருக்குன்னு  மிரட்டுனா நாம் என்ன செய்யறது.... சொல்லுங்க....
அங்கங்கே ஷோவில் ஆடும் உடையுடன், கெரகத்தைத் தலையில் வச்சுக்கிட்டுப்  பெண்கள்  நின்னுக்கிட்டு இருக்காங்க. அவுங்களோடு நின்னு படம் எடுத்துக்கணுமுன்னா பத்து டாலர். அதுக்கும் ஒரு  கூட்டம் இருக்கே!
Walk of fame

ச்சும்மா அங்கே இங்கேன்னு சுத்தி வேடிக்கை பார்த்துட்டு,  நம்மவர்  'வேற  ஹொட்டேல் கஸினோவில்  ஆடிக்கச் சொன்னாரே'ன்னு,   அவருக்காக  ஒரு  அரைமணி மட்டும் ஆடிட்டு.... ராச்சாப்பாட்டுக்கு  ஒரு  இடத்தில் பீட்ஸா வாங்கி முழுங்கிட்டு, இன்னொரு  பேக்கரியில்  மறுநாள் காலை  ப்ரேக்ஃபாஸ்டுக்குத் தேவையானதைக்  கொஞ்சம்  வாங்கிக்கிட்டு, ட்ராப்பிக்கானா திரும்பினோம். இங்கேயும் அரை மணிக்கு அனுமதி  கிடைச்சது  :-)   ரெண்டு டாலர் செலவு. அவ்ளோதான்!லாஸ்வேகஸுக்கு நாம் வந்த நோக்கம்( ?)   நல்லபடி நிறைவேறுன மகிழ்ச்சியோடு தூங்கினோம்!

கெஸினோவுக்குக்   காசுசேர்க்க  உண்டியல் ஒன்னு இருந்தா தேவலை, இல்லை!  நம்மவர் ஒரு பத்து போட்டுப் போணி பண்ணட்டும்....   :-)
தொடரும்.....  :-)


11 comments:

said...

எத்தனை இடங்கள்? எத்தனை படங்கள்! சுவாரஸ்யம்.

said...

Super

said...

வாங்க ஸ்ரீராம்..

நன்றீஸ் !

said...

வாங்க சுப்ரமணியன் நாராயணன்,

வருகைக்கு நன்றி!

said...

அடேங்கப்பா... பஃபே பெருவிருந்தாத் தெரியுதே. இத்தன வகைகளைச் சாப்பிடுறதுதான் எப்படின்னு தெரியல. நீங்க சொன்ன மாதிரி ஆசைப்படும் மனசோட அளவுக்கு வயிறு பெருசா இல்லையே.

கேக் வகைகள் நெறைய இருக்கு போல. ஆனா எல்லாமே ஜங்கு. ஒடம்புக்குக்கெடுதின்னு சொல்றாங்க. பார்வையால சாப்டுக்க வேண்டியதுதான்.

காசினோவெல்லாம் ஆம்ஸ்டெர்டாம்ல வெளையாண்டதோட சரி. லாஸ்வேகாசெல்லாம் போக வாய்ப்புக் கெடைக்குமான்னு தெரியல. எனக்கு ரௌலட் விளையாட்டு ரொம்பப் பிடிக்கும்.

எகிப்துல எப்படி ஒங்களுக்கு ஏமாத்தம் வந்ததோ, அது மாதிரி வெனிஸ்ல எனக்கு ஏமாத்தம். ஊரே தண்ணிக்குள்ள இருக்கு. தண்ணியோ நாத்தம். அதுலதான் போட்டு போகுது. எதுவுமே நாளாக நாளாக இப்படித்தான் ஆகும் போலன்னு நெனச்சுக்கிட்டேன்.

said...

வாங்க ஜிரா.

எகிப்துக்கு இதுவரை நேரில் நாங்க போகலையே.....

நானும் வெனிஸ் கோண்டோலாவைத்தான் சொல்லி இருக்கேன் :-) பயங்கர நாத்தம். மூக்கைப் பிடிச்சுக்கிட்டுத்தான் படகுலே போகணும் :-(

said...

வாவ் படங்கள்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

வருகைக்கு நன்றி.

said...

செம்ம டூர் மாமி

said...

வாங்க ஜோதிட ரத்ன பார்த்தசாரதி,

ரசிப்புக்கு நன்றி!

மீண்டும் வருக !

said...

செமையா இருக்கு துளசிக்கா...ஒவ்வொன்னா வாசிச்சுட்டு வரேன்....நினைவுப் பெட்டகத்துல சேர்த்து வைச்சுட்டேன்...ஹொட்டேல் அந்த எகிப்து சிலைகள் வடிவமைப்பு செமையா இருக்கு...வெனிஸ் சூப்பர்!!! (நகல்)

கீதா