நாங்க சின்னமலை அடிவாரம் போய்ச் சேர்ந்தப்பப் படிக்கட்டுகளின் ஆரம்பத்தில் ஒரு தம்பதிகள் சூடம் ஏத்திக் கும்பிட்டுக்கிட்டு இருந்தாங்க. தரையில் ஒரு கல்யாணப்பத்திரிகை! மகனுக்குக் கல்யாணம். நம்ம ஆஞ்சிக்கு முதல்பத்திரிகை வச்சு கல்யாணத்துக்குக் கூப்பிட வந்துருக்காங்க.
என்ன ஏதுன்னு விசாரிச்சவள், 'கல்யாணம் அமோஹமா நடக்கும். கவலைப்படாமல் போய் கல்யாண வேலைகளைப் பாருங்க'ன்னு (ஆஞ்சி சார்பில்) வாழ்த்தினேன்:-)
இங்கேயும் படிகளுக்கு மேலே கூரை போட்டுருக்காங்க. யதுகிரியம்மாள் ட்ரஸ்ட்டின் உபயம். நல்லா இருக்கணும்!
அப்பதான் டோலியைக் கையில் புடிச்சுக்கிட்டு நாலு பேர் கம்பும் கழியுமா வந்து சேர்ந்தாங்க. கூட்டமே இல்லை..... மனுஷ்யரையும், மாருதிகளையும் சேர்த்துத்தான்..... மணி இப்பதான் காலை ஒன்பதரை. வர்ற சனம் அங்கே பெரியமலைக்குப் போயிட்டு அப்புறமா நிதானமாத்தான் இங்கே வரும்னு சொன்னார் ஒருத்தர்.
நம்மவரும் சீனிவாசனும் முன்னால் போய்க்கிட்டு இருக்காங்க. ஏற்கெனவே 'டோலி அனுபவப்பட்ட நான்' சட்னு அதுலே ஏறி நடுவில் ஆடாம அசையாம உக்காந்தேன். இதோன்னு கிளம்பிட்டோம்.
மொத்தம் 405 படிகள் இங்கே! இங்கேயும் படிகளில் மஞ்சள் குங்குமம், ரெண்டு பக்கச் சுவர்களிலும் தெலுகு எழுத்துகள்னு இருக்கு. அப்பப்ப ஒரு க்ளிக், நான். காமணியில் மேலே போய்ச் சேர்ந்தாச்சு. இவுங்களும் காலை டிஃபன் சாப்பிடக் காசு வேணுமுன்னு சொன்னாங்க. (இதெல்லாம்தான் இவுங்களுக்குன்னு கிடைக்கும் டிப்ஸ். ) கொடுத்துட்டு நாங்க கோவிலுக்குள்ளே போறோம்.
நம்மாட்கள் தொல்லை அதிகம் என்பதால் எல்லா இடத்திலும் கம்பிக்கதவும் ஸ்க்ரீனுமா இருக்கு. இதுலே பக்தர்கள் வரிசையில் போக கம்பித்தடுப்புகள் வேற. எந்த வழியாப் போகணுமுன்னு தெரியலை. சுத்துமுத்தும் பார்க்கிறேன்..... நம்ம சேஷாத்ரியும், ரங்கநாதனும் மண்டபத்து மேல் படிகளில் நிக்கறாங்க. நம்மை இந்தப்பக்கமா வரச்சொல்லிக் கை ஆட்டுனதும் நாங்க போய் சேர்ந்துக்கிட்டோம்.
பெரிய மலையில் இருந்து இங்கே வந்தப்ப அவுங்களை வழியில் வேறெங்கும் பார்க்கலை. இப்பப் படியேறி வந்தப்பவும் இல்லை. எப்படி அதுக்குள்ளே அங்கே இருந்து இங்கே வந்துருப்பாங்க..... ஙே....
இன்னொரு வாசலைக் கடந்து போன அவுங்க பின்னாலேயே போன நாங்க, போய் நின்னது நம்ம ஆஞ்சியின் சந்நிதி. அங்கிருந்த பட்டர்ஸ்வாமிகளிடம், 'மாமா, இவா நூத்தியெட்டு ஸேவிச்சு முடிச்சுட்டா. இதுதான் கடைசி'னு ஒரு சின்ன இன்ட்ரோ கொடுத்ததும், சின்னதா அங்கிருந்த கம்பித்தடுப்பைத் திறந்து நம்மை ஆஞ்சி பக்கத்துலே கொண்டு போய் நிறுத்தினார் பட்டர் !
இங்கே ஆஞ்சிக்கு நாலு கைகள். பெருமாள் மாதிரியே மேற்கைகளில் சங்கும் சக்கரமும்! மற்ற ரெண்டு கைகளில் ஜபமாலை ஒன்னிலும், எண்ணிக்கை மிஸ் ஆகாமல் இருக்க கட்டை விரலை மடிச்சு மற்ற விரல்களைத் தொட்டு எண்ணும் பாவனையிலும்! கண்ணை மூடி அமர்ந்திருக்கும் கோலம்! ராம ராம ராம ராம ......
இவருடைய முகத்துக்கு நேரெதிரா கோவில் சுவரில் ஜன்னல் ! அதுலே லேசாக் குனிஞ்சு பார்த்தால் நம்ம யோக நரசிம்ஹரின் (பெரியமலை) கோவில்! இதே போல அங்கேயும் பெரிய திருவடிக்குப் பின்னால் இருக்கும் ஜன்னல் வழியாப் பார்த்தால் ஆஞ்சி தெரிவாராம். ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கற மாதிரி கட்டி இருக்காங்க.
ஆஞ்சி இங்கே எப்படி வந்தார்? நரசிம்மாவதாரம் முடிஞ்சு வாமனர், பரசுராமர், அவதாரங்களும் ஆனபிறகுதானே ராமாவதாரம். அதுலேயும் பிற்பகுதியில்தானே ஆஞ்சி எண்ட்ரி ஆவறது, இல்லையோ?
இலங்கையில் ராவணனோடு நடந்த யுத்தம் முடிஞ்சு ராமர் அண்ட் கோ திரும்பி வந்துக்கிட்டு இருந்த சமயம், இந்த மலைக்கு விஜயம் செய்யறாங்க. அப்போ இங்கே தவம் செஞ்சுக்கிட்டு இருந்த ரிஷி முனிவர்களுக்கு கும்போதரன், காலகேயன் என்ற பெயருடைய அரக்கர்களால் தொல்லை. ரிஷிகளுக்கு உதவி செய்யும்படி ஆஞ்சியிடம் சொல்றார் ராமர்.
'இப்படி என் கையில் ஒரு ஆயுதமும் கொடுக்காம ராக்ஷஸர்களுடன் சண்டை போடச் சொன்னால் எப்படி'ன்னு நம்ம ஆஞ்சி முழிச்சதும், 'பெரிய மலையில் யோகநரசிம்ஹர் ச்சும்மாத்தான் இருக்கார். அவராண்டை இருக்கும் சங்கு சக்கரத்தை (கடன்) வாங்கிக்கோ' ன்றார்! (போய் நாஞ்சொன்னேன்னு சொல்லு......!)
ஆஞ்சி போய், ஆயுதங்களை வாங்கியாந்து அரக்கர்களை ஒழிச்சுக் கட்டுனதும், 'பலே பலே.... சொன்ன வேலையை அமர்க்களமாச் செஞ்சு முடிச்சுட்டியே! இனி இங்கே இப்படியே இருந்து தவம் செய்யும் ரிஷிமுனிவர்களைக் காப்பாத்து! ' ட்டு அவுங்க எல்லோரும் கிளம்பிப்போனதா ஒரு கதை இருக்கு!
இந்தக் கலிகாலத்துலே ரிஷி முனிவர்கள் தவம் செய்யறாங்களா என்ன?
ஙேன்னு முழிச்ச ஆஞ்சி, இங்கே வர்ற பக்தர்களுக்கு ஆபத்தில்லாமக் காப்பாத்தறதும், வேண்டுதலோடு வர்றவங்க, வேண்டிக்கறதை நிறைவேத்தறதுமா இருப்பதோடு, பில்லி சூனியம், பேய் பிசாசுகளால் கஷ்டம், மனக்கோளாறு எல்லாம் கூட நிவர்த்தி செஞ்சுக்கிட்டு இருக்கார்னு ஐதீகம்.
இங்கே ராமலக்ஷ்மணர்சீதை சந்நிதியும் நம்ம ரெங்கநாதருக்கு ஒரு சந்நிதியும் இருக்கு. எல்லாம் சின்னச்சின்ன உருவங்கள்தான். நமக்கு எல்லா சந்நிதிகளையும் தரிசனம் பண்ணி வைக்கப் பட்டர்களுக்குச் சொல்லி, நம்ம கூடவே இருந்தாங்க நம்ம சேஷாத்ரியும், ரங்கநாதனும்.
தரிசனம் எல்லாம் ஆனதும், மறக்காம கீழே கோவிலுக்குப் போகச் சொல்லி இன்னொருக்காவும் நினைவு படுத்தினாங்க, நமக்காகவே பெருமாள் அனுப்பிய இருவர்.
பெரியமலைக்கு 1305 படிகள். எண்களைக் கூட்டுனா 9 வருது. சின்ன மலைக்கு 405 படிகள். இதுலேயும் எண்களைக் கூட்டுனா 9 வருது! அட! ஆமாம்.... இதைக்கூட நம்ம காஞ்சி இருவர்தான் சொன்னாங்க.!
108 திவ்யதேசங்கள்... இதைக்கூட்டுனாலும் அதே 9 தான் ! மொத்தத்தில் ஒன்பது என்பது மிகவும் உன்னதமான எண்! என்னுடைய ராசி நம்பரும் இதே 9தான் ஹிஹி...
இப்போ பிரஸாதப் பகுதி (விற்கும்) வந்துருந்தோம். நம்மவரும் சீனிவாஸனும் ததியன்னம், மிளகுவடை வாங்கிக்கிட்டாங்க. எனக்கு ஒரு லட்டு. அதை இவுங்களோடு பகிர்ந்துக்கிட்டேன்.
வெளியே பிரகாரத்தின் அந்தாண்டை புஷ்கரணி. ஹனுமந்தீர்த்தம். இங்கே வந்துருந்த ராமனும் சீதையும் இக்குளத்தில் நீராடுனதால் இதுக்கு ராமதீர்த்தம் என்று இன்னொரு பெயரும் உண்டு.
கடிகாசலத்தின் கோவில்கதையை, தேவஸ்தானம் சுவரில் எழுதி வச்சுருக்காங்க.
திருக்குளம் பார்க்க அட்டகாசமா இருக்கு! அழகு ! பெரியமலையை விட இது ரொம்பவே அழகா இருக்கோன்னு தோணல். (அங்கே சுத்திப் பார்க்காம வந்துட்டு.... அதைவிட இது மேலுன்னா எப்படி? .... ப்ச்.... சும்மாக்கிட மனஸே!)
சொன்னா நம்பறது கஷ்டம்..... டோலி கிளம்புன ஆறாவது நிமிட் அடிவாரம் வந்தாச்சு!
சுமந்தவர்களுடன், சுமப்பவரும் சேர்ந்து நின்னதும் சில க்ளிக்ஸ். நால்வருக்கும் அன்பளிப்பு ஆச்சு.
கீழே கடையில் மூலவர் படங்களை வாங்கினார் சீனிவாசன். உடன்பிறப்புகள் வாங்கியாறச் சொன்னாங்களாம். படத்தை வாங்கிப் பார்த்துட்டுக் கொடுத்தேன். ஒன்னு வாங்கி இருக்கலாமோன்னு இப்போ தோணுது :-)
பன்னீர் ஸோடான்னு போர்டு பார்த்துட்டு ஒன்னு வாங்கினேன். இதுவரை நான் குடிச்சதே இல்லை.... அப்படி ஒன்னும் விசேஷமாத் தெரியலை.... மரநாக்கோ ?
இன்னும்கூட என்னால் நம்பவே முடியலை.... வெறும் ரெண்டரை மணி நேரத்துலே ரெண்டு மலையும் ஏறி இறங்கி தரிசனம் ஆச்சுன்றது! பயந்துக்கிட்டு எவ்ளோ நாள் தள்ளிப்போட்டுருந்துருக்கோம்.... பயம்தான் மனுசனின் முதல் எதிரி...
விஞ்ச் வரட்டும்.... இன்னொருக்கா வந்து இங்கே ஒரு நாள் தங்கி ஆற அமர தரிசனம் செய்யலாமேன்னு தோணுச்சா..... இங்கே இடம் இருக்குன்னு வாலால் காமிக்குது ஒரு செல்லம்! வால்வழிகாட்டி :-)
போனவழியாவே ஊருக்குள் திரும்பி இருவர் சொன்ன கோவிலுக்குப் போறோம் இப்போ.
வாங்க திருமஞ்சனம் ஆரம்பிக்குமுன் போய்ச்சேரலாம்....
தொடரும்.......:-)

15 comments:
சுகதரிசனம்.
ஆஞ்சனேயர் மலையில் குரங்குகள் குளத்தில் ஆட்டம் போட்டதைப் பார்த்தீங்களோ..
சோளிங்கபுரம் கோயிலுக்குச் செல்லவேண்டும் என்ற என்னுடைய நெடுநாள் ஆசை உங்கள் பதிவின் மூலமாக இன்று நிறைவேறியது. நன்றி.
அழகம்மா.. அழகு.. அத்தனையும் அழகு!..
அஞ்சா நெஞ்சன் ஆஞ்சியின் அற்புத தரிசனம்.. அருமை..
ஆங்காங்கே ஒக்காந்திண்டு ஆட்களை சட்டை பண்ணாம இருக்காளே அவாளுக்கெல்லாம் ஏதாச்சும் கொடுத்தேளோ!..
கையில இருக்கிறதைப் பிடுங்கற மாதிரி தெரியலை.. அதான் கேட்டேன்!..
>>> அங்கிருந்த பட்டர் ஸ்வாமிகளிடம், 'மாமா, இவா நூத்தியெட்டு ஸேவிச்சு முடிச்சுட்டா. இதுதான் கடைசி'னு ஒரு சின்ன இன்ட்ரோ கொடுத்ததும்,..<<<
இப்பூவுலகில் நூற்று ஆறு தானே..
ஏதேனும் உள் விவரம் உள்ளதோ!..
அறியும் ஆவலுடன்..
ஆஞ்சனேயர் தரிசனமும் ஆகியது. விரைவில் இரண்டு கோவில்களுக்கும் செல்லவேண்டும் (அவன் அருளிருந்தால்).
சோளிங்கர் கோவிலில் பிரசாதம் ஃபேமஸ் என்று சொல்வார்கள். நீங்கள் அதிகாலையிலேயே சென்று வந்துவிட்டதால் அங்கு கடைகள் இல்லை போலிருக்கு. ஆஞ்சனேயர் கோவில் பிரசாதங்களைப் பார்த்தேன் (எனக்கு ஒரு சந்தேகம். ஏன் இந்த வடைகளில் மிளகைக் கண்ணில்கூட காட்டுவதில்லை. சொல்வது மிளகு வடை, ஆனால் மிளகே இருக்காது. இதேபோல்தான் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலிலும்).
எல்லாக் கோவில்களையும் (108) தரிசனம் செய்துவிட்டீர்கள். பாராட்டுக்கள்.
வாங்க ஸ்ரீராம்.
உண்மை! எதிர்பாராத வகையில் சுக தரிசனமேதான்!!!
வாங்க வல்லி.
குளக்கரையில் உக்கார்ந்துருந்தான்கள். ஆட்டம் பார்க்கலையேப்பா....
வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
பதிவில் எழுதியது சரியான்னு பார்க்கவாவது நீங்க ஒருமுறை நேரில் போகவேணும்!
வாங்க துரை செல்வராஜூ.
பசங்களுக்கு அப்படிக் கொடுக்கக்கூடாதுன்னுதான் வனத்துறை மக்கள் சொல்றாங்க. ஆனாலும் எதாவது இருந்தால் கொடுக்கத்தானே தோணுது! அர்ச்சனைப் பையில் இருந்த பழங்களைப் பெரிய மலையில் இருந்த செல்லங்களுக்குக் கொடுத்துட்டேன்.
ஆஞ்சியைப் பார்க்க வரும்போது என் மனசு மட்டும் என்னிடம்.
அந்த நூத்தியெட்டில் நூத்தியாறு பூவுலகில் என்பது சரி. ஆனால் நூத்தியெட்டு ஸேவிக்கணுமுன்னு முடிவு செஞ்சு வீட்டில் இருந்து வெளியே ஒரு அடி எடுத்து வைக்கும்போதே விண்ணுலகில் இருக்கும் கடைசி ரெண்டு நம்ம கணக்கில் வரவு வச்சுடுவார் பெருமாள்.
அறுவடை முடிஞ்சு அளக்கும்போது லாபம்னு ஆரம்பிக்கறாப்போல! நாம் பூவுலகில் ஸேவிக்கும் முதல் திவ்யதேசம் மூணுன்னு ஆரம்பிக்கும். இது சொந்தத் தியரி :-)
வாங்க நெல்லைத் தமிழன்.
பயந்துக்கிட்டே ஒத்திப்போட்ட கோவில் இது. தரிசனம் இவ்வளவு சுலபமா அமைஞ்சதை இன்னும் கூட என்னால் நம்ப முடியலை!
இன்னொரு பதிவும் உண்டு .... அப்புறம் முடிவு செய்யுங்க ரெண்டு கோவிலா இல்லை மூணு கோவிலான்னு :-)
மைசூர் போண்டாவில் மைசூர் இருக்கா? அதேதான் மிளகு வடையிலும்..... :-)
>>> நூத்தியெட்டில் நூத்தியாறு பூவுலகில் என்பது சரி. ஆனால் நூத்தியெட்டு ஸேவிக்கணுமுன்னு முடிவு செஞ்சு வீட்டில் இருந்து வெளியே ஒரு அடி எடுத்து வைக்கும் போதே விண்ணுலகில் இருக்கும் கடைசி ரெண்டு நம்ம கணக்கில் வரவு வச்சுடுவார் பெருமாள்...<<<
புதிய செய்தி இது...
தங்களுடைய மேலான விளக்கத்தைக் கண்டு
மனம் பரவசமாகின்றது.. கண்கள் கசிகின்றன..
நம்ம கணக்கில் வரவு வச்சுடுவார் பெருமாள்!..
என்னே தன்னடியார் மீது பகவானுக்குள்ள வாத்ஸல்யம்!...
நூற்றெட்டு திவ்ய தேசங்களையும் தரிசித்த பெரியோர்கள் அனைவரையும்
நானும் மனமார ஸேவித்துக் கொள்கின்றேன்...
நாராயண.. நாராயண!..
அருமை நன்றி வணக்கம்.
வாங்க விஸ்வநாத்.
நன்றி , வணக்கம்.
வாங்க துரை செல்வராஜூ!
அவன் கருணைக்கடல்!
மீண்டும் ஒரு முறை பின்னூட்டியதற்கு நன்றி.
Post a Comment