நமக்கு இன்றைக்கு தங்கல் இங்கே காஞ்சிபுரத்தில் என்பதால் நேராப்போனது ஜிஆர்டி ரீஜன்ஸிக்குத்தான். ஏற்கெனவே சிலமுறை இங்கே தங்கி இருப்பதால் தெரிஞ்ச இடம், தேவலை! ஜன்னலைத் திறந்தால் எனக்குப் பிடிச்ச சமாச்சாரம் இருக்குன்றதும் ஒரு காரணம் :-) என்ன ஒன்னு..... மெயின் ரோடுலே இருந்து ஹொட்டேலுக்குப் போக சந்து மாதிரி ஒரு வழி. ஐ மீன் ட்ரைவ் வே! கொஞ்சம் இடுங்கலா இருக்கு. எதிரே வண்டி வந்தால் கஷ்டம். பார்க்கிங் உள்ளே நல்லா இருக்குன்னு சீனிவாசன் சொல்றார்.
செக்கின் செஞ்சதும் அறைக்குப்போய் ஜன்னலைத் திறந்தேன். மொட்டை மாடி காலியா இருக்கு. நட்ட நடுப்பகல். வெயில் அதிகம். அதான் காணோமுன்னு .... நியாயம்தான்.... குழந்தை குட்டிகளோடு கடும் வெயிலில் உலாத்த முடியாது...
இந்த ஜிஆர்டிக்கு அடுத்த பில்டிங் நம்ம சரவணபவன் தான். ஆனாலும் குறுக்கு வழி இல்லை. சுத்திக்கிட்டுப் போகணும். ஜன்னல் வழி பார்த்த மொட்டை மாடி கூட சரவணபவனின் அடுக்களைக்கு மேலே இருப்பதுதான். கறிகாய் நறுக்கும் இடம்:-)
சின்ன ஓய்வுக்குப்பிறகு சாப்பிடப் போனோம். சரவணபவனுக்குத்தான்.... தீபாவளிப் பலகார விற்பனை படு ஜோர்.
அடுக்கி வச்சுருக்கும் தீனி வகைகளைப் பார்த்ததும்...... இப்பெல்லாம் பண்டிகை கொண்டாடுவது எவ்வளவு ஈஸியாப் போச்சுன்னு தோணுச்சு. ஒன் னும் கிடைக்காத ஊருலே இருக்கறவங்களுக்குத்தான் இதோட அருமை தெரியும்!
ரெஸ்ட்டாரண்டிலும் நல்ல கூட்டம். நம்மவருக்கு ஒரு மினி மீல், சீனிவாசனுக்குத் தாலி, எனக்கு தயிர்வடை. தயிர் புளிப்பான்னு கேட்டதுக்கு இல்லவே இல்லைன்னு சாதிச்சார் பரிமாறுனவர். கொஞ்சம் பால் கொண்டுவரச் சொல்லிக் கலந்த பிறகு ஓரளவு புளிப்பு குறைஞ்சது. காரம், புளிப்பெல்லாம் ஆவறதில்லை இப்பெல்லாம்...
ரெண்டு மணி வெயிலில் எங்கேன்னு கோவிலுக்குப் போறது சொல்லுங்க? கோவில்கள் எல்லாம் மூடி இருக்குமே.... ஆனாலும் தெய்வக்குத்தம் வந்துடக்கூடாதேன்னு ஒரு இடத்துக்குப் போகத்தான் வேண்டி இருந்தது.
விநாயகா ஸில்க்ஸ். நமக்கு ஆகி வந்த கடை. ஆனால்..... புடவை ஸ்டைல்கள் எல்லாம் நிமிட்டுக்கு நிமிட் மாறிப்போன காலம் பாருங்க..... முந்தி இருந்த மாதிரி கடையே இல்லை....
எல்லாம் மெயில் ஆர்டராம். யூஸ் அண்ட் த்ரோ வகை. ஒரு விழாவுக்குன்னு புடவை வாங்கி அன்னிக்குக் கட்டறதோட சரின்னு ஒரு மனோபாவம் வந்துருக்கு மக்களிடம். அதனால் விலை மலிவாத்தான் இருக்கு.
அந்தக் காலத்துலே கல்யாணத்துக்குப் பட்டுப்பொடவைகள் வாங்கினா அது காலத்துக்கும் உழைக்கும், படு கனமாவும் இருக்கும். ரெண்டு மூணு, மிஞ்சிப் போனா நாலைஞ்சு புடவைகள்தான் இருக்கும். அதையே மாத்தி மாத்திக் கட்டிக்கிறதுதான். வீட்டுலேயே அதை(யும்) துவைச்சுக் கட்டிக்கறதுதான் பெரும்பாலும்.
அதுக்கப்புறம் இந்த ட்ரெண்ட் எப்ப, எப்படி மாறுச்சுன்னே தெரியலை.... வீட்டு அலமாரி நிறைச்சுப் புடவைகள், அதுவும் பட்டுவகைகள்... போதாக்குறைக்கு பொன்னம்மான்னு ஒரு புடவையை இன்னொரு நாள் (அது எப்போ...? ஒரு வருசம் கழிச்சு.....?) கட்டலாமுன்னு பார்த்தா.... ப்ளவுஸ் சின்னதா (!) போயிருக்கும். அவ்ளோதான்.... இன்னொன்னு தைச்சு ரெடியாகும்போது.... இந்த ஃபேஷனே மாறிப்போச்சுன்னு.... திரும்ப அலமாரிக்கு ரிட்டர்ன்தான்.
அட்லீஸ்ட் இந்தியாலெயாவது கோவில், குளம், கல்யாணம் அது இதுன்னு எதுக்காவது கட்ட முடியும். இங்கே நியூஸியிலே? சுத்தம்... அதுக்காக...புடவை ஆசையை விட முடியுதா சொல்லுங்க?
பார்டரில் யானை டிஸைன் வர்றதாப் பார்த்தால் ரெண்டு ஆப்ட்டது.
நம்ம பச்சை :-)
அப்புறம் டிஷ்யூ ஸாரி(!)வகைன்னு ஒரு மினுங்கலோடு ஒரு வகை. நாத்தனாருக்கும், ஓர்ப்படிக்கும் ரெண்டு வாங்கின கையோடு, ஒரே குடும்ப அடையாளத்துக்கு அதுலேயே எனக்கும் ஒன்னுன்னு ஆச்சு. எல்லாம் மலிவு வகைதான். பயப்படாதீங்கன்னு கோபாலுக்கு மனசாந்தி கொடுத்தேன். இருவதுன்னு சொல்லி அப்புறம் உங்களுக்காகன்னு இருபத்தியஞ்சு சதம் டிஸ்கவுண்டும் கிடைச்சது. முக்கால் விலை :-)
அதுக்குள்ளே மணியும் நாலாகி இருந்தது. அறைக்குப்போய் பொதிகளைப் போட்டுட்டு, சார்ஜரில் கெமெரா பேட்டரிகளையும் போட்டுட்டு, வரதனை தரிசிக்கப்போனோம்.
பலமுறை போன கோவில் என்பதால் பெருமாளைக் கண்ணால் பார்க்கணும் என்பதுதான். அப்படியே அவரிடம் மறுநாளைக்காக ஒரு விண்ணப்பமும் போட்டு வச்சேன். ரொம்ப முக்கியமான நாளாக இருக்கப்போகுதே.....
வரதன் !!!
அங்கிருந்து கிளம்பி நம்ம பாண்டவ தூதன் தரிசனம். வழக்கம்போல் பிரமிப்பு! ஹைய்யோ.... எப்படி இருக்கான் பாருங்களேன்..... கண்ணையும் மனசையும் அப்படியே நிறைச்சுடறானே....
பாண்டவதூதன் இங்கே :-)
இங்கேயும் ...........
அண்ணனிடமும் அண்ணியிடமும் செல்லில் பேசுனப்ப, அண்ணி ஒரு நல்ல சேதி சொன்னாங்க. அண்ணனும் பத்திரமாப் போயிட்டு வாங்கன்னார். என்னாலே சமாளிக்க முடிஞ்சதான்னு தெரிஞ்சால்.... அவரும் போய் வருவாராம்!!
காலையில் சீக்கிரம் கிளம்ப வேணும். கீழே ப்ரேக்ஃபாஸ்ட் ரெடியாகி இருக்காது அப்போ. இப்பவே சொல்லி வச்சு, காலையில் பார்ஸல் வாங்கிக்கலாமா? வட இந்தியாவில் இப்படியெல்லாம் பார்ஸல் தர்றாங்களேன்னதுக்கு..... 'இது நம்ம ஊர். எதாவது போற வழியிலே கிடைக்கும் பார்த்துக்கலாம்னுட்டார் நம்மவர்.
சரி. நல்லாத்தூங்கி ஃப்ரெஷா எழுந்துருங்க. காலையில் ஆறுமணிக்கு முன்னால் ரெடியாகி ரோடைப் புடிச்சுறணும், ஆமா!
தொடரும்..............:-)

மறுநாளைக்காக மனசையும் உடலையும் தயார் செஞ்சுக்கணுமுன்னு வேறெங்கும் போகலை. அறைக்கு வந்து ஓய்வுதான்.
அண்ணனிடமும் அண்ணியிடமும் செல்லில் பேசுனப்ப, அண்ணி ஒரு நல்ல சேதி சொன்னாங்க. அண்ணனும் பத்திரமாப் போயிட்டு வாங்கன்னார். என்னாலே சமாளிக்க முடிஞ்சதான்னு தெரிஞ்சால்.... அவரும் போய் வருவாராம்!!
காலையில் சீக்கிரம் கிளம்ப வேணும். கீழே ப்ரேக்ஃபாஸ்ட் ரெடியாகி இருக்காது அப்போ. இப்பவே சொல்லி வச்சு, காலையில் பார்ஸல் வாங்கிக்கலாமா? வட இந்தியாவில் இப்படியெல்லாம் பார்ஸல் தர்றாங்களேன்னதுக்கு..... 'இது நம்ம ஊர். எதாவது போற வழியிலே கிடைக்கும் பார்த்துக்கலாம்னுட்டார் நம்மவர்.
சரி. நல்லாத்தூங்கி ஃப்ரெஷா எழுந்துருங்க. காலையில் ஆறுமணிக்கு முன்னால் ரெடியாகி ரோடைப் புடிச்சுறணும், ஆமா!
தொடரும்..............:-)
15 comments:
நாங்களும் தயாராக இருக்கிறோம், உங்களுடன் வர.
பாண்டவ தூதன் பிரமாதம்.
காத்திருக்கிறோம், கூட வர.
நன்றி
சரவணபவன் உணவைப்பற்றிச் சொல்லலையே (தயிர் புளிப்பு என்பதைத் தவிர). தாய்லாந்தில் காலை 4:30 மணிக்கே பிரேக்ஃபாஸ்ட் கட்டிக் கொடுத்தாங்க. துபாயிலும் 6:30 பிரேக்பாஸ்ட் நேரத்துக்கு முன்னால் ஒண்ணும் கிடைக்காது.
ஜிஆர்டி விலை அதிகமில்லையா?
தொடர்கிறேன்.
பல்லவன் லாட்ஜ்ன்னு ஒண்ணு இருக்கு. மேலே நெல்லைத் தமிழன், தானே?.. அதனால் அவர் ஊர் உதாரணத்தையே சொல்கிறேன். அந்தக் கால நெல்லை லாட்ஜ் மாதிரி காஞ்சிக்கு பல்லவன் லாட்ஜ்.
அடுத்த தடவை தங்கிப் பாருங்க.
நம்ம ஊராச்சேன்னு வந்து பார்த்தா, ஒண்ணும் சொகப்படலே.
கடமையை ஆத்தியாச்சா?! அந்த சாண்டல் கலர் சேலை அருமை
நிறங்களில் உங்களுக்கு பச்சை பிடிக்குமா
ஜீவி சார்.. நன்றி. காஞ்சீபுரத்தில் 2 நாள் தங்கி அங்கு உள்ள கோவில்கள் எல்லாம் தரிசிக்கணும்னு ஒரு திட்டம் இருக்கு. ஒரு நாளில் எல்லாக் கோவிலுக்கும் சென்றது அவ்வளவு மன நிறைவு இல்லை.
யானை பார்டர் போட்ட புடவைகள் அழகு.
தொடர்கிறேன்.
வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
இன்றைக்கு இன்னும் கொஞ்ச நேரத்தில் பெரிய பயணம் ஒன்னு இருக்கு :-) மனநிறைவு கேரண்டீ !!
வாங்க விஸ்வநாத்.
ரெடி ஸ்டடி கோ..... இன்னும் காமணியில் :-)
வாங்க நெல்லைத் தமிழன்.
சரவணபவனில் ருசி அநேகமா ஒரே தரத்தில்தான் இருக்கு. வயித்துக்குக் கேடில்லை என்பதுதான் முக்கியம். அதுவும் பயணத்தில் இருக்கும்போது....
ஜிஆர்டி கொஞ்சம் வாடகை கூடுதல் என்றாலும் நம்பிக்கையோடு அறை எடுக்கலாம். நாம் சென்னையில் தங்கும் லோட்டஸும் ஜிஆர்டி நிறுவனத்தோடதுதான். பழகிப்போச்சு.
வாங்க ஜீவி.
பல்லவன் லாட்ஜ்? அடுத்த முறை பார்க்கலாம் என்று பார்க்கிறேன்.
என்ன சொகப்படலை? புடவைகளா? :-)
வாங்க ராஜி.
லைட் கலர்ஸ் எனக்குப் பொருத்தப்படறது இல்லைப்பா..... அதான் யானை இருந்தும் ஸாண்டல் கலரை வாங்கிக்கலை....
வாங்க ஜிஎம்பி ஐயா.
பச்சை ஃபேவரிட் கலர். மெரூனும் பிடிக்கும்.
பச்சை பச்சைன்னு போரடிக்குது, வேணாமுன்னு நெருங்கிய தோழி சொன்னாங்களேன்னு இப்போ பச்சை வாங்கும்போது கூடவே வேற ஒரு நிறமும் வாங்க வேண்டியதாப் போச்சு :-)
வாங்க வெங்கட் நாகராஜ்.
ரசனைக்கு நன்றி.
ரோஷ்ணியம்மா நல்ல உயரம் என்பதால் யானை பார்டர் சேலை அவுங்களுக்குக் கம்பீரமா இருக்கும்!
Post a Comment