அண்ணன்பெருமாள் கோவிலருகில் நம்ம குமாரை இறக்கி விட்ட இடத்தில் இருந்து ஒரு 10.2 கிமீ தூரப் பயணம், 16 நிமிசநேரத்தில். குறுக்கே போன சீர்காழி - பூம்புகார் சாலையைக் கடந்து கொஞ்சதூரத்தில் பூம்புகாருக்கான அலங்கார நுழைவு வாசல் கண்ணில் பட்டதும், வலப்பக்கம் போகணும்.
இந்த இடத்தைத் தலச்சங்காடுன்னு சொல்றாங்க இப்போ! புராணகாலத்தில் இது தலைச்சங்காடு. பூம்புகாரில் இருந்து கொண்டுவரும் அழகான தலைசிறந்த சங்குகளை விற்பனை செய்யும் இடமாம். புரசமரங்கள் வளர்ந்து காடு போல் இருந்ததால் தலைச்சங்காடுன்னு பெயர் வந்ததாம்.
அழகான திருக்குளம் கண்ணில் பட்டது. சந்திர புஷ்கரணி! கடந்தால் நாண்மதியப் பெருமாள் கோவில். வாசல் கேட் தாண்டி உள்ளே போய் வலப்பக்கம் இருக்கும் நுழைவு வாசலில் போகணும். சுற்றுச்சுவர் இருக்கும் வளாகத்தின் நடுவிலே மண்டபம் போல ரெண்டுபக்கமும் படிகளுடன் சின்னதா ஒரு கோவில். முன்னால் பெரிய திருவடி. பலிபீடமும், கொடிமரமும் இல்லையாக்கும்.
இந்தக் கோவில் பட்டர் ஸ்வாமி வரதராஜன் பட்டாச்சார்யார் அவர்களை நம்ம குமார் செல்ஃபோனில் கூப்பிட்டு நம்ம வரவைச் சொல்ல முயற்சி செய்தார்தான். ஆனால் ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் :-( அதனால் பட்டாச்சார்யார் நம்பரை நமக்குக் கொடுத்து கொஞ்ச நேரம் கழிச்சுக் கூப்பிட்டுப் பாருங்கன்னு சொல்லி இருந்தார். நாமும் கோவில் வாசலுக்குப் பக்கத்தில் வந்ததும் அந்த செல் நம்பருக்குக் கூப்பிட்டாலும் கிடைக்கலை ....
கோவில் திறந்திருக்கும் நேரம் காலை 6 மணி முதல் 11 வரை, மாலை 5 மணி முதல் 8 வரைதான் என்பதால் காலை பூஜைகள் முடிச்சுட்டுப் பட்டர் ஸ்வாமிகள் போயிருந்தார்.
ஆனால்.... கோவிலில் வேலைகள் நடப்பதால் திறந்துதான் இருந்தது. மூடி இருந்த கம்பிக் கதவுகளுக்குள் மூலவர் நாண்மதியப்பெருமாள் தரிசனம் கொடுத்தார், தாயார் தலைச்சங்க நாச்சியாருடன்.
உற்சவருக்கு வெண்சுடர் பெருமாள் என்றும், தாயாருக்கு செங்கமலவல்லி என்றும் திருநாமங்கள்.
கண்ணார் கண்ணபுரம் கடிகை கடிகமழும்
தண்ணார் தாமரைசூழ் தலைச்சங்க மேல்திசையுள்
விண்ணோர் நாண்மதியை விரிகின்ற வெஞ்சுடரை
கண்ணாரக் கண்டுகொண்டு களிக்கின்றதிங் கென்றுகொலோ.
திருமங்கை ஆழ்வார் பாசுரம் பாடி மங்களாசாஸனம் செஞ்சுருக்கார்.
ரொம்ப அழகான ஆண்டாளும், அற்புதமான ஒரு சங்கும் இங்கே இருப்பதாகக் கேள்வி. பட்டர்பிரான் இல்லாததால் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கலை :-(
நாண்மதியப்பெருமாள்... நாண் .... மதியம் என்ற பெயர் சொல்லவே அழகா இருக்குல்லே! நம்ம ஆண்டாள் கூட கதிர்மதியம் போல் முகத்தான்னு சொல்லி இருக்காளே!
சந்திரனைப்போல் குளிர்ந்த முகம் உடையவன். இங்கே சந்திரனுக்குத் தரிசனம் தந்து அவனுக்கு சாபவிமோசனம் கொடுத்ததாக ஒரு புராணக்கதை உண்டு. என்ன சாபமுன்னு உங்களுக்குத் தெரியும்தானே? தேய்ந்து மறைந்து பின் வளர்ந்து தேய்வது. சாபம் பற்றித் தெரியாதவர்கள் இங்கே க்ளிக்கலாம் :-)
ஓ.... அதுதான் இங்கத்து தீர்த்தம்கூட சந்திரப்புஷ்கரணியாக இருக்கோ!!!!
சந்நிதிக்கு வெளியிலே ஒரு ஓரமா தாயாரும் நரசிம்மருமா உக்கார்ந்துருந்தாங்க.
பெரிய மண்டபம். நடுவிலே கருவறை! அந்தத் திறந்தவெளி மண்டபத்தைக் கம்பிச் சட்டங்களால் மூடி வச்சுருக்காங்க.
அஞ்சாறுபேர் கோவிலில் இருந்தாங்க. பரண் கட்டி அதன் மேல் உக்கார்ந்துக்கிட்டு ஒருத்தர் சிமெண்டு சிற்பங்களை வடிவமைச்சுக்கிட்டு இருந்தார்.
ஏற்கெனவே ஸ்ரீ வேணுகோபாலன், ராமன், வராஹமூர்த்தி, மச்சம், கூர்ம அவதாரங்கள்.......... ஓ தசாவதாரங்களை செய்யறார்னு புரிஞ்சது.
இப்போ நரசிம்மம்...... மூக்கு பார்த்தால் வராஹம் போலவே இருக்கு, எனக்கு. வாயில் இருக்கும் பல்லெல்லாம் பார்த்தால் சிங்கம்தான். ஆனால் மூக்கு துவாரம் ஏன் இப்படி? சிங்க முகத்துக்கு மீசையா, செப்புக் கம்பிகள் வச்சாறது.....
மெள்ளப் பேச்சுக் கொடுத்தோம்.
பெயர் ராஜா. வெளிநாடுகளில் கோவில் வேலைகள் செஞ்ச அனுபவம் இருக்காம். பினாங்கு தண்ணீர்மலை முருகன் கோவில், சிங்கை ஜுராங் முருகன் கோவில் இப்படி ......
என் கவலை எனக்கு.... சிங்கம், கேட் ஃபேமிலி. அதோட நாசித்துவாரம் இப்படியா இருக்கு? நம்ம ரஜ்ஜு மூக்கு.......... ப்ச்.... போகட்டும். ஒருவேளை வேலைகள் முடிஞ்சு பெயின்ட் செஞ்சுட்டால் வேறமாதிரி இருக்கும் போல!
இந்தமாதிரி சிலைகள் செய்ய சிமென்ட் கலவைகளைக் கவனத்துடன் தயாரிக்கணுமாம். சிமெண்டுடன் இன்னும் சில பொருட்கள் சேர்த்து ஆறுமணி நேரம் ஊறவைக்கணும். அப்பதான் விரிசல் விடாமல் இருக்கும் என்றார். பழைய காலத்துலே சுதைச்சிற்பங்கள் செய்வாங்களே... அதெல்லாம் இப்போ இல்லையாம்.
அவருடைய செல் நம்பரை வாங்கிக்கிட்டோம். எப்பவாவது இங்கே நம்மூரில் (நியூஸி) சவுத் இண்டியன் கோவில் கட்டினால் பயன்படுமேன்னுதான். ஆனாலும்...... சிங்க மூக்கு...... திருப்தியாகத்தான் இல்லை எனக்கு.
அதோ உமக்காகவே வெளியில் வந்து உக்கார்ந்து இருக்கும் நரசிம்மம் மூக்கைப் பாரும், ஓய்....
போன செப்டம்பர்தான் குடமுழுக்கு ஆகி இருக்கு. எண்ணி ஒன்னரை வருசம். அதுக்குள்ளே இப்படி சுவரில் எண்ணெய்க் கைகளைத் தேய்ச்சு அசிங்கப்படுத்தினவங்களை என்ன செய்யலாம் சொல்லுங்கோ........
ரெண்டுபக்கமும் ஜன்னல் இருப்பதால் சக்ரத்தாழ்வார் & நரசிம்மர் சந்நிதிதான் போல!
பிரகாரம் னு சொன்னால் வெளிப்புறம் இருப்பதுதான். சுத்திவரப் போனோம். படு சுத்தம்! பார்க்கவே அருமை. நல்ல விசாலமா வளாகத்தின் ஓரத்தில் சுத்திவரத் தென்னைகளோடு ..... ஹைய்யோ!!! தாயாருக்கு ஒரு தனிச் சந்நிதி இருக்கு. மூடி இருந்ததுன்னு தனியாச் சொல்லவேணாம்தானே? வெளியில் இருந்து ஒரு கும்பிடு.
திருத்தலைச்சங்கம் நாண்மதியப்பெருமாள் கோவில் என்று நீட்டிமுழக்காமல், தலச்சங்காடுன்னு கேட்டால் ஊர் மக்களுக்குச்சட்னு புரிஞ்சுருது. இங்கிருந்து பூம்புகார் ரொம்பவே பக்கம். 10 கிமீ தூரத்துக்கும் குறைவு. தெரிஞ்சுருந்தால் நாம் பூம்புகார் வந்த காலத்துலேயே (2009) இங்கே தரிசனம் செஞ்சுருக்கலாம் இல்லே! ப்ச்.... ஆனால் ஒன்னு அடுத்த தெருவிலேயே நாம் இருந்தாலும் கூட 'அவன்' மனசு வைக்கலைன்னா தரிசனம் இல்லை என்பதும் உண்மை!
வாசலில் ஒரு பக்கம் நெல் உலர்த்திக்கிட்டு இருந்தாங்க. கோயிலுக்கான பங்கு நெல்தான். மகிழ்ச்சி. சாமியைப் பட்டினி போடவேணாம்....
அச்சச்சோ..... ஒரு இளநீர் வீணாப்போச்சே..............
ஆச்சு... சீர்காழிப் பக்கம் இருந்த திவ்யதேசக் கோவில்களின் தரிசனங்களை முடிச்சாச்சு. மணியும் ஒன்னரையைத் தாண்டி இருக்கு. கிளம்பி அடுத்த ஊருக்குப் போகணும். மயிலாடுதுறை இங்கிருந்து 19.1 கிமீ தூரம். அங்கேதான் இன்றைக்குத் தங்கலும் கூட.
'பகல் சாப்பாட்டு நேரம் ஆச்சே'ன்னதுக்கு 'மாயவரத்துலே போய் சாப்ட்டுக்கலாம்' என்றார் நம்ம சீனிவாசன். கிளம்பிப் போய்க்கிட்டே தங்குமிடம் தேடணும். செல்ஃபோன் இருப்பது வசதியாத்தான் இருக்கு.
ஏற்கெனவெ பார்த்து வச்சுருந்த மில்லியன் டே ஹொட்டேலுக்கு ஃபோன் செஞ்சு கேட்டதுக்கு ரூம்ஸ் ஒன்னுமே காலி இல்லைன்னு சொல்லிட்டாங்க. முஹூர்த்தநாள் என்பதால் கஷ்டம்தான். நமக்கும் இப்படி ஒரே நாளில் பதினாலு கோவில்களைத் தரிசிக்க முடியும் என்பதுகூடத் தெரியாம இருந்ததால் ஹொட்டேல் புக்கிங் பண்ணிக்கலை.
அடுத்த பெஸ்ட் ஹொட்டேல் எதுன்னு அவுங்களிடமே கேட்டதுக்கு ஹொட்டேல் பாம்ஸ்னு சொல்லி, அங்கேயும் இடம் இருப்பது கஷ்டம்தான்னும் சொல்லிட்டாங்க.
தங்கணுமுன்னு முடிவு செஞ்சதை மாத்திக்கணும்போல.... எதுக்கும் பாம்ஸ்ஸில் கேட்டுக்கலாமுன்னு ஃபோன் செஞ்சால் ஒரு ராத்திரி என்பதால் அறை தர்றோம். ஆனால் மறுநாள் காலை 10 மணிக்குக் காலி செஞ்சுறணும். பத்தரைக்கு கல்யாணபார்ட்டி புக்கிங் இருக்குன்னாங்க. கிடைச்சதை விடவேணாமேன்னு ஓக்கே சொல்லிட்டோம். இன்னும் ஒரு இருவது நிமிசத்துலே போயிடலாம்னு சொன்னார் நம்ம சீனிவாசன்.
தொடரும்.........:-)
PINகுறிப்பு: திருநாங்கூர் பகுதி கோவில்களின் பட்டர்ஸ்வாமிகளின் பெயர்களும் செல் நம்பர்களும் இருக்கும் பட்டியலின் படம் இத்துடன் போட்டு இருக்கேன். யாருக்காவது பயன்படுமே!

16 comments:
// அதோ உமக்காகவே வெளியில் வந்து உக்கார்ந்து இருக்கும் நரசிம்மம் மூக்கைப் பாரும், ஓய்.... //
ஹிஹிஹி, ராஜா ஒங்க blogஅ படிக்கமாட்டாருன்னு தைரியமா டீச்சர் ?
நாண்மதியப்பெருமாள்.. தாயார் தலைச்சங்க நாச்சியாருடன்.
உற்சவர் வெண்சுடர் பெருமாள் .. தாயார் செங்கமலவல்லி... அழகிய பெயருடன் அருமையான கோவில்...
அடடா....நரசிம்மருக்கு வராக மூக்கா...கொடுமை
பட்டர்ஸ்வாமிகளின் பட்டியலுக்கு நன்றி.... நானும் பத்திரமா save செஞ்சுட்டேன்...என்னிக்காவது உபயோகப்படும் இல்லையா...
டீச்சர்.. அவர் கிட்டயே நேரா சொல்லியிருப்பீங்களே.. ஒருவேளை எதுக்கு அவரை நோகடிப்பானேன்னு சொல்லலயா? ஒரே நாள்ல, மத்ஸ்யம், கூர்மம், வராகம்னு முகம்லாம் ரெடி பண்ணி, 'நாரசிம்மன் (எழுத்துப்பிழை இல்லை) வரும்போது அவரே கன்ஃப்யூஸ் ஆகி, மூக்கை வித்யாசமாக வடிவமைச்சுட்டாரா?
கண்ட கண்ட இடத்தில் தன் பெயரையும், பெண்கள் பெயரையும் எழுதுபவர்களைக் கண்டால், பளார்னு அடிக்கலாமான்னு கோபம் வரும். கோவில் என்ற மரியாதை இல்லாட்டா, இனிமேல் பிரசாதம்னு, வட நாட்டில் கொடுக்கிற மாதிரி, இனிப்பு மிட்டாய்கள்தான் கொடுக்கணும். வக்கணையா புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம்னு கொடுத்தால், அங்க அங்க சுவத்துல தேய்ச்சுவிட்டுடறாங்க. திருப்பதி பிராகாரத்திலும் (பிரசாதத்துக்குப் பின்பு வரும்) நடந்தா வழுக்குவது போலே எப்போதும் இருக்கும்.
கோவில் பட்டர்களின் தொலை பேசி எண்கள் நான் சேவ் செய்ய வில்லை எனக்கு உபயோகப் படுமா தெரியலை. ஏன் என்றால் அடுத்து அங்கெல்லாம் போகும் எண்ணம் இல்லை.
விரிவான தகவல்கள்..... தொடர்ந்து வருகிறேன்.
தலைச்சங்காடு நாண்மதியன் அழகான பெயர்கள்.
டீச்சர்.. நரசிம்மரா இருந்தா என்ன வராகரா இருந்தா என்ன.. ரெண்டும் ஒரே காலத்து அவதாரம் தானே. இரண்டிலும் இருப்பது ஒரே ஆள்தானே. அதைத்தான் எளிமையாச் சொல்றார் போல அவர். நீங்க யோசிக்காம நியூசிலாந்துக்குக் கூப்பிட்டு வேலை கொடுங்க.
சின்ன வயசுல ஊர்ல கீழ கெடக்கும் தேங்காப் பிஞ்சுகளை வெட்டி உள்ள குட்டித் தேங்காய் இருக்கான்னு பாத்த நினைவு வருது :)
வழக்கம்போல உங்களுடன் இப்பதிவு மூலமாக பெருமாளை தரிசித்தோம். இக்கோயிலுக்கு இதுவரை நான் சென்றதில்லை. விரைவில் செல்வேன். பகிர்வுக்கு நன்றி.
நாண்மதியப் பெருமாளை நானும் தரிசித்துக் கொண்டேன்...தொடர்கிறேன் டீச்சர்..
வாங்க விஸ்வநாத்.
ஏன் அப்படி மூக்கைத் தவறாக வச்சுக்கிட்டு இருக்கார்னு இன்னும் விளங்கலையே !!!!
வாங்க அனுராதா ப்ரேம்.
ஆஹா..... கட்டாயம் ஒரு நாள் உதவணுமுன்னு பெருமாளை வேண்டிக்கறேன்ப்பா!
வாங்க நெல்லைத் தமிழன்.
அன்றே தண்டிக்கும் தெய்வம்தான் நம்ம சனத்துக்குச் சரிப்படும்! ஒருவேளை அப்படி ஆனால்.... கோவில் பக்கம் யாரும் தலைவச்சுப் படுக்கக்கூட மாட்டாங்க !
வீட்டை நல்லா வச்சுக்கணும் என்ற உணர்வு கூட பலருக்கு இல்லை. இதுலே கோவிலை யாரு நல்லா வச்சுப்பாங்க?
பாவம்.... ஸ்வாமி...........
ராஜா புது அவதாரம் சிருஷ்டிக்கறாரோ என்னவோ?
வாங்க ஜிஎம்பி ஐயா.
அங்கெல்லாம் போகும் எண்ணம் இல்லை என்றாலும் சில சமயம் எதிர்பாராமல் போக வேண்டியும் அமைஞ்சுரும்! எல்லாம் அவன் செயல்!
வாங்க வெங்கட் நாகராஜ்.
தொடர்வருகைக்கு நன்றி.
வாங்க ஜிரா.
புதுமையைப் புகுத்தறார் போல! நல்லா வரட்டும். சென்னையில் கேளம்பாக்கம் பூரணப்ரம்மம் கோவிலில் பெருமாள் சிலையில் பத்து அவதாரங்களும் பரிபூரணமா அமைஞ்சு இருக்கு!
உங்க வாய் முஹூர்த்தம் பலிக்கட்டும். நியூஸியில் நம்ம ஊருக்குக்கோவில் வரணும் பெருமாளே!
வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
விரைவில் தரிசனம் ஆகட்டும் என வேண்டுகின்றேன்!
வாங்க ரோஷ்ணியம்மா.
தொடர்ந்து வருவது 'மகிழ்ச்சி'!
Post a Comment