Monday, November 23, 2015

ஊரான் வீட்டு நெய்யே......

நம்ம காசு எப்படியெல்லாம் தண்டமாச் செலவாகுதுன்னு பார்க்கணுமுன்னா எங்கூருக்கு வந்தாப் போதும்! நல்லா இருந்த ஊரை நிலநடுக்கம் வந்து புரட்டிப் போட்டுட்டுப் போச்சு பாருங்க....  அதுக்குப்பின் இடிபாடுகளை அகற்றி, நகரை மீண்டும் புதுசா நிர்மாணிக்கும் வேலைகள் ஒரு பக்கம் நடந்துக்கிட்டு இருக்கும்போது,  நகரை அழகுபடுத்தறோமுன்னு  எங்க சிட்டிக் கவுன்ஸில் கொஞ்சம் ஆட்டம்தான் போட்டுக்கிட்டு இருக்கு.

சொன்னா நம்ப மாட்டீங்க..........  எங்கூருக்குள்ளே பல இடங்களில் வளைஞ்சு வளைஞ்சு ஓடும் ஏவான் நதியில்  தண்ணிக்குள்ளே மனுசன் நிக்கறதுபோல் ஒரு  வெங்கலச்சிலை வைக்க  அரைமில்லியன் டாலருக்கு மேலே செலவு  செஞ்சுருக்கு, நம்ம சிட்டி கவுன்ஸில்.  சரியாச் சொன்னால்   $502,500. கலையை ரசிக்கணுமாம்.  கலை இல்லாம வாழ்க்கையே இல்லையாம்.

 எல்லாம் சரி. ஆனா அவனவன் சொந்தக் காசுலே கலையை வளர்த்தா... நாங்க வேணாமுன்னா சொல்லப்போறோம்? நம்மகிட்டே இருந்து 'கறக்கும்' வீட்டுவரியைத்தான்  இப்படியெல்லாம்  வாரிவிடறாங்க!  கும்பி கூழுக்கு அழும்போது  கொண்டைக்கு பூ  கேக்குறமாதிரியில்லே இருக்கு :-(

 நிலநடுக்கத்தில் பாழான நகரை மீண்டும்  நிர்மாணிக்கும் வேலை ஒரு பக்கமுன்னா...   அது கிழிச்சுப் போட்டுட்டுப் போன  சாலைகளைச் செப்பனிடும் பெரிய வேலை ஒன்னு இருக்கா, இல்லையா?  முதலில் கிழிஞ்சதுக்கெல்லாம் அங்கங்கே ஒட்டுப்போட்டுத் தாற்காலிகமா  பழுது பார்த்துட்டாலும்,  எல்லா சாலைகளையும்  மீண்டும்  செம்மையாப் போடணுமுல்லே?  மேஜர் ரோடுகள் எல்லாம்  புதுசாப்  போட்டுக்கிட்டே வர்றாங்கதான். ஆனால் இன்னும் சாலைப் பராமரிப்பு  அங்கங்கே நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. நம்ம பேட்டை சரியாகிருச்சுன்னாலும்,  வெவ்வேற பேட்டை மக்கள் இன்னும் புலம்பிக்கிட்டுத்தான் இருக்காங்க.
நிறையப்பேருக்கு  இன்ஷூரன்ஸ் கம்பெனிகளோடும், எர்த் க்வேக் கமிஷன் கொடுக்கும் நஷ்ட ஈடுகளோடும் இன்னும் செட்டில்மென்ட்டே ஆகலை. அவுங்கெல்லாம்  அங்கங்கே தாற்காலிக ஏற்பாட்டில் குழந்தைகுட்டிகளோடு இருந்து கஷ்டப்படறாங்க :-( அத்தையெல்லாம் சரிசெஞ்சுட்டுக் கலையைக் கையில் எடுக்கப்டாதா?
 'ஒரு ஆள் நம்ம ஏவான் நதியிலே நிக்கறதுக்கு இம்மாம் செலவா?  என்ன சொல்றீங்க, மக்கள்ஸ்?' னு  ஒரு கருத்துக் கணிப்பு நடந்துச்சு.  44 சதம் மக்கள் ஆஹா ஓஹோன்னு  கூவுனாங்க. நாங்கஒரு 56 சதம் பேர்,  தண்டச் செலவுன்னு சொன்னோம்.

ஜனநாயகமுன்னா சிறுபான்மை சொல்றதைச் செய்யணுமுன்னு  வேற ஒரு நாட்டுலே இருந்து (எதுன்னு நாஞ்சொல்லலை...  உங்களுக்கே தெரியும்!) கத்துக்கிட்டாங்க போல :-(
சரி, செஞ்சதுதான் செஞ்சீங்க.... உள்நாட்டுக் கலைஞர்களைக் கொண்டு ஒரு டிசைன் செஞ்சுருக்கப்டாதோ?  அதெப்படி....  ஃபாரீன் கலைஞர்தான் ரொம்பப் பெரிய மனுசர், இல்லே?   இருக்கட்டும்ப்பா.....   British sculptor Sir Antony Gormley உலகப்புகழ் பெற்றவராகவே இருக்கட்டும்.... அதுக்காக  எரியற வீட்டுலே பிடுங்குன கதையா  இம்மாங்காசு செலவு செய்யணுமா? அதுவும்  இப்போ இருக்கும் நிலைமையிலே?
யார் என்ன சொல்லி என்ன செய்ய? செப்டம்பர் 29 தேதிக்கு மனுஷன் ஆத்துலே இறங்கிட்டார்!  ஆமாம்.... பெரிய கள்ளழகர், பாருங்க!

650 கிலோ கனம்.  வார்ப்பு இரும்புலே செஞ்சது. ரெண்டு கிரேன் வச்சு ஆத்துக்குள்ளே இறக்கியாச்.  ஆறுமீட்டர் இரும்புக்கம்பிகளால் அஸ்திவாரம் தண்ணிக்குள்ளே முதலில் இறக்கி,  வட்டமான  அடிப்பீடத் தட்டுலே நிக்கும்மனுசனை அதன்மேல் பொருத்தியாச்சுன்னு  சின்ன வீடியோ க்ளிப் போட்டுக் காமிச்சாங்க.  டிவிக்கும் செய்தி வேணுமுல்லே?
கொஞ்சம் எரிச்சலில் இருந்தாலும் என்னமாத்தான்  இருக்குன்னு பார்க்க நேத்து பகல் சாப்பாட்டுக்குப்பின் கிளம்பினோம்.  கொஞ்சநாளைக்குமுன் கண்ணாடி மாளிகை கட்டுனாங்கன்னு  சொல்லி இருந்தேன் பாருங்க....  அதுக்கு நேராத்தான்  இந்தாளும் நிக்கறார். பெயர்கூட வச்சாச்சு, 'இரு' ன்னு!  STAY வாம்!  அதுவுஞ்சரி.  வேறெங்கெ, நடந்தா போகமுடியும்?
   இறக்குனது இப்படி!

ஆளு, குனிஞ்ச தலை நிமிரலை! மூக்கும் முழியுமே சரி இல்லைன்றது  இன்னொரு பாய்ண்ட்.   நம்மைப்போலவே ஒரு சிலர் வந்து பார்த்துட்டு, க்ளிக்கிட்டு இருந்தாங்க.  'இதுக்குப்போய்   ஹாஃப் அ மில்லியன் செலவு தெரியுமோ'ன்னு  நம்மவர்  ஆரம்பிச்சு வச்சார்!  அப்படியான்னு  வாய் பிளந்துட்டுப் போச்சு சனம் :-)
யார் நின்னா எனக்கென்ன? நான் புள்ளைகளோடு வெளியே போறேன்னு  ஒரு அஞ்சு புள்ளைக்காரி.... அவபாட்டுக்கு!

நடுக்கத்துக்கு முன்!


சிட்டிக்குள்ளே போனமேன்னு கொஞ்சம்  நேரம் நகரச்சதுக்கம்வரை போகலாமுன்னா....  ப்ச்.... ஊருக்கே பெயர் வாங்கித் தந்த சர்ச், பாவமா நின்னுக்கிட்டு இருக்கு. சரியா எங்க ஊர் வரைபாடம் பார்த்தால்... தெரியும், இதுதான்  நட்டநடுவிலே இருக்கும் நகர் மையம்.  அலங்கார போர்டு வச்சு மறைச்சுட்டாங்க.... ஆனாலும் கொண்டையை மறைக்க முடியலையேப்பா.....

இடிஞ்சு விழுந்த சூட்டோட பல நாடுகளில் இருந்து புராணக் கட்டிடக்கலை   நிபுணர்கள், நாங்க மீண்டும் கட்டித் தர்றோம். எங்களுக்குக் கூலி கூட வேணாமுன்னு  முன்வந்தாங்க. சரின்னு தலையை ஆட்டாம, சர்ச் நிர்வாகம் வீண் கௌரவம் பார்த்துக்கிட்டு  ஊரைப் பகைச்சுக்கிட்டது. ஊர்மக்களும் நிதி உதவி செய்யறோமுன்னு சொன்னதைக்கூடக் கேக்கலை.  கோர்ட்டுக்கு இழுத்தோம்.  ஊஹூம்.... ப்ச்...  சர்ச்சின் சொந்த சொத்து. நாம் தலையிட முடியாதுன்னு ஜகா வாங்கிருச்சு.  நீதி(யே) கை விட்ட பின்னே நாம் என்ன செய்யமுடியும்?

முந்தியெல்லாம் ஒவ்வொரு முறை இடிஞ்சு நிக்கும் கோவிலைப் பார்க்கும்போதெல்லாம் குபுக் ன்னு  நெஞ்சடைச்சு, கண்ணீரும் கம்பலையுமா  அழுகையை அடக்கமுடியாமப் போய் தடுமாறி இருக்கேன். இப்ப மனசு  கல்லாகிக்கிட்டு  வருது. உள்ளுக்குள்ளே துடிப்பு இருந்தாலும்  கண் கலங்கறதில்லை. கண்ணீர் வத்திப்போச்சு போல :-(

புதுசா ரோட் ஸைன் வச்சுருக்காங்க. பரவாயில்லை. நல்லாத்தான் இருக்கு.  ஊர் முழுசும் சரியாக இன்னும் 6 வருசங்கள் ஆகும். பத்துன்னு சொன்னதுலே நாலு போயிருக்கே!

இப்படியெல்லாம்  இருக்கும்  ஊருலே... நகரசபை பண்ணும் அட்டகாசம் தாங்க முடியலை. போன ஆட்சி சரியில்லைன்னு  அய்யாவைத் தூக்கிட்டு அம்மாவைக் கொண்டு வந்து உக்காரவச்சோம்.......  அம்மாவும் சும்மாத்தான்னு  தெரிஞ்சு போச்சு.

இது இப்படின்னா,  போனவாரம்  இதேபோல ஒரு ஞாயித்துக் கிழமை  இன்னொரு தண்டத்தைப்போய்ப் பார்த்தோம்.

 அன்றைக்கு ரெண்டு நிகழ்ச்சிகளுக்கு நடுவில் ஒரு மூணு மணி நேரம் கிடைச்சது. நம்மோடு நண்பர் ஒருவரும் கூடவே இருந்தார். ஊருக்குப் புதுசு (வந்து ஒரு  அஞ்சாறுமாசம்தான் ஆச்சு) என்பதால்  அவரும் பார்க்காத இடமா  இருக்குமேன்னு  கிளம்பிப்போனோம்.

போனமா........

PINகுறிப்பு: பதிவின் நீளம் கருதி பாக்கி நாளைக்கு!
19 comments:

said...

போனமா, வந்தமான்னு இருக்கணும். சும்மா சும்மா பொலம்பக்கூடாது.

said...

அங்கேயுமா....
அடப்பாவமே....
ஆனாலும் அழகு....
உங்கள் படங்கள்...

said...

இண்டிக்கி இண்டி ராமாயணம் , நம்மூரில் வல்லபபாய் படேலுக்கு மிகப் பெரிய சிலை அமைக்கப் போகிறாராம் மோடி மகான் ? யார்வீட்டுப்பணம் யார் செலவு செய்ய. அவரவர் கஜானாவும் ரெம்பணும் இல்லே..

said...

சந்தேகமேயில்லாம அரைமில்லியன் தண்டச் செலவுதான். ஏற்கனவே செலவுகள் தேவைப்படும் எடத்துல அரைமில்லியன் பணத்துல செலய வெச்சேன் ஒலய வெச்சேன்னு.. இந்த விஷயத்துல நானும் ஒங்க கட்சிதான்.

என்னது... வந்த உதவியை உதாசீனப்படுத்தீட்டாங்களா? அது அவங்களோட சொந்தச் செலவா இருந்தா உதாசீனப்படுத்தலாம். சர்ச் பொதுச்சொத்து. அதுக்கு வந்த உதவியை நிராகரிக்கிறது நியாயமில்லை.

என்னது.. ஒங்க ஊர்லயும் ஆட்சி சரியில்லையா.. அடக்கொடுமையே. நம்மூர் தாவலைன்னு தோணுது.

said...

very nice comment about ayya and amma - here chennai(incl of TN) flooding like anything "no action" no comments only from great amma
ok ok

said...

இயற்கை வந்து புரட்டிப்போடுவதும் அதைத் தொடர்ந்து நடக்கும் அரசியலும் எல்லா ஊருலயும் ஒரேமாதிரிதான் இருக்கும்போலிருக்குதே...

'ஸ்டே'யோட சேர்த்து எல்லாப் படங்களும் அழகு டீச்சர் :)

said...

அங்கேயுமா.... சரி தான்....

said...

ரொம்ப தண்ட செலவு தான் :( அந்த அஞ்சு புள்ள குட்டிகாரி அழகி!! போல நம்ம வேலைய பாக்க வேண்டியது தான் .

said...

குடல் கூழுக்கு அழுகுது. கொண்டை பூவுக்கு அழுகுது என்ற பழமொழியும் ஞாபகத்திற்கு வருது.

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

அது எப்படி? நாங்களும் ஊரான் வீடுன்னு நினைச்சிருந்தா புலம்பமாட்டோம்தான். ஆனா.... இது நம்ம வீடாகிப் போச்சே.....

said...

வாங்க நான் ஒன்றுசொல்வேன்.

அங்கேயுமான்னா.... ஆட்டையைப் போடலை. வெறும் ஆடம்பரச் செலவு . அறியாமைன்னு சொல்லலாம்!

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

பெரிய பெரிய சிலைகள் பைத்தியம் எப்போ தீரப்போகுது? எங்கே வைக்கப் போறாங்களாம்? ஒவ்வொரு ஊரிலுமா? பறவைகளுக்குத்தான் டாய்லெட் கட்டியாறது :-(

said...

வாங்க ஜிரா.

சர்ச் பொது சொத்து இல்லையாம். ஏங்கலிக்கன் சர்ச்சின் சொந்த இடமாம். சொந்தக்கோயிலாம் எல்லோரும் மூடிக்கிட்டுப்போங்கன்னுட்டாங்க சர்ச்சின் பிஷப் விக்டோரியா. அப்போதையப் புலம்பல் இங்கே.

http://thulasidhalam.blogspot.co.nz/2012/05/blog-post_17.html

ஆட்சி சரியாத்தான் இருக்கு. அரசியல்வாதிகளின் அடாவடிதான், தாந்தோணியாட்டம் செயல்படுவது. அதிலும் நகரசபைகள் ஆடும் ஆட்டம் இருக்கே.... அப்பப்பா..... இதுலே என்ன ஒரு ஆசுவாசமுன்னால்.... கொள்ளையடிச்சுப் பத்து தலைமுறை சொத்து சேர்த்துக்கலை என்பதே!

said...

வாங்க அனந்து.

நம்ம மக்களுக்கு இலவசம் கொடுத்து வாயை அடைச்சுடறாங்க. காசு கொடுத்து ஓட்டு வாங்கிடறாங்க. அப்புறம் என்னமாவது ஆகட்டுமுன்னுதான் ஆட்சி :-(

said...

வாங்க சுந்தரா.

நலமா? பார்த்து ரொம்ப நாளாச்சே!
அரசியல் வியாதிகளுக்குன்னே ஒரு தனி பொது குணம் இருக்கேப்பா!

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

இங்கேயும் அனாவசியச் செலவுதான் :-(

said...

வாங்க சசி கலா.

அஞ்சுப்புள்ளைகாரிக்கு என்ன கவலை? இருக்க இடம், உண்ண உணவு எல்லாம் ஃப்ரீயாக் கிடைச்சுருது. வரிஎல்லாம் கட்ட வேணாம். உயிருக்குப் பாதுகாப்பான நாடு. தின்றதுக்காகப் புடிச்சுக்கிட்டுப்போகமுடியாது. சட்டம் பாய்ஞ்சுரும். இத்தனை ஏன், கண்ட இடத்தில் அவுங்க ரோடை க்ராஸ் பண்ணும்போது ரெண்டுபக்கப் போக்குவரத்தும் நின்னு இடம் விடணும்! கொடுத்து வச்ச மகராசி!

said...

வாங்க ஜோதிஜி.

உண்மைதான். எது முக்கியமுன்னு இன்னும் புரியலை பாருங்க. ஒரு விசு பட வசனம்தான் நினைவுக்கு வருது. "வயசுப்பொண்ணு பாருங்க. வயிறு வாடினாலும் முகத்தை வாடவிடாது"

said...

@ ஜிரா,

இதையும் ஒரு எட்டு பாருங்க.

http://thulasidhalam.blogspot.co.nz/2013/12/gimme-five.html